3- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -3
நபி (ஸல்) அவர்கள் 72 கூட்டத்தினர்களின் பெயர்களைக் கூறினார்களா?
நபி
(ஸல்) அவர்கள் என்ன வழியைச் சொன்னார்களோ அந்த வழியைத்தான் தேர்வு
செய்யவேண்டும். என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்த ஒரு கூட்டம்
எது என்பதை நபி (ஸல்) அவர்கள் அற்புதமாக விளக்கி விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எழுபத்தி இரண்டு கூட்டத்தினர்களின் பெயர்களைக் கூறினார்களா?
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிக்கையைத்தான் கூறினார்களே தவிர பெயர்களைக்
கூறிப்பிட்டு இன்னின்ன கூட்டம் நரகம் செல்லும் என்று அவர்கள் கூறவில்லை.
இது பற்றிய நமக்கு முன்னர் வாழ்ந்து சென்ற அறிஞர்கள் பெருமக்கள் தங்களுடைய
காலங்களில் அவர்களுக்கு ஏற்றால் போல் பிரித்துள்ளார்கள்.
உதாரணமாக
ஹிஜ்ரி 300 வாழ்ந்தவர்கள் அவர்கள் ஒரு பட்டியலைக் காட்டி இந்தக் கூட்டம்
தான் அந்த 72 கூட்டம் என்று அவர்கள் ஒரு பட்டியலைத் தயார் செய்து
மக்களுக்கு கூறினார்கள்.
இவ்வாறு ஹிஜ்ரி 500 வாழ்ந்த அறிஞர்கள் ஒரு
பட்டியலைப் போட்டு இதுதான் அந்த 72 கூட்டம் என்று கூறினார்கள். சிலர் 300
வாழ்ந்தவர்கள் கூறியதில் சிலதை சேர்த்து சிலதை நீக்கியும் ஒரு பட்டியலை
வெளியிட்டார்கள். இப்படி இது 72 கூட்டம் இவர்கள் தான் அந்தக் கூட்டம் என்று
ஆளாளுக்கு ஒரு பட்டியலை வெளியிட்டனர்.
இவ்வாறு
எழுதியவர்களில் ஹிஜ்ரி 500 இந்தக் கூட்டத்தை முடித்தவர்களும் ஹிஜ்ரி 600
முடித்தவர்களும் ஹிஜ்ரி 800 எழுதி முடித்தவர்களும் உள்ளனர். ஹிஜ்ரி 1000
எழுதி முடித்தவர்களும் உள்ளனர் ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்றால் போல்
இன்னின்ன கூட்டம் வரும் என்று அவர்களின் காலத்தில் இவ்வாறு
தென்படக்கூடியவர்களை எழுதியுள்ளனர். 72 கூட்டத்தினர் இடம் பெற
வில்லையென்றால் அதில் உள்ள உட்பிரிவுகளை எல்லாம் சேர்த்து 72 என்றும்
சிலர் எழுதியுள்ளனர்.
இந்த அறிஞர்கள் 72
கூட்டத்தாரை கூறியது போன்று நாமும் கூறினால் இது தொடர்கதையாக மாறி விடும்.
ஆனால் நமது நோக்கம் அதுவல்ல அவர்கள் 72 கூட்டத்தை முடித்து அந்தத் தவறை
செய்தது போல் நாமும் செய்யாமல் இந்தக் கூட்டத்தினர்களின் வழி கெட்ட
கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் அவர்களின் இலக்கணங்களை தெளிவு
படுத்துவதுதான் நமது நோக்கம்.
ஏனெனில் இக்கூட்டத்தினர் கியாமத் நாள்
வரைக்கும் வந்து கொண்டே இருப்பார்கள். அதனால் இன்னின்ன கூட்டத்தினர் அந்த
72 கூட்டத்தினர் என்று கூற முடியாது நம்முடைய இக்காலத்தில் திடீர் என்று 19
என்ற ஒரு கூட்டம் வந்தார்கள் இவ்வாறு கியாமத் நாள் வரைக்கும் இவர்கள்
வந்து கொண்டிருப்பார்கள். எனவே அவர்களின் கொள்கைக் கோட்பாடுகளையும்
சித்தாந்தங்களையும் தெளிவு படுத்துவதுதான் நமது நோக்கம்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தது முதல் இன்று வரை இந்த சமுதாயத்தில் நுழைந்த
பல விதமான கொள்கைகளையும் கோட்பாடுகளும் எந்த வகையில் இது இஸ்லாத்தின்
அடிப்படையைத் தகர்க்கின்றது. அவர்களிடம் காணப்படும் கொள்கை ரீதியான தவறுகள்
என்ன என்பதையும் விளங்கிக் கொண்டால் அதில் இருந்து நாம் விலகிக் கொள்ள
முடியும்.
இன்னின்ன கொள்கையைச் சார்ந்தவர்கள் வழிகெட்ட
கொள்கையுடையோர் என்று மக்கள் மத்தியில் கூறுவதனால் அவர்களுக்கு எந்த
விதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. உதாரணமாக காரிஜிய்யாக்கள், முஃதஸிலா,
ஜபரிய்யா போன்ற கொள்கை அன்று இருந்தது இன்றைய காலத்தில் அந்தக் கொள்கை
இல்லையென்றாலும் அதைப் பற்றிக் கூறுவதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை
அவர்கள் வைத்த வாதம் என்ன? அது எவ்வாறு தவறானது? என்பதை விளக்கினால் தான்
அதில் நமக்கு பயன் ஏற்படும்.
எவர்கள் 72 கூட்டத்தினர் அவர்களின்
பெயர்கள் என்ன? அவர்களின் தலைவர்கள் யார் என்று நாம் பார்த்தால் அது எந்த
வித பயனையும் நமக்குத் தராது 72 கூட்டத்தை பட்டியல் போட்டு பெயரை வாசித்து
72ல் நாம் ஐம்பதை சேர்த்து இன்னும் மீதமுள்ள 22 அனேகமாக வரலாம் என்று
முடித்தோம் என்று சொன்னால் அது மார்க்கமாக ஆகாது. அது ஊகமாகவும்
அனுமானமாகவும் தான் இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்ததில்
இருந்து இன்று வரை பலவிதமான கொள்கைகள் உருவாகியுள்ளது. அக்கொள்கைகள்
எப்படித் தவறானவை என்று விளங்கிக் கொண்டால் அக்கொள்கையை பலரும்
கூறியிருக்கலாம். ஒரு கொள்கையை ஏழு வழிகெட்ட கூட்டம் சொல்லியிருக்கும்.
இன்னொரு கொள்கையை ஐந்து வழி வழிகெட்ட கூட்டம் சொல்லியிருக்கும். எத்தனை
கூட்டம் இதைக் கூறினாலும் அவர்களின் வாதம் ஒன்றாகத்தான் இருக்கும்.
காரிஜியாக்கள்
வழி கெட்டகூட்டம் என்று நாம் கூறினால் இதனால் என்ன நன்மை கிடைக்கும்?
இதனால் எந்த நன்மையும் கிடையாது. இக்காலத்தில் காரிஜியாக்கள் என்போர்
இல்லை. நபி (ஸல்) அவர்கள் மரணித்தது முதல் இன்று வரைக்கும் இந்த
சமுதாயத்தில் தோன்றிய கெட்ட கொள்கைகளில் சில கொள்கைகள் இஸ்லாமியப்
போர்வையைப் போர்த்திக் கொண்டு உலகத்திற்கு வந்தன. அக்கொள்கைகள் என்ன என்பதை
நாம் ஆய்வு செய்வோம். என்னன்ன கொள்கைகள் எல்லாம் இஸ்லாத்தின் பெயரால்
வந்தது? அது எப்படி முறையடிக்கப்பட்டது? அது எப்படி இஸ்லாமியக் கொள்கைக்கு
மாற்றமானதாக இருந்து...?
உரை- பீ.ஜைனுல் ஆபிதீன்
தொகுப்பு- மனாஸ் பயானி
இன்னும் வளரும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்