"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)
அபூதாலிப் அவர்கள் சொர்க்கவாதியா நரகவாதியா ?
கேள்வி :
அபூதாலிப் صلى الله عليه و سلم அவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். அவர் நபியவர்கள் உண்மையான நபிதான் என்பதை நன்கு அறிந்திருந்தார். நபியவர்களுக்குப் பல வழிகளிலும் உதவினார். எதிரிகளின் தாக்குதலுக்கு இடம் கொடுக்காமல் அரணாக நின்றார். மரணிக்கும் வேளையில் நபியவர்களைப் பின்பற்றுவதில்தான் நிச்சயம் மறுமையின் வெற்றியுண்டு என்று தனது ஹாஷிம் கோத்திரத்தார்களுக்கு வஸிய்யத் செய்தார். நபிகளாரைப் புகழ்ந்து பல கவிதைகளை இயற்றினார்.
அபூதாலிபின் மேற்கண்ட நடவடிக்கைகள் அவர் பெருமானாரை உள்ளார ஈமான் கொண்டிருந்ததற்கு சான்றாக அமைந்துள்ளது என்று கூறி அவர் முஃமினாகவே மரணித்தார் என்று ஒருவர் கூறுகின்றார். அதே நேரத்தில், மரணிக்கும் வேளையில் நபியவர்கள் அபூதாலிபுக்கு கலிமா சொல்லிக் கொடுத்தும் அவர் ஏற்க மறுத்தார். இந்த நிலையில்தான் அவர் மரணித்தார். அதனால் அவர் காபிராகவே மரணித்தார் என்று வேறு ஒருவரும் கூறுகின்றார்.
இவ்வாறு எதிரும், புதிருமாக வாதிக்கும் இருவரும் மௌலவிமார்கள்தான். அதனால் இருவரில் எவர் கூற்று சரியானது? ஆதாரத்துடன் விளக்கம் தருக?
விடை :
அபூதாலிப் தனது பிள்ளைகளை விட கண்மணி நாயகத்தை கண்ணின் கருவிழி போன்று கவனித்தார்,பாதுகாத்தார். எதிரிகளின் அனைத்து இடர்களையும் முறியடித்தார். நபியவர்களின் நபித்துவத்தை ஐயமற அறிந்திருந்தார். மரண வேளையில் நபியவர்களைப் பின்பற்றுமாறும் வஸிய்யத் செய்தார். அவர்களைப் பின்பற்றுவதில்தான் மறுமையின் பூரண வெற்றியுண்டு என்று உறுதிப்படக் கூறினார். பெருமானாரைப் புகழ்ந்தும், வியந்தும் பல கவிதைகளைப் பாடினார். இவற்றில் சில புகாரியிலும் வந்துள்ளன.
முஹம்மத் இப்னு இஸ்ஹாக் என்பவர், “ஸியர், வமஙாஸி” என்ற நூலில், அபூதாலிபின் 110 கவிதைகளையும் முழுமையாகவே பிரசுரித்துள்ளார். அஷ்ஷெய்கு முஹக்கிக் அல்லாமா அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “ஷரஹ் ஸிறாத்துல் முஸ்தகீம்” என்ற தனது நூலில்,
அபூதாலிபின் இக்கவிதை அபூதாலிப் நபிகள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் பேரில் பூரண மஹப்பத் வைத்திருந்தார் என்பதையும், அன்னாரின் நுபுவ்வத் பற்றி நன்கு ஆழமாக அறிந்திருந்தார் என்பதையும் புலப் படுத்துகின்றது. என்றும் வரைந்துள்ளார்கள்.
மேற்கண்ட அனைத்தும் உண்மைதான். ஆனால், இவையனைத்தும் அவர் ஈமான் கொண்டதற்கு ஆதாரமாகாது! இவையனைத்தும் அவர் ஈமான் கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால் அவரின் சகோதரர்களான ஹளரத் அப்பாஸ், ஹளரத் ஹம்ஸா (ரழி)ஆகியோரைவிட முதன்மை பெற்றிருப்பார். அல்லாஹ்வின் நாட்டத்தையும், அவன் விதியின் இரகசியத்தையும் நாமறியோம்!
நபித்துவத்தைப் பற்றி ஒருவர் பூரணமாக அறிந்திருத்தல் மட்டும் அவர் முஃமினாவதற்கு சான்றாகாது. அறிதலும், புரிதலும் என்பது ஒரு விடயம். ஏற்று நிர்ணயம் கொள்ளுதல் என்பது வேறு விடயம். இரண்டும் ஒன்றாகாது.
நபியவர்களின் உண்மையான நுபுவ்வத்தை உறுதிபட அறியாதிருந்த காபிர்கள் சொற்பம். அன்னார் நபி என்பதை மிகத் தெளிவாக அறிந்தும் மனதால் வெறுத்த காபிர்கள்தான் அதிகம்.
“நுபுவ்வத்தை அவர்கள் நிராகரித்தார்கள். இன்னும் அவர்களின் மனங்கள் அதை உறுதி செய்தன.” அல்குர்ஆன் - 59 : 2
(வேதக்கார, யூத, நஸாறா அறிஞர்கள்) தங்களது பிள்ளைகளை அறிந்திருந்தது போன்று நபியவர்களை தெரிந்து வைத்திருந்தனர். அல்குர்ஆன் - 2 : 146
அவர்கள் அறிந்திருந்தவர் அவர்களிடம் வந்தபோது அவரை நிராகரித்தார்கள். அல்லாஹ்வின் சாபம் காபிர்கள்மீது உண்டாகட்டும். அல்குர்ஆன் - 2 : 146 என்று திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான்.
அபூதாலிப் உயிர் பிரியும்வரை ஈமான் கொள்ளவில்லை. அவர் குப்ரியத்தில்தான் மரணித்தார் என்பதை திருக்குர்ஆன், ஸஹீஹான ஹதீதுகள் தெளிவாக தெரிவிக்கின்றன. அதனைத் தொகுத்து சுருக்கமாகத் தருகின்றேன்.
01. “நபியே! நீங்கள் விரும்பியவரை நல்வழிப்படுத்த முடியாது. எனினும், அல்லாஹ் அவன் நாடியவர்களை நல்வழிப்படுத்துகின்றான். இன்னும் நல்வழி பெற்றவர்களை அவன் நன்கு அறிவான். அல்குர்ஆன் - 28 : 56
இந்த திருவசனம் அபூதாலிப் விடயத்தில்தான் இறங்கியது என்று அனைத்து முபஸ்ஸிரீன்களும் இஜ்மாவாகக் கூறியுள்ளனர். எடுத்துக் காட்டாக,
1. தப்ஸீர் பகவி பாகம் - 03 பக்கம் - 307
2. தப்ஸீர் ஜலாலைன் பக்கம் - 332 இந்தியப் பதிப்பு
3. தப்ஸீர் நஸபி பாகம் - 03 பக்கம் - 240
4. தப்ஸீர் கபீர் பாகம் - 25 பக்கம் - 02
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷரஹு முஸ்லிம் ஈமான் பற்றிய பாடத்தில் அபூதாலிப் விடயத்தில் (இந்த ஆயத்) இறங்கியது என்று அனைத்து முபஸ்ஸிரீன்களும் இஜ்மாவாகக் கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷரஹு முஸ்லிம் பாகம் : 01, பக்கம் - 41 (இந்தியப் பதிப்பு)
மிர்காத் பாகம் - 09, பக்கம் - 640
ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் ஈமானிலும், ஜாமிஉத் திர்மிதி கிதாபுத் தப்ஸீரிலும் ஹளரத் அபூஹுறைரா ரழியல்லலாஹு அன்ஹுவைத் தொட்டும் பின்வரும் ஹதீது பதிவாகியுள்ளது.
நபிகள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் தங்களது பெரிய தந்தை(யான அபூதாலிபின்) மரண வேளையில் லாஇலாஹ இல்லல்லாஹ்! என்று கூறுங்கள். மறுமையில் உங்களுக்காக நான் சாட்சியம் கூறுவேன் என்றார்கள். அதற்கு, மரண வேதனையின் கடுமையால் முஸ்லிமாகி விட்டார் என்று குறைஷிகள் என்னை ஏளனம் செய்வார்கள் என்றில்லாவிட்டால் உங்கள் கண்களை குளிர்ச்சியடையச் செய்திருப்பேன் என்று அபூதாலிப் கூறியபோதுதான்,
நீர் விரும்பியவரை நல்வழிப்படுத்த உம்மால் முடியாது. அல்லாஹ் நாடியவர்களை அவன் நல்வழிப்படுத்துகின்றான்“ என்ற திருவசனம் இறங்கியது.
ஸஹீஹு முஸ்லிம் : பாகம் - 01, பக்கம் - 40 (இந்தியப் பதிப்பு)
02. இணை வைத்து வணங்குவோருக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ, விசுவாசிகளுக்கோ தகுமானதல்ல. அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள் தாம் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்காக மன்னிப்புக் கோரலாம்) அல்குர்ஆன் - 9 : 113
மேற்கண்ட திருவசனம் அபூதாலிப் விடயத்தில் இறங்கியது.
01. அபூதாலிபுக்காக பாவமன்னிப்புத் தேட றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாடினார்கள். அப்போது இணைவைத்து வணங்குவோருக்காக... என்ற (மேற்படி) திருவசனம் இறங்கியது.
தப்ஸீர் நஸபி : பாகம் - 02, பக்கம் - 148
02. அபூதாலிபுக்காக றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேட முனைந்தபோது இத்திருவசனம் இறங்கியது.
தப்ஸீர் ஜலாலைன் : பக்கம் 167
03. இத்திருவசனம் அபூதாலிப் விடயத்தில் இறங்கியது என்பதில் முபஸ்ஸிரீன்கள் இஜ்மாவாகக் கூறியுள்ளனர்.
உம்தத்துல்காரி (ஐனி) புகாரி ஷரீப் விரிவுரை
04. அபூதாலிப் மரணத்தின் நெருக்க வேளையில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அங்கு சென்றார்கள். அப்போது அங்கு அபூஜஹ்ல், அப்துல்லாஹ் பின் உமையா ஆகியோர் இருந்தனர். நபியவர்கள் கூறினார்கள்.
பெரிய தந்தையே! லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள். அதன் மூலம் உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்றாடுவேன் என்றபோது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் உமைய்யாவும், அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டும் பிறழப் போகின்றீரா? என்று தொடர்ந்து அபூதாலிபிடம் கூறிக் கொண்டேயிருந்தனர்.
இறுதியாக அபூதாலிப் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயேதான் இருக்கின்றேன் என்றார். இதுதான் அவர் மொழிந்த இறுதி வார்த்தையாகும். மறுப்பு வராமலிருக்கும் வரை நிச்சயம் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவேன் என்று நபிகள் நாதர் صلى الله عليه و سلم மவர்கள் நவின்றார்கள். அப்போதுதான்,
“இணை வைத்து வணங்குவோருக்காக...“ என்ற திருவசனம் இறங்கியது.
ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி (கிதாபுல் ஜனாயிஸ்) பாகம் - 01, பக்கம் - 181
அபூதாலிப் மரணிக்கும்போது புனித கலிமாவை நிராகரித்தார் என்பதும், மறுப்பு வராதிருக்கும் வரை அபூதாலிபுக்காக இஸ்திஃபார் செய்வேன் என்று நபியவர்கள் கூறியதும், பின் முஷ்ரிக்கீன்களுக்காக இஸ்திஃபார் செய்வது அவர்,
உறவினராக இருப்பினும் சரி என்று திருமறை இறங்கியதும், அபூதாலிப் அவர்கள் காபிராகவே மரணித்தார் என்பதை ஐயமற தெளிவுபடுத்துகின்றது.
அன்றி, அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக் கேட்ப)திலிருந்து தடுத்து தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள் (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள். அல்குர்ஆன் - 6 : 26
ஹளரத் இப்னு அப்பாஸ், மகாதில் ஆகியோர் கூறுகின்றனர் இத்திருவசனம் அபூதாலிப் விடயத்தில் இறங்கியது. இவர், காபிர்கள் நபியவர்களுக்கு துன்பம் செய்வதிலிருந்து விலக்கினார். இன்னும் அவர்களைத் தடுக்கவும் செய்தார். மேலும், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை ஈமான் கொள்வதிலிருந்து அவர் தூர நின்றார்.
தப்ஸீர் பஙவி : பாகம் - 02, பக்கம் - 75
அவர் (அபூதாலிப்) மனிதர்கள் நபியவர்களுக்குத் துன்பம் விளைவிக்காமல் தடுத்தார். இன்னும், அவரே பெருமானார் صلى الله عليه و سلم மவர்களை ஈமான் கொள்வதிலிருந்து தூர விலகி நின்றார்.
ஆதாரம் : தப்ஸீர் பைழாவி பாகம் - 02, பக்கம் - 401
ஹளரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
உங்கள் சாச்சாவுக்கு என்ன உபகாரம் செய்தீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் தங்களைப் பாதுகாத்தார். தங்களுக்காக மக்களோடு சண்டை பிடித்தார் என்றதும் நபியவர்கள் நவின்றார்கள்.
“நரகின் நெருப்பில் மூழ்கிக் கிடந்தவராக அவரைக் கண்டேன். அவரை இழுத்து வந்து கால் மட்டும் நெருப்புப்படும் வரை நரகத்தின் கரைக்கு அவரைக் கொண்டு சேர்த்தேன். நான் இல்லாதிருப்பின் நரகத்தின் அடியில் மூழ்கிப் போயிருப்பார்.
ஆதாரம் : புகாரி முஸ்லிம், முஸ்னத், அஹ்மத், ஸஹீஹு முஸ்லிம்,
கிதாபுல் ஈமான், பாகம் -01 பக்கம் -115
ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். அபூதாலிப் ஈமான் கொள்ள மறுத்தார். இருப்பினும், நபியவர்களின் ஷபாஅத்தின் மூலம் மற்றவர்களின் வேதனையை ஒப்பிடும் போது அவருக்கு வேதனை மிக இலகுவாக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : பத்ஹுல்பாரி, பாகம் - 10 பக்கம் - 123
நபியவர்களிடம் அபூதாலிப் பற்றிக் கூறப்பட்டதும், நபியவர்கள் கூறினார்கள்.
மறுமையில் எனது ஷபாஅத் அவருக்கு பயனளிக்கக் கூடும். நரகத்தில் கால் அளவு கரைக்குக் கொண்டு வரப்படுவார். அதனால் அவர் மூளை கொதிக்கும்.
ஆதாரம் : புகாரி முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், பகாகம் - 03 பக்கம் - 50
அபூதாலிபின் தண்டனை கால்பாதம் வரை மட்டுப்படுத்தப்பட்டதின் நுட்பம் ஹிக்மத் யாதெனில், அபூதாலிபின் உடற்பகுதிகள் எல்லாம் பெருமானாரைப் பின்பற்றியது. அவர் பாதம் மாத்திரம் அவர் சார்ந்த சமூகத்தின் மார்க்கத்தில் உறுதியோடு நின்றது. அதனால் பாதம் நரகத்தின் தண்டனைக்கு பாத்திரமாகியது.
ஆதாரம் : உம்தத்துல்காரி, பாகம் - 17, பக்கம் - 24
இர்ஸாதுஸ்ஸாரி, பாகம் - 08, பக்கம் - 351
மவாஹிபுல்லதுன்னியா, பாகம் - 01, பக்கம் - 264
காபிர்களி்ன் அமல்கள் வீசப்பட்ட புழுதிகளாக ஆகிவிடும். அதனால் எதுவித பயனும் கிடையாதே என்று நீர் கேட்பீராயின்,
இது றஸுலுல்லாஹி صلى الله عليه و سلم மவர்களின் பறக்கத்தினாலும் அவர்களின் தனித்துவத்தி னாலுமாகும் என்று நான் கூறுவேன். ஆதாரம் : உம்தத்துல்காரி - (புகாரி ஷரீப் விரிவுரை) பாகம் - 17, பக்கம் - 23
உம்முல் முஃமினீன் உம்மு ஸல்மா அறிவிக்கின்றார்கள் ஹாரீத் பின் ஹிஸாம் ரழியல்லாஹு அன்ஹு ஹஜ்ஜத்துல் விதாவில் நபியவர்களைச் சந்தித்துக் கேட்டார்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் குடும்ப உறவைப் பேணுகின்றேன். அண்டை அயலவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கின்றேன். அநாதைகளுக்கு இருப்பிடம் வழங்குகின்றேன். விருந்தாளிகளுக்கு உணவளிக்கின்றேன். ஏழைகளுக்கும் உணவு பரிமாறுகின்றேன். எனது தந்தையான ஹிஷாம் பின் முஙிறாவும் இதே நற்காரியங்களைச் செய்தார். அல்லாஹ்வின் திருத்தூதரே! அவர் பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அதற்கு,
நபியவர்கள் நவின்றார்கள்,
“லாஇலாஹ இல்லல்லாஹ்“ என்ற திருக்கலிமாவை மொழியாத அனைத்து கபுறாளிகளும் நரகத்தின் விறகுகள்தான். எனது பெரிய தந்தை அபூதாலிப் உச்ச நெருப்பில் இருந்தார். எனது உறவாலும், எனக்கு அவர் உதவி ஒத்தாசை புரிந்ததனாலும் அங்கிருந்து அவரைக் கரையேற்றி கால் அளவு உள்ள இடத்தில் நிறுத்தப்பட்டது.
ஆதாரம் : முஃஜமுல் கபீர், பாகம் - 23,பக்கம் - 405
நரக வாசிகளில் மிகக் குறைந்த தண்டனை அபூதாலிபுக்காகும். நெருப்பிலான இரு பாதணிகள் அவருக்கு வழங்கப்படும். அதனால், சாடியில் நீர் கொதிப்பதுபோன்று அவரின் மூளை கொதிக்கும். நரகத்தில் கடுமையான தண்டனை இவருக்குத்தானே என்று அதனைப் பார்ப்பவர் எண்ணுவார். ஆயினும், நரகவாசிகளில் ஆகக் குறைந்த வேதனை அபூதாலிபுக்குத்தான்.
ஆதாரம் : ஸஹீ முஸ்லிம், பக்கம் - 115 (இந்தியப் பதிப்பு)
அபூதாலிப் மரணித்தபின் நபியவர்கள் அபூதாலிபின் உடலைத் தடவினார்கள். காலை மறந்து விட்டார்கள். அதனால்தான் அவரின் கால்களுக்கு நெருப்பாலான காலணி அணிவிக்கப்படும் என்று ஒரு கூற்றும் உள்ளது.
ஆதாரம் : தாரீகுல் கமீஸ் பீ அஹ்வாலி அன்புஸின் நபீஸ் பாகம் - 01, பக்கம் - 30
அலி றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்
நான் நபியவர்களிடம் வந்து, உங்களது வழிகெட்ட கிழட்டுச் சாச்சா, நிச்சயமாக மரணித்து விட்டார் என்றதும், சென்று புதையும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : நஸ்புர் ராயா பக்கம் - 289, 290
ஸுனன் அபூதாவுத் பாகம் - 02, பக்கம் - 102
ஸுனன் குப்றா பாகம் - 02, பக்கம் - 398
மற்றுமொரு அறிவிப்பி்ல்,
அலி ரழியல்லாஹு அன்ஹு நபியவர்களிடம் வந்து, காபிரான கிழட்டு உங்களது சாச்சா மரணித்து விட்டார். அவரின் விடயத்தில் தங்களின் அபிப்பிராயம் என்ன? என்றதும், அவரை குளிப்பாட்ட வேண்டும் என்று கருதுகின்றேன் என்று கூறிவிட்டு குளிப்பாட்டுமாறு அலி ரழியல்லாஹு அன்ஹுவைப் பணித்தார்கள்.
ஆதாரம் : முஸன்னப் அபீஷைபா பாகம் -03, பக்கம் - 348
அபூதாலிப் அவர்கள் முஸ்லிமாக மரணித்திருந்தால் நிச்சயமாக நபியவர்கள் அவரின் ஜனாஸாவில் கலந்திருப்பார்கள். அலியே! சென்று அவரைப் புதையும் என்று கூறியிருக்க மாட்டார்கள். அலி ரழியல்லாஹு அன்ஹு தந்தையின் மரணத்தைப் பற்றி நபியவர்களிடம் கூறும்போது “கிழட்டு வழிகேடன்” “கிழட்டு முஷ்றிக்” போன்ற வார்த்தைகளை நிச்சயம் பிரயோகித்திருக்க மாட்டார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஹளரத் உஸாமா பின் ஸைத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் நபியவர்களைப் பார்த்து, அல்லாஹ்வின் திருத்தூதரே! மக்காவில் உங்கள் வீட்டில் எந்த வீடடில் தங்குவீர்கள்? என்று கேட்டதற்கு, உகைல் எமக்காக ஏதாவது ஓர் இடத்தையோ, வீட்டையோ விட்டு வைத்தாரா? என்று நபியவர்கள் திருப்பிக் கேட்டார்கள்.
அபூதாலிபின் சொத்துக்கு தாலிபும், உகைலுமே அனந்தரர்களானார்கள். ஜஃபர், அலி ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் வாரிசாக வரவில்லை. காரணம், இவ்விருவரும் அப்போது முஸ்லிமாகியிருந்தனர். உகைலும், தாலிபும் அப்போது காபிராக இருந்தனர்.
உமர் பின் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
“ஒரு முஃமின் காபிருக்கு வாரிசாக வர முடியாது“
ஆதாரம்: புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா
அமீறுல் முஃமினீன் அபூபக்கர் ரழியல்லல்லாஹு அன்ஹுவின் தந்தை மக்கா வெற்றியின்போது அபூகுஹாபா என்பவர் இஸ்லாத்தை தழுவிய பின் பைஅத் செய்வதற்காக நபியவர்களிடம் கையை நீட்டியதும், அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள். அழுகைக்கான காரணத்தை விசாரித்தபோது, “தந்தையின் கரத்திற்குப் பதிலாக தங்களின் பெரிய தந்தை அபூதாலிபின் கரம் இருந்திருந்தால் அவர் இஸ்லாமானதினால் தங்களின் கண்கள் குளிர்ச்சியடைந்திருக்கும். அது எனது தந்தை இஸ்லாமானதில் ஏற்படும் மகிழ்வை விட எனக்கு அதிக விருப்பமாக இருந்திருக்கும் என்றார்கள்.
ஆதாரம் : அல் இஸாபா, பாகம் - 04, பக்கம் - 116
மக்கா வெற்றியின்போது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை அபூகுஹாபாவை அழைத்து வந்ததும் வயது முதிர்ந்த இக்கிழவரை வீட்டிலேயே விட்டு வந்திருக்கலாமே. அவர் இருப்பிடம் நாம் சென்றிருக்கலாம் என்றதும் அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்க வேண்டும் என்பதற்காகவே அழைத்து வந்தேன்.
உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய நாயன் மீது ஆணையாக! என் தந்தை இஸ்லாமானது எனக்கு சந்தோஷமாக இருப்பினும் அபூதாலிப் இஸ்லாமாயிருந்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார்கள் கலீபா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஆதாரம் : அல் இஸாபா பாகம் - 04, பக்கம் - 117
அபூதாலிப் மரணத்தருவாயில் ஒருவரை நபியவர்களிடம் அனுப்பி, தனக்கு உமது சொர்க்கத்தின் திராட்சையை புகட்டுமாறு வேண்டினார். காபிர்களுக்கு அது ஹறாமாக்கப்பட்டுள்ளது என்று அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு பதிலிறுத்தார்கள்.

அபூதாலிபின் இறுதி முடிவை அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் விட அதிகம் தெரிந்தவர் யார்? அபூதாலிப் காபிராகவே மரணித்தார் என்று திருமறையும், திருநபி மொழியும் தெளிவாகத் தெரிவிக்கும்போது அவர் உள் ஈமான் கொண்டிருந்தார் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இமாமுல் அஃழம் அபூஹனீபா றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், “அபூதாலிப் காபிராகவே மரணித்தார்“
ஆதாரம் : அல்பிக்ஹுல் அக்பர், பக்கம் - 217
புகாரி ஷரீபின் விரிவுரை நூலான “இர்ஸாதுஸ்ஸாரி“ யில் இமாம் கஸ்தலானி அவர்கள் எழுதுகின்றார்கள்,
ஒரு காபிர் புனைப் பெயரால்தான் அறிமுகமாகியிருப்பாராயின் அப்புனைப் பெயரால் அவரை அழைப்பதை அறிஞர்கள் அனுமதித்துள்ளனர். உதாரணமாக அபூதாலிபை (முஷ்ரிக் என்ற பெயரால் நபியவர்கள்) அழைத்தது போன்று. இவ்வாறு அழைப்பது அவர் இஸ்லாத்திற்கு வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அல்லது அவரிடமிருந்து உதவியைப் பெறுவதற்காக தவிர, கண்ணியத்திற்காக அல்ல. காபிர்கள் விடயத்தில் கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் பணிக்கப்பட்டுள்ளோம்.
ஆதாரம் : இர்ஸாதுஸ்ஸாரி பாகம் - 23, பக்கம் - 207-210 ஹதீது எண் 6208
ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அல் இஸாபா என்ற நுலில், அபூதாலிபை ஸஹாபியின் பட்டியலில் சேர்ப்பது தவறானதும், வீணானதும், நிராகரிக்கத் தக்கதுமாகும் என்று எழுதியுள்ளார்கள். மேலும், இதே நூலில்,
இஸ்லாம் பரவுவதற்கு முன் மரணித்தவர்கள் அல்லது பைத்தியம் பிடித்த நிலையில் பிறந்தவர்கள் அல்லது பைத்தியத்திலேயே வாழ்க்கையை முடித்தவர்கள் பற்றி அதிகமான ஸனதுகளுடன் ஹதீதுகள் வந்துள்ளன. இவர்களுக்கு நபியவர்களின் அழைப்புக் கிட்டவில்லை என்று மறுமையில் இவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ் விடம் இவ்வாறு காரணம் கூறுவர்.
இறைவா! எனக்குப் புத்தியிருந்தால் அல்லது நபிகளாரின் அழைப்புக் கிட்டியிருந்தால் ஈமான் கொண்டிருப்பேன். அப்போது இவர்களுக்கு ஒரு சோதனையாக கொழுந்து விட்டெரியும் நெருப்பு ஏற்பாடு செய்யப்படும். பின் நெருப்புக்குள்ளே செல்லுமாறு பணிக்கப்படும். கட்டளைக்குப் பணிந்தவர்கள் நெருப்புக்குள் குதிப்பர். நெருப்பு அவர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அவர்கள் விடுதலை (வெற்றி) பெறுவர். கட்டளைக்குப் பணியாதவர்கள் நிர்ப்பந்தமாக நெருப்பில் போடப்படுவர்.
எமது பூரண நம்பிக்கை அப்துல் முத்தலிபும், அவர்களது குடும்பத்தினரும் இஸ்லாம் வெளி வரமுன் மரணித்து விட்டார்கள். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குப் பணிந்து நெருப்புக்குள் சென்று வெற்றியோடு வெளியேறியவர்களில் இருப்பர்.
ஆனால், அபூதாலிப் விடயத்தில் சூறா தௌபாவிலும், ஸஹீஹான ஹதீதிலும் அவர் நரகவாதி என்றும், அவரின் கால் கரண்டை வரையுள்ள பகுதி நரக நெருப்பில் இருக்கும் என்றும் வந்துள்ளது. இந்நிலை காபிராக மரணித்தவரின் நிலைக்கே ஏற்படும். ஆனால், இறுதி நேரத்தில் இஸ்லாத்தை ஏற்று அவர் மரணித்திருந்தால் நரகத்திலிருந்து முழுமையாகவே அவர் வெற்றி பெற்றிருப்பார். ஏராளமான ஸஹீஹாக ஹதீதுகள் அபூதாலிப் குப்றில் மரணித்ததாக வந்துள்ளது.
ஆதாரம் : அல் இஸாபா பாகம் -04, பக்கம் - 118
இமாம் கஸ்தலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். அப்துல் முத்தலிபும், அவரது குடும்பமும் சொர்க்கம் புகுவர் என்று நாம் ஆதரவு வைக்கின்றோம், ஆபூதாலிபைத் தவிர. அவர் நபித்துவத்தின் காலத்தில் இருந்தும் ஈமான் கொள்ளவில்லை.
ஆதாரம் : மவாஹிபுல்லதுன்னிய்யா பாகம் - 01, பக்கம் - 183
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் பத்ஹுல் பாரியில் எழுதுகின்றார்கள்,
ஆச்சரியமான ஒற்றுமைதான் இது. நபியவர்களின் பெரிய தந்தைகளுள் இஸ்லாத்தின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நால்வர். இவர்களுள் இருவர் இஸ்லாமாகவில்லை. இருவர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்காதவர்களி்ன் பெயர்களும் ஆரம்பத்திலிருந்து இஸ்லாத்திற்கு எதிராகவே உள்ளன.
1. அபூதாலிப். இவரின் பெயர் அப்துல் மனாப்
2. அபூலஹப். இவரின் பெயர் அப்துல் உஸ்ஸா
இஸ்லாத்தை ஏற்ற இருவரின் பெயரும் தூய்மையானது. 1.ஹம்ஸா 2. அப்பாஸ்
ஆதாரம் : பத்ஹுல் பாரி, பாகம் - 08, பக்கம் - 196
ஸர்கானி, பாகம் - 01, பக்கம் - 296
அல்லாமா ஸர்கானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். பிடிவாத குப்று என்பது உள்ளத்தால் உணர்ந்து. அறிந்து, நாவால் அதனை விண்ணப்பித்தும், அதனை மனதால் நிர்ணயம் கொள்ளாமலும், வழிப்படாமலிருப்பதுமாகும். அபூதாலிபைப்போல,
ஆதாரம் : ஸர்கானி பாகம் - 01, பக்கம் - 295
ஷைய்கு முஹக்கிக் அல்லாமா அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி கூறுகின்றார்கள். ஸஹீஹான ஹதீதுகள் மூலம் அபூதாலிப் குப்றில் மரணித்ததாக ஊர்ஜிதமாகியுள்ளது.
ஆதாரம் : மதாரிஜின் நுபுவ்வத் பாகம் - 02, பக்கம் - 49
இமாம் ஸுயூத்தி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள் “எனது தந்தையும், உனது தந்தையும் நரகத்திலேதான்“ என்ற ஹதீதில் எனது தந்தை என்பது அபூதாலிபையே குறிக்கும். அபூதாலிப் நபியவர்களின் தந்தை என்ற பெயரால் பிரபல்யமடைந்திருந்தார்.
ஆதாரம் : அல்ஹாவி பாகம் 02, பக்கம் - 227, 228
மிஷ்காத்தின் விரிவுரையாளரான அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
ஹதீதுத்துறை ஷைய்குமார்களும், சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களும் முடிவாகக் கூறுவது, அபூதாலிப் ஈமான் கொண்டதற்கு சான்றில்லை. ஸஹீஹான ஹதீதுகளி்ன் மூலம் அபூதாலிபின் மரண வேளையில் நபியவர்கள் நேரில் சென்று இஸ்லாத்தை ஏற்குமாறு கூறியும் அவர் மறுத்து விட்டார்.
ஆதாரம் : ஷறஹு ஸபறுஸ்ஸஆதா பக்கம் - 249
அல்லாமா இப்னு ஹஜர் மக்கி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,
வியக்கத்தக்க வகையில் நபிகளாரைப் புகழ்ந்து, அபூதாலிப் பாடிய கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு றாபிழி (ஷீயாக்)கள் அபூதாலிபை முஸ்லிம் என்று முடிவெடுத்துள்ளனர்.
ஆதாரம் : அப்ழலுல் குறா பாகம் - 01, பக்கம் - 286
இதே நூல் இதே பக்கத்தில், தெளிவானதும், ஸஹீஹானதும் என்று அனைவரும் ஒப்புக்கொண்ட ஹதீதுகள் மூலம் அபூதாலிப் காபிராகவே மரணித்ததாகவே வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாமா கபாறி அவர்கள் தப்ஸீர் பைளாவியின் ஹாஷியாவில், றாபிழிகள் சிலர் அபூதாலிபை முஸ்லிம் என்று கூறுகின்றனர்.
ஆதாரம் : இனாயத்துல் காழி, அல்குர்ஆன் - 28 : 56
ஆயத்தின் விரிவுரையில்...பாகம் 07, பக்கம் - 309
றாபிழிகளில் ஒரு கூட்டம் அபூதாலிபை முஸ்லிம் என்று கூறுகின்றது.
ஆதாரம் : அல் இஸாபா பாகம் - 04, பக்கம் 116
ஸஹீஹான கருத்தின்படி அபூதாலிப் இஸ்லாமாகவில்லை. றாபிழிகளில் ஒரு கூட்டம் அவரை முஸ்லிம் என்கிறது. இதற்கு அவரின் கவிதைகளையும், புராணக் கதைகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆதாரம் : ஸாகானி பாகம் - 02, பக்கம் - 274
அபூதாலிப் காபிராகவே மரணித்தார். ஷீஆக்களில் சிலர் அவர் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறுகின்றனர். இது அடிப்படை அற்றது.
ஆதாரம் : நஸீமுர்ரியாழ் ஷரஹ்ஷிபா - பாகம் - 03, பக்கம் - 484
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி கூறுகின்றார்கள்.
நான் ஒரு றாபிழி - ஷீஆவின் - ஒரு நூலைப் பார்த்தேன். இதில் அபூதாலிப் இஸ்லாமானதாக சில அறிவிப்புக்களைப் பதிவு செய்திருக்கிறார். அனைத்து அறிவிப்புக்களும் இப்னு இஸ்ஹாக்குக்குரியதாகும். இவையனைத்து றிவாயத் துக்களும் புரட்டுக்களாகும்.
ஆதாரம் : அல் இஸாபா பாகம் - 04, பக்கம் - 116
மேற்கண்ட ஆதாரங்கள் தவிர்த்து இன்னும் ஏராளமான ஆதாரங்கள் அபூதாலிப் காபிராகவே மரணித்ததாக வந்துள்ளன. ஷீஆக்கள் மாத்திரமே அபூதாலிப் முஸ்லிமாக மரணித்ததாக குறிப்பிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக முன் வைக்கப்படும் அனைத்து ஹதீஸ் ஆதாரங்களும் பலவீனமானதும், புரட்டுத்தன்மையுள்ளதுமாகும் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் ஒட்டு மொத்தமாக கூறியுள்ளனர். இப்படி தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் - வரலாறு உள்ளிட்ட அனைத்துத் துறை அறிஞர்களும் அபூதாலிப் காபிராகவே மரணித்ததாக எழுதியிருக்கும்போது ஷீஆக்களின் கற்பனையான கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு வாதிடுவது பொருத்தமில்லாததாகும்.
றஸுலுல்லாஹ்வின் நேசம், அஹ்லுல் பைத்களின் நேசம் என்ற ஆயுதத்தால் ஷீஆக்கள் சுன்னத் வல் ஜமாஅத்துக்குள் ஊடுருவுகின்றனர். , ஷீஆக்கள் நபிகளார் மீதும் அன்னாரின் குடும்பத்தார் மீதும் அளவு கடந்த நேசத்தைக் காட்டிக்கொண்டு வருகின்றனர். இவர்கள் வழி தவறியவர்களே. அதனால், ஷரீஅத் விதித்த எல்லையில் நின்றும் சுன்னத் வல்ஜமாஅத் இமாம்கள் காட்டித்தந்த வழியில் நடந்தும் சீரிய பாதையில் செம்மையாக சென்றிட முனைவோமாக!
((இது சமாதி வலிபாட்டினரின் majlismuhibburrasool.com எனும் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையாகும் ))

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன்
வாதம்: இறை நேசர்களைப் பற்றி நபிகளார் அவர்கள் இறைவன் கூறுவதாக இவ்வாறு சொல்கிறார்கள்:
அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வளவு சிறப்பு இருக்கும் அவ்வலியாக்களால் ஏன் பன்னிரண்டு வருடங்கள் தூங்காமல் இருக்க முடியாது?
நமது பதில்:
நல்லடியார்களைப் பற்றி இவ்வாறு நபிகளார் கூறியிருப்பது உண்மை தான். இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள்? அவர்கள் இறைவனாகவே ஆகி விடுகிறார்களா? அப்படியானால் ஏன் ஷாகுல் ஹமீத் இறந்தார். அவர் இறந்தார் என்றால் அல்லாஹ் இறந்து விட்டான் என்று அர்த்தமா? ஷாகுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்தீர்களே? அவரை அடக்கம் செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வை அடக்கம் செய்தீர்களா? நாகூரில் இருக்கும் கப்ர், பக்தாதில் இருக்கும் கப்ர் எல்லாம் அல்லாஹ்வின் கப்ரா?
சாப்பிட மாட்டான் என்பது இறைவனிடம் உள்ள தன்மை, எனவே இறை நேசரும் சாப்பிட மாட்டார் என்றால் இறக்க மாட்டான் என்று தன்மையும், முதுமை அடைய மாட்டான் என்ற தன்மையும் ஏன் அவரிடம் இருக்கவில்லை?
அப்படியானால் இந்த ஹதீஸின் பொருள் என்ன? நீங்களும் சொல்ல வேண்டாம்! நாமும் சொல்ல வேண்டாம் அந்த ஹதீஸின் வாசகமே அதைத் தெளிவுபடுத்துகிறது.
எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6502)
அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.
கையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.
அவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா? அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா?
இதன் உண்மையான பொருள் என்ன? பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா? இல்லை! நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.
அவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.
இதைப் போன்று கணவன் மனைவியைச் சொல்லும் போது இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். இரண்டு நபர்களும் ஒரு நபராக மாறி விட்டார்கள் என்று பொருளா? அல்லது இவர் சாப்பிட்டால் மனைவிக்கு வயிறு நிரம்பி விடுமா? அல்லது இருவரும் நெருக்கமாக அன்பாக இருக்கிறார்கள் என்று பொருளா?
மற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான். நூல்: முஸ்லிம் 5021
இந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே! உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.
இந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா? ஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது. என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.
வஸ்ஸலாம்
நன்றி Nashid Ahmed
Subscribe to:
Posts (Atom)