"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

திக்ர் செய்யும்போது நடனம் ஆடலாமா ?

ஷாதுலிய்யா தரீக்காவைச் சேர்ந்தவர்கள் , திக்ர் செய்யும்போது , நடனம்
ஆடுகின்றனர் . அதை நடாத்துபவர் கை தட்டுகின்றார் . இது இஸ்லாம் கற்றுத்தந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல . இது ஈராக்கில் தோன்றிய பித்அத் ஆகும் . இதை இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் கடுமையாகக் கண்டித்து, " இதை முனாபிக்கள் உருவாக்கினார்கள் , குர்ஆனை விட்டுவிட்டு , இதில் ஈடுபட்டுள்ளனர் " எனக் கூறினார்கள் . ( மனாகிபுஷ் ஷாபிஈ - லில் பைஹகி 1/283)

மேலும் , ஒருவர் இமாம் மாலிக் அவர்களிடம் ,
ங்கள் ஊரில் , "ஸுபிய்யாக்கள்" என அழைக்கப்படும் ஒரு கூட்டம் உள்ளனர் . அதிகமாக சாப்பிடுகின்றார்கள் . பாடல்கள் படிக்கின்றனர் . எழுந்து நின்று நடனம் ஆடுகின்றனர்" என்று கூறினார் . அதற்க்கு . இமாம் மாலிக் , "அவர்கள் சிறுபிள்ளைகளா" ? என்று வினவினார் . அதற்க்கு இல்லை என்றார் . பைத்தியகாரர்களா ? என்று கேட்டார் . அதற்க்கும், "இல்லை , அவர்கள் ஷைகுமார்கள் , அதுதவிர , அவர்கள் புத்திசுவாதீனம் உள்ளவர்கள்" என்று கூறினார் . அதற்க்கு , " நான் , முஸ்லிம்களில் யாரும் இதைச் செய்வதைக் கேள்விப்படவில்லை " எனக் கூறினார்கள் . அந்த மனிதர் , "தலையிலும் , முகத்திலும் அடித்துக்கொள்கின்றார்கள்" என்று கூறினார் . அதைக் கேட்ட மாலிக் அவர்கள் , சிரித்துக்கொண்டு வீட்டில் நுழைந்தார்கள் . அவரது மாணவர்கள், இமாம் அவர்கள் , 30 வருடங்களாக சிரிப்பதை காணவில்லை, இன்றுதான் சிரிப்பதைக் கண்டோம் எனக் கூறினார்கள் ( தர்தீபுல் மதாரிக் - லில் காழி இயால் 2/ 53 - 54 )

மேலும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்கள் , நடனம் , கைதட்டுதல் , புத்திகுறைந்த , பேத்தனமான செயல்களாகும் . ஸஹாபாக்கள் , தாபியீன்கள் , அத்பாவுத் தாபியீன்கள் செய்யாத செயல் . ஆனால் , ஷைத்தான் , அவர்களுக்கு ஏற்படும் பரவசம் , அல்லாஹ்விடமிருந்து வருகின்றது என்ற பிரமையை ஏற்படுத்துகிறான் . இதில் "ஞான இன்பம்" உள்ளது என்ற வாதம் பொய்யானதாகும் என்று கூறுகின்றார்கள் . ( கவாயிதுல் அஹ்காம் - லிப்னி அப்திச்சலாம் 2/ 220 )

தப்ஸீர் நூலாசிரியர் இமாம் குர்துபி அவர்கள் ,
"இந்த நடனம் ஸாமிரியின் ஆதரவாளர்கள் உருவாக்கினார்கள் , ஸாமிரி செய்த காளைச் சிற்பத்தைச் சுற்றி நடனமாடினார்கள் . இது காபிர்களின் மார்க்கம் . இது உலமாக்களிடத்தில் ஹராம் . இதைப் பள்ளிகளில் செய்வதை தடைசெய்யவேண்டும் . இவர்களுடன் யாரும் சமூகமளிக்கக் கூடாது , உதவியாகவும் இருக்கக் கூடாது . இதுவே நான்கு இமாம்களின் நிலைப்பாடாகும் என்று கூறியுள்ளார்கள் ( தப்ஸீர் குர்துபி 10 / 263, 366 , 11/ 238 )
/// நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தோழர்களை பார்த்திருக்கிறேன் . அவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. அவர்கள் இரவு காலங்களில் வணக்கம் புரிந்தவர்களாகும். பயணம் செய்தவர்களை போன்று அவர்கள்
களைப்படைந்தவர்களாக காலையில் காட்சி அளிப்பார்கள். பொழுது புலர்ந்து விட்டால் புயல் வீசும் போது மரங்கள் ஆடி அசைவது போல் அவர்களும் ஆடி அசைந்து திக்ர் செய்வார்கள். இன்னும் அவர்கள் கண்களில் இருந்து வழிந்தோடும் கண்ணீர் அவர்கள் ஆடைகளை எல்லாம் நனைத்து விடும்" என்று சொன்னார்கள்.

இமாம் இப்னு கதீரின் அல் பிதாயா வல் நிகாயா பாகம்-8 பக்கம் -6,இமாம் அபூ நுஅயிமின் - ஹில்யத் அல் அவ்லியா  ///  


இது பொய்யான ஹதீஸ் . இதன் அறிவிப்பாளர் . அம்ர் பின் சமிர் என்ற பொய்யன் , மூன்று இனங்காணப்படாதோர் இருக்கின்றனர் .
ஹபஷிகளான தோழர் பெருமக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடையே ஆடி அசைந்து கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸாலிஹான நல்லடியாராகும் என அவர்களுடைய பாஷையில் பேசி கொள்வார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களென்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள். அதற்கு "முகம்மதுன் அப்துன் ஸாலிகூன் " என கூறுகின்றனர் என அவர்கள் விடையளித்தனர்.முஸ்னத் அஹ்மத் - 3:152இந்த ஹதீஸ் திக்ர் பற்றிய ஹதீஸ் அல்ல . நபியவர்களை வரவேற்று ஆடியுள்ளார்கள் . இப்பழக்கம் இதுவரைக்கும் அரபிகள் மத்தியில் உள்ளது . மன்னர் , கோத்திரத் தலைவர் , மாப்பிள்ளையை வரவேற்க்க செய்வார்கள் .


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்