"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா?

 இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா?

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இரவு இலங்கை காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட சகோதரர்களின் ஞாபகார்த்தமாக எமது ஊரின் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒரு நினைவுத்தூபி எழுப்பப்பட்டு வருகின்றது. இவ்வாறு மரணித்தவர்களின் ஞாபகார்த்தமாக நினைவுத் தூபிகளைக் கட்டியெழுப்புவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா? –

முஹம்மது ஃபஹ்மி, இலங்கை. \


பதில்: இறந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் எழுப்புவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்களது தியாகத்தை நினைவு கூர்வதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நபித்தோழருக்கும் இத்தகைய நினைவுத்தூண்களை எழுப்பவில்லை. கீழ்க்கண்ட நபிகளாரின் எச்சரிக்கைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

صحيح البخاري435 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

 அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816.

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பது ஆதாரமாகுமா?

நபிகள் நாயகம்  ஹயாத்துடன் இருக்கிறார்
 உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்
என்பது ஆதாரமாகுமா?

"உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்'.

திருக்குர்ஆன் 49:7

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்று வரை உயிருடன் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று வாதிடுகின்றனர்.

இவ்வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களுடன் இருந்தனர் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மரணிக்காமல் இப்போதும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை இவ்வசனம் தராது என்பதை அறியாமல் பிதற்றுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை யாரும் மணந்து கொள்ளக் கூடாது என்றால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதுதான் காரணமா

நபிகள் மனைவி  ஆயிஷா கதீஜா
நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை மற்றவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.  திருக்குர்ஆன் 33:53

ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது மனைவியை மணந்து கொள்ளக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை யாரும் மணந்து கொள்ளக் கூடாது என்றால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதுதான் காரணம் என தீய கொள்கை உடையவர்கள் வாதிடுகின்றனர்.