"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆ ஹாமித் பக்ரியின் ஆதாரம்
இது குறித்து ஏகத்துவம் ஆகஸ்ட் 2010 இதழில் விளியான ஆய்வுக் கட்டுரையை இதற்கு பதிலாகத் தருகிறோம்.


மறு ஆய்வு கூட்டு துஆ
....பித்அத்தின் உச்சக்கட்ட சபையான புகாரி சபையில் ஹாமித் பக்ரி மற்றொரு வாதத்தையும் எடுத்து வைத்துள்ளார். அது தான் கூட்டு துஆ ஓதலாம் என்பதாகும். இதே ஹாமித் பக்ரி தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த போது கூட்டு துஆவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்.
கூட்டு துஆ தொடர்பாக ஏற்கனவே ஏகத்துவத்தில் ஆய்வுத் தொடர்களை வெளியிட்டிருந்தாலும் தற்போது புதிதாக சில வாதங்களை ஹாமித் பக்ரி முன்வைத்திருப்பதால் அவற்றுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை இங்கே பதியப்படுகின்றது.

ஆதாரம்: 1

5478 - أخبرنا الشيخ أبو بكر بن إسحاق أنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن المقري ثنا ابن لهيعة : قال : حدثني أبو هبيرة عن حبيب بن مسملة الفهري و كان مجاب الدعوة أنه أمر على جيش فدرب الدروب فلما أتى العدو قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول لا يجتمع ملأ فيدعو بعضهم و يؤمن البعض إلا أجابهم الله ثم إنه حمد الله و أثنى عليه ثم قال : اللهم احقن دمائنا و اجعل أجورنا الشهداء فبينما هم على ذلك إذ نزل الهنباط أمير العدو فدخل على حبيب سرادقه
تعليق الذهبي قي التلخيص : سكت عنه الذهبي في التلخيص

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص [5 /24]
"ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ரலிநூல்: ஹாகிம் 5478
3456- حدثنا بشر بن موسى ، حدثنا أبو عبد الرحمن المقرئ ، حدثنا ابن لهيعة ، حدثني ابن هبيرة ، عن حبيب بن مسلمة الفهري وكان مستجابا أنه أمر على جيش فدرب الدروب ، فلما لقي العدو ، قال للناس : سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول : " لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن سائرهم إلا أجابهم الله " ، ثم إنه حمد الله وأثنى عليه ، فقال : اللهم احقن دماءنا واجعل أجورنا أجور الشهداء ، فبينا هم على ذلك إذ نزل الهنباط أمير العدو ، فدخل على حبيب سرادقه ، قال أبو القاسم : الهنباط بالرومية صاحب الجيش.
حبيب بن سباع أبو جمعة الأنصاري ، ويقال : جنيد بن سبع
المعجم الكبير للطبراني [4 /12]
இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ஹாமித் பக்ரீ, கூட்டு துஆ ஓதலாம் என்று வாதிடுகிறார்.
இந்த இரண்டு நூற்களிலும் மூன்றாவது அறிவிப்பாளராக "இப்னு லஹீஆ' என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவருடைய புத்தகங்கள் எரிந்து விட்டதால் இவரது மனனத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதே இவரது பலவீனத்துக்குக் காரணம்.
எனவே இவருடைய நூல் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கலாம். இதற்குப் பிறகு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்
.
قال أبو حاتم بن حبان البستي: كان من أصحابنا يقولون: سماع من سمع من ابن لهيعة قبل احتراق كتبه مثل العبادلة: ابن المبارك، وابن وهب، والمقرئ، وعبد الله بن مسلمة القعنبي، فسماعهم صحيح ومن سمع بعد احتراق كتبه فسماعه ليس بشئ.
سير أعلام النبلاء - الذهبي [8 /23]
இப்னு லஹீஆவிடமிருந்து இப்னு வஹப் அல்முக்ரிஉ மற்றும் முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவித்த அறிவிப்புகள் தரமானவை.
இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக், அல்முக்ரிஉ ஆகியோரைப் போன்று. இவ்வாறு அபூ ஹஃப்ஸ் ஃபல்லாஸ் என்பார் தெரிவிக்கின்றார்.  நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 8, பக்கம் : 11)

وكان صالحا، لكنه يدلس عن الضعفاء، ثم احترقت كتبه، وكان أصحابنا يقولون: سماع من سمع منه قبل احتراق كتبه مثل العبادلة: عبدالله بن وهب، وابن المبارك، وعبد الله بن يزيد المقرئ، وعبد الله بن مسلمة القعنبى - فسماعهم صحيح.
ميزان الاعتدال - الذهبي [2 /482]
இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.  நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம் : 4, பக்கம் : 166)


وقال نعيم بن حماد سمعت بن مهدي يقول لا أعتد بشيء سمعته من حديث بن لهيعة إلا سماع بن المبارك ونحوه تهذيب التهذيب - ابن حجر [5 /328]

وقال عبد الغني بن سعيد الأزدي إذا روى العبادلة عن بن لهيعة فهو صحيح بن المبارك وابن وهب والمقري وذكر الساجي وغيره مثله

تهذيب التهذيب - ابن حجر [5 /330]


இப்னு வஹப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 330
அபாதிலாக்கள் என்று கூறப்படும் நபர்கள், அதாவது அப்துல்லாஹ் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் இப்னு லஹீஆவிடமிருந்து அவருடைய மூளை குழம்புவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே அப்துல்லாஹ் பின் முபாரக் அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அறிவித்தவர்கள் என்பதால் இவர்களின் அறிவிப்பை ஏற்கலாம் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஹாமீத் பக்ரீ கூட்டு துஆ ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டும் மேலுள்ள செய்தியை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர் என்பதால் இது சரியான செய்தி என்று பக்ரீ வாதிடுகிறார்
.
இந்த ஹதீஸில் இப்னு லஹீஆவின் விமர்சனத்தைத் தவிர்த்து வேறெந்த குறையும் இல்லாவிட்டால் இவரது இந்த வாதத்தை பரிசீலிக்கலாம். ஆனால் இச்செய்தி பலவீனம் என்பதற்கு வேறொரு குறையும் உள்ளது.
இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூ ஹுபைரா என்பவர் அறிவிக்கின்றார். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வது வருடத்தில் மரணிக்கிறார்கள். அபூ ஹுபைரா ஹிஜ்ரீ 41 வது வருடத்தில் தான் பிறக்கின்றார்.
وولي أرمينية لمعاوية، فمات بها سنة اثنتين وأربعين
سير أعلام النبلاء - الذهبي [3 /189]
ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ நாற்பத்து இரண்டாவது வருடத்தில் மரணித்தார்கள்.  நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 3, பக்கம் : 189)
قال المزي في تهذيب الكمال  :

عبد الله بن هبيرة بن أسعد بن كهلان السبئى الحضرمى ، أبو هبيرة المصرى . اهـ
' . قال سعيد بن كثير بن عفير : ولد سنة الجماعة . و قال أبو سعيد بن يونس : قرأت فى بعض الكتب القديمة : أنه مات سنة ست و عشرين و مئة .
அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார்.  நூல்: தஹ்தீபுல் கமால்

ஆக ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூ ஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது உறுதியாகின்றது
.
இந்த அடிப்படையில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமாகிறது. இதை ஹாமித் பக்ரி விளங்கியிருந்தால் இதை ஆதாரமாகக் கொண்டு கூட்டு துஆ என்ற பித்அத்தைச் செய்திருக்க மாட்டார்.

ஆதாரம்: 2 

(حديث مرفوع) حَدَّثَنَا أَحْمَدُ , قَالَ : نا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ , قَالَ : نا الْفَضْلُ بْنُ الْعَلاءِ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ رَجُلا جَاءَ زَيْدَ بْنَ ثَابِتٍ ، فَسَأَلَهُ عَنْ شَيْءٍ ، فَقَالَ لَهُ زَيْدٌ : عَلَيْكَ بِأَبِي هُرَيْرَةَ , فَإِنِّي بَيْنَمَا أَنَا وَأَبُو هُرَيْرَةَ وَفُلانٌ ذات يوم في المسجد ندعو ونذكر ربنا عز وجل ، إذ خرج علينا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ إِلَيْنَا ، فَسَكَتْنَا ، فَقَالَ : " عُودُوا لِلَّذِي كُنْتُمْ فِيهِ " ، قَالَ زَيْدٌ : فَدَعَوْتُ أَنَا وَصَاحِبِي قَبْلَ أَبِي هُرَيْرَةَ ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَمِّنُ عَلَى دُعَائِنَا ، ثُمَّ دَعَا أَبُو هُرَيْرَةَ ، فَقَالَ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِثْلَ مَا سَأَلَكَ صَاحِبَايَ ، وَأَسْأَلُكَ عِلْمًا لا يُنْسَى ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " آمِينَ " فَقُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ، نَحْنُ نَسْأَلُ اللَّهَ عِلْمًا لا يُنْسَى ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " سَبَقَكُمَا بِهَا الْغُلامُ الدَّوْسِيُّ "
، لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ إِسْمَاعِيلَ إِلا الْفَضْلُ ، وَلا يُرْوَى عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ إِلا بِهَذَا الإِسْنَادِ .
   رقم الحديث1251  : الكتب » المعجم الأوسط للطبراني
கைஸ் அல்மதனீ கூறுகிறார்:
ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:
நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.
உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்' என்றார்கள்.  நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

கூட்டு துஆ ஓதலாம் என்று கூறக் கூடியவர்கள் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்
.
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலான அல்இசாபா ஃபீ தம்யீசிஸ் சஹாபா எனும் நூலில் இச்செய்தி சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இப்னு ஹஜர் அவர்களின் இக்கூற்றையும் மேற்கண்ட செய்தியைச் சரிகாணுபவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
தங்களுடைய பித்அத்திற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்று தேடித் திரிந்தவர்களின் கண்ணில் இச்செய்தி பட்ட மாத்திரத்தில் முழுமையான ஆய்வு செய்யாமல் அரைகுறை ஞானத்தோடு இதை ஆதாரமாகக் கருதி மக்களுக்கு மத்தியில் இச்செய்தியைப் பரப்பியும் வருகின்றனர்.
உண்மையை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செய்தியைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் இச்செய்தி பலவீனமானது என்ற முடிவுக்கே வருவார்கள்.
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கைஸ் அல்மதனீ இடம்பெறும் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரை தவறுதலாக சரி என்று கூறி விட்டார்கள். இவருடைய தவறைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டு துஆவை நியாயப்படுத்துகிறார்கள்.
ஆனால் இந்தச் செய்தியை அறிவிக்கும் கைஸ் அல்மதனீ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களே தனது நூலான தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கைஸ் அல்மதனீ என்பவர் யாரென அறியப்படாதவர்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1பக்கம் : 458

கைஸ் அல்மதனீ என்பவர் நம்பகமானவர் என்பது உறுதி செய்யப்படவில்லை. இவர் முகவரியற்றவர் என்பதால் இவர் பலவீனமானவர். இப்படிப்பட்டவர் அறிவித்த செய்தியை கூட்டு துஆ ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக எடுக்க முடியும்
?
இவர் நம்பகமானவர் என்று ஒரு அறிஞர் கூட சான்று அளிக்கவில்லை.
இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைத் தனது நூலில் குறிப்பிட்டு இதில் இடம்பெறும் கைஸ் அல்மதனீ நம்பகமானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்தச் செய்தியை தப்ரானீ பதிவு செய்துள்ளார். இதில் கைஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவரிடமிருந்து இவருடைய மகனைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதில் உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாவர். நூல்: மஜ்மஉ ஸவாயித், பாகம் : 9, பக்கம் : 347

இவரைத் தவிர உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று ஹைஸமீ சான்றளிக்கிறார். எனவே இவர் நம்பகமானவர் இல்லை என்பது இதிலிருந்து புரிகின்றது
.
திர்மிதீ நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் முபாரக் ஃபூரி அவர்களும் இப்னு மாஜா நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் நூருத்தீன் சனதீ அவர்களும் இமாம் அல்பானீ அவர்களும் மற்றும் தற்கால சில அறிஞர்களும் கைஸ் அல்மதனீ பலவீனமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்
.
எனவே ஹதீஸ் கலை அடிப்படையில் இவர் இடம்பெற்றுள்ள செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி பலவீனமானது என்பது நிரூபணமாகின்றது.
இந்தப் பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டால் அந்தச் செயல் ஒருக்காலும் இறைவனால் அங்கீகரிக்கப்படாது. அது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பித்அத் என்ற அனாச்சாரம் என்பதைக் கொள்கை வாதிகள் மறந்து விடக்கூடாது.
சரியான கொள்கையை விட்டு தடம் புரண்டு அசத்தியக் கொள்கைக்குச் செல்வதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக

கூட்டு துஆ நபிவழியா ? அதை செய்வது கூடுமா ? https://www.youtube.com/watch?v=y9jfNBPnZUE கூட்டு துஆ (துவா ) உண்டா ? https://www.youtube.com/watch?v=4T55c0h87TM மூஸா நபியின் துஆ விட்கு ஹாரூன் (அலை) ஆமீன் சொன்னார்களா ? https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua_67.html பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ https://shirkinethiri.blogspot.com/2020/02/parlutholuhai-koottudua.html கூட்டு துஆ ஓதலாமா? கூட்டு துஆ என்றால் என்ன? https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua.html கூட்டு துஆ (துவா ) உண்டா ? https://www.youtube.com/watch?v=4T55c0h87TM ஐங்கால தொழுகைக்குப்பின் கூட்டு துவா உண்டா ? ( இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மேலூர் ) https://www.youtube.com/watch?v=vsyfZ5OO6bs எனக்காக துஆ செய்யுங்கள் என்று பிறரிடம் கேட்கலாமா? https://www.youtube.com/watch?v=Gw-KvRyGcnQ கூட்டு துஆவுக்கு முன்வைக்கப்படும் ஆதாரம் https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua_26.html கூட்டு துஆ ஹாமித் பக்ரியின் ஆதாரம் https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua_14.html



கூட்டு துஆ ஓதலாமா? கூட்டு துஆ என்றால் என்ன?

ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ எனக் கூறப்படுகிறது. சுருக்கமாக சொல்லப் போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம்  துஆ  கேட்பதே '' கூட்டு துஆ.''


சிலர் கூட்டு துஆவிர்க்கும் குனூத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருப்பார்கள். குனூத் என்பது தொழுகையிலேயே சப்தமிட்டு கேட்கப் படும் துஆ, ஆனால் கூட்டு துஆ என்பது தொழுகைக்கு பிறகு கேட்கப் படும் துஆ.
நாம் கூட்டு துஆ பற்றி மட்டுமே இங்கே விளக்குகிறோம்.

கூட்டு துஆ , ஜனாஸா நல் அடக்கத்தின் போதும், ஹஜ் பயனம் செல்லும் போதும், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பெருநாள் தொழுகைகளின் பின்பும் குறிப்பாக சமூக, சமய விவகாரங்கள் போன்ற நேரத்திலும் கூட்டாக துஆ கேட்கப்படுகிறது.  இந்த ஒரு செயல் முழுக்க முழுக்க வணக்கம் சம்பந்தப் பட்ட விஷயம்.   வணக்கம் சம்பந்தமாக நாம் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டி தந்திருக்க வேண்டும்.
நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி ) நூல்: முஸ்லிம் (3541)

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்ட லில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு(பித்அத்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி ) நூல்: முஸ்லிம் (1573)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன் 33:36)
கூட்டு துஆவுக்கு ஆதாரம் உள்ளதா ?
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களா’ என்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுல் வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள்,விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரழி), நூல்:புகாரி ஹதீஸ் எண் 1014

மேற்கண்ட வசனத்தில் மழை வேண்டி தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கிறார். ஆகவே இந்த நபிமொழி மழை வேண்டி துஆ கேட்பதற்கு மட்டும்தான் பொருந்தும்.ஆனால் சஹாபாக்கள் இந்த துஆவுக்கு ஆமீன் சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது கூட்டு துஆவுக்கு ஆதாரம் ஆகாது.

ஒரு கூட்டம் ஒன்று சேரந்து சிலர் பிரார்த்திக்க ஏனையவர்கள் ஆமீன் சொன்னால் அதை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்’ என தபரானி,இப்னு அஸாகிர், ஹாகிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது.ஆனால் இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்  

சூரா யூனூஸ் 89ம் வசனத்தில் அல்லாஹ் மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இருவரையும் பார்த்து‘உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது’ எனக் கூறுகின்றான். ஆனால் அதற்கு முந்திய வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் மாத்திரம்தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். எனவே, மேற்படி சந்தர்ப்த்தில் மூஸா (அலை) அவர்கள் பிரார்த்திக்க – துஆ ஓத ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் சொன்னார்கள் எனக் இமாம் பைஹகீ அவர்களின் சுஅபுல் ஈமான் எனும் நூலில் இடம்பெறும் அனஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் இன்னொரு ஆதாரம்.
எனினும் மேற்படி செய்தியை அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து அறிவிக்கும் ஸர்பீ பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர். அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து ஆதாரமற்ற செய்திகளை அறிவிப்பவர் என அறிவிப்பாளர் பற்றி ஆய்வு செய்த அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
கூட்டு துஆ விட்கு எதிரான ஆதாரங்கள்
அல்லாஹ் தன் திருமறையில் , துஆ எப்படி கேட்க வேண்டும் என்று நமக்கு தெளிவாக கற்றுத் தருகிறான்.
உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்ற வராக  ஆகி விடாதீர்! (அல்குர் ஆன் 7:205)

அவர் (ஜக்கரியா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)

”நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு‘ என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.) ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : புகாரி (6338) முஸ்லிம் (4837)
உங்களில் எவரேனும் பிரார்த்தித்தால் ‘நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!‘என்று கேட்க வேண்டாம். (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். மகத்துவம் மிக்கதைக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ் வழங்கிய எந்த ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4838)

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்” (அல்குர் ஆன் 7:55)

சப்தமிட்டு ஒருவர் துஆ கேட்டு அதற்க்கு சப்தமாக ஆமீன் கூறுதல் நிச்சயமாக ரகசியமானதாக இருக்க முடியாது.இந்த சமயத்தில் நாம் இன்னொன்றையும் சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்.

கூட்டு துஆ தமிழ் மக்களிடையே 99% அரபு மொழியிலேயே கேட்கப் பட்டு வருகிறது.அதில் 99% பேருக்கு அரபி தெரியாது.நாம் எந்த துஆவிற்க்கு ஆமீன் கூருகிறோமோ அதற்க்கு நமக்கே அர்த்தம் தெரிய வில்லை என்றால், எதற்காக நாம் துஆ கேட்க வேண்டும்? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இன்னொரு அவலத்தையும் கேளுங்கள் , யார் அந்த துஆவை சப்தமிட்டு அரபு மொழியில் மொழிகிராரோ அவருக்கே கூட அவர் என்ன துஆ செய்கிறார் என்று தெரியாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது .இப்படி அர்த்தம் புரியாமல் துஆ கேட்பதிலும் அதற்க்கு ஆமீன் கூறுவதிலும் என்ன பணிவு இருக்க முடியும்.
பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள். அச் சத்தோடும் ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7:56)
அல்லாஹ் நம்மை ஆசையோடு பிரார்த்தனை செய்யக் கட்டளையிடுகிறான். பல பேர் கூடு துஆவில் தூங்கிக் கொண்டு ஆமீன் சொல்வதை கண் கூடாக பார்த்திருக்கிறோம்.ஆகவே அல்லாஹ் குறிப்பிட்ட பணிவும் இதில் இல்லை ரகசியமும் இல்லை ஆசையும் இல்லை .
.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும் ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூ மூஸா அஷ்அரீ(ரலி)  புகாரி 2992, 4205,6384,6409,6610,7386 முஸ்லிம் 4873

இந்த ஹதீஸ் திக்ருகளை பற்றி கூறப பட்டாலும், அல்லாஹ் காது கேட்காதவன் இல்லை, அவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே கூட்டு துஆ என்பது நிச்சயமாக ஒரு வழிகேடு, ஆகவே கூடு துஆவை நாம் புறக்கணிக்க வேண்டும்.
கூட்டு துஆவில் உள்ள பாதிப்பு
கூட்டு துஆவை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்து இருக்கிறார்கள் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தோம். அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாததை செயல்படுத்தும் போதுதான் பல பாதிப்புகள் ஏற்படும்.கூட்டு துவாவில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்னவென்றால் , கூட்டு துஆவில் கலந்து கொள்பவர், தான் தனியாக துஆ கேட்க தேவையில்லை என்று எண்ணுகிறார்.

தன்னுடைய சொந்த தேவைகளை அவரவர் கேட்க முடியாத நிலைமை இங்கே ஏற்படுகிறது.துஆ கேட்பவருக்கு குழந்தை இல்லாமல் இருந்து ஆமீன் கூருபவர் , இனி தனக்கு குழந்தையே வேண்டாம் என்ற நிலையில் இருந்து ,துஆ கேட்பவர் தனக்கு குழந்தை வேண்டி துஆ செய்தால் சரியாக இருக்காது.
 நிச்சயமாக ஒருவருடைய தேவையை மற்றவர் அறிந்திருக்க மாட்டார்.அதுமட்டுமல்லாமல் உங்களுடைய எல்லா தேவைகளையும் என்னிடம் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும் என்னையே நம்பட்டும் அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2:188)
தொழுகையில் தாமதமாக சேர்ந்தவர்கள் கூட்டு துஆவினால் ஒழுங்காக தொழ முடியாத நிலையும் ஏற்படுகிறது.இரேண்டாவது ஜமாத் அமைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. குர்ஆன் வசனங்கள் ஒதப் படும் போது நாம் அதை செவிமடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 7:204)
இப்படி இருக்க இரேண்டாவது ஜமாத்தில் குர்ஆன் வசனங்கள் ஓதப் படும்போது கூட்டு துஆவும் நடந்துக் கொண்டிருப்பதை நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.
மேலும் பர்லு தொழுகைக்கு பின் இமாமை கொண்டே துஆ கேட்டு பழகிவிட்டதால் ஒரு சிலர் தமது சொந்த விஷயங்கள், 3,7,40 ஆம் பாத்திஹா , பெயர் வைப்பு , திருமணம் போன்றவற்றிற்கும் பயணம் செல்லும்போதும் ,   விருந்து ஆரம்பம் முடிவிலும்,மட்டுமல்லாது, நோன்பு, ஹஜ் போன்ற கடமையை செய்ய தொடங்கும்போதும் கூட இமாமே நேரில் வந்து கூட்டு துஆ என்னும் நபி (ஸல்) அவர்கள் காட்டி தராத ஒரு பித் அத்தை செய்து நமக்கு துஆ செய்ய வாய்ப்பளிக்காமல் செய்து விடுகிறார், நீங்கள் நன்குசிந்தித்து பார்த்தால் இந்த வழிகேடுகள் அனைத்திற்கும் ஆரம்பம் எது என்று புரிந்துகொள்வீர்கள்
கூட்டு துஆ (சில )இமாம்களுக்கு வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாகவே இருப்பதால் அதை அவர்கள் விட்டுத்தர மாட்டார்கள் எனவே இந்த பித் அதை தவிர்த்து நேரடியாக உள்ளச்சத்துடன் இறைவனிடம் துஆ செய்து வருவதே நபி (ஸல்) காட்டி தந்த வழிமுறையாகும்.
விழிப்புணர்வு
கூட்டு துஆவிர்க்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கூட்டு துஆவினால் ஏற்படும் விளைவுகளையும் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கூட்டு துஆ ஒரு தெளிவான பித்அத் , நிச்சயமாக இது நம்மை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் ஒரு செயலாக இருக்கிறது என்பதை இந்த தவறான செயலை செய்யக் கூடிய மக்களிடம் எச்சரிக்கை ஊட்ட வேண்டும்

thanks: http://www.tamililquran.in/islam/?p=126