இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா?
ஈஸா
(அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா என்று ஒரு சந்தேகம் அனைவருக்கும்
வரும் இந்த சந்தேகம் வராதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்
முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் அவர்களுக்கு முன்னர் வந்த
இறைத்தூதர்கள் அனைவரும் மரணித்து விட்டார்கள் அலீ (ரலி) அவர்கள் மரணித்து
விட்டார்கள். அப்துல் காதிர் ஜீலானியும் மரணித்து விட்டார்கள். என்று
நம்புகிற நாம் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்களா? என்ற ஒரு
சந்தேகம் வரும். அப்படியானால் இதுவும் அந்தக் கொள்கைக் குழப்பத்தில்
அடங்கும். நபிமார்களாக இருந்தாலும் அவர் மரணித்தை அடைவார்கள் என்று சரியான
கொள்கையாக இருந்தால் இந்த அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து
விட்டார்கள் என்று ஒரு கருத்திற்குத்தான் வந்தாக வேண்டும்.
ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விடவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னவைகள் என்ன ஆனது என்ற ஒரு கேள்வி எழும்.
ஆனால்
நாம் அல்குர்ஆனையும் அல்லாஹ்வின் தூதருடைய தூய போதனையும் பின்பற்றக் கூடிய
நமது நிலைப்பாடு ஈஸா அவர்கள் மரணிக்க வில்லை என்பதுதான். ஒரு நாள்
மரணிப்பார்கள். ஆனால் அவர்களும் அனைவரும் மரணிப்பார்கள் என்ற விதியின்
அடிப்படையில் அவர்களும் என்றைக்காவது ஒரு நாள் மரணிப்பார்கள். இனி
மரணிப்பார்கள் என்றுதான் நாம் நம்புகிறோமோ தவிர இன்றைய தேதியில் அவர்கள்
மரணிக்க வில்லை என்று நாம் நம்புகிறோம்.