36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக இடம் பெற்றுள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகவே இடம் பெற்றுள்ளது.இன்று யாஸீன் அத்தியாயம் தொடர்பாக வந்துள்ள இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்துதான் பல அமல்களை செய்துவருகின்றனர். எனவே யாஸீன் தொடர்பாக வந்துள்ள செய்திகளின் தரத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். யாஸீன் அத்தியாயத்தை ஒருவர் இறந்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகின்றனர்.
இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.
(1)
عن سليمان التيمي ، عن أبي عثمان – وليس بالنهدي – ، عن أبيه ، عن معقل بن يسار ، قال : قال رسول الله – صلى الله عليه وسلم – :
" اقرؤوا ( يس ) على موتاكم " .
أخرجه أحمد ( 5 / 26 و 27 ) ، والبخاري في " التاريخ الكبير " ( 8 / 57 ) ، وأبوداود ( 3 / 188 / 3121 ) ، وأبوعبيد في " فضائل القرآن " ( ص 136 ) ، وابن أبي شيبة ( 3 / 237 ) ، وابن ماجه ( 1 / 465 – 466 / 1448 ) ، والحاكم ( 1 / 565 ) ، والبيهقي ( 3 / 383 ) .
உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஒதுங்கள்” என்று நபிகள்(ஸல்) கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.அறிவிப்பவர்:மஃகில் பின் யஸார்(ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2714,இப்னு மாஜா 1438,அஹ்மத் 19416,19427,ஹாகிம் 1/753
மேற்கண்ட ஹதீஸ்களில் அபு உஸ்மான் என்பவர் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார் அபு உஸ்மானும் அவர் தந்தையும் யார் என அறியப்படதவர்கள் என்று ஹதீஸ் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்
قال الدارقطني : " هذا حديث ضعيف الإسناد ، مجهول المتن ، لا يصح في الباب حديث " .
இந்த தலைப்பில் வரும் எந்த ஹதீசும் ஸஹிஹ் அல்ல என்று தார குத்னி இமாம் கூறுகிறார்
மேலும் ஹதீஸில் வரும் வார்த்தை அறியப்படாத தாக உள்ளது
وأعله ابن القطان بالاضطراب والوقف ، وبجهالة حال أبي عثمان
( تلخيص الحبير 2 / 104 ) .
இமாம் இப்னு கத்தான் அவர்கள் கூறும்போது : - இந்த ஹதீஸ் ஒன்றுக்கொன்று முரணாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அறிவிப்பாளர் அபு உத்மான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ( இமாம் இப்னு ஹஜர் :தல்ஹீசுள் ஹபீர் 104/2 )
------------------------------------
وقال النووي في " الأذكار " ( ص 117 ) :
" إسناده ضعيف ؛ فيه مجهولان ، لكن لم يضعفه أبوداود " .
இமாம் ஷாபி அவர்களுடைய மாணவன் இமாம் நவவி அவர்கள் தன்னுடைய 'அத்கார் 'எனும் நூலில் குறிப்பிடும்போது :- இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது கரணம் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் யாரென்று அறியப்படாதவர்கள், என்றாலும் இமாம் அபு தாவூத் அவர்கள் இந்த ஹதீஸை பலவீனம் என்று சொல்லவில்லை என்ற தவறை நவவி இமாம் சுட்டிக்காட்டியுள்ளார்
----------------------------------------------
وقال المنذري :
" وأبوعثمان وأبوه ليسا بالمشهورين " .
இமாம் முன்திரீ அவர்கள் கூறும்போது :- அபு உத்மான் என்பவரும் அவருடைய தந்தையும் பிரபல்யம் இல்லாதவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------
وقال ابن حجر في " نتائج الأفكار " :
" هذا حديث غريب " .
( الفتوحات الربانية 4 / 118 ) .
------------------------------------------------------------------------------------------------------------------------
وقال الألباني في " الإرواء " ( 3 / 150 ) :
" ضعيف " .
அல்பானி இமாம் ''இர்வா '' எனும் நூலில் :- பலாவீனமானது என்று குறிப்பிடுகிறார்
-----------------------------------------------------------------------------------------------------------------------
وقال في " كتاب الجنائز " ( ص 11 ) :
" لم يصح فيه حديث " .
அல்பானி இமாம் அவர்கள் 'ஜனாஇஸ்' எனும் நூலில் :- ஸஹிஹ் இல்லை என்று கூறியுள்ளார்
________________________________
وقال ابن عثيمين في " الشرح الممتع " ( 5 / 318 – 319 ) :
" هذا الحديث مختلف فيه ، وفيه مقال " .
قلت : فلهذا الحديث ثلاث علل :
1- الاضطراب .
2- جهالة أبي عثمان .
وأيضاً فقد قال ابن المديني 3 :
" لم يروي عنه غير سليمان التيمي ، وهو مجهول " ( تهذيب التهذيب 6 / 407 ) .
وقال الذهبي في " الميزان " ( 4 / 550 ) :
" لا يعرف أبوه ، ولا هو ، ولا روى عنه سوى سليمان التيمي " .
இப்னு உதைமீன் அவர்கள் ஷராகுல் முமதாஹ் எனும் நூலில் :- இந்த ஹதீஸ் ஒன்றுக்கொன்று முரணாக அறிவிக்கப்பட்டுள்ளது , மேலும் இதில் 3 விமர்சனங்கள் உள்ளன
1: முரண்பாடு
2: அபு உத்மான் அறியப்படாதவர்
3:இப்னு மதீனி சொல்கிறார் :இந்த அபு உத்மாநிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் சுலைமான் அத்தைமி என்பவர் அறியப்படாதவர்
وقال الذهبي في " الميزان " ( 4 / 550 ) :
" لا يعرف أبوه ، ولا هو ، ولا روى عنه سوى سليمان التيمي "
மேலும் தகபி இமாம் தன்னுடைய ''மீதான்''எனும் நூலில் :- அபு உத்மானும் அவர் தந்தையும் அறியப்படாதவர் , இந்த அபு உத்மானிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் சுலைமான் அத்தைமி அவரும் அறியப்படாதவரே,
قلت : فقول ابن حجر في " التقريب " ( 2 / 434 ) : " مقبول " ليس بمقبول
மேலும் இப்னு ஹஜர் கூறும்போது இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாது
-------------------------------------------------------------------------------------------------------------------------
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் எந்த ஹதீஸாக இருந்தாலும் அதை அறிவிப்பவருக்கு வரலாறு இருக்க வேண்டும். அவரது நினைவாற்றல், நாணயம் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இருவரும் யார் என்றே தெரியாததால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அபூ உஸ்மான் என்பவர் தனது தனது தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் மஃகில் பின் யஸார் வழியாக நேரடியாக அறிவிக்கும் சில ஹதீஸ்கள் உள்ளன. பைஹகி, இப்னு ஹிப்பான் மற்றும் சில நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ உஸ்மான் என்பவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் மஃகில் பின் யஸார் வழியாக ஒரு மனிதர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதர் என்றால் யார்? அவரது நம்பகத் தன்மை எத்தகையது என்பதை யாரும் அறிய முடியாது. எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
இவை அனைத்துமே பலவீனமாக உள்ளதால் இறந்தவர்களுக்கு அருகில் அல்லது இறந்தவரின் நன்மைக்காக யாஸீன் ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்! என்று இவர்கள் செய்த பொருளும் தவறானது என்று இந்த செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.
قال أبو حاتم رضي الله عنه : قوله : ( اقرؤوا على موتاكم يس ) : أراد به من حضرته المنية لا أن الميت يقرأ عليه - صحيح ابن حبان 7 /269
اقرؤوا على موتاكم يس இந்த வாசகத்தின் மூலம் நாடப்படுவது இறக்கும் நிலையில் உள்ளவரைத்தான். (ஏனெனில்) இறந்தவருக்கு (எதுவும்) ஓதப்படாது.
நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான், பாகம் :7, பக்கம் : 269
இந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அபூஉஸ்மான் என்பவரும் அவருடைய தந்தையும் யாரென அறியப்படாதவர்கள். இவரின் நம்பத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
734 - حديث روي أنه صلى الله عليه و سلم قال اقرءوا يس على موتاكم أحمد وأبو داود والنسائي وابن ماجة وابن حبان
இந்த செய்தியை இப்னுல் கத்தான் அவர்கள் இது குளறுபடியானவை என்றும் நபித்தோழரின் கூற்றாகவும் இடம்பெற்றுள்ளது என்றும் அபூஉஸ்மான் என்பவரும் அவருடைய தந்தையும் யாரென அறியப்படாதவர் என்று குறைகூறியுள்ளார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
والحاكم ... وأعله بن القطان بالاضطراب وبالوقف وبجهالة حال أبي عثمان وأبيه ونقل أبو بكر بن العربي عن الدارقطني أنه قال هذا حديث ضعيف الإسناد مجهول المتن ولا يصح في الباب حديث- تلخيص الحبير - ابن حجر 2 /104 மேலும் இந்த செய்தி அறிவிப்பாளர் பலவீனமானவர் செய்தி விளங்காதவை. இந்த கருத்தில் ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழியும் இல்லை என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். நூல் : தல்கீஸுல் ஹபீர், பாகம் :2, பக்கம் : 104
***************************************************************************
(2)
'மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை அறிவிக்கும் ஸாலிம் பின் மர்வான் என்பவர் பலவீனமானவர்.
" ما من ميت يموت ، فيقرأ عنده ( يس ) ؛ إلا هون الله عليه " .
أخرجه أبونعيم في " أخبار أصبهان " ( 1 / 188 ) من طريق مروان بن سالم ، عن صفوان بن عمرو ، عن شريح ، عن أبي الدرداء ، به .
وإسناده ضعيف جداً ؛ مروان بن سالم متروك كما قال ابن حجر في " التقريب " ( 2 / 170 ) .
قد اضطرب فيه فرواه مرة أخرى عن صفوان به ، إلا أنه قال : " عن أبي الدرداء وأبي ذر " .
أخرجه الديلمي ، كم ا في " تلخيص الحبير " ( 2 / 104 ) .
''அபு நஈம் '' அவர்கள் அஹ்பார் அஸ்பஹான் எனும் நூலில் :- மர்வான் இப்னு சாலிம் என்பவர் சப்வான் பின் அம்ரு ஊடாக சப்வான் பின் அம்ரு சரீஹ் ஊடாக சரீஹ் என்பவர் அபு தர்தா எனும் சஹாபி இடமிருந்து அறிவிக்கிறார் ''மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்''
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரும் மர்வான் இப்னு சாலிம் என்பவர் பலவீனமானவர்
இதனை இப்னு ஹஜர் அவர்கள் ''தக்ரீப்'' எனும் நூலில் கூறியுள்ளார் .
وخالفه أبوالمغيرة فرواه :
عن صفوان ، قال : حدثتني المشيخة : أنهم حضروا غضيف بن الحارث الثمالي حين اشتد سوقه ، فقال :
هل منكم من أد يقرأ ( يس ) ؟
இந்த அறிவிப்பிற்கு மாற்றமாக சப்வான் என்பவரிடமிருந்து அபுல் முகீரா அறிவிக்கிறார் ,
'மஷீகா' எனக்குச் சொன்னார் :கலீப் பின் ஹாரித் என்பவருக்கு மரண கஷ்டம் ஏற்பட்ட போது கேட்டார் :உங்களில் யாராவது யாசின் ஓத விரும்புகிறீர்களா ?
قال :
فقرأها صالح بن شريح السكوني ، فلمل بلغ أربعين فيها فيض .
சைகா சொன்னார் :மரணத்தருவாயில் இருப்பவருக்கு யாசின் ஓதப்ப்படுமானால் அவருடைய கஷ்டம் இலேசாக்கப்படும் .
قال :
فكان الشيخة يقولون :
" إذا قرئت عند الميت ؛ خفف عنه " .
قال صفوان :
وقرأها عيسى بن المعتمر عند ابن معبد .
قال ابن حجر في " الإصابة " ( 5 / 190 ) :
" حديث حسن الإسناد " .
சப்வான் சொன்னார் : ஈசா பின் மூதமிர் யாசின் சூராவை பின் 'மாபதுக்கு' ஓதினார் .
இதை 'இப்னு ஹஜர் ' தன்னுடைய ' இஸாபா ' எனும் நூலில் கூறியுள்ளார் .மேலும் 'இப்னு ஹஜர்' அவர்கள் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசை 'சரியானது' என்று கூறியுள்ளார் .
மேலே உள்ள சம்பவத்தை பற்றி இமாம் அல்பானி கூறும்போது.....
وقال الألباني في " الإرواء " ( 3 / 152 ) :
" هذا الإسناد صحيح إلى غضيف بن الحارث – رضي الله عنه – ؛ ورجاله ثقات غير المشيخة ، لكن جهالتهم تنجبر بكثرتهم ، لاسيما وهم من التابعين "
قلت : لو قلنا بأن مثل هذه الجهالة تنجبر بالجمع لحسّنا إسناده ، وأما تصحيحه فبعيد !! ولكن الذي يظهر لي أن جهالتهم لا تنجبر بكثرتهم ، وأيضاً فقد يكون ناقل كلامهم هو صالح بن شريح ، وهو مجهول كما قال أبوزرعة الرازي ( الجرح والتعديل 4 / 405 )
وأخرج ابن عدي في " الكامل " ( 5 / 1801 ) من طريق عمرو بن زياد ، حدنا يحيى بن سليم الطائفي ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة – رضي الله عنها – قالت : سمعت رسول الله – صلى الله عليه وسلم – يقول : " من زار قبر والديه أو أحدهما يوم الجمعة ، فقرأ ( يس ) ؛ غفر له '
قال ابن عدي :
" هذا الحديث بهذا الإسناد باطل ، ليس له أصل " .
قلت : عمرو بن زياد قال الدارقطني :
" يضع الحديث "
.********************************************************************
(3)
من قرأ ( يس ) ابتغاء وجه الله ، غفر الله له ما تقدم من ذنبه ، فاقرؤوها عند موتاكم
(البيهقى فى شعب الإيمان عن معقل بن يسار)
أخرجه البيهقى فى شعب الإيمان (2/479 ، رقم 2458) .
---------------------------------
ضعيف) .الجامع الصغير/ 5785 )
யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் மரணத்தருவாயில் உள்ளவர்களிடம் ஓதுங்கள்
இமாம் சுயூத்தி அவர்கள் ஜாமிஉல் ஸகிர் எனும் நூலில் இந்த ஹதீஸை பதிவு செய்யும் போது (லஈப்) பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்
பைஹகி இமாம் அவர்கள் ஷுஅபுல் ஈமான் எனும் நூலில் வரும் அறிவிப்பாளர் வரிசையில் மஃகில் பின் யஸார் என்பவருக்கும் சுலைமான் பின் தர்ஹான் என்பவருக்கும் இடையில் ஒருவர் யாரென்று அறியப்படாதவர் இடம்பெற்றுள்ளார் இதன் காரணமாக இந்த ஹதீஸ் மிக பலவீனம் உடையதாகும்
அறிவிப்பாளர் வரிசையை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்
(1) معقل بن يسار
| (2) اسم مبهم
| | (3) سليمان بن طرخان
| | | (4) معتمر بن سليمان
| | | | (5) عاصم بن النضر
| | | | | (6) إبراهيم بن عبد الله
| | | | | | (7) أحمد بن عبيد
| | | | | | | (8) علي بن أحمد
| | | | | | | | (9) أحمد بن الحسين
| | | | | | | | | (10) الكتاب: شعب الإيمان للبيهقي [الحكم: إسناد شديد الضعف فيه راو مجهول]
--------------------------------------------------------------------------------------------------------
யாஸீன் என்பது 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயம். மற்ற அத்தியாயங்களை நமது நன்மைக்காக நாம் ஓதுவது போல யாஸீனையும் நமது நன்மைக்காக ஓதலாம். இறந்தவரின் நன்மைக்காக இதை ஓதக் கூடாது.
.*********************************************************************************
(4)
திருக்குர் ஆனின் இதயம்
قال أبو عيس الترمذي:
حدثنا قتيبة وسفيان بن وكيع, حدثنا حميد بن عبد الرحمن الرواسي عن الحسن بن صالح عن هارون أبي محمد عن مقاتل بن حيان عن قتادة عن أنسرضي الله عنه قال:
قال رسول الله صل الله عليه وسلم:
«إن لكل شيء قلباً, وقلب القرآن يس, ومن قرأ يس كتب الله له بقراءتها قراءة القرآن عشر مرات» ثم قال:
هذا حديث غريب لانعرفه إلا من حديث حميد بن عبد الرحمن, وهارون أبو محمد شيخ مجهول
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியததற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை பதிவு செய்கிறான்.நூல்கள் : திர்மிதீ (2812), தாரமி (3282)
இதன் ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹாரூன் அபீ முஹம்மத் என்பவர் இடம் பெறுகிறார், இவர் யாரென்று அறியப்படாதவர். இக்கருத்தை இதை பதிவுசெய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த செய்தியின் இறுதியில் இக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் தாரமியில் இடம் பெறும் ஹதிஸில், யார் என அறியப்படாத ஹாருன் அபீ முஹம்மத் என்பவரே இடம் பெறுவதால் இதுவும் பலவீனமாதாகும்
*****************************************************************************
(5)
திருக்குர்ஆனின் மிக உயர்ந்த அத்தியாயம்
وقد قال الإمام أحمد:
حدثنا عارم حدثنا معتمر عن أبيه عن رجل عن أبيه عن معقل بن يسار رضي الله عنه.
قال: إن رسول الله صل الله عليه وسلم قال:
«البقرة سنام القرآن وذروته, نزل مع كل آية منها ثمانون ملكاً, واستخرجت{ الله لا إله إلا هو الحي القيوم} من تحت العرش فوصلت بها ـ أو فوصلت بسورة البقرة ـ ويس قلب القرآن لا يقرؤها رجل يريد الله والدار الاَخرة إلا غفرله, واقرؤوها على موتاكم»
ثم قال الإمام أحمد:
حدثنا عارم, حدثنا ابن المبارك, حدثنا سليمان التيمي عن أبي عثمان وليس بالنهدي
சூரா பகரா குர்ஆனுடைய திமிழாகும். மேலும் அதில் உயர்வானதுமாகும். சூரத்துல் பகராவின் ஒவ்வொரு ஆயத்துடன் எண்பது மலக்குகள் இறங்கிறார்கள். இன்னும் ”அல்லாஹு லாயிலாஹு இல்லாஹுவ அல் ஹய்யுல் கையூம்” என்ற வசனம், அர்ஷின் கீழ் இருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும், யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மறுமையும் நாடி அதை ஓதுகிறரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் (எனவே) அதை உங்களில் மரணநெருக்கத்தில் உள்ளவர்களுக்கு ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்கள் : அஹ்மத் (19415), முஸ்னத் ரூயானி பாகம் : 2 பக்கம் : 323, அல்முஃஜமுல் அல்கபீர்லிதப்ரானீ பாகம்:20,
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் அறிவிக்கிறார் என்றும் அவர் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார் என்றும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு மனிதர் யார்? அவரின் தந்தை யார்? அவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்ற கேள்விகள் எழும். இது போன்ற முகவரி இல்லாதவர்களின் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை.இதே செய்தி அஹ்தில் (19427), அபூதாவூத் (2714), இப்னு மாஜா (1438), பைஹகி பாகம் : 3 பக்கம் 383,இப்னு ஹிப்பான் பாகம் : 7, பக்கம் : 269 லும் இடம் பெற்றுள்ளது.இவற்றில் ஒருமனிதர் என்ற இடத்தில் அபூஉஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவரே! இவரின் நம்பகத் தன்மையும் உறுதிசெய்யபடாததால் இச்செய்தியும் பலவீனமடைகிறது.
இந்த செய்தி தொடார்பாக ஹாபிழ் இப்னு ஹஜர் பின்வருமாறு கூறுகிறார்கள் : இந்த செய்தி நபித்தோழர் கூற்றாகவும், நபிகளாரின் கூற்றாகவும் குழப்பி அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அபூஉஸ்மான் என்பரின் நிலையும் அவரின் தந்தையும் நிலையும் அறியப்படவில்லை என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறைகூறியுள்ளார்கள். ‘இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகவும் அதில் குறிப்பிட்டுள்ள செய்தி அறியமுடியாததாகும் உள்ளது. மேலும் இது தொடர்பாக எந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!’ என்று தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : தல்கீஸுல் ஹபீர் பாகம் : 2, பக்கம் : 104)
*******************************************************************************
பத்து குர்ஆனை ஓதிய நன்மை
(6)
'' من قرأ يس مرة فكأنما قرأ القرآن عشر مرات ''
أخرجه البيهقى فى شعب الإيمان (2/481 ، رقم 2466) “ (البيهقى فى شعب الإيمان عن حسان بن عطية مرسلاً)
أخرجه البيهقى فى شعب الإيمان (2/479 ، رقم 2459) وقال : هذا مرسل ..
(البيهقى فى شعب الإيمان عن أبى هريرة)
أخرجه البيهقى فى شعب الإيمان (2/481 ، رقم 2466) :
யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகிறாரோ அவர் பத்து தடவை குர்ஆனை ஓதியவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் ஷுஅபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 479)
இதை பதிவு செய்த ஆசிரியர் அவர்களே இதை முர்ஸல் வகையை சார்ந்தது என்று கூறியிருக்கிறார். அதாவது நபித்தோழர் அல்லாத ஒருவர் நபிகளார் கூறியதாக சொல்வது. இது ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல! ஏனெனில் நபிகளார் கூறியதை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும்..மேலும் இந்த செய்தி சுனன் ஸயீத் பின் மன்ஸூர் என்ற நூல் பாகம் :2, பக்கம் :278, ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த செய்தியின் கீழ் அதன் ஆசிரியர் ‘இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.மேலும் இந்த செய்தியில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் ஹிஜாஸ் மற்றும் வேறு ஊர் வழியாக அறிவித்தால் பலவீனமாகும் இந்த செய்தியில் இடம் இஸ்மாயில் பின் அய்யாஷ என்பவர் யாரிடம் செவியுற்றாரோ அந்த ஸயீத் என்பவர் ஜவ்ஸஸான் என்ற ஊரில் பிறந்து மக்காவில் இறந்தவராவார். (நூல் தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 4, பக்கம் : 78)எனவே இந்த செய்தி மேலும் பலவீனமடைகிறது.
மேலும் இந்த செய்தி இப்னு ஹிப்பான் பாகம் 6 பக்கம் 312 ல் இடம் பெற்றுள்ளது இதில் ஹஸன் அவர்கள் ஜுன்துப் (ரலி) வழியாக கேட்டதாக இடம்பெற்றுள்ளது.ஹஸன் அவர்கள் தத்லீஸ் செய்பவர். (நூல் : தக்ரீபுத் தஹ்தீப் பாகம் : 1, பக்கம் : 160)
தத்லீஸ் என்பது ஒருவர் தான் நேரடியாக கேட்காத ஒருவரிடம், கேட்டிருக்கவும் கேட்காமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அறிவிப்பார். எனவே இவர் போன்றவர்கள் தனக்கு அடுத்துவரும் அறிவிப்பாளரிடம் நான் செவியுற்றேன், அவர் எனக்கு அறிவித்தார் என்று தெளிவாக கூறினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த செய்தியில் ஹஸன் அவர்கள் தனக்கு அடுத்துவரும் அறிவிப்பாளர் ஜன்துப் (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்டேன் என்று அறிவிக்கும் வாசகத்தில் கூறாததால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.
மேலும் இச்செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம் :1, பக்கம் :255, மற்றும் அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம் : 4, பக்கம் : 21, ஆகிய நூல்களிலும் வேறொரு வழியாக வந்துள்ளது.
எனினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் அக்லப் இப்னு தமீம் என்பவர் இடம் பெறுகிறார், இவரும் பலவீனமானவரே. (நூல் : அல்லுஅபாவு வல் மத்ருகீன்லிநஸயீ, பாகம் : 1, பக்கம் : 20)
இன்னும் இதே ஹதீஸ் ஸுஅபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 481 ல் இடம் பெற்றுள்ளது. இதிலும் மேலே விமர்சனம் செய்யப்பட்ட யாரென அறியப்படாத அபூ உஸ்மான் என்பவரே இடம் பெற்றுள்ளார்.
*********************************************************************************
தட்டில் எழுதி கரைத்து குடியுங்கள்
(7)
سُورَةُ يس تُدْعَى فِي التَّوْرَاةِ الْمُعِمَّةَ " . قِيلَ : وَمَا الْمُعِمَّةُ ؟ قَالَ : " تَعُمُّ صَاحِبَهَا بِخَيْرِ الدُّنْيَا وَالآخِرَةِ , وَتُكَابِدُ عَنْهُ بَلْوَى الدُّنْيَا , وَتَدْفَعُ عَنْهُ أَهَاوِيلَ الآخِرَةِ , وَتُدْعَى الْمُدَافِعَةَ الْقَاضِيَةَ , وَتَدْفَعُ عَنْ صَاحِبِهَا كُلَّ سُوءٍ , وَتَقْضِي كُلَّ حَاجَةٍ , وَمَنْ قَرَأَهَا عَدَلَتْ لَهُ عِشْرِينَ حِجَّةً , وَمَنْ سَمِعَهَا عَدَلَتْ لَهُ أَلْفَ دِينَارٍ فِي سَبِيلِ اللَّهِ , وَمَنْ كَتَبَهَا ثُمَّ شَرِبَهَا أَدْخَلَتْ جَوْفَهُ أَلْفَ دَوَاءٍ ، وَأَلْفَ نُورٍ ، وَأَلْفَ يَقِينٍ ، وَأَلْفَ بَرَكَةٍ , وَأَلْفَ رَحْمَةٍ ، وَنَزَعَتْ مِنْهُ كُلَّ غِلٍّ وَدَاءٍ " .
(الحكيم، والبيهقى فى شعب الإيمان وضعفه عن أبى بكر).
ذكره الحكيم (3/258)، وأخرجه البيهقى فى شعب الإيمان (2/480، رقم 2465) وقال: تفرد به محمد بن عبد الرحمن هذا عن سليمان وهو منكر.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சூரத்துல் யாஸினை தவ்ராத்தில் ‘அல் முயிம்மா’ (அனைத்தையும் சேர்த்துக் கொள்ளக்கூடியது) என்று அழைக்கப்படும் என்று கூறினார்கள் அப்போது ‘முயிம்மா’ என்றால் என்ன என்று கேட்டகப்பட்டது. அதற்கு, அதனை ஓதக்கூடியவருக்கு இம்மை மறுமையின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இம்மை மற்றும் மறுமையின் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். மறுமையின் பயங்கர சூழ்நிலையும் விலகிவிடும் என்று பதிளத்தார்கள்.இன்னும் இந்த சூராவிற்கு தாஃபிஆத்துல் காழிஆ (விதியை மாற்றக்கூடியது) என்று அழைக்கப்படும். அதாவது அதனை ஓதக்கூடியவருக்கு (தீங்கை) விட்டும் தடுக்கும், அவரின் தேவைகளை நிறைவேற்றும். யார் அதனை ஓதுகிறாரோ அவர் பத்து ஹஜ் செய்தவரைப் போன்றவராவார். யார் அதை ஓதக்கேட்கிறாரோ அவருக்கு ஆயிரம் தீனார் அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ததின் (நன்மை) எழுதப்படும்.இன்னும் யார் அதை எழுதி பின்பு குடித்து விடுகிறாரோ அவருடைய உள்ளத்தில் ஆயிரம் மருந்துகள் நுழைந்து விட்டன. ஆயிரம் ஒளியும், ஆயிரம் உறுதியும், ஆயிரம் பரகத்தும் ஆயிரம் ரஹ்மத்தும் அவருக்கு கொடுக்கப்படும். இன்னும் அவரை விட்டும் ஒவ்வொரு நோயும் மோசடித் தன்மையும் நீங்கிவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : ஷஅபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 480)
இதனை பதிவு செய்த ஆசிரியர் அவர்கள், இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில்” இந்த செய்தியை சுலைமான் என்வரிடமிருந்து முஹம்மத் பின் அப்திர்ரஹ்மான் என்பவர் மட்டுமே அறிவிக்கிறார். இவர் நிராகரிக்கப்பட்டவர்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இதே செய்தியை வேறு அறிவிப்பாளர் வழியாக கதீப் பக்தாதி அவர்கள் தனது ‘தாரீக் பக்தாத்’ என்று நூல் பதிவு செய்துள்ளார்கள். (பாகம் : 2, பக்கம் : 387). அதன் கீழே ‘ இந்த அறிவிப்பாளர் வரிசை பொய்யானதாகும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
*********************************************************************************
(8)
மலக்குகள் கலந்து கொள்வார்கள்
أخبرنا أبو محمد عبد الرحمن بن محمد الأدفوي ثنا أبو الطيب أحمد بن سليمان الجريري إجازة أبنا أبو جعفر محمد بن جرير الطبري حدثني زكريا بن يحيى ثنا شبابة ثنا مخلد بن عبد الواحد عن علي بن زيد بن جدعان وعطاء بن أبي ميمونة عن زر بن حبيش عن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه و سلم : إن لكل شيء قلبا وإن قلب القرآن يس ومن قرأ يس وهو يريد بها الله عز و جل غفر الله له وأعطي من الأجر كأنما قرأ القرآن اثنتي عشر مرة وأيما مسلم قرئ عنده إذا نزل به ملك الموت سورة يس نزل بكل حرف من سورة يس عشرة أملاك يقومون بين يديه صفوفا يصلون عليه ويستغفرون له ويشهدون غسله ويشيعون جنازته ويصلون عليه ويشهدون دفنه وأيما مسلم قرأ يس وهو في سكرات الموت لم يقبض ملك الموت روحه حتى يجيئه رضوان خازن الجنة بشربة من شراب الجنة فيشربها وهو على فراشه فيقبض ملك الموت روحه وهو ريان فيمكث في قبره وهو ريان ويبعث يوم القيامة وهو ريان ولا يحتاج إلى حوض من حياض الأنبياء حتى يدخل الجنة وهو ريان
ஒவ்வொன்றுக்கு ஒரு இதயம் உண்டு, திருக்குர்ஆனின் இதயம் யாஸீன் அத்தியாயமாகும். யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தை நாடி இதை ஓதுவாரோ அவரை மன்னிப்பான், அவர் திருக்குர்ஆனை 12 தடவை ஓதிய கூயை கொடுப்பான். எந்த முஸ்ம் (மரணித்தவரிடம்) இதை ஓதுவாரோ அங்கு மலக்குல் மவ்த் (உயிரை கைப்பற்றும் வானவர்) யாஸீûன் கொண்டு இறங்குவார். யாஸீனின் ஒவ்வொரு வசனத்தையும் 12 மலக்குகள் கொண்டு இறங்குவார்கள். அவர்கள் அவருக்கு முன்னால் அணிவகுத்து நிற்பார்கள், அவருக்காக அருளை வேண்டுவார்கள், பாவமன்னிப்பு கேட்பார்கள், அவரை குளிப்பாட்டும் போது கலந்துகொள்ளவார்கள, ஜனாஸாத் தொழுகையிலும் அடக்கும் செய்வதிலும் கலந்து கொள்வார்கள், யார் மரணநெருக்கத்தில் இருப்பரிடத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய உயிரை சுவர்க்கத்தின் காவலாளி சுவர்க்கத்தின் பானத்தைக் கொண்டு வந்து அவரின் விரிப்பில் அவர் இருக்கம் நிலையில் அதை அருந்தும் வரை மலக்குல் மவ்த் கைப்பற்ற மாட்டார். அவர் தாகம் தீர்ந்தவராக இருக்கும் நிலையில் அவரின் உயிரை மலக்குல் மவ்த் உயிரை கைப்பற்றுவார், அவர் தாகம் தீர்ந்தவராகவே கப்ரில் தங்கியிருப்பார், மறுமை நாளில் தாகம் தீர்ந்தவராகவே எழுப்படுவார், இவர் நபிமார்களின் (தாகம் தீர்க்கும்) தடாகத்தின் பக்கம் தேவைப்படமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்னத் ஷிஹாப் பாகம் : 2, பக்கம் : 130)
இதன் அறிவிப்பாளர் தொடரில் முகல்லத் பின் அப்துல் வாஹித் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பொய்யராவார். (நூல் : ஸானுல் மீஸான் பாகம் : 6,
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருக்கும் அ பின் ஸைத் அல் ஜத்ஆன் என்பவரும் பலவீனமானவரே! (அல்லுபாவு வல் மத்ருகீன் பாகம் : 2 பக்கம் :193)
********************************************************************************
பாவங்கள் மன்னிக்கப்படும்
(9)
'' مَنْ قَرَأَ يس أَصْبَحَ مَغْفُورًا لَهُ ، وَمَنْ قَرَأَ الدُّخَانَ لَيْلَةً أَصْبَحَ مَغْفُورًا لَهُ "
، في إسناده : محمد بن زكريا ، وضاع ، ورواه الدارقطني من طرق عمر بن راشد ، وهو أيضًا : وضاع ، قال في اللآلئ : أخرجه الترمذي ، ومحمد بن نصر في كتاب الصلاة ، قلت : ولكن من طريق عمر بن راشد المذكور ، قلت : وقد رواه الترمذي من غير طريقه بلفظ : من قرأ حم الدخان في ليلة الجمعة غفر له ، وفي لفظ له آخر : من قرأ سورة الدخان في ليلة غفر له ما تقدم من ذنبه ، ورواه أيضًا : محمد بن نصر بنحوه ، من طريق أخرى غير طريق عمر بن راشد ، ورواه الدارمي أيضًا .
யார் இரவில் யாஸின் சூராவை ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கபட்டவராக விடுகிறார், யார் துகான் அத்தியாயத்தை இரவில் ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கபட்டவராக விடுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்னத் அபீ யஃலா பாகம் : 11, பக்கம் : 93)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹிஸாம் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அபூஸர்ஆ, புகாரி போன்றோர் விமர்சனம் செய்துள்ளனர். (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11, பக்கம் : 36)
இதே செய்தியை இமாம் பைஹகீ தனது ‘ஷுஅபுல் ஈமான்’ பாகம் : 2, பக்கம் : 484 ல் பதிவு செய்துவிட்டு இதை ஹிஷாம் என்பவர் தனித்து அறிவிக்கிறார், இவர் பலவீனமானவராவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம் : 1, பக்கம் :255 ல் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அக்லப் பின் தமீம்’ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நிராகரிக்கப்பட்டவர். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜிஸ்ர் பின் பர்கத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே. (நூல் : லுபாவுல் உகை, பாகம் : 1, பக்கம் : 203)
*********************************************************************************
(10)
مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ أَصْبَحَ مَغْفُورًا لَهُ , وَمَنْ قَرَأَ الدُّخَانَ لَيْلَةَ الْجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ " ( ابن أبي داود ) من حديث أبي هريرة ، وفيه محمد بن زكريا الغلابي ( تعقب ) بأن له طرقا كثيرة عن أبي هريرة بعضها على شرط الصحيح ، أخرجه الترمذي والبيهقي في الشعب من عدة طرق ( قلت : ) ورأيت بخط الحافظ ابن حجر على هامش مختصر الموضوعات لابن درباس ما نصه قلت : أخرج ابن حبان في صحيحه من حديث جندب البجلي مرفوعا : من قرأ يس في ليلة ابتغاء وجه الله غفر الله له والله أعلم . .
யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.அறிவிப்பவர் : அபூஹýரைரா (ர), நூல் : தாரமி (3283)
இச்செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹஸன் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் இவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் செவியுறவில்லை. (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :2, பக்கம் : 231)
எனவே இந்த செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.
*********************************************************************************
அல்லாஹ் ஓதிய அத்தியாயம்
(11)
அல்லாஹ் தஆலா இந்த வானம் பூமி படைக்கப்படுவதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன் யாஸீன் அத்தியாயத்தையும் தாஹா அத்தியாயத்தையும் ஓதினான். மலக்குமார்கள் (இந்தக்) குர்ஆன் வசனங்களை கேட்டவுடன் இந்த அத்தியாயம் எந்த உம்மத்திறகு இறங்குகிறதோ அந்த உம்மத்திற்கு சுபச்செய்தி உண்டாகுவதாக! எந்த உள்ளம் இதை சுமக்கிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாகுவாக! எந்த நாவு இதை ஓதுகிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாகுவதாக! என்று சொன்னார்கள் என நபிகளார் கூறினார்கள். (நூல் : தாரமி (3280)
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர். (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 1, பக்கம் : 147)
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் ஹப்ஸ் என்பவரும் இடம் பெருகிறார். இவரும் பலவீனமானவரே!.
(அல்லுஆபாவு வல் மத்ருகீன்லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம் : 2, பக்கம் : 206)
************ ********* **************** ****** ***** ********* *********************
தேவைகள் நிறைவேற்றப்படும்
யார் பகன் ஆரம்ப நேரத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய தேவைகள் நிறைவேற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : தாரமி 3284)
இந்த செய்தி நபிகளார் கூறியதாக அறிவிக்கும் அதா பின் அபீ ரபாஹ் என்பவர் நபித்தோழர் இல்லை. நபிகளாரின் செய்திகளை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும் எனவே இந்த செய்தி பலவீனமான முர்ஸலான எனும் வகையைச் சார்ந்ததாகும்.
************ ********* **************** ****** ***** ********* *********************
பெற்றோர் பாவங்கள் மன்னிக்கப்படும்
யார் தன்னுடைய தாய், தந்தையர்களின் ஒருவரின் கப்ரையோ அல்லது இருவரின் கப்ரையோ வெள்ளிக்கிழமை தோறும் சந்தித்து அங்கு யாஸீன் அத்தியாயத்தை ஓதினால் ஒவ்வொரு ஆயத் அல்லது எழுத்து அளவுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் அபூபக்கர் (ர)
(நூல்:தபகாத்துல் முஹத்தீஸீன் பி உஸ்பஹான் பாகம்:3,பக்கம் : 331)
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அம்ரு பின் ஸியாத் அல் பக்கா என்பவர் பொய்யராவார். (நூல் : அல்காமில் பீ லுபாஇர்ரிஜால்லிஇப்னு அதீ, பாகம் :5, பக்கம் : 151, மீஸானுல் இஃதிதால் பாகம் :5, பக்கம் : 316)
************ ********* **************** ****** ***** ********* *********************
கப்ர் வேதனை குறைக்கப்படும்
யார் கப்ருகளின் பக்கம் சென்று (அங்கு) யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு அன்றைய நாள் வேதனை (கப்ராளிகளுக்கு) இலேசாக்கப்படும். அதில் உள்ள (ஒவ்வொரு எழுத்துக்கும்) அவரு(ஓதுபவரு)க்கு நன்மைகள் இருக்கினறன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் அனஸ் பின் மாக் (ர) (தப்ஸீர் ஸஃலபி, பாகம் : 3, பக்கம் : 161)
இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அய்யூப் பின் மித்ரக் என்பவர் பொய்யராவார். (மீஸானுல் இஃதிதால், பாகம் : 1, பக்கம் : 463)
மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூஉபைதா என்பவரும் ஆறாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அஹ்மத் அர்ரியாஹீ என்பவரின் நம்பத்தன்மையைப் பற்றி (நாம் பார்த்த வரை) எந்த நூல் குறிப்பிடப்படவில்லை. எனவே இது இன்னும் பலவீனம் அடைகிறது.
************ ********* **************** ****** ***** ********* *********************
ஷஹீதாக மரணிப்பார்
யார் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் யாஸின் அத்தியாயத்தை ஓதி வந்து மரணித்துவிட்டால் அவர் ஷஹீதாக மரணித்தவராக கணிக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் அல்முஃஜமுஸ் ஸகீர்லிதப்ரானீ, பாகம் : 2, பக்கம் : 191)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஸயீத் பின் மூஸா அல் அல் அஸ்தி என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பொய்யராவார். (நூல் ஸானுல் மீஸான் பாகம் : 3, பக்கம் : 44)
யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு தொடர்பாக நபிகளார் சொன்னதாக பல செய்திகளைப் பார்த்தோம். இதைப்போன்று நபிகளார் அல்லாத பலரும் இது தொடர்பாக பல செய்திகளை குறிப்பிட்டுள்ளார். அவற்றையும் பார்ப்போம்.
பிரசவ வேதனை குறையும்
யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், யார் பசியுள்ள நிலையில் அதை ஓதுவாரோ அவர் வயிர் நிரம்புவார், யார் வழிதவறிய நிலையில் ஓதுவாரோ அவர் வழியை அடைந்து கொள்வார், யார் பொருளை தவற விடுவாரோ அதை அவர் பெற்றுக்கொள்வார், உணவு குறைந்துவிடும் என பயந்து உணவிருக்குமிடத்தில் அதை ஓதுவாரோ அவர் அதை போதுமானதாக பெற்றுக்கொள்வார். இறந்தவரிடத்தில் ஓதினால் வேதனை இலேசாகும். பிரசவ வேதனையில் இருக்கும் பெண்ணிடம் ஓதினால் அவருடைய பிரசவம் லேசாகும். மேலும் யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் குர்ஆனை பதினொரு தடவை ஓதியவர் போன்றவராவார். ஒவ்வொன்றுக்கும் இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் யாஸீன் ஆகும் என்று அபூகிலாபா என்பார் கூறுகிறார். (நூல் ஷஅபுல் ஈமான், பாகம் : 5., பக்கம் : 478)
இந்த ஹதீஸை அபூகிலாபா என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழந்த காலத்தில் இருந்தவர்) ஒரு அத்தியாயத்திற்கு குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூறவேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூறமுடியும் எனவே அபூகிலாபா அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது.மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் கலீல் பின் முர்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவரை புகாரி உட்பட பலர் விமர்சனம் செய்துள்ளனர்.(நூல் : தஹ்தீப் தஹ்தீப், பாகம் : 3, பக்கம் : 146)
*********************************************************************************
முழுக் குர்ஆன் ஓதிய நன்மை
யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். மேலும் அது முழு குர்ஆனை ஓதியதற்கு சமமாகும் என்று ஹஸன் பஸரி அவர்கள் கூறுகிறார்கள். (நூல் : தாரமி 3281)
இது ஹஸன் அவர்களின் சொந்த கூற்றாகும். நபிகளார் சொல்லாததால் இந்த கருத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளமுடியாது.மேலும் இச்செய்தியில் அபூல் வலீத் மூஸா பின் காத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று அறியப்படாதவர். (நூல் : தஹ்தீபுத்தஹ்தீப், பாகம் : 10, பக்கம் : 304)
மகிழ்ச்சிக்கு ஓர் அத்தியாயம்
யார் யாஸீன் அத்தியாயத்தை காலையில் ஓதுவாரோ அவர் மாலை வரை சந்தோஷமாக இருப்பார், யார் மாலையில் ஓதுவாரோ அவர் காலை வரை சந்தோஷமாக இருப்பார் என்று யஹ்யா பின் கஸீர் என்பார் அறிவிக்கிறார்.
(நூல் : பழாயிலுல் குர்ஆன்லி முஹம்மத் பின் லரீஸ், பாகம் : 1, பக்கம் : 230)
இது யஹ்யா பின் அபீ கஸீர் என்பவரின் சொந்த கூற்றாகும். இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர் நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் கூற்று மார்க்க ஆதாரமாக ஆகாது.
மேற்கூறிய செய்திகளை வைத்துதான் யாஸீன் அத்தியாயத்தை பல சந்தர்ப்பங்களில் ஓதிவருகிறார்கள். ஆனால் யாஸீன் அத்தியாயத்திற்கு தனியான சிறப்புகள் உள்ளதாக ஆதாரப்பூர்மான எந்த செய்தியும் இல்லை. பொதுவாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதினால் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள் உண்டு, அந்த சிறப்பு யாஸீன் அத்தியாயத்திற்கும் உண்டு. இது தவிர வேறு தனியான எந்த சிறப்புகளையும் ஆதாரப்பூவமான ஹதீஸ்களில் காணமுடியவில்லை. எனவே ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாக கொண்டு எந்த அமலையும் செய்யக்கூடாது.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. (அல் குர்ஆன் 17 36)
ஆகையால் நாம், ஆதாரப்பூர்வமான செய்திகளை வைத்து நம்முடைய அமல்களை அமைத்து கொள்வோமாக.