தாயத்து
கட்டுவதை பெருமையாக நினைக்கும் மனிதர்களுக்கும் குறிப்பாக சிந்திக்கத்
தவறும் முஸ்லிம்களுக்கும் இக்கட்டுரையை சமர்பிக்கிறோம் காரணம்
முஸ்லிம்களாகிய நம்மில்தான் இந்த கொடிய அநாச்சாரத்திற்கு அடிமையானவர்கள்
அதிகம் இப்படிப்பட்டவர்கள்தான் இறைவனுக்கு இணைவைத்து வாழ்ந்து
வருகிறார்கள்.
தாயத்து
கட்டிக் கொள்வதால் தங்களுக்கு ஜின்கள் மற்றும் காத்து கருப்பு அண்டாது
என்றும் மனிதன் பலவீனமானவன் என்றும் அந்த பலவீனத்தை பலப்படுத்தவே
மந்திரித்த தாயத்துக்களை வழங்குவதாகவும் ஓரளவுக்கு இஸ்லாத்தை கற்றுணர்ந்த
ஹஜரத்துக்கள் கூறிவருகிறார்கள்.
மேலும்
தாயத்துக்கள் தா்காஹ் கப்ருகளில் வைத்து கத்தம் ஃபாத்திஹா ஓதி அதை தியானம்
செய்து மந்திரித்து கொடுப்பதன் மூலம் அந்த தாயத்திற்கு மகத்துவம் கிடைத்து
விடுவதாகவும் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
ஏதோ தாயத்தை
முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாகவும் ஹஜரத்துக்களின் மந்திர சக்தியின்
மூலம்தான் தாயத்திற்கு மகத்துவம் கிடைப்பதாகவும் மூளைச்சலவை செய்யப்பட்ட
இந்துக்கள் மற்றும் கிருஸ்தவ சகோதரர்கள் கூட நம்பி மோசம் போகிறார்கள்!
தாயத்தின்
பின்னனி என்ன? தாயத்து எப்படி எந்த காலத்தில் உருவானது அதற்கும்
இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிவதற்கு கடந்த கால வரலாற்றில்
நாம் பயணிக்க வேண்டும்!
இஸ்லாம் அருளப்பட்ட வரலாறு
முதல்
மனிதர் ஆதம் (அலை) மற்றும் அவரது மனைவி ஹவ்வா (அலை) இருவரும்
சுவர்க்த்தில் தடுக்கப்பட்ட ஒரு மரத்தை நெருங்கியதன் காரணமாக அங்கிருந்து
வெளியேற்றப்பட்டு இந்த பூமியில் தரையிறக்கப்பட்டனர். அவர்கள் பூமியில்
இறங்கும் முன்னரே இஸ்லாத்தை அல்லாஹ் அவா்களுக்குரிய மார்க்கமாக்கிவிட்டான்
அதற்குரிய ஆதாரம் இதோ!
இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலருக்கு சிலர் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார் என்று கூறினான். (குர்ஆன் 20:123)
“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யாகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். (குர்ஆன் 2:132)
ஆக இஸ்லாம்
ஒன்றே உண்மை மார்க்கமாகும் மேலும் இந்த மார்க்கத்தில் ஆதமின் சந்ததிகள்
பிறந்து வளர்ந்த காலகட்டத்தில் பல்வேறு அநாச்சாரங்கள் தான்தோன்றித் தனமாக
பின்பற்றத் தொடங்கினர் அப்படிப்பட்ட அநாச்சாரங்களை ஷைத்தான் அவர்களின்
உள்ளங்களில் கற்பித்து வந்தான் அதற்குரிய ஆதாரம் இதோ!
“என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்” என்று கூறினான். (குர்ஆன் 15:39, 40)
ஷைத்தானின்
இந்த பகிரங்க அறிவிப்பால் மனிதன் வழிதவறி சீரழிந்துவிடக் கூடாது
என்பதற்காகவே தன் புறத்திலிருந்து நபிமார்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்
அதற்குரிய ஆதாரம் இதோ
அவர்கள் ஆதமுடைய வழித்தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித்தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள். (குர்ஆன் 19:58)
இப்படிப்பட்ட
சத்திய மார்க்கத்தில் அநாச்சாரங்களை புகுத்திய மடையர்களுக்கு மத்தியில்
உண்மையை உள்ளவாறு உணர்த்திச்சென்ற நபிமார்கள் ஏராளம் அவர்களைக் கொண்டே
இறைவன் பல்வேறு சமுதாயங்களை சீர்திருத்தி சத்திய சன்மார்க்த்தில் நிலைபெறச்
செய்தான் இறுதியாக 1400 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை
இறுதித்தூதராக இறைவன் அருளினான் அவரின் மூலமாக இஸ்லாம் எனும் மார்க்கத்தை
இறைவன் முழுமைப்படுத்தினான் இதோ ஆதாரம்!
தாமாகச்
செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக
சப்தமிடப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து
நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை,
(தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில்
(உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை
தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம்
குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
(ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி
இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே
அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை
உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு
முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக
பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் 5:3)
ஆதம் (அலை)
அவர்கள் முதல் நபிகள் நாயகம் (ஸல்) வரை எந்த நபியாவது தாயத்தை கட்டியதாகவே
அல்லது அதனை தாங்கள் கட்டிக்கொண்டதாகவோ ஆதாரம் காட்ட இயலுமா? என்றால் அறவே
முடியாத காரியமாகும் காரணம் அவர்கள் அனைவரும் தீய கொடிய அநாச்சாரங்களை
தகர்த்தெரியவே நம்மிடம் அனுப்பப்பட்டார்கள் அப்படியானால் இந்த தாயத்து
கட்டும் தீய பழக்கம் எவ்வாறு வந்தது இதற்கு ஆதாரங்கள் இதோ கீழே தொகுத்து
வழங்குகிறோம் சற்று மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்!
தாயத்து எவ்வாறு வந்தது?
நபி மூஸா (அலை)
அவர்கள் காலத்தில் தோன்றியதுதான் சிலை வணக்கம் எனும் கொடிய இணைவைப்பு
வணக்க வழிபாடாகும் இதனை அவரின் சமுதாயத்தவர்கள் செய்துவந்ததன் விளைவாக
பிற்காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று பிறந்தது காரணம் மூஸா நபியின்
சமுதாயத்தவர்கள் காளைக் கன்றை கடவுளாக வணங்க முற்பட்டனர்
அந்த காளைக்
கன்றுதான் சிந்து சமவெளி நாகரிகத்தில் பசுபதி என்ற காளைமாட்டை கடவுளாகவும்
அதன் மறு அவதாரமாக கோமாதா என்று இன்றுவரை இந்துக்களால் பசுமாடும்
போற்றப்பட்டு வருகிறது. இந்த இந்து மதத்தின் கண்டுபிடிப்புதான் இந்த
தாயத்துக்கள் எனும் கொடிய அநாச்சாரமாகும் அதற்குரிய ஆதாரம் இதோ இந்து மத
புராணங்களில் உள்ளது.
சிந்து சமவெளி
நாகரீகத்தில் கிடைத்த ஸ்வஸ்திக் சின்னங்கள் அந்த சமுதாய மக்கள்
பயன்படுத்திய தாயத்துகளாகும் உலகம் முழுதும் பண்டைய
கலாசாரங்களில் ஸ்வஸ்திகா சின்னம் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்தே இது
சென்றதை உணரமுடிகிறது அதற்கு அச்சாணியாக ஆதாரமாக திகழ்வது சிந்து சமவெளி
நாகரீகமாகும்.
பண்டைக்கால
இந்துக்கள் தாயத்துகள் அணிவதால் மனதிற்கும், உடலுக்கும் பாதுகாப்பு
தருவதோடு, அதிர்ஷ்டத்தையும் தரும் என்றும் நம்பினர். மேலும் தீய சக்திகள்,
பேய், பிசாசுகளை அண்ட விடாது என்றும், பயத்தைப் போக்கவும், எதிரிகளை
வெல்லவும் அவை உதவும் என்றும் நம்பினர். அதர்வண வேத மந்திரங்கள் இதனை
தெளிவுபடுத்துகிறது. ஆதாரம் இதோ
கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அதர்வண வேத 8-6-9)
துவக்க காலத்தில் பனை ஓலைச் சுருளில் மந்திர, தந்திர எந்திரங்களை வரைந்து அணிந்தனர். பனை மரத்துக்கு வட மொழியில் தால என்று பெயர். இதில் இருந்தே தாலி, தாலிஸ்மேன் (ஆங்கிலச் சொல்) போன்ற சொற்கள் கிடைத்திருக்கலாம்.
கிரகதோஷம் நீக்கும் தாயத்துக்கள்
தாய்ப்பால்
குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படின் அதனைத் தோடம்
என்று வேதங்களில் அழைப்பது உண்டு இந்த தோடம் பல வகைப்படுவதாகவும் அவற்றில்
ஒன்றுதான் இந்த கிரக தோஷம் என்றும் அழைக்கிறார்கள். அதாவது சூரியனைச்
சுற்றிவரும் கிரகங்களில் தீய கிரகங்கள் உள்ளதாகவும் அந்த தீய கிரகங்களால்
பிறந்த குழந்தைக்கும் அதன் தாய்க்கும் பிறந்த ஆறாம் நாள், ஆறாம் மாதம்
மற்றும் ஆறாம் வருடத்தில் தீங்கு நேரும் என்றும் சோதிடம் கணித்து வைத்துக்
கொண்டு அதை கிரக தோஷம் என்று கூறிக்கொண்டு அந்த தோஷத்தால் காய்ச்சல்,
உடம்பு மெலிதல் போன்ற உபாதைகள் உருவாவதாகவும் சாஸ்திரங்களில்
கூறப்படுகிறது. இந்த சாஸ்திரங்களை அவர்களின் மூட சம்பிரதாயங்களின் படி தோஷ
நிவர்த்தி செய்ய தாயத்துக்களை அணிவித்தனர் இந்த தாயத்துக்களில் வேத
மந்திரங்களை ஓதி, அதை ஜெபித்து மாலையாக கழுத்தில் அணிவித்து தொங்க விடுவர்
மற்றும் சிலரோ கைகளில் கட்டிக்கொண்டும் அரணாக்கயிற்றில் தொப்புளை சுற்றி
வயிற்றில் கட்டியும் தொங்கவிட்டுக் கொள்வர் இதுதான் தாயத்தின் பண்டைய
வரலாறாகும்.
தாயத்து கட்டி காஃபிர்களை பின்பற்றுவதா?
இந்துக்களிடம்
ஆதிகாலத்தில் பரவிய மூட நம்பிக்கைகளான தோஷம் கழித்தல், ஜாதகம் கணித்தல்,
பஞ்சாங்கம் நல்ல நேரம் கெட்ட நேரம் மந்திரித்த தட்டுக்கள், மந்திரித்த
தாயத்துக்கள் ஆகியவற்றை பின்பற்றுவது ஒரு முஸ்லிமுக்கு ஏற்புடையதல்ல
எனினும் ஹஜரத்துக்கள் எனப்படும் குர்ஆனை ஓதத்தெரிந்த ஒரு சில கேடுகெட்ட
மனிதர்கள் தங்கள் சுய இலாபத்திற்காக இந்த வகையான செயல்களில் மாற்றம் செய்து
அதை மார்க்கத்தில் புகுத்தி வருமானத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோஷம்
கழிப்பதற்க பதிலாக இஸ்லாத்தில் ஃபால் கிதாபுகள் பார்க்கிறோம் என்றும் அதன்
மூலம் அந்த மனிதனுக்குரிய கஷ்டங்களை தீர்க்க இயலும் என்று கூறுகின்றனர்
மேலும் சில அரபு மற்றும் உருது எழுத்துக்களை பொறித்த செப்புத் தட்டுக்களை
உருவாக்கி அதை வீடுகளில் தொங்க விட்டால் காத்துக்கருப்பு அண்டாது என்றும்
மந்திரித்த தாயத்துக்களை கழுத்திலோ இடுப்பிலோ கை மணிக் கட்டிலே கட்டிக்
கொண்டால் ஜின்கள் ஆவிகள் தீண்டாது என்றும் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு
தங்கள் சுய இலாபத்திற்காக சைடு பிசினஸ் செய்து வருகின்றனர். மனிதர்களும்
இந்த மூட முல்லாக்களின் வார்த்தைகளில் மயங்கிவிடுகின்றனர்.
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
கப்ருகளை
வணங்கி இறைவனுக்கு இணைவைக்கும் தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு
ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம்
காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க
மாட்டீர்களா?
- சந்தனக்கூடு
- கொடிமரம்
- சமாதி வழிபாடு
- அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
- கப்ரை உயர்த்திக் கட்டுதல்
- தஸ்பீஹ் மணி உருட்டுதல்
- மவ்லூது பாடல்கள்
- கவ்வாலி இசைக்கச்சேரிகள்
- உரூஸ் உண்டியல்
- யானை குதிரை ஊர்வலங்கள்
- பிறந்த நாள் விழா எடுப்பது
- இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
- வட்டி வாங்குதல்
- வரதட்சணை பிடுங்குதல்
- ஜோதிட நம்பிக்கை
- கருமணி தாலி கட்டுதல்
- வாழைமரம் நடுதல்
- ஆண்கள் தங்கம் அணிவது
- மஞ்சள் நீராட்டுவிழா
- சுன்னத் கத்னா திருவிழா
தாயத்துக் கட்டுவது ஜின்களை கட்டுப்படுத்தவா?
சகோதர
சகோதரிகளே ஜின்கள் உள்ளது உண்மைதான் அவைகளில் நல்ல ஜின்களும் உள்ளது கெட்ட
ஜின்களும் உள்ளது ஆக மனித இனம் இருப்பது போன்று ஜின்களின் இனமும் உண்டு
ஆனால் அந்த ஜின்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறி ஜின்களின்
தீய சக்திகளை தடுக்கவே தாயத்துக்கள் மற்றும் மந்திரித்த செப்புத் தகடுகள்
கொடுப்பதாக ஹஜரத்துக்கள் கூறுவது முட்டாள்தனமாக இல்லையா?
சிந்தித்துப்
பாருங்கள் ஜின்கள் தான் தீங்கு செய்வதில் உயர்ந்தவர்களா? அப்படியெனில்
இப்லீஸ் எனப்படும் ஷைத்தான் தீங்கே செய்யாதவனா? இந்த கேடுகெட்ட முல்லாக்கள்
(தர்காஹ் ஹஜரத்துகள்) இப்லீஸ் எனப்படும் ஷைத்தானை பின்னுக்குத் தள்ளி
ஜின்களை முன்வைத்து தங்களின் வியாபாரத்தை செய்கிறார்கள் ஆக இவர்கள் மிகத்
தெளிவான ஞான சூனியங்கள் என்பது உங்கள் பார்வைக்கு புலப்படவில்லையா?
ஆதம் நபியை வழிகெடுத்தது இப்லீஸ் அந்த இப்லீஸை விரட்டியடிக்க அல்லாஹ் கூறும் அழகிய உபதேசம் என்ன?
குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! (குர்ஆன் 16:98)
இங்கு அல்லாஹ் நமக்கு கூறும் அறிவுரை என்ன? சிந்திக்க மாட்டீர்களா?
குர்ஆனை ஓதும் போதும் ஷைத்தான் நம்மிடம் வருகிறான் ஆக அவனிடமிருந்து பாதுகாப்பு பெற அல்லாஹ்வின் உதவியை நாட வேண்டும் என்பதே!
ஆனால் குர்ஆனை
ஓதாமல் அதை எழுத்துக்களாக எழுதி கழுத்தில் தாயத்துக்களாக தொங்கவிடுவதால்
ஷைத்தான் ஓடிவிடுவானா? அப்படியானல் அல்லாஹ் நம்மை நோக்கி ஏன் அல்லாஹ்விடம்
உதவி தேட உபதேசிக்கிறான் மாறாக குர்ஆனை கழுத்தில் தொங்கவிட
சொல்லியிருக்கலாமே! சிந்திக்க மாட்டீர்களா?
மகத்துவம்
மிக்க குர்ஆன் ஓதும் போது நம்மிடம் ஷைத்தான் வருகிறான் என்று அல்லாஹ்
கூறும் போது மனிதர்களாகிய கூறுகெட்ட ஹஜரத்துக்கள் குர்ஆன் எழுத்துக்களை
காகித்தில் எழுதி தாயத்தாக தொங்க விட்டுக் கொண்டால் ஜின்கள் ஷைத்தான்கள்
நம்மை நோக்கி வருவதில்லை என்று கூறுவது அல்லாஹ்வின் கட்டளைக்கும்
வார்த்தைக்கும் மீறும் செயல் அல்லவா?
குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! (குர்ஆன் 16:98)
எனவே மேற்கண்ட வசனத்தின் படி எந்த மனிதனின் உள்ளத்திலும் அவன் குர்ஆன் படித்தாலும் 5 வேளை தொழுகையை தொழுதாலும் ஹஜ்ஜின் கிரியைகளை செய்தாலும் ஷைத்தான்
வழிகெடுக்க வருவான் என்று நாம் நம்ப வேண்டுமே தவிர அந்த ஷைத்தானை
விரட்டுவதற்கு குர்ஆனை படித்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டுமே தவிர
குர்ஆனை காகிதத்தில் எழுதி தாயத்தாக தொங்க விட அல்ல!
குர்ஆனை அவமதிக்கும் செயல்!
அல்லாஹ் அருளிய
குர்ஆன் வசனங்களை நாம் மிக அழகிய முறையில் படிக்கிறோம் ஒழு செய்துக்
கொண்டு தொடுகிறோம் மேலும் கால்கள் படாத உயரமான இடத்தில் அழகாக
பத்திரப்படுத்தி பாதுகாத்து வைக்கிறோம் ஆனால் இந்த குர்ஆன் வசனங்களை
காகிதத்தில் எழுதிக் கொண்டு அதை கழுத்தில் தாயத்தாக மாட்டிக் கொண்டு
குர்ஆன் வசனங்கள் அடங்கிய தாயத்தை கழுத்தில் கட்டிக்கொண்டு
- கழிவரையில் மலஜலம் கழிக்கிறோம்,
- தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறோம்
- சினிமா குத்தாட்டங்களை பார்த்து ரசிக்கிறோம்
- ஹராமான இடங்களில் அமர்கிறோம்
குர்ஆன்
புனிதமானது என்று கூறும் நீங்கள் குர்ஆன் வசனங்களை தாயத்தாக கட்டி
தொங்கவிட்டுக்கொண்டு இவ்வாறு வாழ்வது நடமாடுவது கூடுமா?
சிந்திக்கமாட்டீர்களா? உங்கள் செயல் குர்ஆனுக்கு முரணாக தெரியவில்லையா?
சிந்திக்க சில வரிகள்!
- தாயத்தை மந்திரித்து கொடுக்கும் ஹஜரத்துக்கள் ஜின்களுக்கு பகைவர்கள் எனவே அவர்களால் ஜின்களுக்கு பேராபத்தை விளைவிப்பதாக எந்த ஜின்னும் கருதவில்லை ஏன்?
- தாயத்தை மந்திரித்து கொடுக்கும் ஹஜரத்துக்களை ஜின்கள் கொன்றுவிட்டால் மக்களை எளிதாக மடக்கி மயக்கலாமே ஜின்கள் எத்தனை ஹஜரத்துக்களை கொன்று விழுங்கியுள்ளனர்.
- மந்திரித்து கொடுக்கும் ஹஜரத்துக்கள் சுயதொழில் புரிவதில்லை ஆக மந்திரித்து கொடுக்கும் தாயத்துக்களை விற்பதை அவர்களின் குல தொழிலாக பாட்டன் பூட்டன்வாயிலாக செய்து வருவது கூடுமா?
- மாந்திரீகம் செய்து மந்திர தகடுகளை கொடுக்கும் ஹஜரத்துக்கள் பிச்சைக்காசுக்காக ஏன் இதை செய்ய வேண்டும் தங்கள் வீடுகளில் செப்புத் தகடுகளை கட்டி கோடிஸ்வரர்களாக ஆகியிருக்கலாமே! சிந்திக்க மாட்டீர்களா?
அல்லாஹ்வுக்கு
இணைவைக்கும் இடங்களான தர்காஹ்களில் அமர்ந்துக் கொண்டு அங்கு வருபவர்களிடம்
வருமானத்தை எதிர்ப் பார்ப்பதைத் தவிர இந்த கூறுகெட்ட மூட முல்லாக்களுக்கு
வேறு வேலை இல்லை அதை மக்களும் உணர மறுக்கின்றனர். அவர்களுக்கு இதோ
அல்லாஹ்வின் எச்சரிக்கை அடங்கிய ஒரு வசனத்தை முன்வைக்கிறோம்!
தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (குர்ஆன் 2:79)
முடிவுரை
அன்பிற்கினிய
சகோதர சகோதரிகளே மனிதனுக்கு எந்த ஒரு தீங்கு நேர்ந்தாலும் எந்த நன்மை
நேர்ந்தாலும் அது அல்லாஹ் நாடாமல் நிகழ்வதில்லை மேலும் அதை அல்லாஹ்
கண்காணிக்காமலும் இல்லை இதோ அழகிய அருள்மறை வசனம் இதற்கு ஆதாரமாக
திகழ்கிறது சிந்தித்துணர்வீர்களாக!
மறைவானவற்றின்
திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.
தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும்
அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும்,
ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (குர்ஆன் 6:59)
எனவே உங்களுக்கு ஏற்படும் இழப்புகள், நோய் நொடிகள் மற்றும் கஷ்டங்களை வல்ல ரஹ்மானிடம் கேளுங்கள் இதோ ஒரு அழகிய நபிமொழி
“எனது அடியான் நபில்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி)
இனியும்
நீங்கள் தாயத்துக்களை உடலில் கட்டிக் கொண்டு செப்புத் தகடுகளை வீட்டில்
கட்டித் தொங்கவிட்டு உங்களை நீங்களே அலங்கரித்துக் கொண்டால் அறிந்துக்
கொள்ளுங்கள் நீங்கள் கீழ்க்கண்ட நபிமொழியை நடைமுறைப்படுத்தும் மனிதர்களே
தவிர மூமின்களின் அந்தஸ்துக்கு உயர வாய்ப்பே இல்லை!
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
இனியாவது தாயத்துக்களை தட்டுத் தகடுகளை அணிவோமா? சிந்தித்து உணர்ந்து அதை நம்மிடமிருந்து அகற்றுவோமா? முடிவு உங்கள் கைகளில்!
“நீங்கள் இறையச்சமுடையோராக
ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு
அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!” என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி
உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள் (குர்ஆன் 2:63)
இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு. (குர்ஆன் 78:31, 32, 33, 34)
என்னைப்
பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான்
அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது
பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்!
என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக்
கூறுவீராக!) (குர்ஆன் 2:186)
அல்ஹம்துலில்லாஹ்!
இறைவா நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக!
நன்றி :சிராஜ் அப்துல்லாஹ் (தவ்ஃபீக்)
****************
****************
ஷிர்க் இல்லாமல் இருந்தால் தாவீஸ் அனியலாமா?
https://shirkinethiri.blogspot.com/2020/03/thaayaththu.html
தயாத்து அணியலாமா?
https://shirkinethiri.blogspot.com/2020/03/thaayaththu-aniyalama.html
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்