"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -4

 அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -4


.... ஏனெனில் அக்கொள்கையைக் கூறக் கூடியவர்கள் இன்றைக்கும் இருக்கலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோன்றி அழிந்து போன அக்கொள்கைக்கு உயிரூட்டக் கூடியவர்கள் இன்றைக்கும் நாளைக்கும் வரலாம். நம்மில் கூட அந்த வழி கெட்ட கொள்கையில் சில கொள்கைகளை சரியென்று நினைத்திருக்காலம். அதனால் நாம் பார்க்க விருப்பது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றிய தவறான கொள்கைகள் குர்ஆன் ஹதீஸ்க்கு மாற்றமான சித்தாந்தங்கள். எதுவல்லாம் இஸ்லாத்தின் பெயரால் வந்தது? அதை ஆய்வு செய்வோமையானால் இன்றைக்கும் அக்கொள்கை வேறு ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்தால் நம்மை நாம் அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். இக்கொள்கை அன்றைக்கு அடையாளம் காட்டப்பட்ட கொள்கை அன்றைக்கு தவறு என்று நிரூபிக்கப்பட்ட கொள்கை இது அல்குர்ஆனின் இத்தனை வசனங்களுக்கு மாற்றமான கொள்கை என்றும் விளங்கிக் கொள்ள முடியும்.

3- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -3

 3- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -3

நபி (ஸல்) அவர்கள் 72 கூட்டத்தினர்களின் பெயர்களைக் கூறினார்களா?

நபி (ஸல்) அவர்கள் என்ன வழியைச் சொன்னார்களோ அந்த வழியைத்தான் தேர்வு செய்யவேண்டும். என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்த ஒரு கூட்டம் எது என்பதை நபி (ஸல்) அவர்கள் அற்புதமாக விளக்கி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எழுபத்தி இரண்டு கூட்டத்தினர்களின் பெயர்களைக் கூறினார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிக்கையைத்தான் கூறினார்களே தவிர பெயர்களைக் கூறிப்பிட்டு இன்னின்ன கூட்டம் நரகம் செல்லும் என்று அவர்கள் கூறவில்லை. இது பற்றிய நமக்கு முன்னர் வாழ்ந்து சென்ற அறிஞர்கள் பெருமக்கள் தங்களுடைய காலங்களில் அவர்களுக்கு ஏற்றால் போல் பிரித்துள்ளார்கள்.

2-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -2

 2-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -2

எது சுவனப் பாதை?

நானும் என் தோழர்களும் என்று கூறி இருந்தாலும் இந்த செய்தியில் முரண்பாடுகள் தெளிவாகத் தென்பட்டிருக்கும். ஏனெனில் அவர்கள் நபித்தோழர்களுக்கிடையில்   நபி (ஸல்) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சண்டைகள் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலம் வரை அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் மரணித்திற்குப் பிறகு அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டன.  நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் இருந்த தூய்மை அவர்களின் மரணத்திற்குப் பிறகு இருக்க வில்லை. மாற்றங்கள் ஏற்பட்டன. நபித் தோழர்கள் காலம் என்று அந்த செய்தியில் கூறப்படிருந்தால்  அவர்கள் காலத்தில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் வாளைத் தூக்கிக் கொண்டு ஆளாளுக்கு வெட்டிக் கொண்டு பிரச்சினைகள் ஏற்பட்டது என்கிற போது எப்படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று எண்ணத்தோன்றும். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இடம் தரவில்லை.