'இறந்தவர்கள் செவியேற்பார்கள்' என்ற பிழையான கருத்தை சமூகத்தில் கூறி வருபவர்கள், தங்கள் கூற்றிற்கு முன்வைக்கும் ஆதாரங்களை தொடராக நாம் பார்த்து வருகிறோம்;. அவர்கள் முன்வைக்கும் ஏனைய ஆதாரங்களையும், அவற்றிற்கான தக்க பதில்களையும் இந்தத் தொடரில் நோக்குவோம்.
வழிகேடர்களின் ஏழாவது ஆதாரம்:
எமது பதில்: இவர்களது மடமைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது போலும். இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள் என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதி மக்களுக்கு விளக்கம் கொடுத்தவர் ஆயிஷா(ரழி) என்பதை எமது இரண்டாவது தொடரில் விளக்கியிருந்தோம். இவ்வாறான நிலையிலுள்ள ஆயிஷா(ரழி) அவர்கள் இறந்தவர்கள் கேட்பார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்திருப்பார்களா? என்பதை இந்த மத்ஹபுப் பிரியர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
வழிகேடர்களின் ஏழாவது ஆதாரம்:
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வீட்டினுள் நுழையும் போது எனது மேலாடையை கழட்டியவளாக நுழைவேன். எனது கணவரும் எனது தந்தையும்தானே உள்ளனர் என (மனதிற்குள்) சொல்லிக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதானையாக: உமர்(ரழி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டவுடன் அவர்கள் மீது எனக்கிருந்த வெட்கத்தினால் எனது ஆடையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டே உள்ளே நுழைவேன். நூல்: அஹ்மத் 25660
இதிலிருந்து இவர்கள் முன்வைக்கும் வாதம்
///// ஆயிஷா(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களுக்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்த படியால்தான் தனது ஆடையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். எனவே இறந்தவர்கள் கேட்பார்கள் என்பதற்கு இதுவும் நல்ல சான்றாகும். ///
எமது பதில்: இவர்களது மடமைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது போலும். இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள் என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதி மக்களுக்கு விளக்கம் கொடுத்தவர் ஆயிஷா(ரழி) என்பதை எமது இரண்டாவது தொடரில் விளக்கியிருந்தோம். இவ்வாறான நிலையிலுள்ள ஆயிஷா(ரழி) அவர்கள் இறந்தவர்கள் கேட்பார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்திருப்பார்களா? என்பதை இந்த மத்ஹபுப் பிரியர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
உமர்(ரழி) அவர்கள் மரணித்தாலும் அவர்கள் மீது ஆயிஷா(ரழி) அவர்கள் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார்கள் என்பதனையும், மற்றவர்களை விட உமர்(ரழி) அவர்கள் சற்று வித்தியாசமானவர்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள் என்பதனையும் இந்த ஆதாரம் சுட்டிக்காட்டுகின்றது.
இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு இதில் துளியளவும் வாதம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் பேருதவியால் 'இறந்தவர்கள் செவியேற்பார்களா?' எனும் இத்தொடரில் 'இறந்தவர்கள் செவியேற்பார்கள்' என்பதற்கு வழிகேடர்களான அத்வைதிகளும் சுன்னத் வல் ஜமாஅத் என தம்மை அழைத்துக் கொள்ளும் கப்ரு வணங்கிகளும் முன்வைத்த முக்கிய ஏழு ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி எமது விளக்கத்தை பதிவு செய்துள்ளோம். இந்த ஆதாரங்களுக்கு நாம் அளித்த விளக்கங்களில் எவருக்கேனும் மாற்றுக்கருத்து இருந்தால் தாராளமாக எமது ஜமாஅத்தை தொடர்பு கொள்ளலாம். பேசுவதற்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம். அதற்கு நாம் தயாராகவே உள்ளோம். சத்தியத்தை தெளிவாக எடுத்துக் கூறுவதும், அசத்தியத்தை மக்களுக்கு விளக்குவதுமே எமது குறிக்கோள் என்பதையும் இங்கு நினைவூட்டிக் கொண்டு இத்தொடரை நிறைவு செய்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை பின்பற்றி அசத்தியத்தை தவிர்ந்து கொள்ள நல்லருள் பாலிப்பானாக!
ntj.com
ntj.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்