"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

யார் இந்த பக்கீர்ஷாக்கள்?

பச்சக்குழந்தை பாதம் பட்டதும்
பரிசளித்தாய் ஜம் ஜம் நீரை
பாவிகள் நாங்கள் பதறுகிறோம்
போக்கிடு எங்கள் கண்ணீரை

நாயனே யா அல்லாஹ்…
நாயனே யா அல்லாஹ்…

என்று மக்களின் மனம் கவர பாட்டு பாடும் இவர்கள்

ஒட்டிய கன்னம்.
குழி விழுந்த கண்.
பச்சை தலைப்பாகை. காதில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் பீடி. கழுத்தில் பெரிய பாசி மாலை.
கையில தப்ஸ்
விரலுல கலர் கலராக பெரிய கல் பதிச்ச மோதிரம்.

நம் ஊரில் கூட இன்றும் இரண்டொருவர் உளாவுகிறார்கள்....

இந்த கெட்டப்பும் பாத்ரூமில் நிண்ணாக் கூட காதுல கேட்கிற மாதிரி புரியாத பாஷையில

(காபாலி இசை அதாங்க
A.R ரஹ்மான் பாடுவாறுல வந்தே..தே..தே..தே..

இல்லாட்டி யாதும் ஊரே...ரே...ரே...ரே... அப்புடியின்னு இழுப்பாறுல்ல

அதுதான் காபாலி ராகம்

ரஹ்மான் பாடினா மட்டும் புரியுமே)

சத்தமாக பாடிக்கிட்டு அம்மா முஸாபர் வந்துருக்கம்மா அப்படியின்னு கூவுகிற குரலும் உங்கள் மனக்கண் முன் வந்து மறைகிறதா?

ஆமா யார் இவர்கள் ?

எங்கிருந்து வருகிறார்கள்? இப்படி ஒரு கூட்டம் எப்படி உருவானார்கள்?
கை கால் எல்லாம் நல்லாதானே இருக்கு பின் ஏன் பிச்சை எடுத்து பொழைக்கனும்?

இத்தனை கேள்விகள் உங்க மனசுல தோன்றியிருக்கிறதா?

(உங்களுக்கு தோணுதோ இல்லையோ நான் விளக்கி சொல்லாமவிடமாட்டேன்)

இரண்டு நாள் குளிக்காமல் தலை வாராமல் பழைய கைலியை கட்டிக்கிட்டு திரிஞ்சா நண்பர்கள் என்னடா!

பக்கீர்ஷா
மாதிரி திரியுற என்று சொல்வார்களே

இப்படி அசிங்கமானவர்கள் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையின் குறீயீடாக மாறிப்போன பக்கீர்ஷாக்களின் மறுபக்கம் என்ன தெரியுமா?

அவர்கள் தியாகம் என்ன தெரியுமா

தியாகம், அர்ப்பணிப்பு, கொள்கைக்காக தன்னையே ஒப்புக் கொடுத்தல்,

இந்தியாவில் இஸ்லாத்தின் தூதை பரப்பக் கூடிய பணி தங்களுடைய தோளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து

செயல்பட்ட சிறு கூட்டம் இவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

ஆனால் அதுதான் உண்மை!

முகலாய மன்னர்கள் இஸ்லாமிய மன்னர்கள் என்ற போர்வையில் இந்தியாவை ஆட்சி செய்த போது

அவர்கள் கனவில் கூட இஸ்லாமியர்களாக நடந்துக் கொள்ளவில்லை.
(ஒரு சில விதி விலக்கான மன்னர்களை தவிர)

அவர்களுடைய கவனமெல்லாம் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை விரிவுப்படுத்துவது.

புதிது புதிதாக உருவாகிற எதிராளிகளை எப்படி சமாளிப்பது.

ஆபத்துகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற கவலையிலும் பொழுதன்னைக்கும் சண்டை போர்.

போர் முடிஞ்சு அரண்மனைக்கு வந்து மனதை ரிலாக்ஸ் பண்ண டான்ஸ், மது, மாது சிற்றின்பத்தில் திளைத்து மரத்து போனார்கள்.

இஸ்லாத்தை தானும் பின்பற்றி பிறருக்கும் எத்தி வைக்கும் பணியை மறந்து ஆட்சி அதிகார மையம் சீரழிந்து போனதால்

மக்களும் இந்த காவாலிப்பயல்களிடமா மார்க்கத்தைப் பற்றி கேட்பது என்று மன்னர்களை ஒதுக்கிவிட்டு

சூபிகளிடமும் ஆலிம்களிடமும் சரண் அடைய ஆரம்பித்தார்கள்.

இது மன்னர்களுக்கு இன்னும் கெட்டு சீரழிய வாய்ப்பாக போனது

இதுபோன்ற கேடுகெட்ட மன்னர்களின் நடத்தையால் மார்க்கத் தலைமை வேறு அரசியல் தலைமை வேறு என்று பிரிந்தது
(இன்றுகூட இதே நிலைதான்).

இஸ்லாமிய கஃலீபாக்கள் ஆட்சி இப்படி இருக்கவில்லை.

அரசியல் தலைமை ஆன்மீக தலைமை இரண்டும் ஒன்றாக இருந்தது.

கஃலீபா ஆட்சியும் நடத்துவார்.
இஸ்லாமிய சட்டத்தீர்ப்பும் சொல்வார்.
கஃலீபா தான் இமாமாக நின்று தொழுகை நடத்துவார்...

மார்க்கத்துறைக்கு பொறுப்பேற்று இருந்த
ஆலிம்களும் சூபிக்களும் சரியான இஸ்லாத்தை தெரிந்திருக்கவில்லை.

ஒர் உயிர்த்துடிப்புள்ள சன்மார்க்க நெறியின் இடத்தை உணர்ச்சிகளை
மரக்கச் செய்யும் வழிபாட்டுச் சடங்குகள் பிடித்துக்கொண்டன.

அவர்கள் இஸ்லாம் பற்றிய தங்களது தெளிவற்ற மங்கலான கருத்துக்களை
கையளித்து சென்றனர்.

உண்மையில் இக்கருத்துக்கள்
இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களாகும் என்பதில்மாற்றுகருத்தில்லை ஆனால் அவர்களுக்கு எந்த கொள்கையை
சரியென்று நம்பினார்களோ ....

அன்று அவர்களுக்கு தெரிந்த இஸ்லாத்தை
பரப்புவதற்கு தன்னையே அர்ப்பணித்தார்கள்.

இப்பணியைத் தமக்குக் கிடைத்தசொற்ப வளத்தைக் கொண்டு குறைவான நபர்களை கொண்டும் எப்படி
இந்த கொள்கையை பரப்புவது என்று இரவுபகலாக தூக்கம் வராமல்யோசித்தார்கள்

முடிவில் அவர்களுக்கு கிடைத்த
மிகப்பெரும் ஆயுதம் தான் அவர்களது சீடர்களான பக்கீர்கள்


கிடைத்த ஒரு சில அழைப்பாளர்களுக்கென்று பிரத்யோகமான
சட்டங்களை சூபிக்கள் உருவாக்கினார்கள்
(இந்த சட்டங்களுக்கும்
இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வேறு விஷயம்)


1.சூபிக்களிடம் உங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவேன் என்று
பையத் (சத்தியப்பிராமணம்) செய்ய வேண்டும்.

ஏனென்றால் குறைவான நபர்கள் இருந்ததால் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது.

2.உழைத்து சம்பாதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டும்.

இருக்கிறதே அற்ப நபர்கள் இவர்களும் சம்பாத்தியம் வியாபரமென்று
போயிட்ட அழைப்புபணியை யார் செய்யுறது அதனால 24 மணி நேர ஊழியர் தேவை.

3.இந்த வாழ்க்கையில் ஒரு பயணியை போல் வாழ வேண்டும்.

பயணி என்பதை நினைவில் மறக்காமல் இருப்பதற்காக தன்னை
முஸாபர் என்றே அறிமுகப்படுத்த வேண்டும்

அரபி மொழிப்படி (முஸபர்) என்றால் பயணி ஆனால் பேச்சு வழக்கில்
பிச்சைக்காரர்களை குறிக்கும் சொல்லாக மாறியதற்கு இந்த பக்கீர்கள்
காரணம்.

4.உலக வாழ்க்கையில் மையத்(உயிரற்ற பிணம்) போல
இருப்பேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இதை ஒரு சடங்காக செய்வாகள் 6அடி குழி வெட்டி அதில் உயிரோடு சில நொடிகள் புதைத்து அப்புறம் வெளியே எடுப்பார்கள் .

அதாவது மெளத்தா போய் விட்டார் நடமாடுவது மையத் அதற்கு எந்த ஆச பாசமும் கிடையாது.

ஒருவர் பக்கீர் ஆவது என்றால் சும்மா ஆகிவிடமுடியாது இதற்கு மேற்கூறிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

சரி இப்ப பிரச்சாரம் பன்ன ஆட்கள் ரெடி அவர்கள் எப்படியெல்லாம்
இருக்க வேண்டும் என்பதற்கான கொள்கை ரெடி

இனி எப்படி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வதற்கு என்ன வழி

ஒரு சமுதாயத்தின் கடந்த காலப் போக்கே நிகழ்கால நிலையை நிர்ணயிக்கிறது.

நிகழ்கால நிலை வருங்காலத்தைப் பாதிக்கிறது.

நிகழ்கால நிலை சீராக அமையுமாயின் எதிர்காலம் சிறப்புற்று விளங்கும்.

இனி எப்படி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வதற்கு என்ன
வழிமுறையை தேர்ந்தெடுத்தார்கள் என்ற விஷயத்துக்கு வருவோம்.

ஒவ்வோரு ஊர் ஊராக, வீடு வீடாக, மக்கள் குழுமும் சந்தைகளில் கடைத்தெருக்களில் அலைந்து திரிந்துதான் சொல்லியாக வேண்டும்.

வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு பொதுவாக அக்கால மக்கள் தலைப்பாகை கட்டுவது வழக்கம்.

தலைப்பாகையின் துனியின் தரம் வேலைப்பாடு,இவைகளை வைத்து மக்கள் தலைப்பாகை அனிந்து இருப்பவரின்,அரசியல்நிலைப்பாடு,
வாழ்க்கைதரம்,

அரசாங்க(மன்னனின்)பனியாளர்,
குமஸ்தா,
வக்கீல், என்று பிரித்து அறிந்து கொள்ளும் (யுனிபார்ம் மாதிரி)விதமாக அணிவார்கள்.

பக்கீர்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பச்சை வண்ண தலைப்பாகையை தேர்ந்தெடுத்தார்கள்,

(பச்சை கலர் இஸ்லாமிய அடையாளமாகி போனதற்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவைகள். அவை....

1.இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த பக்கீர்கள் பச்சை கலரை இஸ்லாமிய அடையாளமாக்கினார்கள்.

2. ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் தொடங்கி அன்றைய முழு இந்தியாவையும் ஆட்சி செய்த முகலாயர்களின் கொடியின் நிறம் பச்சை)

சாதரண பாமர மக்களிடம் தங்களுக்கு தேவையான நிதியுதவிகளை சில நிபந்தனைகளோடு பெற்றுக் கொண்டார்கள்.

1.அவர்களாக மக்களிடம் வலிந்து எதனையும் கேட்கக்கூடாது.

2.மக்களாக முன்வந்து தருவதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3.உணவுப்பொருட்கள் நாணயம் இவற்றை சேகரித்து வைக்கும் நோக்கில் வாங்கக் கூடாது அன்றைய தேவைக்கு மட்டும் வாங்க வேண்டும்.

4.ஆடைகளாக தந்தால் பழைய ஆடைகளை மட்டுமே வாங்க வேண்டும்.

5.தானியங்கள் வேக வைக்கப்பட்டதை மட்டுமே வாங்க வேண்டும். பின்னாளில் இந்த விதி தளர்த்திக் கொள்ளப்பட்டது.

பொதுவாக அக்காலங்களில் கிராமங்களில் ஹோட்டல்கள் கிடையாது ஊரு விட்டு ஊரு வந்து (முஸபராக) பயணியாக வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்திய பக்கீர்களுக்கு கிராம மக்கள் உணவளித்தார்கள்.

(இன்றும் பெருநகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட குக்கிராம,மலைக் கிராமங்களில் இன பாகுபாடு இல்லாமல் உணவளிக்கிறார்கள்)

அல்லது தங்களிடமுள்ள தானியங்களை வீட்டுக்கு வீடு கொடுத்தார்கள் பல மாதங்கள் கிராமங்களில் சுற்றி திரிந்துவிட்டு தங்களுடைய வீடுகளுக்கு பக்கீர்கள் திரும்பும் போது மக்கள் கொடுத்த தானியங்களை(அரிசி, கோதுமை) மூட்டையாக கொண்டு செல்வார்கள் .

ஒரு சின்ன ரெஸ்ட் எடுத்து விட்டு மறுபடியும் வேறு கிராமங்களுக்கு கிளம்பி விடுவார்கள்.

பக்கீர்கள் திரும்பி வரும் வரையில் அவர்களின் குடும்பத்தார் ஏற்கனவேயுள்ள சேகரித்த தானியங்களை வைத்து சமாளிப்பார்கள்.

தங்களின் கொள்கையை சொல்வதற்காக மக்களிடம் கையேந்த ஆரம்பித்த இவர்கள் ...

மக்களோடு புழங்கி மக்களுக்காக உழைத்து, மக்கள் கொடுப்பதை மனம் உவந்து வாங்கி- படைத்த ரப்புக்கு பொருத்தமான வகையில் வாழ்க்கையை அமைதியாய் கடத்தினார்கள்.

நளடைவில் ஒழுக்க தன்மன உணர்ச்சிகள் மரத்துப் போய்இன்று எப்படி உருமாறினார்கள்

மார்க்கம் தனிமையை, துறவறத்தை அனுமதிக்கவில்லை.

மார்க்கத்தைப் பொறுத்தவரை தீய செயல்களிலிருந்து விலகி வாழ்வதுதான் உண்மையான துறவறம்.

தனிமை.தீயவர்கள்,வீணான காரியங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்,

சீர்கேடுகளை விளைவிப்பவர்கள் ஆகியவர்களிடமிருந்து விலகிச் செல்வது தான் துறவறம்.

இப்படி அவர்களின் அன்றைய பார்வையில் தெளிவான பிரச்சார இயக்கமாக ஆரம்பித்து இன்று சற்றே சிதைந்து...

சாம்பிராணி போடுவது, கந்தூரி மற்றும் திருவிழாக்களில் மட்டும் பாடுவது..

என இப்படி அடையாளம்
மாறிபோனார்கள்.

இவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஆற்றிய பங்கு அபரிதமானது.

சுதந்திர செய்தியை மற்றும் சில ரகசியங்களை இவர்களின் மூலமாக சுதந்திர போராளிகள் பரிமாறிக் கொண்டனர்.

பாடல்கள் மூலமாகவே சொல்ல வேண்டிய செய்திகளை சொல்லிவிடுவார்கள்..

சுதந்திர போராளிகள் இவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள்...

குளிக்காமல், 
அழுக்கு துணியை மாற்றாமல் வாரம் ஒருமுறை மட்டும் குளித்து சுத்தமாகி மீண்டும் தனது ஒருவார துறதலை மேற்க்கொள்பவர்கள் பக்கீர்மார்கள் -




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்