"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

7- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -7

 ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் உயர்தி விட்டான் என்பதில் சந்தேகம் வராமல் இருக்க மேலும் அல்லாஹ் திருக்குர்ஆனின் 4:157,158 ஆகிய இரு வசனங்களும் ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று அறிவிக்கின்றது.

ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படு வதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "உயர்த்திக் கொண்டான்'' என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும்.
"அவரை உயர்த்திக் கொண்டான்'' என்று மட்டும் கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் "தன்னளவில்' என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.

6-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் - 6

 

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா?

ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா என்று ஒரு சந்தேகம் அனைவருக்கும் வரும் இந்த சந்தேகம் வராதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் அவர்களுக்கு முன்னர் வந்த இறைத்தூதர்கள் அனைவரும் மரணித்து விட்டார்கள் அலீ (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள். அப்துல் காதிர் ஜீலானியும் மரணித்து விட்டார்கள். என்று நம்புகிற நாம் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்களா?  என்ற ஒரு சந்தேகம் வரும். அப்படியானால் இதுவும் அந்தக் கொள்கைக் குழப்பத்தில் அடங்கும். நபிமார்களாக இருந்தாலும் அவர் மரணித்தை அடைவார்கள் என்று சரியான கொள்கையாக இருந்தால் இந்த அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்கள் என்று ஒரு கருத்திற்குத்தான் வந்தாக வேண்டும்.
ஈஸா (அலை) அவர்கள்  மரணித்து விடவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னவைகள் என்ன ஆனது என்ற ஒரு கேள்வி எழும்.

ஆனால் நாம் அல்குர்ஆனையும் அல்லாஹ்வின் தூதருடைய தூய போதனையும் பின்பற்றக் கூடிய நமது நிலைப்பாடு ஈஸா அவர்கள் மரணிக்க வில்லை என்பதுதான். ஒரு நாள் மரணிப்பார்கள். ஆனால் அவர்களும் அனைவரும் மரணிப்பார்கள் என்ற விதியின் அடிப்படையில் அவர்களும் என்றைக்காவது ஒரு நாள் மரணிப்பார்கள். இனி மரணிப்பார்கள் என்றுதான் நாம் நம்புகிறோமோ தவிர இன்றைய தேதியில் அவர்கள் மரணிக்க வில்லை என்று நாம் நம்புகிறோம்.

5-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -5

 அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -5

மேலும், "நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே' "முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகüன் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக் கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின் றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (3:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள்.

 
உமர் (ரலி) இவ்வாறு சொல்வது ஆச்சரியமளிக்கின்றது ஏனெனில் அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின் தலைகளை நான் சீவி விடுவேன் என்று சொன்னவர் பின்வருமாறு இந்த செய்தியை அவர்கள் நமக்குக் கூறுகின்றார்கள்.