"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா?

யானைக்கு தும்பிக்கை எப்படியோ
மனிதனுக்கு நம்பிக்கை அப்படி.
நம்பிக்கை எனும்போது ...
இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும்

ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது.
மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம்.
எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..

 உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது.
  • ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை.
பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு செய்தது, குரு சீடர்களிடன் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா!? அங்கே தான் இருக்கு கதையே!
ஒருநாள்  குரு மரணித்து போனார் .அந்த குருகுலத்தின் தலைமை சீடன் குருவாக மாறினார்.வழமை போல் பாடங்கள் கற்பிக்க பட்டது அந்த பூனை தொடர்ச்சியாக கட்டபட்டு வந்தது .ஒரு நாள் பாடம் நடத்த வந்த குரு பூனை கட்டபடாதை கண்டு கோபங்கொண்டு சீடர்களை பார்த்து ''முட்டாள்களே பூனையை ஏன் கட்டவில்லை'' என்று கத்தினார் .
'' குருவே அந்த பூனை இறந்து விட்டது ''
'' முட்டாள்களே பூனை கட்டபடாமல் எப்படி பாடம் கற்பிப்பது ? நமது குரு பூனை கட்டிவைத்து அல்லவா பாடம் நடத்துவார் உடனடியாக அடுக்களைக்கு போய் அங்கே இருக்கும் பூனை ஒன்றை கொண்டுவந்து இங்கே கட்டுங்கள் என்று உத்தரவிட்டார் . எப்போதெல்லாம் பாடம் ஆரம்பிக்கப்படுமோ அப்போதெல்லாம் ஒரு பூனையை மெனெக்கெட்டு பிடித்து வந்து தூணில் கட்டிப்போட்டுவிட்டுத்தான் பாடத்தையே ஆரம்பித்தார்களாம்.

ஒரு பழக்கம் எப்படி யதார்த்தமாக வந்து பின்னர் சடங்காக மாறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
  • இல்லாத காரணங்களை ஏற்படுத்தி புதிய பழக்கங்களை உண்டாக்குவதும் இன்னொரு வகையான மூட நம்பிக்கை.
மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கைபடி ஆடி, மார்கழி மாதங்கள் பீடை மாதங்கள் என்றும், புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகளைகூட பிரித்துவைத்து விடுவதும் அவர்களின் பழக்கம். இந்த நம்பிக்கையை கடைபிடிக்கும் நமது முஸ்லிம்களும் ஸபர் மாதத்தை பீடை என்றும் திருமணம் கத்னா போன்ற சுப காரியங்கள் செய்ய ஆகாது என்றும் கூறி புதுமண தம்பதிகளைக் கூட இம்மாதத்தில் பிரித்துவைத்து விடுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.

وقد انتشر في هدا الشهر بدع ومحدثات باطلة، منها عدم السفر فيه، وترك الزواج فيه،
قال صاحب كتاب البدع الحولية(.فكثير من الجهال يتشاءم بصفر ، وربما ينهى عن السفر فيه ،
. ولا شك التشاؤم بصفر، أو بيوم من أيامه، هو من جنس الطيرة المنهي عنها.
 فقد قال - صلى الله عليه وسلم-:(لا عدوى، ولا طيرة، ولا هامة ، ولاصفر)

''தொற்று நோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கூடாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கூடாது.''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( புகாரி 5707)

தொற்று நோய் :

அன்றைய அறியாமைக் கால மக்கள் நோய் உண்டாகக் காரணமே தொற்றுதான் என்றும் இறைவனுக்கு இதில் தொடர்பில்லை என்றும் கருதி வந்தனர். இந்த தவறான கருத்தை களைந்திடும் முகமாகவே நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ‘ தொற்று நோய் கிடையாது’ என்றார்கள்.
அதாவது நோயாளியுடன் சேர்ந்திருப்பது மட்டும் நோய்வரக் காரணமல்ல. இறைவனின் நாட்டமும் இருந்தால்தான் நோய் பரவும். அதே நேரத்தில் நோயாளியைத் தாக்கியுள்ள தொற்றுக் கிருமிகள் (வைரஸ்) காற்றுவாயிலாகவும் நீர்வாயிலாகவும் இடம் பெயர்ந்து மற்றவர்களுக்கும் நோய் பரவ இடமுண்டு. இவ்வாறு கிருமிகள் இடம் பெயர்வதால் நோய் பரவ வேண்டும் என்பது இறைவனின் ஆணையாகவும் இருக்கலாம். எனவேதான் ‘தொழுநோயாளி போன்றோர்களிடமிருந்து விலகியிருங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
உறுதியான இறைநம்பிக்கை உரியவர் எல்லா நிலைகளிலும் இறைவனையே சார்ந்திருப்பார். வெளிக்காரணிகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார். வெளிக்காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இறை சக்தியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் பலவீனர்களாக உள்ளவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு இரு தரத்தில் உள்ள மக்களையும் இணைத்து தொற்றுநோய்பற்றி இஸ்லாம் ஓர் அழகிய தீர்வைத் தந்துள்ளது. துன்பத்திலும் இன்பத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என நம்பிக்கையை வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் நாட்டமின்றி எந்த நோயும் தீண்டாது என்ற கருத்தில் ‘தொற்றுநோய் கிடையாது’ என்றும் இவ்வுலகில் அல்லாஹ் ஏற்படுத்திய காரண, காரணிகளுக்கு உட்பட்டுதான் மனிதன் நடந்து கொள்ளவேண்டும், நெருப்பை கண்டு பயப்படுவது இறை நம்பிக்கைக்கு முரணானதல்ல என்பது போன்று தொழுநோயாளிகளைக் கண்டு ஒதுங்கியிருப்பது தவறல்ல என்றும் மார்க்கம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இதற்கு சான்றாக இந்த நபிமொழி அமைகிறது:
உமர் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்ஃப் எனும் இடத்தை அவர்கள் அடைந்த போது ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவி இருப்பதாக அவர்களுக்கு செய்தி எட்டியது. அப்போது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்களாகப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் பரவிவிட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) நீங்கள் வெளியேறாதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள்.
                       ( புகாரி )

பறவை சகுனம்:
وكان أهل الجاهلية يتطيرون بالسوانح والطيور، فينفِّرون الظباء والطيور؛ فإن أخذت ذات اليمين تبركوا به، ومضوا في سفرهم وحوائجهم, وإن أخذت ذات الشمال رجعوا عن حاجتهم وسفرهم، وتشاءموا به, فكانت تصدهم في كثير من الأوقات عن مصالحهم.
அறியாமைக் கால அரபுகள் பயணம் புறப்பட்டால் அல்லது சுப காரியம் தொடங்கினால் பறவைகளைப் பறக்கவிட்டு சகுனம் பார்ப்பார்கள். பறவை வலது புறம் பறந்தால் நல்ல சகுனம். புறப்படலாம் .
இடது புறம் பறந்தால் அபசகுனம். காரியமும் பயனமும் தடைபட்டுவிடும்.
وقال صلى الله عليه وسلم : (( من ردته الطيرة عن حاجته فقد أشرك )) ، قالوا : فما كفارة ذلك ؟ قال : (( أن تقول: اللهم لا خير إلا خيرك ، ولا طير إلا طيرك ، ولا إله غيرك ))

''சகுனம் பார்த்து ஒரு காரியத்திற்கு தடைபோட்டால் அவன் இணைவைத்துவிட்டான்''. அண்ணலார் ஸல் இவ்வாறு கூறியபோது அருமைத் தோழர்கள் கேட்டார்கள்: ''அப்படியென்றால் அதற்கு என்னதான் பரிகாரம்?''
''அல்லாஹ்வே உனது நலவைத் தவிர வேறு நலவு இல்லை; உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் இல்லை; உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. என்று சொல்லிவிட்டு செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டியதுதான்.''
  • பூனை குறுக்கே வருவது , விதவை எதிரே வருவது நல்லதல்ல
     எனவும் 
  • காலையிலே கழுதை முகத்தில் விழிப்பது நல்லதென்றும் நம்பக்கூடியவர்கள் நம்மிலே நிறைய உண்டு.

''நாம் ஒரு காரியமாக போகிறோம்; பூனை ஒரு காரியமாக போகிறது
 நாம் செல்கிறபோது பூனை எப்படி குறுக்கே வரலாம் என்று நினைத்து காரியத்தை நாம் தள்ளிப் போடுகிறோம். ஆனால் அந்த பூனை, ''நாம் செல்கிறபோது இந்த மனிதன் குறுக்கே வந்துவிட்டானே என்று நினைத்து தன் காரியத்தை தள்ளிப்போடுவதில்லை.''
ரு ராஜா இருந்தார். அவருக்கு மூடநம்பிக்கை அதிகம். ஒரு முறை அமைச்சர்,'கழுதை முகத்தில் விழித்தால் யோகம் 'என்று சொல்ல உடனே ஒரு கழுதையை அரண்மனைக்கு அழைத்து வரச்சொன்னார்
ராஜா .அதற்கு,இன்னொரு அமைச்சரோ, ''அரண்மனைக்கா வேண்டாம் மன்னா,கழுதை இருக்கும் இடம் குட்டிசுவராகிவிடும்"என்று எச்சரிக்க  அதையும் நம்பிய மன்னர்,வேறு ஒரு ஏற்பாடு செய்தார். அதாவது..ஒரு சலவைத்தொழிலாளி தினமும் ராஜா விசிக்குமநேறதுக்கு தன்னுடைய கழுதையை அரண்மனைக்கு அழைத்து வருவது என்று முடிவானது. தினமும்
கழுதை அழைத்துவரபட்டது. ஆனால் போகும்போது சலவைத்தொழிலாளி நமட்டுச்சிரிப்போடு செல்வதை கவனித்த அரண்மனைக்காவலாளி,''ஏன் சிரிக்கிறாய் ?'' என்று கேட்டான். அதற்கு,'''கழுதை முகத்தில் விழித்தால் யோகம் என்றாலபிறந்ததில் இருந்தே அதன்முகத்தில் விழிக்கும் எனக்கு குடிசை யோகத்தை தவிர வேறு எந்த யோகமும் கிடைக்கவில்லையே! அதைபோல,கழுதை இருக்கும் இடம் குட்டிசுவர் என்றால்,என் வீடும் அப்படி ஆகியிருக்கே வேண்டுமே! பொறுப்புகளை சரியாக கவனிக்காமல்,இப்படி மூட நம்பிக்கைகளை வளர்த்துகொண்டால்,கழுதை வராமலே அரண்மனையும் குட்டிசுவராகிவிடும். இதை
நினைத்துதான் சிரித்தேன் என்று சொல்லிவிட்டு கழுதையோடு நடந்தான்.
இதையெல்லாம் கவனித்த ராஜா தலை குனிந்தார்.

அதே போல வீட்டுத் தலைவாசலுக்கு நேரெதிரில் சுவர் இருக்கக்கூடாது அப்படி சுவரில் விழித்துக்கொண்டு ஒரு காரியத்திற்கு போனால் அது வெற்றியாகாது என்று சொல்வோரும் உண்டு. ஒருவேளை யதார்த்தமாக சுவர் அமைந்துவிட்டால் அந்த சுவற்றில் வாசலுக்கு நேராக ஒரு சங்கு அல்லது கண்ணாடியைப் பதிக்கிறார்கள். அதில் விழித்துக்கொண்டு போனால் அந்த அபசகுணம் மாறிவிடும் என்று.
அண்ணல் நபி ஸல் இதற்கெல்லாம் அழகிய தீர்வைத் தந்துவிட்டார்கள்:
عنْ أنسٍ رضيَ اللَّهُ عنه قال : قال : رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَنْ قَالَ يعنِي إذا خَرَج مِنْ بيْتِهِ : بِسْم اللَّهِ توكَّلْتُ عَلَى اللَّهِ ، ولا حوْلَ ولا قُوةَ إلاَّ بِاللَّهِ ، يقالُ لهُ هُديتَ وَكُفِيت ووُقِيتَ ، وتنحَّى عنه الشَّيْطَانُ » رواه أبو داودَ والترمذيُّ ، والنِّسائِيُّ وغيرُهم
''வீட்டை விட்டுப் புறப்படும்பொழுது بِسْم اللَّهِ توكَّلْتُ عَلَى اللَّهِ ، ولا حوْلَ ولا قُوةَ إلاَّ بِاللَّهِ
இவ்வாறு கூறிவிட்டு சென்றால்، ''உனக்கு வழிகாட்டப்படும்; பாதுகாப்பு வழங்கப்படும்'' என்று வானவர்கள் மூலம் அவருக்கு சுபச் செய்தி கூறப்படும் என்றார்கள் நபி ஸல்.
இதை ஓதிவிட்டு அல்லாஹ்வின்மீது பரிபூரண நம்பிக்கையுடன் சென்றால் எதிரில் இருப்பது சுவரா? பூனையா? விதவையா? கழுதையா என்றெல்லாம் சகுனம் பார்க்கத் தேவையில்லை. வெற்றி வசப்படும்!
முகலாய மன்னர் அக்பருக்கு மூட நம்பிக்கை நிறைய உண்டு.
ஒருநாள் அதிகாலையில் அரண்மனையின் உப்பரிகைக்கு வந்து வீதியை நோக்கினார். தெருவில் ஒரு ஏழை விவசாயி கண்ணில் பட்டான். அதற்குப் பிறகு முகச் சவரம் செய்துகொண்டிருந்தபொழுது யதார்த்தமாக சின்னக் கீறல் ஏற்பட உடனே ஆவேசப்பட்டார். ஆணையிட்டார்:
அந்த ஏழையை இழுத்துவாருங்கள் காலையில் அவன் முகத்தில் கண் விழித்ததால்தான் கன்னத்தில் இந்த காயம். அவனைப் போல ராசிகெட்டவனெல்லாம் இந்த நாட்டில் இருக்கக்கூடாது அவனுக்கு மரண தண்டனை தாருங்கள்''
அந்த அப்பாவி இழுத்து வரப்பட்டு கழுத்திலே கயிறு மாட்டப்பட்டான் கடைசி விநாடி . கலங்காமல் கண்ணீர் விடாமல் சிரித்துக்கொண்டிருந்தான். காரணம் கேட்டதற்கு அவன் கூறினான்: 
என் முகத்தில் மன்னர் விழித்ததால் கன்னத்தில் ஒரு  சிறிய காயம்தான் ஏற்பட்டது. ஆனால் இன்று அவர் முகத்தில் நான் விழித்ததால் என் தலையே போகப்போகிறது அப்படியானால் யார் ராசி இல்லாதவர் என்று யோசித்தேன் சிரிப்பை அடக்கமுடியவில்லை என்றான்
மன்னர் அசடு வழிந்தார். தண்டனையை ரத்து செய்தார்.

ஆந்தை சகுனம்:

ஒரு வீட்டில் ஆந்தை கத்தினால், அவ்வீட்டில் எவருக்கேனும் மரணம் சம்பவிக்கும். என்றும் காக்கை கத்தினால் விருந்தாளி வருகை என்றும் சில நம்பிக்கை உண்டு.
ஒரு சிறுவன் தந்தையிடம் கேட்டான்:
வாப்பா.. காக்கை கத்தினால் விருந்தாளி வருவாங்களா ?
தந்தை சொன்னாராம்:
'' ஆமாப்பா.. காக்கை கத்தினால் விருந்தாளி வருவாங்க.. உங்க அம்மா கத்தினால் விருந்தாளி போய்டுவாங்க..''

நாயகம் ஸல் கூறினார்கள்:
 (إذا سمعتم صياح الديك فاسألوا الله من فضله فإنها رأت ملكاً، وإذا سمعتم نهيق الحُمر- وفي اللفظ الآخر: ونباح الكلاب- فتعوذوا بالله من الشيطان فإنها رأت شيطاناً).
''அதிகாலை சேவல் கூவினால் அல்லாஹ்விடம் அருளை வேண்டுங்கள் ஏனெனில் அது அருளை சுமந்துவரும் வானவர்களைக் கண்டுதான் கூவுகிறது. நாய் ஊளையிடுவதை، கழுதை கத்துவதை செவியுற்றால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுங்கள் ஏனெனில் அது ஷைத்தானைக் கண்டிருக்கிறது '' 
இந்தளவிற்குத்தான் மார்க்கத்தில் உள்ளதே தவிர ஆந்தையின் சப்தம் அபசகுனத்தை அறிவிக்கும் என்று எந்த குறிப்பும் மார்க்க்கத்தில் இல்லை.

மொத்தத்தில் சகுனம் பார்க்காமல் இறைநம்பிக்கையுடன் காரியம் ஆற்றுகிறவர்கள் மறுமையில் விசாரணையின்றி சுவனம் செல்வார்கள் :

عن النبي صلى الله عليه وسلم قال : "عُرِضَتْ عَلَيَّ الأُمَمُ فَجَعَلَ النَّبِيُّ وَالنَّبِيَّانِ يَمُرُّونَ مَعَهُمْ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ حَتَّى رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ قُلْتُ مَا هَذَا ؟ أُمَّتِي هَذِهِ ؟ قِيلَ بَلْ هَذَا مُوسَى وَقَوْمُهُ ، قِيلَ انْظُرْ إِلَى الأُفُقِ فَإِذَا سَوَادٌ يَمْلأُ الأُفُقَ ثُمَّ قِيلَ لِي انْظُرْ هَا هُنَا وَهَا هُنَا فِي آفَاقِ السَّمَاءِ فَإِذَا سَوَادٌ قَدْ مَلأَ الأُفُقَ قِيلَ هَذِهِ أُمَّتُكَ وَيَدْخُلُ الْجَنَّةَ مِنْ هَؤُلاءِ سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ ثُمَّ دَخَلَ وَلَمْ يُبَيِّنْ لَهُمْ فَأَفَاضَ الْقَوْمُ وَقَالُوا نَحْنُ الَّذِينَ آمَنَّا بِاللَّهِ وَاتَّبَعْنَا رَسُولَهُ فَنَحْنُ هُمْ أَوْ أَوْلادُنَا الَّذِينَ وُلِدُوا فِي الإِسْلامِ فَإِنَّا وُلِدْنَا فِي الْجَاهِلِيَّةِ ؟ فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ فَقَالَ : هُمْ الَّذِينَ لا يَسْتَرْقُونَ وَلا يَتَطَيَّرُونَ وَلا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ .. ". رواه البخاري 5270

''அனைத்து நபிமாரின் சமுதாயமும் எனக்கு எடுத்துக் காண்பிக்கப்பட்டது.......... அதில் ஒரு பெருங்கூட்டம் என் சமுதாயம் என சொல்லப்பட்டது. அதுமட்டுமல்ல.. என் சமுதாயத்தில் எழுபதாயிரம் (70000) பேர் விசாரணையின்றி சுவனம் நுழைவார்கள் என்றும் கூறப்பட்டது..........................
அவர்கள் எதற்கெடுத்தாலும் மந்திரிக்காதவர்கள்; சகுனம் பார்க்காதவர்கள்; இறைவனின்மீது முழுநம்பிக்கை வைத்து செயலாற்றுபவர்கள்۔   (புகாரி)
       (மொழிபெயர்ப்பின் சுருக்கம்)

சஃபர் : சகுனமும் கூடாது சங்கடமும் கூடாது
ஸஃபருல் முழஃப்பர் (வெற்றி வாய்ந்த ஸஃபர்) என்று சிறப்பித்தழைக்கப்படும் மாதத்தை அரபுகள் அன்று பீடையாகக் கருதினர்.
அதுமட்டுமல்ல.. ஸஃபர் மாதத்தில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகளும் தகிடுதத்தங்களும் செய்தனர்.
عن ابن عباس- رضي الله عنهما – قال : ((كانوا يرون أن العمرة في أشهر الحج من أفجر الفجور في الأرض ، ويجعلون المحرم صفر ، ويقولون : إذا برأ الدبر ، وعفا الأثر ، وانسخ صفر ، حلَّت العمرة لمن اعتمر . قدم النبي صلى الله عليه وسلم وأصحابه صبيحة رابعة مهلين بالحج فأمرهم أن يجعلوها عمرة ، فتعاظم ذلك عندهم ، فقالوا:يا رسول الله !أي الحل ؟. قال:(( حل كله)

ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக்கால) மக்கள் கருதினர். (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள் போர் செய்ய தடை செய்யப்பட்ட மாதங்களாக தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபர் மாதத்திற்கு மாற்றினார்கள்.
‘(ஹஜ் பிரயாணத்தில்) ஒட்டகங்களின் முதுகில் உள்ள சுமைகளின் வடு காயந்து மறைந்து ஸஃபர் மாதமும் கடந்து விட்டால் உம்ராச் செய்ய நாடுபவருக்கு உம்ராச் செய்வது கூடும்’ எனக் கூறி வந்தனர். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்களாக மக்கா நகருக்கு வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள். இது தோழர்களுக்கு மிகக் கடுமையானதாகத் தெரிந்தது. இதனால் நபி (ஸல்) அவர்களிடம் ‘ அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்த செயல்கள் அனுமதிக்கப்படும்? எனக் கேட்டனர். அதற்கு ‘ அனைத்து (விலக்கப்படாத) செயல்களும் அனுமதிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (நூல்: புகாரி 1564)

அன்றைய அரபுகள் சஃபரை மட்டுமல்ல.. ஷவ்வால் மாதத்தையும் பீடை மாதமாக கருதி வந்தனர்,  ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்,
عن عائشة قالت تزوجني رسول الله صلى الله عليه وسلم في شوال وبنى بي في شوال فأي نساء رسول الله صلى الله عليه وسلم كان أحظى عنده مني (مسلم، احمد)
'' நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.    ( முஸ்லிம், அஹ்மத்)

ஷவ்வால் பீடை மாதம் என்றால் என் தாம்பத்ய வாழ்க்கை சீரழிந்திருக்கவேண்டுமே.. என்னை விட நபியோடு சிறப்பாக வாழ்ந்தவர்கள் யார்?- என்பது அவர்களின் கேள்வி.
وقصدت عائشة بهذا الكلام رد ما كانت الجاهلية عليه ، وما يتخيله بعض العوام اليوم من كراهة التزوج والتزويج والدخول في شوال ، وهذا باطل لا أصل له ، وهو من آثار الجاهلية ، كانوا يتطيرون بذلك لما في اسم شوال من الإشالة والرفع . 

பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா
அல்லாஹ்.

அதுசரி.. சஃபரை மக்கள் பீடையாகக் கருதுவதற்கு ஏதேனும் அடிப்படை இருக்கவேண்டுமே..
நெருப்பில்லாமல் புகையாதே..
உண்மைதான்.. ஒரு சில அடிப்படைகளைக் கொண்டுதான் இந்த மாதத்தை பீடையாக கருதுகின்றனர்.

  • இந்த மாதத்தின் இறுதியில்தான் நபி நோய்வாய்ப்பட்டு குளித்தார்கள்
  • ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட நகசு நாட்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுவது இந்த நாட்களைத்தான்.
  • லட்சக்கணக்கான முஸீபத்துகள் பீடைகள் பூமிக்கு இறங்குவது இந்த மாதத்தில்தான்.

இப்படி அடுக்கப்படுகின்றன பல காரணங்கள்.

சில ஆரிஃபீன்கள் (ஞானிகள்) கூட கூறியுள்ளனர்:
"ذكر بعض العارفين أنه ينزل في كل سنة ثلاثمائة وعشرون ألفاً من البليات, وكل ذلك في يوم الأربعاء الأخير من صفر, فيكون ذلك اليوم أصعب أيام السنة كلها, فمن صلى في ذلك اليوم أربع ركعات يقرأ في كل ركعة فاتحة الكتاب مرة, وسورة الكوثر سبع عشر مرة, والإخلاص خمس عشر مرة, والمعوذتين مرة,  لم يصبه شر ذلك اليوم"

ஒவ்வொரு வருடமும் மூன்று இலட்சத்து இருபதாயிரம் சோதனைகள் - துன்பங்கள் இறங்குகின்றன அவை யாவும் சபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது நான்கு ரக்அத் தொழுது நான்குரக்அத்திலும் "பாத்திஹா சூரா" ஓதிய பின் இன்னா அஃதைனாகல் கவ்தர் என்ற சூரத்தை 17 தடவைகளும், குல்ஹுவல்லாஹ்வை பதினைந்து தரமும் , குல் அஊது பிறப்பில் பலக் ஒரு தரமும், குல் அஊது பிறப்பின் நாஸ் ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுவான்.''

ஆரிபீன்கள் கூறுவதை நாம் மறுக்கவில்லை. ஆனால்  "ஒரு நாள் மட்டும் " என்று ஆரிஃபீன்கள் கூறியதை வைத்துக்கொண்டு அந்த மாதம் முழுவதையும் பீடை என்று சொல்வது சரியா? தெரியவில்லை.
அந்த முஸீபத்தை நீக்க இன்று மக்கள் சிலர் செய்யும் செயல்கள் சரியானதா என்று புரியவில்லை.
 தொடர்ந்து பேசலாம்.. இன்ஷா அல்லாஹ்

நன்றி :-

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள்செயல்பாடுகளால்இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத்தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களைவேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டஇந்தக் காரியங்களை முஸ்லிம்களேபால் கிதாபு,பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்றுதான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.
இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில்பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள்.இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.
ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில்போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.
இன்னும் சிலர் மாவிலைகளில் "சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்”என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறுகுடித்தால்தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக்கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இதுபோன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பிஅடித்துள்ளார்கள்.
மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம்போன்ற நல்ல காரியங்களைத் தள்ளிவைத்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப்போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக்கருதப்பட்டது.
பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள்ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும்கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில்வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்)அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.
தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5707, 5717
ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும்என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்றுகூறினார்கள்.

கெட்ட நாள் உண்டா?

காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.
தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும்சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)
பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள்நினைக்கும் கருத்தைஇவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனைவழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்லநாட்கள், பீடை நாட்கள்மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றிவருகின்றனர்.
ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழுநாட்கள் அவர்களுக்குஎதிராகக் காற்று வீசியதாகவும்,ஏழு நாட்களுமே பீடை நாட்கள்என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)
ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக்கிழமையும் நல்ல கிழமைஅல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடைநாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.
மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள்காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்லநாட்களாக அமைந்தன.
உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால்தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை.எல்லா மனிதர்களுக்கும்தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத்தருகிறோம்என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டுபிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை?ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும்தரித்திர நிலையில் தான்உள்ளனர்என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள்என்றுகூறுவது அல்லாஹ்வைக் குறைகூறுவதாகும்.
"ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்கஅவன்காலத்தைத் திட்டுகின்றான்.என் கையிலே ஆட்சியுள்ளது. இரவுபகலை நானே புரட்டிவருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4826
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரியசெயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும்அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்)அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல்மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தேதீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம்விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன்யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன்யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன்மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)

மாற்று மதக் கலாச்சாரம்

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களைமார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களாஎன்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டுஅவர்கள் செய்வதைப் போன்று இவர்களும்செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக்கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள்என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களைநீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம்பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள்என்று கூறியுள்ளார்கள்.(புகாரி 3456)
இது போன்று நபி (ஸல்) அவர்களின்எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமியசமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில்செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டுவருகிறோம்.
மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதைஅப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரிகொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.
இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதிகோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம்என்று கருதி, அந்தமாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்துகாப்பியடித்து செய்து வருகின்றனர்.
இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்)அவர்கள்கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.
இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியானபாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன்ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒருஇலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை)நாடி தங்களின்போர்க்கருவிகளைத்தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்துஅன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போதுநபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத்து அன்வாத்து”என்று இருப்பதைப்போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம்(அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம்இருக்கிறதோஅவன் மீது ஆணையாக! நீங்கள் நபிமூஸா (அலை) அவர்களிடத்தில் பனூஇஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபிமூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள்இருப்பதைப்போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை)அவர்கள்,நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள்.இதைப்போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின்வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி) நூல்:திர்மிதி
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள்என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையானகாரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானதுஅல்லாஹ்வுடைய வேதமாகும்.நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்)அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்)புதிதாகஉருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும்பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும்நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ 1560
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்டநாளாகக் கருதாமல்,மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப்பெறுவோமாக!

-- நன்றி onlinepj.com