"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கூட்டு துஆவுக்கு ஆதாரம் காட்டுகிறார் –

– தொழுகைகளுக்குப் பின்னும் ஏனைய சந்தர்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறும்  முறைக்கு கூட்டு துஆ எனப்படுகிறது.  கூட்டு துஆவுக்கு ஆதாரங்கள் உண்டு எனக் கூறி சில ஹதீஸ்களை முன்வைத்து மரியாதைக்குரிய முஹம்மது சூபி (இம்தாதி) மவ்லவி அவர்கள்  ஒரு பிரசுரததை வெளியிட்டார்கள்.

மவ்லவி அவர்கள் முன்வைத்த ஹதீஸ்கள் தகுந்த ஆதாரத்திற்குரியவை அல்ல எனற மறுப்பு சத்தியக்குரல் பத்திரிக்கையில் தொடராக எழுதி வந்தோம் பிறகு கூட்டு துஆ- குழப்பங்களுக்கான தெளிவு எனும் தலைப்பில் அதனை ஒரு நூலகவும் 14.03.2008 அன்று வெளியிட்டோம்.இப்போது அதனை இங்கு பிரசுரிப்பது மக்களுக்கு தெளிவை தரும் எனும் நோக்கில் வெளியிடுகிறோம்.

முன்வைக்கப்படும் ஆதாரம் 

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு அருளியுள்ளார்கள்.

யூதர்கள் ஓர்; பொறாமைக்காரர்களான சமுதாயம். அவர்கள் எமக்கு இஸ்லாமும், ஆமீன் எனும் வார்த்தையும் கிடைத்தற்காகப் பொறாமைப்படுவது போன்று வேறு எதற்கும் பொறாமைப்படுவது கிடையாது. ஆதாரம் : இப்னு குஸைமா, பாகம் 1, பக்கம் 288 (பாபு திக்ரி    ஹஸதில் யஹுத்)

மறுப்பு

மவ்லவி கூறுவது போல் இந்த ஹதீஸில் இஸ்லாமும் ஆமீனும்|| என்று வார்த்தை ஹதீஸ் மூலத்தில் கிடையாது. ஸலாமும் ஆமீனும் என்ற வார்த்தைதான் ஹதீஸ் மூலத்தில் உள்ளது. மௌலவி அவர்கள் ஸலாம் என்ற வார்த்தையை இஸ்லாம் என்று தவறுதலாக மொழி பெயர்த்திருக்கலாம்.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக்கொள்வதைக் கண்டு யூதர்கள் பொறாமைப் படுகிறார்கள். அதுபோல் ஆமீன்|| சொல்வதைக் கேட்டும் பொறாமைப்படுகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

மௌலவி முஹம்மது அவர்கள் இந்த ஹதீஸை பார்ரத்ததும் கூட்டு துஆ பற்றி நபியவர்கள் கூறுவதாக தவறுதலாக புரிந்துகொண்டு தன்னுடைய கருத்தை நிலைநாட்ட தப்பான விளக்கம் கொடுக்க முனைந்திருக்கிறார். ஆமீன் என்று வரக்கூடிய செய்தியெல்லலாம் கூட்டு துஆ பற்றி பேசுவதாக முடிவுசெய்கிறார்.?

ஆமீன்|| சொல்லுகின்றபோது யூதர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்றால் எச்சந்தர்ப்பத்தில் பொறாமைப்படுகிறார்கள்? தொழுகை முடிந்தபின் ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறுகின்ற போதா? அல்லது தொழுகையில் இமாம் சப்தமிட்டு சூரதுல் பாதிஹா ஓதி முடியும் போது எல்லோரும் ஆமீன் கூறுகின்ற போதா? எதைக் குறித்து நபி (ஸல்) அவர்கள்  இந்தஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்?

தொழுகையில் இமாம் சப்தமிட்டு சூரதுல் பாதிஹாவை ஓதி முடியும் போது எல்லோரும் ஆமீன் கூறுவதைக் கண்டுதான் யூதர்கள் பொறாமைப்படுகிறார்கள் அதை குறித்துதான் நபி (ஸல்) அவர்கள் விளக்கப்படுத்துகிறார்கள் என்பதை இந்த ஹதீஸுக்கு முன்னால் பதிவாகியுள்ள ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஷஷஇமாம் இப்னு குகைஸா (ரஹ்) இந்த ஹதீஸையும் இன்னும் சிலஹதீஸ்களையும் கொண்டுவந்து அவைகளுக்கு தலைப்பிடும்போது ”இமாம் சப்தமிட்டு தொழுகையில் சூரதுல் பாதிஹா ஓதி முடியும்போது சப்தமிட்டு ஆமீன் கூறுதல்|| பாடம்(138)என தலைப்பிட்டு பின்வரும் ஹதீஸ்களை பதிவுசெய்துள்ளார்கள்.

  அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். நிச்சயமாக மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைகின்றதோ அவரதுமுன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.

  அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என நபி (ஸல்) கூறினார்கள்.

  அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உம்முல் குர்ஆன் (சூரதுல் பாதிஹா) ஓதி முடிந்தால் ஆமீன் என்று சப்தமிட்டு கூறுவார்கள்.

இப்னு குஸைமாவில் உள்ள இம்மூன்று ஹதீஸ்களும் சூரதுல் பாதிஹா சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஆமீன் கூறும்போது மஃமூம்களும் இமாமுடன் சேர்ந்து சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும் என்பதைத்தான் கூறுகின்றன.

இந்த ஹதீஸ்களுக்கு இன்னும் விளக்கமாக புகாரியில் வரக்கூடிய 782வது ஹதீஸில் (மஃமூம் சப்தமிட்டு ஆமீன் கூறுதல் எனும் பாடத்தில்) இமாம், கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாலீன்|| என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகையில் சூரதுல் பாதிஹா ஓதும் போது மட்டும் ஆமீன் கூறவேண்டும் என்று வரக்கூடிய  ஹதீஸ்களை தொழுகை முடிந்தபின் அல்லது ஏனைய சந்தர்ப்பங்களில் கூட்டு துஆ ஓதி ஆமீன் கூறுவதற்கு ஆதாரமாக காட்டுவது மிகப் பெரிய தவறாகும். அபத்தமாகும்.

அதுமட்டுமன்றி மௌலவி முஹம்மது சூபி எந்த ஹதீஸை கூட்டு துஆவுக்கு ஆதாரமாக காட்டுகிறாரோ அந்த ஹதீஸின் பாடத்தின் தலைப்புகூட இவருடைய கருத்துக்கு (அதாரத்திற்கு) எதிராகவே உள்ளதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.

அதனால்தான் அந்தப் பாடத்தின் தலைப்பின் ஒரு பகுதியை மட்டும் அரபியில் (ஹஸதில் யஹுத்) என்று காட்டிவிட்டு அதனுடன் சேர்ந்த மற்றப் பகுதியை எழுதாமல் மறைத்து விட்டார். அவர் எடுத்துக் காட்டிய (ஹஸதில் யஹுத்) வாசகத்தின் பொருள் ஷஷயஹுதிகள் பொறாமை படுதல்|| என்பதாகும்.

அவர் எடுத்;து காட்டாமல் விட்ட மற்ற வாசகம் ஷஷமுஃமின்கள் ஆமீன் சொல்வதை யஹுதிகள் பொறாமைப்படுதல். சில அறிவீனர்கள் இமாம் கிராத் ஓதும்போது, இமாம்களும் மஃமூம்களும் ஆமீன் சொல்வதைவிட்டும் தடுப்பது. யஹுதிகளின் செயல்களில் ஒரு பண்பாகும். மேலும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களுடன் (யஹுதிகள்) பொறாமைக் கொள்ளுதல்|| என்பதாகும்.

இந்த தலைப்பை முறையாக முழுமையாக படித்திருந்தால் இது தொழுகையில் பாதிஹா சூராவுக்கு ஆமீன் சொல்வதைத் தான் குறிப்பிடுகின்றன-தொழுகை முடிந்த பின் ஒருவர் துஆ ஒதமற்றவர் ஆமீன் கூறுவதை குறிப்பிடவில்லை- என்பதை புரிந்துகொண்டிருப்பார்.ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் மற்றவர்களை திட்டித் தீர்ப்பதில் எந்தப் பயனுமில்லை.

தொழுகையில் சூரதுல் பாதிஹாவை இமாம் சப்தமிட்டு ஓதிமுடியும்போது ஆமீன் கூறவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு கிடையாது. முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையில் ஆமீன் கூறித்தான் வருகிறார்கள்.

ஆனால் இந்த ஹதீஸை கூட்டு துஆவுக்கு ஆதாரமாக எடுப்பதுதான் தவறு என்று கூறுகி றாம்.தொழுகையில் பாதிஹா சூராமுடிந்த பின் அனைவரும் ஆமீன் கூறவேண்டும் என கற்றுத்தந்து செய்துகாட்டிய நபியவர்கள் தொழுகைக்கு பின் ஆமீன் கூறவேண்டும் என்று கற்றுத்தரவுமில்லை செய்துகாட்டவுமில்லை. இந்த ஹதீஸைக்காட்டி தொழுகையல்லா சந்தர்ப்பங்களில் கூட்டுதுஆ ஓதலாம் என்று புரிந்து கொள்ளளமுடியும் என்றால்; இவரைவிட பன்மடங்கு சிறப்பபுக்குரிய நபி(ஸல்) அவர்கள் சிறப்புக்குரிய அமலை புரிந்து செயல்படுத்திகாட்டமுடியாமல் போய்விட்டார்கள் எனகூறப்போகிறார்களா?

ஒரு வாதத்திற்கு இது கூட்டுதுஆவுக்குரிய ஆதாரமென்று வைத்துக்துக் கொண்டால் கூட இமாம் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறவேண்டும் என வாதிடமுடியாது.ஏனெனில் சூரதுல் பாதிஹா ஓதி முடியும் போது இமாமுடன் சேர்ந்து மஃமூம்களும் ஆமீன் கூறவேண்டும் என்றே நபியவர்கள் கூறுகிறார்களே தவிர இமாம் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறவேண்டும்என்று கூறவில்லை.

மௌலவி முஹம்மது சூபி அவர்களைப் போன்றவர்கள் உருவாக்கிக் கொண்ட- உருவாக்கிக் கொணடுவருகின்ற-  துஆக்களுக்கு இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வது தவறாகும்.

*****************
கூட்டுதுஆ பற்றி  மேலும் அறிந்திட

பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ
https://shirkinethiri.blogspot.com/2020/02/parlutholuhai-koottudua.html

மூஸா நபியின் துஆ விட்கு ஹாரூன் (அலை) ஆமீன் சொன்னார்களா ?
https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua_67.html

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?
https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua_14.html

கூட்டு துஆ ஓதலாமா? கூட்டு துஆ என்றால் என்ன?
https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua.html

கூட்டு துஆ (துவா ) உண்டா ?
https://www.youtube.com/watch?v=4T55c0h87TM





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்