"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மக்கத்து காபிரும் நாமும் ஒன்றா ?

கேள்வி :
மக்கத்து காஃபிர்களையும், எங்களையும் ஒன்றாக்கி பார்க்கும் உங்கள் வாதம் பலவீனமானது, அவர்கள் நபிகள் நாயகதை எதிர்த்தார்கள், அடித்தார்கள், பைத்தியம் என்றார்கள், நாங்கள் அப்படி இல்லையே

பதில்:
நபிகள் நாயகத்தை மக்கத்து காஃபிர்கள் எதிர்கவில்லை, நபிகள் சொன்ன அந்த தவ்ஹீதிற்காக தான் எதிர்த்தார்கள், நீங்கள் அல்லாஹ்வுடன் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் என்று கூறியிருந்தால் நபிகள் நாயகத்தை அவர்கள் துன்புருத்தி இருக்கமாட்டார்கள்.

இப்பொழுது உள்ள கபுறு வணங்கிகள் நபிகள் நாயகத்தை எதிர்க்க வில்லை என்பது உண்மை தான், ஆனால் நபிகள் நாயகம் சொன்ன அந்த தவ்ஹீதை சொன்ன யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடி உதை விழாமல் இருந்ததில்லை, அவர்களை பைத்தியம், வழித்தவரியவர்கள் என்று ஏன் சில தவ்ஹீத் சகோதரர்களை கொன்றும் இருக்கிறார்கள். பள்ளிவாயல் களை எரித்தும் அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தியும் உள்ளனர்
மக்காவில் இணைவப்பவர்கள் நபிகள் நாயகத்தை எவ்வாறு துன்புறுத்தினார்களோ, அது போல தவ்ஹீதை ஏற்று கொண்ட அனைவரும் கபுறு வணங்கிகளால்  துன்புருத்த பட்டனர்.
துன்புறுத்தப்படுகின்றனர் 
அதை நபிகள் நாயகத்தயும் அல்லாஹ்வையும் எதிர்த்தாகதான் நாம் எடுத்து கொள்ள முடியும்.
எனவே மக்கத் காஃபிர்களும் இவர்களும் ஒன்றில்லை என்று கூறமுடியாது.

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்

இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கை யிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

இந்தக்காலமும் கடந்து, அக்கால மக்களும் மரணித்த பின்னால் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மனிதர்கள் அவர்களிலுள்ள ‘வத்து’ ‘சுவா’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ போன்ற நல்லடியார்களின் உருவங்களை தீட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் கடவுள்களாக எண்ணி வணங்கி, வழிபட எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அதிலிருந்து அம்மக்களைத்தடுத்து நிறுத்துவதற்காக உலகில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் இப்பூமியில் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் தத்தமது கற்பனைகளில் உதிக்கின்றவற்றை தாமாக வணங்கி, வழிபட தலைப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வானவர்களை யும், மற்றும் சிலர் நபிமார்களையும், நல்லடியார் களையும், வேறு சிலர் ஜின்களையும், இன்னும் சிலர் மாட்டையும் வணங்கி வந்தனர்.
மக்கா வாழ் காஃபிர்கள் , அல்லாஹ்தான் இவ்வுலகைப் படைத்தவன், வானங்களில் இருந்து மழை பொழி விப்பவன், அதிலிருந்து உணவளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டாலும் தமது வணக்க வழிபாடுகளில் அல்லா ஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை காஃபிர்களே! எனக் கூறி அழைக்கின்றான்.

தல்கீன் ஓதலாமா ?

ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு ஜனாஸாவை விளித்து மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை சொல்லிக் கொடுப்பதற்கு “தல்கீன்” ஓதுதல் என்று சொல்லப்படும்.
அறபுமொழியிலுள்ள ஓதலும், அதன் மொழி பெயர்ப்பும் பின்னால் வரும்.
என்ற இச்சொல்லுக்கு சொல்லிக் கொடுத்தல் என்ற பொருள் வரும்.

‘உன்னிடம் வானவர்கள் வருவார்கள்.
உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு!
உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு’
என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இப்படி தல்கீன் என்ற பெயரில், ஜனாஸாவை விளித்து உம்மிடம் கப்றில் வந்து கேள்வி கேட்கும் மலக்குகளிடம் இவ்வாறு, இவ்வாறெல்லாம் விடை சொல் என்று பாடம் நடத்துவது போல் சொல்லிக் சொல்லிக் கொடுத்து,
அது இறந்தவருக்குக் கேட்டு,
அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால்,,,,, இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்
??

இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று கூறுவார்கள்.அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி). நூல்: அபூ தாவூத் 2894, ஹாகிம் 1/370 பைஹகீ 4/56

எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும் துஆச் செய்ய வேண்டும்.