"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் - 8

ஈசா (அலை) அவர்கள் இறங்கி வருவார்களா? 

 அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அபூ ஹ‚ரைரா (ரலி) அவர்களிடம் வந்து ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? என வினவிய போது பின்வரும் இந்த வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்றார்.


மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்க üடையே நேர்மையாகத் தீர்ப்பüக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்கüடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ள வற்றையும் விடச் சிறந்ததாக (மக்கüன் பார்வையில்) ஆகிவிடும்.
இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ர-) அவர்கள், " "வேதம் வழங்கப்பட்டவர்கüல் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாüல் அவர் களுக்கெதிராக அவர் சாட்சியம் அüப்பார்' (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
ஆதாரம் புகாரி:3448

7- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -7

 ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் உயர்தி விட்டான் என்பதில் சந்தேகம் வராமல் இருக்க மேலும் அல்லாஹ் திருக்குர்ஆனின் 4:157,158 ஆகிய இரு வசனங்களும் ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று அறிவிக்கின்றது.

ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படு வதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "உயர்த்திக் கொண்டான்'' என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும்.
"அவரை உயர்த்திக் கொண்டான்'' என்று மட்டும் கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் "தன்னளவில்' என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.

6-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் - 6

 

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா?

ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா என்று ஒரு சந்தேகம் அனைவருக்கும் வரும் இந்த சந்தேகம் வராதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் அவர்களுக்கு முன்னர் வந்த இறைத்தூதர்கள் அனைவரும் மரணித்து விட்டார்கள் அலீ (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள். அப்துல் காதிர் ஜீலானியும் மரணித்து விட்டார்கள். என்று நம்புகிற நாம் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்களா?  என்ற ஒரு சந்தேகம் வரும். அப்படியானால் இதுவும் அந்தக் கொள்கைக் குழப்பத்தில் அடங்கும். நபிமார்களாக இருந்தாலும் அவர் மரணித்தை அடைவார்கள் என்று சரியான கொள்கையாக இருந்தால் இந்த அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்கள் என்று ஒரு கருத்திற்குத்தான் வந்தாக வேண்டும்.
ஈஸா (அலை) அவர்கள்  மரணித்து விடவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னவைகள் என்ன ஆனது என்ற ஒரு கேள்வி எழும்.

ஆனால் நாம் அல்குர்ஆனையும் அல்லாஹ்வின் தூதருடைய தூய போதனையும் பின்பற்றக் கூடிய நமது நிலைப்பாடு ஈஸா அவர்கள் மரணிக்க வில்லை என்பதுதான். ஒரு நாள் மரணிப்பார்கள். ஆனால் அவர்களும் அனைவரும் மரணிப்பார்கள் என்ற விதியின் அடிப்படையில் அவர்களும் என்றைக்காவது ஒரு நாள் மரணிப்பார்கள். இனி மரணிப்பார்கள் என்றுதான் நாம் நம்புகிறோமோ தவிர இன்றைய தேதியில் அவர்கள் மரணிக்க வில்லை என்று நாம் நம்புகிறோம்.