2-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -2
எது சுவனப் பாதை?
நானும்
என் தோழர்களும் என்று கூறி இருந்தாலும் இந்த செய்தியில் முரண்பாடுகள்
தெளிவாகத் தென்பட்டிருக்கும். ஏனெனில் அவர்கள் நபித்தோழர்களுக்கிடையில்
நபி (ஸல்) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சண்டைகள் ஏற்பட்டது. அவர்கள்
தங்களுக்குள்ளே பிளவுபட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உயிரோடு
இருக்கும் காலம் வரை அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின்
மரணித்திற்குப் பிறகு அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களும் சண்டைகளும்
ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் இருந்த தூய்மை
அவர்களின் மரணத்திற்குப் பிறகு இருக்க வில்லை. மாற்றங்கள் ஏற்பட்டன. நபித்
தோழர்கள் காலம் என்று அந்த செய்தியில் கூறப்படிருந்தால் அவர்கள் காலத்தில்
ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் வாளைத் தூக்கிக் கொண்டு
ஆளாளுக்கு வெட்டிக் கொண்டு பிரச்சினைகள் ஏற்பட்டது என்கிற போது எப்படி நபி
(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று எண்ணத்தோன்றும். அதற்கும் நபி
(ஸல்) அவர்கள் இடம் தரவில்லை.