"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஸலவாத்தும் ஸலாமும் ஆதாரமாகுமா?


ஸலவாத்தும் ஸலாமும் ஆதாரமாகுமா?

பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறுமாறு 33:56 வசனத்தில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

அதிகமதிகம் தன் மீது சலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஆர்வமூட்டியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் சலவாத் கூறுவதில் இருந்து அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று தெரிகிறதே என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூற வேண்டும் என்பது உண்மைதான். அது மிகச் சிறந்த வணக்கங்களில் ஒன்று தான். இதில் எந்த மறுப்பும் நமக்கு இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இவ்வுலகுடன் தொடர்பில் உள்ளனர் என்பதற்கும், இங்கே வருகை தருவார்கள் என்பதற்கும், நாம் கோருவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்பதற்கும் இதில் எந்த ஆதாரமும் இல்லை.

சலவாத் என்றால் நபிகள் நாயகத்தை  நோக்கி நாம் பேசுவது என்றும், அவர்களிடம் உதவி தேடுதல் என்றும் தவறாகப் புரிந்து கொண்டதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

சலவாத் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேண்டுவது அல்ல. மாறாக அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்று நாம் அல்லாஹ்விடம் செய்யும் பிரார்த்தனை தான் சலவாத்.


தொழுகைகளில் அத்தஹிய்யாத் எனும் இருப்பில் நாம் சொல்ல வேண்டிய சலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதை எல்லா முஸ்லிம்களும் தமது தொழுகைகளில் கூறி வருகின்றனர்.

அந்த சலவாத்தின் பொருளைப் பாருங்கள்!

இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ எவ்வாறு அருள் புரிந்தாயோ அது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக!

இது தான் இந்த சலவாத்தின் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது தான் சலவாத் என்பதை இந்த அர்த்தமே நமக்குச் சொல்லி விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டவுடன் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் என்று சொல்கிறோம். அல்லது அல்லாஹும்ம சல்லி வசல்லிம் வபாரிக் அலைஹி என்று சொல்கிறோம். இதன் பொருள் என்ன? இறைவா அவருக்கு (முஹம்மது நபிக்கு) அருள் புரிவாயாக என்பதுதான் இதன் பொருள்.

எந்த சலவாத்தை எடுத்துக் கொண்டாலும் அனைத்துமே நபிகள் நாயகத்துக்கு நாம் துஆச் செய்யும் வகையில் தான் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் அதிகம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் வழியாகவே இந்த மார்க்கத்தை அல்லாஹ்  நமக்கு வழங்கினான். எனவே அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும்; மதிக்க வேண்டும் என்பது இயல்பாகும். அன்பு செலுத்துகிறோம்; மதிக்கிறோம் என்ற பெயரில் பிற சமுதாய மக்கள் எல்லை மீறியது போல் நாமும் எல்லை மீறக்கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த வழிமுறை தான் சலவாத்.

என்னை மதிப்பதாக இருந்தால் என்னை அழைக்கக் கூடாது; என்னிடம் பிரார்த்திக்கக் கூடாது; எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆச் செய்ய வேண்டும். அதுதான் சலவாத் என்று கற்றுத் தந்துள்ளார்கள்.

அவர்களுக்கு நாம் சலவாத் சொல்லும் இந்த நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்காமல் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தைத் தரவில்லை. அவர்கள் இவ்வுலகுக்குத் திரும்ப வருவார்கள் என்ற கருத்தையும் தரவில்லை. மரணித்த அவர்களுக்காக நாம் தான் துஆச் செய்ய வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையைத் தான் சலவாத் எனும் வணக்கம் அழுத்தமாகச் சொல்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் சொல்லும் சலவாத் எனும் துஆ அவர்களின் காதில் விழுமா? ஆன்மாக்களின் உலகில் அவர்கள் உயிருடன் இருந்தாலும் நாம் கூறும் சலவாத் அவர்களின் காதுகளில் விழாது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவாக்கி விட்டார்கள்.

سنن النسائي (3/ 91)

1374 – أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ»قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ، وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ؟ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ»

நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்று தான் மரணித்தார்கள். அன்று தான் உலகத்தை அழிக்க சூர் ஊதப்படும். அன்று தான் எழுப்புதல் நிகழும். எனவே அன்றைய தினம் எனக்காக அதிகம் சலவாத் கூறுங்கள். நீங்கள் கூறும் சலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்கிப் போன நிலையில் எங்கள் சலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும் என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் உடல்களை மண் சாப்பிடுவதை அல்லாஹ் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)

நூல்கள் : நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத் 

எனக்காக நீங்கள் செய்யும் சலவாத் எனும் துஆவை நான் செவிமடுக்கிறேன் என்று கூறாமல் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நாம் கூறும் சலவாத்தை அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

சலவாத் என்பது அல்லாஹ்வை அழைத்து பிரார்த்திப்பது என்பதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியுறும் அவசியம் எதுவும் இல்லை. எனவே இனின்னார் சலவாத் சலவாத் கூறினார்கள் என்ற தகவல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

(மேற்கண்ட ஹதீஸில் நபிமார்களின் உடல்களை மண் திண்ணாது என்று சொல்லப்படுகிறது. மண் திண்ணாமல் உள்ளதால் அவர்கள் செவியுறுவார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒரு நல்லடியாரின் உடல் நூறு ஆண்டுகள் பூமியின் மேற்பரப்பில் மண் திண்ணாத வகையில் கிடந்தது. ஆனாலும் அவரால் எதையும் அறிய இயலவில்லை. உடலை மண் திண்ணாது என்பதால் இவ்வுலகில் நடப்பதை அறிவார்கள் என்று அர்த்தம் இல்லை. இதை இறந்த பின் எதையும் அறியாத நல்லடியார் என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.)

ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் மண் சாப்பிடாது என்று சொல்லத் தேவை இல்லை. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாது.

அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு, "நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது'' என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

ஸலாம் குறித்து  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் இதை உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சலவாத் சொல்வது போல் ஸலாமும் சொல்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் இருப்பில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு – நபியே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் – என்று கூறுகிறோம். இது அவர்களை அழைத்துப் பேசுவது போல் அமைந்துள்ளது. இதைக் கூட அவர்கள் செவியுற மாட்டார்கள்.

பின் வரும் நபிமொழியில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

سنن النسائي (3/ 43)

1282 – أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، ح وأَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ»

இப்பூமியில் சுற்றிக் கொண்டிருக்கும் வானவர்களை அல்லாஹ் நியமித்துள்ளான். அவர்கள் என் சமுதாயத்தினரின் ஸலாமை எனக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்கள் : நஸாயீ, அஹ்மத், தாரிமி, ஹாகிம், இப்னு ஹிப்பான், தப்ரானி, அபூயஃலா, பஸ்ஸார் 

நபிகள் நாயகத்துக்குச் சொல்லப்படும் ஸலாமை ஆன்மாக்களின் உலகில் உயிருடன் இருக்கும் நபிகள் நாயகத்துக்கு எடுத்துச் சொல்லும் ஒரே பணிக்காக அல்லாஹ் சில வானவர்களை நியமித்துள்ளான். நாம் கூறும் ஸலாமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவிமடுப்பார்கள் என்றால் அதை எடுத்துச் சொல்லும் அவசியம் இல்லை. ஸலாமை எடுத்துச் சொல்வதற்காக வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்திருப்பதிலிருந்து நாம் கூறும் ஸலாமை அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது.

அவர்களை அடக்கம் செய்துள்ள இடத்தின் அருகில் நின்று அழைத்தாலும் அவர்கள் அதைச் செவியுற மாட்டார்கள்.

இறந்தவர்கள் இவ்வுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தில் நாம் முன்னர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இது ஒத்துப் போகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் கூறும் ஸலாம், வானவர்கள் எத்திவைப்பதால் தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது. மற்றவர்களை நாம் ஜியாரத் செய்யும் போது ஸலாம் கூறுகிறோம். அந்த ஸலாம் அவர்களுக்கு கேட்காது என்பதும் இதிலிருந்து உறுதியாகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் கூறும் ஸலாமை எடுத்துச் சொல்ல வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போல் மற்றவர்களுக்கு இவ்வாறு நியமிக்கப் படாததால் அவர்கள் அதை அறிந்து கொள்ள மாட்டார்கள்.

மேலும் ஸலாமை எத்தி வைப்பதற்குத் தான் வானவர்களை அல்லாஹ் நியமித்துள்ளான். அது தவிர வேறு எந்த விஷயத்துக்காக நாம் நபியை அழைக்கவும் கூடாது. அழைத்தாலும் அதைச் செவியுறவும் மாட்டார்கள். இதற்காக வானவர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் அவர்கள் அறியவும் மாட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்க்கியுள்ளது.

இதற்கு இன்னும் வலுவான ஆதாரமும் உள்ளது.

அத்தஹிய்யாத்தில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று நபிக்கு நாம் ஸலாம் சொல்கிறோம். இப்போது நாம் கூறுவது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நபித்தோழர்கள் தமது தொழுகைகளில் ஸலாம் கூறினார்கள். ஒரு நேரத்தில் ஏராளமான நபித்தோழர்கள் சுன்னத்தான, உபரியான தொழுகைகளைத் தொழுவார்கள். மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது போல் மேலும் பல பள்ளிவாசல்களில் கடமையான தொழுகைகளையும் அவர்கள் தொழுவார்கள்.

தொழுகையில் கூறும் ஸலாம் நபியவர்களுக்குக் கேட்கும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) வ அலைக்கு முஸ்ஸலாம் என்று ஒவ்வொரு வினாடி நேரமும் பதில் சொல்லிக் கொண்டே இருந்திருப்பார்கள். ஏனெனில் ஸலாம் கூறப்பட்டு அது செவியில் விழுந்தால் அதற்குப் பதில் அளிப்பது அவசியமாகும்.

அப்படி அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கவில்லை என்பதால் நபித்தோழர்கள் கூறிய ஸலாமை அவர்கள் உயிருடன் இருக்கும் போது செவியுறவில்லை என்று தெரிகிறது.

நேருக்கு நேராக வந்து யார் ஸலாம் கூறினார்களோ அதை மட்டும் கேட்டு பதிலளித்தார்கள். நேருக்கு நேர் வராமல்  தொழுகையில் ஏராளமான நபித்தோழர்கள் ஸலாம் கூறினார்கள். அவற்றில் ஒரு ஸலாமுக்குக் கூட நபியவர்கள் பதிலளிக்கவில்லை.

உயிருடன் வாழும் போதே யார் அருகில் வந்து நேருக்கு நேராகப் பார்த்து ஸலாம் கூறினார்களோ அதை மட்டும் தான் கேட்டார்கள். அதற்கு மட்டும் தான் பதில் சொன்னார்கள் என்றால் மரணித்த பின்னர் எப்படி அனைவரின் ஸலாமையும் செவியுற முடியும்?

எனவே இறந்தவரை ஜியாரத் செய்யச் செல்லும் போது நாம் ஸலாம் கூறுவது அவர்களுக்குக் கேட்கும் என்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும் என்று துஆ செய்வதற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று நேரடியாக அழைப்பது போல் அமைந்துள்ள ஸலாம் உயிருள்ளவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் அதைச் செவியுற்று பதில் அளிப்பார்கள் என்பதற்காகச் சொல்லப்படுகிறது. மரணித்தவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் நாம் கூறும் ஸலாம் நபிகள் நாயகத்துக்கு வானவர்கள் மூலம் எடுத்துச் சொல்லப்படுகிறது.

குழந்தையைக் கொஞ்சும் போது கண்ணே மணியே என்று கூறுகிறோம். அந்தக் குழந்தையை அழைத்துப் பேசும் வடிவில் இருந்தாலும் அதன் பொருள் அழைப்பதல்ல. ஏனெனில் அந்தக் குழந்தைக்கு இதன் அர்த்தம் விளங்காது. நமது அன்பை வெளிப்படுத்துதல் மட்டுமே இதன் நோக்கமாகும்.

நிலா நிலா ஓடிவா என்றும், அணிலே அணிலே என்றும் நாம் படிப்பது குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதற்குத் தான். அணிலையும், நிலாவையும் அழைத்துப் பேசுவதற்கு அல்ல. ஏனெனில் இவை பேசாது; நம் பேச்சைக் கேட்காது.

நமது பேச்சைக் கேட்டு புரிந்து கொள்ளக் கூடியவர்களை நோக்கிப் பேசினால் அதற்கு நேரடி அர்த்தம் தான் கொடுக்க வேண்டும். கணவன் மரணித்துக் கிடக்கும் போது என்னை விட்டு போய் விட்டீர்களே என்று மனைவி புலம்பினால் அவரிடமே பேசுவது என்பது அர்த்தம் அல்ல. என்னை விட்டுப் போய்விட்டார் என்பதைத் தான் என்னை விட்டுப் போய்விட்டாய் என்று முன்னிலையாகப் பேசுகிறார்.

எனவே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று முன்னிலையாகப் பேசுவதால் அவர்கள் ஸலாமைச் செவியுறுகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆகாது.

அடுத்து பினவரும் ஹதீஸையும் தீய கொள்கையுடையவர்கள் தமது ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

سنن أبي داود (1/ 622)

 2041 – حدثنا محمد بن عوف ثنا المقري ثنا حيوة عن أبي صخر حميد بن زياد عن يزيد بن عبد الله بن قسيط عن أبي هريرة  : أن رسول الله صلى الله عليه و سلم قال " ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام " .

எனக்கு எந்த அடியான் ஸலாம் கூறினாலும் அவருக்கு நான் பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனது உயிரை எனக்குத் திருப்பித் தராமல் இருக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத் 

இன்னும் பல நூல்களிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமானது பல அறிஞர்கள் கூறியிருந்தாலும் இதன் கருத்தில் தெளிவு இல்லை. தனக்குத்தானே இது முரண்படுகிறது. எண்ணற்ற ஆதாரங்களுடன் இது மோதுகிறது. திருக்குர்ஆனுக்கும் முரணாக அமைந்துள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இதில் உள்ள குழப்பங்களை விரிவாகப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மரணித்த அனைவரும் ஆன்மாக்களின் உலகில் எப்போதும் உயிருடன் தான் உள்ளனர். எப்போதும் உயிரற்ற நிலையில் உள்ளதாகவும் ஸலாம் கூறும் போது மட்டும் உயிர் கொடுக்கப்படுவதாகவும் சொல்வது இதற்கு முரணாகும்.

ஆன்மாக்களின் உலகில் உள்ள உயிரை இது குறிக்கவில்லை. மரணிப்பதற்கு முன் உயிருடன் வாழ்ந்தார்களே அது போன்ற உயிர் கொடுப்பது பற்றி இந்த ஹதீஸ் கூறுகிறது என்று கூறுவார்களானால் அதுவும் தவறாகும்.

அப்படி இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது ஸலாத்துக்குப் பதில் கூறுவது நம் செவிகளில் விழ வேண்டும். அப்படி விழுவதில்லை என்பதால் இந்த வகை உயிரைக் குறிக்கவில்லை என்று ஆகிறது.

உலகில் உள்ள முஸ்லிம்கள் தொழுகையில் கூறும் சலவாத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு வினாடியிலும் பல்லாயிரக்கணக்கான ஸலாம் சொல்லப்படுகிறது. அப்படியானால் பதில் சொல்வதற்காக உயிரைத் திரும்பக் கொடுக்கும் பேச்சுக்கு இடமில்லை. ஒரு வினாடி கூட உயிர் பிரிந்திருக்காது எனும் போது ஸலாம் சொல்லும் போது மட்டும் பதில் சொல்வதற்காக உயிர் மீண்டும் வழங்கப்படுகிறது என்பது பொருளற்றதாகி விடுகிறது.

இது உண்மை என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு மைக்ரோ செகண்டிலும் நபியவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். எப்போது பார்த்தாலும் வ அலைகு முஸ்ஸலாம் என்று அவர்கள் சொல்வதை நிறுத்த முடியாது. அபடியானால் இது கப்ர் வணங்கிகளுக்கு எதிரான ஆதாரமாகவே அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது கோரிக்கைகளைச் செவிமடுப்பார்கள் என்றும், அவர்களைப் புகழும் சபைகளுக்கு வருகை தருவார்கள் என்ற வாதம் இப்போது அடிபட்டுப் போகிறது. 24 மணி நேரமும் வ அலைக்கு முஸ்ஸலாம் என்று சொல்வதிலேயே நபியின் முழு நேரமும் முடிந்து போய்விடும்.

ஒரு வினாடியில் பல்லாயிரம் பேர் ஸலாம் கூறினால் அதை மனிதரால் கேட்க முடியாது. இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தன்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுகில் உயிருடன் வாழும் போது நபித்தோழர்கள் தொழுகையில் ஸலாம் கூறியதை அவர்கள் செவியுறவும் இல்லை. அதற்குப் பதில் ஸலாமும் கூறியதில்லை. இதை முன்னர் விளக்கியுள்ளோம். உயிரைத் திருப்பிக் கொடுத்தாலும் ஒரு நேரத்தில் பல்லாயிரம் ஓசைகளைக் கேட்டு பிரித்தரிவது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதால் அதற்கு முரணாக இது அமைந்துள்ளது.

ஒரு ஹதீஸை ஆதாரமாகக்  காட்டுவோர் அதில் அடங்கியுள்ள எல்லா கருத்துக்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக் கொள்ள முடியாத வகையிலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எண்ணற்ற ஆதாரங்களுக்கும் எதிரான வகையிலும் உள்ளதால் இது ஹதீஸ் அல்ல. இது கட்டுக்கதை தான்.

இவ்வுலகில் வாழும் போது தனக்கு அறிமுகமாக இருந்தவரின் அடக்கத்தலத்தை ஒரு அடியான் கடந்து செல்லும் போது ஸலாம் கூறினால் இறந்தவர் இவரை அறிந்து கொள்வதுடன் அவரது ஸலாமுக்குப் பதிலும் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.

தாரீக் அல்கதீப், அல்ஃபவாயித், இப்னு அஸாகிர், தைலமீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் சைத் பின் அஸ்லம் என்பார் பலவீனமானவர். இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது ஆதாரமாக ஆகாது.

இது போல் இப்னு அபித்துன்யா என்பார் தனது நூலில் ஒரு ஹதீஸைப் பதிவு செய்துள்ளார். சைத் பின் அஸ்லம் என்பார் அபூ ஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சைத் பின் அஸ்லம் அபூ ஹுரைராவைச் சந்தித்ததில்லை என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜவ்ஹரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

மேலும் இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு முரணாக உள்ளதால் இது கட்டுக்கதைகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதாகும்.



வழிகெட்ட ஸூபி வஹ்தத்துல் வுஜூத்

 ஸூபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள் :


1- குரு வணக்கம் புரிதலும் குருவை அல்லாஹ்வை விட மேம்படுத்தி ஷிர்க் வைத்தலும் .
------------------------------------------


வழிகேடு 1 : 
கஸ்ஸாலி , அபூ தாலிப் மக்கி போன்றோர் கூறுவது .. ஒரு முறை அபூ துராப் எனும் ஸூபி தனது சீடர்களில் ஒருவரைக் கண்டார் .அவர் சதா நேரமும் இறை நினைவில் ஸ்தம்பித்துப் போயிருப்பதைக் கண்ணுற்று ஆச்சரியப்பட்டு அவரிடம் சென்று பேசினார் . பின்னர் அவரிடம் ‘இப்படியே இருக்காமல் பிரபல சூபியான அபூ யஸீதையும் போய்ச் சந்தித்து வரலாமே’ .. எனக் கூற சீடர் சற்று ஆத்திரப்பட்டு ‘என்ன ஷேக் சொல்லுகிறீர்கள்? நான் இங்கிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் , அப்படியிருக்க நான் எதற்காக அவரிடம் செல்ல வேண்டும்’ என்றார் . அதற்கு அந்த ஷேக் ஆத்திரப்பட்ட வராக நீ நாசமாய்ப் போக .. அல்லாஹ்வைக் கண்டவுடன் அனைவரையும் மறந்துவிட்டாயா ? மகான் அபூ யஸீத் அவர்களை ஒரு தடவை நீ சந்தித்தால் அல்லாஹ்வை எழுவது தடவைகள் சந்திப்பதை விட அது உனக்கு மிகச் சிறந்தது என்றார் . இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அச்சீடர் அது எப்படியென வினவ நீ உன்னிடத்தில் அல்லாஹ்வைக் காணும் போது உனது நிலைக்கேற்ற அளவிலேயே உன்னிடம் வெளிப்படுகின்றான் . ஆனால் அவரைக் காணும் போது அவரிடத்தில் அவரது நிலைக்கேற்ப முழுமையாகத் தோன்றுகின்றான் என்றார் . ( இஹ்யா 34 -305)

இந்த வழிகேட்டை என்னவென்று விபரிப்பது ? நபி மூஸா அவர்கள் அல்லாஹ்வைக் காண வேண்டுமென அவனிடம் கேட்ட போது ‘நிச்சயமாக உன்னால் என்னைக் காண முடியாது ‘ என் று கூறினான் (அல்குர்ஆன்) நபியவர்கள் தனது ஸஹாபாக்களுக்கு ‘ அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் மரணிக்கும் வரை உங்களால் அல்லாஹ்வைக் காண முடியாது என்று கூறினார்கள் . (இப்னு மாஜா 4067 )

இப்படியிருக்க சூபிகள் எப்படி அதுவும் சதா நேரமும் அல்லாஹ்வைக் காண்பது ? சைத்தான்தான் இவர்களின் கண்களில் தோன்றுகின்றான் என்பதில் சந்தேகமில்லை . இது ஒரு புறமிருக்க அபூ யஸீத் எனும் ஸூபியைக் காண்பது அல்லாஹ்வை எழுபது தடவைகள் காண்பதை விடச் சிறந்ததென்றால் இவர்கள் எந்தளவுக்கு வழிகெட்டுப் போயுள்ளனர் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் .

வழிகேடு :2 கஸ்ஸாலியும் அபூதாலிப் மக்கியும் கூறும் மற்றுமொரு பிதற்றல்.
------------------------------------------------------
ஒரு முறை பஸரா நகரத்துக்குள் எதிரிப் படைகள் புகுந்து அட்டகாசம் செய்த போது மக்கள் ‘ஸஹ்ல் எனும் சூபியொருவரிடம் சென்று தம்மைக் காக்குமாறு முறையிட்டனர். நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் அவன் உடனே அதை அங்கீகரிப்பான் எனக் கூறினர் .அதற்கவர் மௌனமாயிருந்து விட்டு இவ்வூரில் சில நல்லடியார்கள் இருக்கின்றார்கள் .அவர்கள் உலகிலுள்ள அனைத்து அநியாயக்காரர்களையும் அழிக்க வேண்டுமனப் பிரார்த்தித்தாலும் அதே இரவிலேயே அனைவரும் அழிக்கப்பட்டு விடுவார்கள் . அவர்கள் ‘ மறுமை நாள் இடம் பெறக் கூடாதென்று கேட்டாலும் அல்லாஹ் மறுமை நாளை ஒரு போதும் ஏற்படுத்த மாட்டான் என்றார் . (இஹ்யா 4- 305 கூத்துல் குலூப் 2 – 71 )

அல்லாஹ்வையே மிஞ்சி விட்ட வல்லமை பெற்றதாக வாதிடும் இவர்கள் இறை நேசர்களா? ஷைத்தானின்பங்காளிகளா ? மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் .

வழிகேடு 3 :ஷிர்க் – இணை வைப்பை இபாதத் என்று கூறும் ஸூபித்துவம்.
-------------------------------------------------
அப்துல் கனி அந்நாபிலிஸி எனும் சூபிப் பெரியார் ?? ஷிர்க் சம்பந்தமாக எப்பபடி விளக்குகின்றார் பாருங்கள்! ..
--------------------------------------------------
‘ஷிர்க் என்பது இரு வகைப்படும் தெளிவான ஷிர்க், மறைவான ஷிர்க். தெளிவான ஷிர்க் என்பது அல்லாஹ்வுடன் வேறொருவர் இருப்பதாக எண்ணுவதாகும் . அல்லாஹ் பார்ப்பவன் கேட்பவன் . மனிதனும் பார்ப்பவன் கேட்பவன். எனவே ஒருவன் அல்லாஹ்வும் மனிதனும் வேறு வேறு என்று நினைத்தால் அவன் பார்த்தல், கேட்டல் போன்ற பண்புகளில் அல்லாஹ்வுக்கு இணையான இன்னொன்றை ஆக்கிவிட்டார். . ( றிஸாலத்து அர்ஸலான் 75 ,76 )
இது தான் சூபித்துவ சிந்தனையின் அச்சாணி, எல்லாம் ஒன்றே என்பதே சூபித்துவவாதிகளின் தௌஹீத் முழக்கமாகும் . மூளையுள்ளவர்கள் – பாமரர்களாயினும் இது சுத்தப் பிதற்றல் போதையில் ஏற்படும் உளரல்கள் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும் . தம் மூளையினை சூபிகளுக்கு காணிக்கையாகச் செலுத்தி காலில் விழுந்து சாஷ்ட்டாங்கம் செய்தவர்கள் பல்லறிவு மேதைகளாயினும் இது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை .(அல்லாஹ் வழி கெட விரும்பியவர்களுக்கு நேர்வழிகாட்ட யாரால் முடியும் ??)

2-பாலியல் அராஜகம் , காம லீலைகள் புரியும் ஸூபிகள் .

அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி எனும் சூபித்துவப் பித்தன் தனது தபகாதுஸ்ஷஃரானீ எனும்நூலில் எழுதியிருப்பதாவது …
‘எனது தலைவர் குருநாதர் அலீ வஹீஸ் என்பவர்கள் மிகப் பெரும் சூபி மகானாவார்கள். அவர்களுக்கு மிகப் பெரும் கராமத்துகள் நடந்துள்ளன . அவருக்கு ஒரு கடையிருந்தது. அக்கடை மக்கள் எவரும் அருகே நெருங்க முடியாதபடி துர்வாடை வீசிக் கொண்டிருந்தது . காரணம் தெருவில் கிடக்கும் செத்த நாய், ஆடு போன்றவற்றையெல்லாம் இழுத்துக் கொண்டு வந்து இவர் தனது கடைக்குள் போட்டு விடுவார் . எவருமே அவரை நெருங்க முடியாதவாறு அவரிடமும் துர்நாற்றம் வீசும். ஒரு முறை அவர் மஸ்ஜிதுக்குச் செல்ல விரும்பினார் . செல்லும் வழியில் நாய்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்ட நீர்ப்பாத்திரத்தைக் கண்டு அதிலேயே ஒழுச் செய்தார் . பின்னர் கிழட்டுக் கழுதையொன்றுடன் பாலியல் புணர்ச்சி செய்தார் .

‘மேற்படி மகானவர்கள் பெண்களையோ விடலைச் சிறுவர்களையோ கண்டால் அவர்களது பின்புறத்திலே கையால் தடவி கூச்சங்காட்டி தனது காமப் பசியைச் தீர்க்க வருமாறு அழைப்பார் . அவர்கள் அவ்வூர்த் தலைவர், அமைச்சருடைய மனைவியாகிலும் சரியே . அப்பெண்ணின் தந்தையின் முன்னிலையிலேயும் இப்படிச் செய்யத் தவற மாட்டார் . மற்ற மக்கள் பார்ப்பார்களே என்பதைக் கண்டு கொள்ளவே மாட்டார் .

‘மேற்படி ஷேக் ஊர்த் தலைவரையோ முக்கிய பிரமுகர்களையா கண்டால் அவர்களைக் கழுதையிலிருந்து இறக்கி ‘ நீ கடிவாளத்தைப் பிடித்துக் கொள்’; என்று கூறிக் கழுதையுடன் பாலியல் லீலையில் ஈடுபடுவார் . அவர்கள் இவரது ஆசைக்கு இணங்க மறுத்தால் அதே இடத்திலேயே சபித்து தரையுடன் சேர்த்து ஆணியறைந்து விடுவார் .அதன் பின் அவர்களால் அவ்விடத்தை விட்டும் நகரவும் முடியாது . ( ஹகீக்கதுஸ் ஸூபிய்யா ப 439)

3- இபாதத்களைக் கொச்சைப் படுத்தும் ஸூபிகள் .

புஸ்தாம் நகரில் மக்கள் மத்தியில் நன் மதிப்புப் பெற்ற ஒரு வணக்கவாளி இருந்தார். இவர் அபூ யஸீத் அல் புஸ்தாமியின் மஜ்லிஸில் தவறாமல் கலந்து கொள்பவராக இருந்தார் . ஒரு நாள் இவர் அபூ யஸீதிடம் ஷேக் அவர்களே .. நான் முப்பது வருடங்களாகத் தினமும் விடாமல் நோன்பு நோற்று வருகின்றேன் . இரவு முழுக்க தூங்காமல் நின்று இறை வணக்கம் செய்கின்றேன் . அப்படியிருந்தும் உங்களிடமுள்ள மெஞ்ஞான அறிவு எனக்குக் கிடைக்கவில்லையே! என்று ஆதங்கப்பட்டார் அதற்கு அபூ யஸீத் ‘ நீ முன்னூறு வருடங்கள் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கினாலும் இந்த மெஞ்ஞானம் உனக்குக் கிடைக்காது என்று கூற அவர் ஏன் ? என வின வினார் .

அதற்கவர் உன்னைச் சுற்றி சுயநலம் எனும் திரை இருக்கின்றது (அதாவது வணக்க வழிபாடுகளை உனக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்ற தன்னலம் கருதும் எண்ணத்துடன் செய்கின்றாய். நன்மையும் வேண்டாம் சுவனமும் வேண்டாம் இறைக்காதலே வேண்டும் எனும் எண்ணம் உன்னிடமில்லை என்றார் . அதற்கு அவர் அப்படியாயின் அதனை நீக்க ஏதேனும் மருந்துண்டா ? என வினவ,

உண்டு . ஆனால் நீ அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாய் என்றார் . இல்லை ஏற்றுக் கொள்வேனென அவர் அடம்பிடிக்க இவர் இவ்வாறு கூறுகின்றார்.. … நீ இப்படியே சவரக் கடைக்குச் சென்று உன் தலை முடியையும் தாடியையும் மழித்துக் கொள் . உனது இந்த உடையைக் களைந்து விட்டு ஒரு போர்வையை உடுத்திக் கொள் . உன் கழுத்தில் ஒரு தோல்ப் பையைத் தொங்க விட்டு அதனுள் தானியங்களைப் போட்டுக் கொண்டு சந்தைக்குச் சென்று சிறுவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு ‘ எனக்கு நீங்கள் ஒரு முறை முகத்தில் அறைந்தால், கல்லால் எறிந்தால் ஒரு பருப்புத் தருவேன் என்று கூறிக் கொண்டு அவர்கள் கற்களினால் எறியும் நிலையிலேயே உனக்குத் தெரிந்தவர்கள் இருக்குமிடமெல்லாம் செல் என்றார் .

இதனைக் கேட்ட அவர் ‘ ஸூப்ஹானல்லாஹ் இதெப்படி முடியுமென்றார் .அதற்கவர் . நீ ஸூப்ஹானல்லாஹ் என்று கூறியது ஷிர்க்காகும். ஏனெனில் உன்னையே நீ தூய்மைப்படுத்தினாய் அல்லாஹ்வையல்ல என்றார் .

இச்சம்பவத்தைத் தனது நூலில் கூறும் கஸ்ஸாலி ‘தான் செய்த அமலினால் தற்பெருமை கொள்வோருக்கு இப்படியான மருந்துகளே பயன் தரும் . இந்த மருந்தைப் பாவிக்க முடியாதவன் இது மருந்தல்ல என்று எங்ஙனம் மறுக்க முடியும் ? என வினாவெழுப்புகின்றார். (இஹ்யா உலூமுத்தீன்2-456 )

சூபித்துவக் கிறுக்கன் ஷஃரானி மேலும் கூறுவதாவது .. 

இப்றாஹீம் உஸைபீர் என்பவரும் பிரபல சூபிமகானாவார்கள் . அன்னாருக்கு கஷ்ப் எனும் ஞானம் கொடுக்கப்பட்டிருந்தது . அவர்கள் சீறுநீர் கழித்தால் அது பால்ப்போல் வெண்மையாயிருக்கும் . அவர்களுக்கு சிலவேளை ஞானம் முற்றி விட்டால் முகத்தில் மொய்த்திருக்கும் கொசுவுடனும் பேச ஆரம்பித்து விடுவார்கள் . பள்ளியில் முஅத்தினின் அதானோசையைக் கேட்டால் அவருக்குக் கல்லால் எறிந்து ‘நாயே.. நாங்களென்ன காபிர்களா? எங்களுக்கு அதான் சொல்கின்றாயே’ .. என்பார்கள் . என்னைப் பொறுத்த வரைக்கும் கிறிஷ்த்தவர்களைப் போன்று ஆட்டிறைச்சி வகைகள் உண்ணாமலிருப்பவனே உண்மையில் நோன்பு நோற்றவனாவான் .ஆடு,கோழி இறைச்சி வகையறாக்களை உண்பவன் நோக்கும் நோன்பு நோன்பேயில்லை என்று கூறுவார்கள்.குதிரையின் சாணத்தைக் குவித்து வைத்து அதன் மீதே தினமும் அவர்கள் உறங்குவார்கள் . . (தபகாத்துஸ் ஷஃரானிய் 2-140 )

**********************
அத்வைதக் கொள்கை மற்றும் அதன் தோற்றமும் வளர்ச்சியும் 'வஹ்தத்துல் வுஜூத்' ஓர் ஆய்வு வழங்குபவர்: Dr. U.L.A. அஷ்ரஃப் P.hd https://youtu.be/eeTCHtkT8Lw பொய் சூபி ரவூபின் செய்த்தானிய அத்வைத கொள்கை
01 https://www.youtube.com/watch?v=ukKsJRc5IZU
௦2 https://www.youtube.com/watch?v=XoJG8Da2fOY

அத்வைதத்தின் நவீன வடிவமும்

https://www.youtube.com/watch?v=grZLKaEsS4Q



மீலாத் விழாவும் பழமை வாதங்களும்

 மீலாத் விழாவும் பழமை வாதங்களும்

நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை வணக்கமாகக் கொண்டாடுவோரிடம் அதற்கான சான்றை நபிகளாரின் ஹதீஸ்களிலிருந்து முன்வைக்கும் படி கேட்டமைக்கு அவர்களின் அப்பன், பாட்டன், பூட்டன் மீலாத் விழாக் கொண்டாடியமைக்கான சான்றுகளையே முகநூலெங்கும் பதிவு செய்து கொண்டுள்ளார்கள்.

இன்னும் சிலர் சில இமாம்கள் மீலாத் விழா கொண்டாடியுள்ளதாகவும், மக்கா, மதீனாவில் இக்கொண்டாட்டம் பாதிமிய்யாக்களுக்குப் பிற்பட்ட காலம் முதல் உஸ்மானிய ஹிலாபத்துக்கு இடைப்பட்ட காலங்களில் நடை பெற்றதாகவும், ஹரம் ஷரீபில் மீலாத் விழாக் கொண்டாட்டம் நடை பெற்றதாகவும் சில தகவல்களைப் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்கள். அவர்களின் பதிவுகள் உண்மைத் தன்மையுடையதா என்பது ஒரு புறமிருக்கட்டும். இவர்களின் இக்கூற்று மீலாத் விழாக் கொண்டாட்டத்துக்கான சான்றாக அமையுமா..? என்பதை நாம் பார்கலாம்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் போது சிலை வணங்கிகள் கூறிய பதிலை அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான்.

قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ‏

அதற்கவர்கள் “இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்துகொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவைகளை ஆராதனை செய்கிறோம்)” என்றார்கள்.

ஸாலிஹ் நபியின் சமூகம் சொன்னதும் அதே வாதத்தைத்தான்.

قَالُوْا يٰصٰلِحُ قَدْ كُنْتَ فِيْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَآ‌ اَتَـنْهٰٮنَاۤ اَنْ نَّـعْبُدَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ‏

அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீங்கள் எங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர்கள். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக்கூடாதென்று நீங்கள் எங்களைத் தடை செய்கிறீர்களா? நீங்கள் எங்களை எதனளவில் அழைக்கிறீர்களோ அதனைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினர்.
(அல்குர்ஆன் : 11:62)

ஷுஐப் (அலை) அவர்களின் சமூகமும் இதே வாதத்தைத்தான் சொன்னார்கள்.

قَالُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا‌ اِنَّكَ لَاَنْتَ الْحَـلِيْمُ الرَّشِيْدُ‏

அதற்கவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர்கள்கள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டு விடும்படியாக (நீங்கள் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உங்களுடைய தொழுகையா உங்களைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்தாம்” என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 11:87)

மக்கத்துக் காபிர்களும் அதையே தான் சொன்னார்கள்.

وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ‏

மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) “அவ்வாறன்று. எவற்றின் மீது எங்களுடைய மூதாதையர்கள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்துகொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்” எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!)
(அல்குர்ஆன் : 2:170)

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا‌ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ‏

“அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய தூதரின் பக்கமும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்” எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமல் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்!)
(அல்குர்ஆன் : 5:104)

ஒவ்வொரு நபிமார்களுக்கும் எதிராக முன் வைக்கப்பட்ட அதே பழமை வாதத்தையே இன்றைய கத்தம், கந்தூரி, கபுரு வணக்க ஆதரவாளர்களும் முன்வைக்கின்றார்கள்.

அல்லாஹ் சொல்கிறான்.

فَلَا تَكُ فِىْ مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هٰٓؤُلَاۤءِ ‌ مَا يَعْبُدُوْنَ اِلَّا كَمَا يَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُ‌ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِيْبَهُمْ غَيْرَ مَنْقُوْصٍ‏

(நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவைகளைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். (யாதொரு ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (யாதொரு ஆதாரமுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக யாதொரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 11:109)

மேலுள்ள வசனங்கள் அனைத்தும் எந்த வித ஆதாரமுமின்றி மூதாதையர்கள் செய்து வந்த வணக்கங்களைச் செய்வது வழிகேடு எனச் சொல்கின்றது. நாம் மார்க்கத்தின் பெயரால் எந்த ஒரு காரியத்தைச் செய்வதென்றாலும் அதற்கான வழிகாட்டல் நபிகளாரிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அது எப்படிப்பட்ட நற்காரியமாக எமக்குத் தெரிந்தாலும் அது பித்அத்தாகும்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சொற்பொழிவுக்கு முன்னரும் கூறுவார்கள்.

வார்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1573.

வருடங்களில் சிறந்த வருடங்கள் என நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று நூற்றாண்டையும் சொன்னார்கள். மாதங்களில் சங்கையான மாதங்களாக துல் கஃதா , துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களைச் சொன்னார்கள். அமல்களில் விரைந்து செயல்ட வேண்டிய மாதமாக ரமழானைச் சொன்னார்கள். சூரியன் உதிக்கக் கூடிய நாட்களில் மிகச் சிறந்த நாளாக வெள்ளிக் கிழமையை சொன்னார்கள். 1000 மாதங்கள் அமல் செய்வதை விட சிறந்த கூழியைப் பெற்றுத்தரும் நாளாக லைலதுல் கத்ர் இரவைச் சொன்னார்கள்,. எமது அமற்களுக்கு ஜிஹாதை விடச் சிறந்த கூலியைப் பெற்றுத் தரும் நாட்களாக துல் ஹஜ் முதல் பத்து நாட்களைச் சொன்னார்கள்,. இஸ்லாமியர்களின் பண்டிகை நாற்களாக ஈதுல் பித்ரையும், ஈதுல் அழ்ஹாவையும், அய்யாமுத் தஷ்ரீகையும் சொன்னார்காள், ஒரு முஃமினுடைய வாழ்கையில் சிறந்த நேரமாக தஹஜ்ஜத் நேரத்தைச் சொன்னார்கள். எம்மைப் படைத்த றப்புல் ஆலமீனுக்கு நாம் மிக நெருக்கமாக உள்ள இடமாக ஸுஜூதைச் சொன்னார்கள்,. இப்படி அனைத்தையும் கற்றுத் தந்த நபிகளார் ஏன் நபியவர்களை புகழக்கூடிய முக்கிய நாளாக மீலாத் விழாவைப்பற்றி எமக்கு அறிவிக்க வில்லை..?

நபிகளாரின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமெனில் அதற்கான வழிகாட்டளை நபிகளாரே எமக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். எம்மை விட நபிகள் நாயகத்தை உயிரைவிட மேலாக நேசித்த நபித் தோழர்கள் மீலாத் விழாக்களை வெகு விமர்சையாகக் கொண்டாடி இருப்பார்கள். அதைத் தொடர்ந்து வந்த தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், இமாம்கள் என மிகச் சிறந்த முதல் மூன்று நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் மீலாத் விழாவைக் கொண்டாடி இருப்பார்கள். இப்படி இவர்களில் யாருமே அறியாத, கொண்டாடாத ஒன்று எப்படி மார்க்கமாக ஆனது..? இதனூடாக மீலாத் ஆதரவாளர்கள் எதைச் சொல்ல வருகின்றார்கள்..? நபிகளார் மீலாத் என்ற வணக்கத்தைப் பிரச்சாரம் செய்யாமல் மறைத்து விட்டார்கள் என்றா..? அல்லது நபித் தோழர்களை விட நாம் தான் நபிகளாரை நேசிக்கிறோம் என்றா..?

நபிகளாரின் பிறப்பிளோ, இறப்பிளோ எந்த வித சந்தோசகரமான கொண்டாட்டமோ வருடாந்த, துக்ககர நிகழ்வோ கிடையாது என்பதால் தான் அப்படியான நிகழ்வுகளை நபித்தோழர்கள் ஏற்பாடு செய்யவில்லை.

நபிகளாரின் பிறந்த ஆண்டைத் தெளிவாக அறிந்து வைத்திருந்த நபித் தோழர்கள் கிரிஸ்தவர்களைப் போல் நபிகளார் பிறந்த ஆண்டையோ, நபித்துவம் கிடைத்த ஆண்டையோ இஸ்லாமியப் புது வருடமாக் கணக்கிட வில்லை. மாறாக சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமியப் புது வருடத்தைக் கணக்கிட்டார்கள்.

حدثنا عبد الله بن مسلمة، ثنا عبد العزيز، عن أبيه، عن سهل بن سعد، قال: ما عدُّوا مِن مَبعث النبي صلى الله عليه وسلم، ولا مِن وفاته، ما عدُّوا إلا من مقدمه المدينة»
رواه البخاري في كتاب مناقب الأنصار، باب التاريخ من أين أرخوا التاريخ، برقم (3934).

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.
மக்கள் (ஆண்டுக்கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களின் 40-ம் வய)திலிருந்தோ அவர்களின் மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3934.

இரண்டு பெருநாட்களைத் தவிர வேறு எந்தத் தினத்தையும் நபிகளார் கொண்டாட்டத்துக்குரிய தினமாக முஸ்லிம்களுக்கு அடையாளப் படுத்தவில்லை என்பதால் நபித்தோழர்களும் அவ்வாறான வேலைகளைச் செய்யவில்லை என்பதற்கு யூதனின் கேள்வி சான்று.

தாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!

‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்துவிட்டேன்’ (திருக்குர்ஆன் 05:3 வது) எனும் இந்த இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளைப் பண்டிகை நாளாக ஆக்கிக்கெண்டிருப்போம்’ என்றார்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது’ என்றார்கள்.

ஸஹீஹ் புகாரி : 7268.

நாம் நினைத்த விதத்தில் இந்த மார்க்கத்தில் கொண்டாட்ட தினங்களை உருவாக்கலாம் என்றால் நபித்தோழர்கள் “இக்ரஃ” என நபிகளாரைப் பார்த்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் முதல் வசனத்தை ஓதிக்காண்பித்த அந்நாளையோ, இம்மார்க்கம் பூர்த்தி செய்யப்பட்ட நாளையோ கொண்டாட்ட தினமாக எடுத்திருப்பார்கள்.

திங்கட்கிழமை நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்ட போது நபிகளார் அன்று தான் அவர்கள் பிறந்ததாகவும், அன்று தான் அல் குர்ஆன் முதன் முதலில் அருளப் பெற்றதாகவும் கூறினார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு “அன்று தான் நான் பிறந்தேன்; அதில் தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2153.

இந்த ஹதீஸை மீலாத் விழாக் கொண்டாடுவோர் தமது வாதத்துக்கான சான்றாக முன்வைப்பார்கள். ஆனால் இந்த ஹதீஸ் அவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும்.

முஸ்லிம்களுக்கான கொண்டாடும் தினமாக இரண்டு நாட்களையே இஸ்லாம் பிரகடனம் செய்துள்ளது. அவை நோன்புப் பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளுமாகும். இந்நாட்களில் நோன்பு நோற்பதைத் தடை செய்த நபி (ஸல்) அவர்கள் தான் பிறந்த தினமான திங்கட்கிழமை நோன்பு நோற்குமாறு கூறியுள்ளார்கள் என்றால் அந்நாள் கொண்டாடத் தகுந்த நாளில்லை என்பது தெளிவாகின்றது. பண்டிகை தினங்களைப் போல் கொண்டாடப்பட வேண்டிய நாளாக நபிகளாரின் பிறந்த தினம் இருக்குமாக இருந்தால் திங்கட்கிழமை நோன்பு நோற்பதற்கு நபிகளார் வழிகாட்டி இருக்க மாட்டார்கள் . அத்தினத்தில் உண்டு, குடித்து, ஏழைகளுக்கும் உணவளித்துக் கொண்டாடச் சொல்லி இருப்பார்கள். ஆனால் அப்படிச் சொன்னமைக்கு எந்தச் சான்றுமில்லை.

எனவே தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். மக்கா , மதீனாப் பள்ளிகளில் நடைபெறும் 23 ரக்ஆத் கியாமுல் லைல் எப்படி எமக்கு ஆதராமில்லையோ அது போன்று தான் அரபிகளே மீலாத் விழாவை நடை முறைப்படுத்தி விட்டாலும் அது எமக்குச் சான்றாக இல்லை . மக்கா வெற்றிக்கு முன்னர் கஃபாவில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது என்பதற்காகச் சிலை வணக்கத்தை நாம் ஆதரிக்கலாமா..?
புனித ஹரம் ஷரீபில் பல வகையான பித்அத்களை அவ்வப்போது இருந்த ஆட்சியாளர்கள் அரங்கேற்றி உள்ளார்கள். அது போன்று உஸ்மானிய கிலாபத்தில் பல ஷிர்கான காரியங்களும், பித்ஆக்களும் அதிகாரத்தில் இருந்தவர்களின் தலைமையின் கீழ் அரங்கேற்றப்பட்டது . அவை அவர்கள் செய்த தவறுகளாகும்.

இஸ்லாம் எந்தவொரு சந்தோச தினத்தையும் கண் மூடித்தனமாகப் பாடல்களைப் பாடி மஸ்ஜித்களை மாற்றுமத தேவாலயங்களைப் போல் அழங்கரித்துக் கொண்டாடக் கற்றுத் தரவில்லை. மாறக மாற்றுமக் கலாச்சாரங்களுக்கு ஒப்பாக நடப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் கொடுங்கோலன் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டு பிர்அவ்னும் அவனின் படையும் அழிக்கப்பட்ட வெற்றி நாளை நினைவு கூறும் முகமாக நபி மூஸா (அலை) அவர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வில்லை. மாறாக ஒவ்வொரு வருடமும் அந்நாளில் (முஹர்ரம் 10 ) நோன்பு நோற்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மூஸா (அலை) அவர்களின் சமூகம் பெற்ற வெற்றியை நினைவு கூறும் முகமாக அன்னதானம் வழங்கி பாடல்கள் பாடிக் கொண்டாடக் கற்றுத் தரவில்லை. மாறாக அந்நாளில் நோன்பு நோற்பதைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழியுறுத்தினார்கள். அதில் கூட யூத கிரிஸ்தவர்களுக்கு மாறு செய்யும் முகமாக முஹர்ரம் பிறை ஒன்பதும் பத்தும் நோன்பு நோற்கச் சொன்னார்கள்.

யூதர்களுக்கும் , கிரிஸ்தவர்களுக்கும் , மஜூஸிகளுக்கும், முஷ்ரிகீன்களுக்கும் மாறு செய்வதை மார்க்கமாகப் பிரகடனப்படுத்திய கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் கிரிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு ஒப்பாக நபிகள் நாயகத்தின் பிறந்த தினக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுவது மாபெரும் மோசடியாகும்.

மீலாத் விழாக் கொண்டாட்டம் பாதிமிய்யாக்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பித்அத்தாகும். நபிகளார் யானை வருடம் திங்கட்க் கிழமை பிறந்தார்கள். என்ன திகதி என்பதற்கு தெளிவான சான்றுகளில்லை. என்றாலும் நபிகளார் ரபீஉனில் அவ்வல் பிறை 12ல் வபாத்தானார்கள் என்பது ஊர்ஜிதமான தகவலாகும். ஷீஆக்கள் நபிகளார் வபாத்தான தினத்தை (ரபீஉல் அவ்வல் 12) நபிகளாரின் பிறந்த தினமாகக் கொண்டாடத் தெரிவு செய்திருப்பது சில வேலை நபிகளாரின் இறப்பைக் கொண்டாடும் நோக்கில் கூட இருக்கலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
இலங்கை
2020/10/24