வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்பதாகும்.
ஏகத்துவக் கலிமாவின் நிபந்தனைகள்
வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்பதாகும்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அழியாமல் இருக்குமா?
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அழியாமல் இருக்குமா?
நபிமார்களின் உடல்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் தெளிவான நம்பிக்கையாகும்.அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத் தூதர்களின் உடல்களை புவி அழிப்பதை விட்டும் அல்லாஹ் அவர்களின் உடல்களைப் பாதுகாக்கிறான்.
உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது
என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), நூற்கள்: நஸயீ 1387, அபூதாவூத் 883, இப்னுமாஜா 1626, அஹ்மத் 15575