ஆலிம்'களின் முகத்தை பார்ப்பது வணக்கமா.?
ஆலிம்களின் சிறப்புகள் என்ற பழைய நூல் ஒன்றில் கண்ட செய்தி.!
ஆலிம்களின் முகத்தை பார்ப்பது வணக்கமாகும் - என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இந்த நூலில் எழுதப்பட்டுள்ள இந்த ஹதீஸ் பலவீனமானது. இப்படி ஒரு ஹதீஸ் - அல் இலலுல் முத்தனாஹியா -1373- என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள ஹம்மாம் பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளர் யாரென்று அறியப்படாதவர் (மஜ்ஹூல்) என்று
இமாம் கத்தீபுல் பஃதாதீ அவர்களும் - கைவிடப்பட்டவர் (மத்ரூக்) என்று
இமாம் தாரகுத்னீ அவர்களும் கூறியுள்ளார்கள்.
மேலும் இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள சுலைமான் பின் அர்ரபீவு என்ற அறிவிப்பாளர் - பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த ஹதீஸின் இறுதியில் - சுலைமான் பின் அர்ரபீவு என்ற அறிவிப்பாளர் - பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ கூறிய செய்தி'யை இந்த நூலின் ஆசிரியர் இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
* மேலும் இதே ஹதீஸ் தஃப்ஸீர் ரூஹுல் பயான் என்ற நூல் - இந்த ஹதீஸை அறிவித்த நபித்தோழர் யார் - இதனை அறிந்த அறிவிப்பாளர்கள் யார் என்ற எந்த விபரங்களும் இல்லாமல் - ஹதீஸில் வந்துள்ளது என்று இடம்பெற்றுள்ளது .
அறிவிப்பாளர் வரிசை (ஸனது) இல்லாத ஹதீஸ்களை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது - எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.
தஃப்ஸீர் ரூஹுல் பயான் என்ற நூல் - பல கட்டுக்கதைகள் இடம் பெற்றுள்ள நூலாகும் . இதே ஹதீஸை அனஸ் ரலி அவர்கள் அறிவித்ததாக இமாம் தைலமீ அவர்கள் தனது முஸ்னது அல்ஃபிர்தவ்ஸ் என்ற நூலில் கூறியுள்ளார்கள் -
இதற்கு அறிவிப்பாளர் வரிசை இல்லை என்பதனால் - இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அல்ல என்று அல்மகாஸிதுல் ஹஸனா என்ற நூலில் - இமாம் அஸ்ஸகாவீ அவர்கள் கூறியுள்ளார்கள். இதே போன்று இமாம் ஷவ்கானீ அவர்களும் அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ என்ற நூலில் கூறியுள்ளார்கள்
. . இதே ஹதீஸ் - முறையான அறிவிப்பாளர்கள் வரிசை இன்றி ஷீஆ'க்கள் எழுதிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது . பலவீனமான ஹதீஸ் மூலம் தங்கள் இமேஜை ஆலிம்கள் தக்க வைத்துக் கொள்ள முயன்றுள்ளார்கள். எனவே ஆலிம்களின் முகத்தை பார்ப்பது வணக்கமாகும் என்ற - இந்த ஹதீஸ் பலவீனமானது. * அலீ (ரளி) அவர்களின் முகத்தை காண்பது வணக்கமாகும் என்ற ஹதீஸின் தரம் குறித்தும் - ஆலிம்களின் முகத்தை பார்த்து சந்தோஷப்படுவோருக்கு கிடைக்கும் நன்மைகள் - என வந்துள்ள ஹதீஸின் தரம் குறித்தும் - அடுத்த அடுத்த பதிவுகளில் காணலாம். இன்ஷாஅல்லாஹ். :-
அன்புடன் :- M.யாசிர் அரஃபாத் இம்தாதி.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்