"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கபாவை முத்தமிட்டவர் சுவர் வணங்கியா ?

கபுறு வணங்கிகளே ....!!! கபுருகளை முத்தமிடாதீர்.. என்று நாம் கூறும்போது.... சில பைத்தியங்கள்
// அல்லாஹ்வின் இல்லமாம் கபாவை முத்தமிட்டவர் சுவர் வணங்கியா ?
ஹஜருல் அஸ்வத் புனித கல்லை முத்தமிட்டவர் கல்லு வணங்கியா ?
// என்று கேட்கின்றனர்


கஃபாவின் உள்ள ஹஜருல் அஸ்வத்' கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.

துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.

அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.

நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்;
அல்லது விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்
என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

 கபுறுகளையோ
கற்சிலைகளையோ, கொடிமரங்கலையோ, லிங்கத்தையோ, சிலுவையையோ இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். ஹஜ்ருல் அஸ்வத்' பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான
உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி 'நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்'என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

 அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.
மேற்படி கூற்றைக் கவனித்துப் பார்த்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிட்டதற்காகவே முத்தமிடுகிரோம்
தவிர அக்கல்லுக்கு ஏதாவது சக்தி உண்டு என்று நம்பினால் அதுவே ஷிர்க்கின் முதற்படியாகும்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின்,
மக்கா காபிர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்ற எண்ணத்தில் தமது மூதாதையர்களான இப்ராஹீம் இஸ்மாயீல் ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்