"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள்செயல்பாடுகளால்இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத்தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களைவேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டஇந்தக் காரியங்களை முஸ்லிம்களேபால் கிதாபு,பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்றுதான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.
இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில்பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள்.இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.
ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில்போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.
இன்னும் சிலர் மாவிலைகளில் "சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்”என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறுகுடித்தால்தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக்கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இதுபோன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பிஅடித்துள்ளார்கள்.
மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம்போன்ற நல்ல காரியங்களைத் தள்ளிவைத்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப்போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக்கருதப்பட்டது.
பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள்ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும்கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில்வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்)அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.
தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5707, 5717
ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும்என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்றுகூறினார்கள்.

கெட்ட நாள் உண்டா?

காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.
தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும்சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)
பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள்நினைக்கும் கருத்தைஇவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனைவழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்லநாட்கள், பீடை நாட்கள்மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றிவருகின்றனர்.
ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழுநாட்கள் அவர்களுக்குஎதிராகக் காற்று வீசியதாகவும்,ஏழு நாட்களுமே பீடை நாட்கள்என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)
ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக்கிழமையும் நல்ல கிழமைஅல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடைநாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.
மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள்காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்லநாட்களாக அமைந்தன.
உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால்தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை.எல்லா மனிதர்களுக்கும்தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத்தருகிறோம்என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டுபிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை?ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும்தரித்திர நிலையில் தான்உள்ளனர்என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள்என்றுகூறுவது அல்லாஹ்வைக் குறைகூறுவதாகும்.
"ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்கஅவன்காலத்தைத் திட்டுகின்றான்.என் கையிலே ஆட்சியுள்ளது. இரவுபகலை நானே புரட்டிவருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4826
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரியசெயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும்அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்)அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல்மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தேதீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம்விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன்யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன்யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன்மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)

மாற்று மதக் கலாச்சாரம்

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களைமார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களாஎன்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டுஅவர்கள் செய்வதைப் போன்று இவர்களும்செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக்கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள்என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களைநீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம்பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள்என்று கூறியுள்ளார்கள்.(புகாரி 3456)
இது போன்று நபி (ஸல்) அவர்களின்எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமியசமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில்செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டுவருகிறோம்.
மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதைஅப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரிகொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.
இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதிகோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம்என்று கருதி, அந்தமாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்துகாப்பியடித்து செய்து வருகின்றனர்.
இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்)அவர்கள்கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.
இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியானபாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன்ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒருஇலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை)நாடி தங்களின்போர்க்கருவிகளைத்தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்துஅன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போதுநபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத்து அன்வாத்து”என்று இருப்பதைப்போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம்(அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம்இருக்கிறதோஅவன் மீது ஆணையாக! நீங்கள் நபிமூஸா (அலை) அவர்களிடத்தில் பனூஇஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபிமூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள்இருப்பதைப்போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை)அவர்கள்,நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள்.இதைப்போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின்வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி) நூல்:திர்மிதி
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள்என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையானகாரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானதுஅல்லாஹ்வுடைய வேதமாகும்.நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்)அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்)புதிதாகஉருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும்பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும்நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ 1560
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்டநாளாகக் கருதாமல்,மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப்பெறுவோமாக!

-- நன்றி onlinepj.com

ஒழியட்டும் 'ஒடுக்கத்து புதன்'!

ஸஃபர் மாதம் பிறந்து பாதி நாட்களுக்கும் மேல் ஓடிவிட்டன. இஸ்லாமிய வீடுகளில் ஒரே பரபரப்பு! அரிசியைக் கழுவி, காய வைத்து, இடித்து, சலித்து, பக்குவப்படுத்தி..... என்று ஏகப்பட்ட‌ முன்னேற்பாடுகள்! இருக்கும் உடுப்புகளில் பழைய துணிமணிகளைப் பொறுக்கி ஏழைகளுக்கு கொடுத்து கழித்துவிட வேண்டும் என்று ஓரம்கட்டி வைப்பார்கள். இதெல்லாம் எதற்காக..? ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமையான 'ஒடுக்கத்து புதன்' கிழமையைக் கொண்டாடவே! தயார்படுத்திய அரிசி மாவில் அன்றைய தினம் 'ஒரட்டி' என்று சொல்லப்படும் ஒரு வகை ரொட்டியைத் தயாரித்து, அதனுடன் சேவல் குழம்பு செய்வார்கள். அதற்காக கோழி வியாபாரிகளிடம் முன் கூட்டியே நாட்டுச் சேவல் ஆர்டர் பண்ணி வைக்கப்படும். முந்திய நாள் ஒட்டடை அடித்து, பழசு பட்டு நீக்கி, வீடு வாசல் கழுவி சுத்தம் செய்வார்கள்.


இது ஒரு பக்கமிருக்க...  ஹஜ்ரத்மார்களுக்கோ வேறு விதமான பிசி! அவர்கள் பனை ஓலைகள், மாவிலைகளை சுத்தம் செய்து, காய வைத்து தயார்படுத்தி வைப்பார்கள். அரிசியைக் கருக்கி, தண்ணீர் சேர்த்து தீய வைத்து மைப் போலாக்கி, அதில் தொட்டு அந்த ஓலை, மாவிலை அல்லது பீங்கான் தட்டுகளில் 'ஸலாமுன் அலா நூஹுன் ஃபில் ஆலமீன்', 'ஸலாமுன் அலா இல்யாஸீன்' அல்லது 'ஸலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்' போன்ற 'ஸலாம்' என்று ஆரம்பிக்கும் குர்ஆன் வசனங்களில் ஏதாவது ஒன்றை எழுதி காய வைத்து விற்பனைக்காக (தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக) வைத்திருப்பார்கள். அன்றைய தினம் மக்கள் அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு சில, பல ஓலைகளை வாங்கி குளிக்கும் தண்ணீரிலும், குடிப்பதற்காக வைத்திருக்கும் தண்ணீரிலும் கரைத்து கலந்து வைப்பார்கள். அதை ஊற்றி குளிப்பதால்/குடிப்பதால், வீடுகளில் தெளிப்பதால் பீடை நாள் என்று கருதப்படும் 'ஒடுக்கத்து புதன்' அன்று இறங்கும் எல்லா முஸீபத்துகளும் தன் மீது இறங்காமல் தடுக்கப்படுமாம். அதாவது நோய்க்கு தடுப்பூசி மாதிரி, ஸஃபர் மாதத்தின் பீடையை தடுக்கப் பயன்படும் ஒரு எதிர்ப்பு மருந்தாக‌(?) இந்த இலையிலிருந்து கரைக்கப்படும் தண்ணீரை நம்புகிறார்கள்!

அத்துடன் பல வகையான பண்டம், பதார்த்தங்களை செய்து மாலை நேரமானதும் அவற்றை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு சேர்ந்து கடற்கரைக்குச் சென்று குளித்துவிட்டு அல்லது காலை நனைத்து முஸீபத்துகளை கடலோடு கரைத்துவிட்டு(?), எடுத்துச் சென்ற பார்சல்களையும் காலி பண்ணிவிட்டு வருவார்கள்.

புல்வெளியில் சென்று காலை வைத்துவிட்டும் வருவார்கள். அதிலும் கட்டுக் கதைகளை மட்டுமே மார்க்கமாக நம்பி மடமையில் ரொம்ப மூழ்கிப் போனவர்கள், நபி ஹிள்ரு(அலை)அவர்கள் கடலில் வாழ்வதாக நம்பி, அவர்களுக்கு கொடுப்பதாக நிய்யத் வைத்துக் கொண்டு, அந்த‌ 'ஒரட்டி'யை கடலில் உருட்டிவிடுவார்கள். 'ஸஃபர் குளியல்' என்று சொல்லி ஆற்றில் போய் குளித்தும் பீடைகள் நீங்கிவிட்டதாக நிம்மதி அடைவார்கள். இவை ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகின்றன.

இன்னும் சில ஊர்களில் அரிசி மாவு கொழுக்கட்டைகளை செய்து, நோய்வாய்ப் பட்டிருந்தவர்கள், வாழ்க்கையில் சில சோதனைகளை அடைந்திருப்பவர்கள் போன்றவர்களை உட்கார வைத்து தலையில் கொட்டி, அதை எடுத்து யாசிக்க வரும் ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வார்கள். இந்த ஸ‌ஃபர் மாதம் கெட்ட‌ மாதம் என்று, இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்களை செய்வதற்கு கூட‌ தயங்குவார்கள். இதெல்லாம் யார் சொல்லித் தந்தது? இறைவன் தன் திருமறைக் குர்ஆனிலே கட்டளையிட்டுள்ளானா? குர்ஆனின் விளக்கவுரையாக அமைந்த அண்ணல் நபி(ஸல்)அவர்களின் வாழ்விலே இதற்கான வழி காட்டுதல்கள் எதுவும் உள்ளதா? பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்திலே இருந்துக் கொண்டு இஸ்லாம் சொல்லாத, அனுமதிக்காத‌ மூட நம்பிக்கைகளைச் செய்து வருகிறோமே...  இதனால் ஏதாவது மறுமையின் நன்மைகள் உண்டா? அல்லது இதன் மூலம் பாவத்தை மட்டும்தான் சம்பாத்தித்துக் கொள்கிறோமா? சிந்திக்க வேண்டாமா இஸ்லாமியர்களே..?

இந்த மாதத்தின் நாட்கள் கெட்டவை என்றால் உலகிலுள்ள எல்லோருக்கும் துன்பங்களும் துயரங்களும் கேடுகளும் மட்டுமே ஏற்படும் நாட்க‌ளாக அவை இருக்கவேண்டும். அப்படியானால், அந்த நாட்களில் யாருக்கும் எந்த நல்லவையும் நடப்பதில்லையா? அந்த மாதத்தில் குழந்தை பிறக்கும் சந்தோஷம் நடக்காமல், வெறும் இறப்புகள்தான் நடக்கின்றனவா? உலகில் நடக்கும் எந்த விளைவுகளும் மனிதர்களின் செயல்பாடுகளைப் பொருத்துதான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்தல்ல! எல்லோருக்கும் நன்மைகள் மட்டுமே தரக்கூடிய‌ எந்த நாளும் இல்லை; அதுபோல் எல்லோருக்கும் தீமை செய்யும் நாளும் உலகில் இல்லை. பிறப்புகளும்/இறப்புகளும், வெற்றியும்/தோல்வியும், சந்தோஷங்களும்/துக்கங்களும், திருப்தியும்/ஏமாற்றமும், திருமணமும்/விவாகரத்தும், நோயும்/நிவாரணமும், லாப‌மும்/நஷ்டமும் என்று ஒரு நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் எதிர்மறையான நிகழ்வுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க‌ இயலாது. இவை அனைத்தும் 'நேரம்', 'காலம்' என்பதில் நல்லது, கெட்டது இல்லை என்பதைத் தெளிவாக பறைசாற்றுகின்றன.

ஆக, உலகின் எதார்த்த வாழ்க்கையில் ஒருவருக்கு நல்லதும் மற்றொருவருக்கு கெட்டதும் நடப்பது என்பது அல்லாஹ்வின் விதிப்படி அன்றாடம் நிகழும் நிகழ்வுகளாகும். இதில் நல்ல நாள், கெட்ட நாள் என்று பிரிப்பது அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கையாகும். இதுபோன்ற‌ நம்பிக்கை அறியாமைக்கால அரபு மக்களிடம் காணப்பட்டது. தங்களுக்கு எது நடந்தாலும் அதைக் காலத்துடன் இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 'காலம்தான் அவருக்கு அழிவை கொடுத்துவிட்டது', 'கெட்ட நேரம்' என்றெல்லாம் அந்த மக்கள் கூறி வந்தனர். அதுவும் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதியதால், அந்த மாதம் வந்துவிட்டால் கஷ்டங்களும் சோதனைகளும் வந்துவிடும் என்று நம்பி, அந்த நாளில் எந்த நற்காரியங்களையும் செய்யாமல் இருந்தனர். இந்த மூட நம்பிக்கையினை தகர்த்தெறியும் விதமாக‌ அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள்,

"நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் செய்ய‌ப்பட்டேன். ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்வையும் துவக்கினேன். (அப்படியிருக்கும்போது) நபி(ஸல்)அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்?" என்று கூறினார்கள். 

ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்.


'பீடை மாதமாக கருதப்படும் ஷவ்வாலில் திருமணம் செய்த என் வாழ்க்கை அவ்வளவு மகிழ்வாக உள்ள‌தே' என்று அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் சுட்டிக்காட்டியது, அதேபோல் இன்று பீடையாகக் கருதும் ஸஃபர் மாதத்திற்கும்தான் பொருந்தும்! ஆனால் அணுவளவும் மூடநம்பிக்கைக்கு இடமில்லாத இஸ்லாத்தில், "நாங்களும் இஸ்லாமியர்கள்" என்று கூறிக்கொண்டு இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ள‌ முஸ்லிம்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கைச்சேதமானதே!

இந்த ஸ‌ஃபர் மாத சடங்கு, சம்பிரதாயங்களுக்கு இவர்கள் எடுத்து வைக்கும் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்!

முதல் காரணம்: நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதத்தில் நோய்வாய்ப்பட்டு அந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் அவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்து புதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்கவேண்டும் என்கிறார்கள். இது ஆதாரமற்றது என்பது ஒருபுறமிருக்கட்டும். நபி(ஸல்)அவர்கள் ஸஃபர் மாதத்தில் நோயுற்றிருந்தார்கள் என்றால் அது பீடை மாதமாகிவிடுமா? அதைத் தொடர்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 ல் மரணித்த நபி(ஸல்)அவர்கள், அதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். ஆனால் ரபீஉல் அவ்வலை யாரும் பீடை மாதம் என்பதில்லையே? சொல்லப் போனால் அந்த மாதத்தில்தான் நபி(ஸல்)அவர்கள் மரணிக்கவும் செய்தார்கள்.

மேலும் நபி(ஸல்)அவர்கள் நோய் வாய்ப்பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தி, இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்து, இஸ்லாத்திற்கென ஒரு நாட்டையே நிறுவ காரணமாக அமைந்ததே! சிந்திப்பதற்கு இது ஒன்று போதாதா சகோதர, சகோதரிகளே..? இவையெல்லாம் மக்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டவை என்று சொல்வதை விட, கற்றறிந்த ஆலிம்களுக்கு இதில் பெரும்பங்குண்டு என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாவது காரணம்: அல்லாஹ் "ஆது" கூட்டத்தாரை புதன்கிழமை அன்றுதான் பலமான காற்றைவிட்டு அழித்து நாசப்படுத்தினான். அல்லாஹ் அதுபற்றி "அய்யாமின் னஹிஸாத்தின்" ("பீடை நாட்களில்") என்று குர்ஆனில் கூறியிருக்கிறான் என்றும், அதன் காரணமாகவே நாங்கள் இதைப் "பீடை நாள்" என்று கூறுகிறோம் என்கிறார்கள்.

அல்லாஹுதஆலா ஆது கூட்டத்தின‌ரை 'ஷவ்வால்' மாதத்தின் கடைசி வாரத்தின் புதன்கிழமை காலையிலிருந்து அடுத்த புதன் மாலை வரை ஏழிரவும், எட்டுப் பகலும் தொடர்ந்து பலமான காற்றைய‌னுப்பி, அவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு தண்டனையாக அவர்களை அழித்தான். ஆனால் அக்கூட்டத்தாரின் நபியாகிய ஹுது(அலை)அவர்களையும், அவர்களைப் பின்பற்றிய நன்மக்களையும் காப்பாற்றினான். இந்த சம்பவம் கூட ஷவ்வால் மாதம், 'அந்த தீயவர்களின் தண்டனைக்காகவே' நடந்தது.

இவ்வாறு அவர்கள் 'ஷவ்வால்' மாதத்தின் கடைசி புதனில் கிழமையில் அழிக்கப்பட்ட‌தற்கும், அதன் பெயரால் இவர்கள் 'ஸஃபர்' மாதத்தின் கடைசி புதன் கிழமையில் இந்த அனாச்சாரங்களைச் செய்வதற்கும் ஏதாவது சம்பந்தமுள்ள‌தா? இப்படிதான் அல்லாஹ்வோ, நபி(ஸல்)அவர்களோ முன்னோர்களின் தண்டனைகளை நினைவு கூறச் சொன்னார்களா?

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய‌ வழியில் செல்லாமல், காலம் காலமாக முன்னோர்கள் செய்த செயல் என்று ஒன்றை நாம் செய்வோமேயானால் நாளை மறுமையில் அதற்கு எந்த பயனும் கிடைக்காமல், மார்க்கத்தில் புதுமையை புகுத்திய குற்றத்திற்காக அவை தண்டனையைதான் பெற்றுத் தரும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இதோ நபி(ஸல்)அவர்களின் பொன்மொழியைப் பாருங்கள்:

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி(ரலி); ஆதாரம்:அபூதாவூத், நஸாயீ)

மேலும் அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய நாட்களை நல்ல நாள், கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறைக் கூறுவதாகும்.

"ஆதமுடைய மகன்(மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
              அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்:புகாரி(4826)

மற்றவர்களுக்கு நல்ல நாள் பார்த்துக் கொடுப்ப‌வர்களில் பெரும்பாலோர் வசதியான, சந்தோஷமான‌ நிலையில் இல்லை என்பதை கவனத்தால், அவர்கள் தனக்கே ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை உணரலாம். ஆக, பீடை நாள் என்று நம்பி நாம் எங்கு ஓடி, ஒளிந்தாலும் நமக்கு வரவேண்டிய துன்பம் வந்தே தீரும். இரும்புக் கோட்டைக்குள் நாம் பத்திரப்படுத்தப்பட்டாலும் வரக்கூடிய தீங்கு வந்தே தீரும்! அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் அதை தடுக்க‌ முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

"அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது." (அல்குர்ஆன் 10:107)

"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன்தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக!" (அல்குர்ஆன் 9:51)


எனவே, இந்த ஸஃபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை என்பதையும், இவை அனைத்தும் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக, சுய நலம் கொண்டவர்க‌ளால் உருவாக்கப்பட்டவை என்பதையும் விளங்கி, முழு மனித சமுதாயத்திற்கும் நேர்வழிக் காட்டிட ஏக இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தில் குர்ஆன் மற்றும் நபிவழிகளில் மட்டுமே மக்கள் வாழ, இத்தகைய மூடப் பழக்கங்கள‌னைத்தும் நமது சமுதாயத்தை விட்டும் அடியோடு ஒழிய அனைவரும் பாடுபடுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு துணைச் செய்வானாக!

நன்றி :- http://payanikkumpaathai.blogspot.com

சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTFICATE கொடுத்தது அவர்கள் தானே!

சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTFICATE கொடுத்தது அவர்கள் தானே! அவர்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானின் மீது சந்தேகம் ஏற்படுமே!
முஹம்மது இஹ்ஸாஸ்

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கேள்வி போல் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இக்கேள்வி சிந்தனைக் குறைவினால் ஏற்பட்டதாகும். இதில் உண்மையும் இல்லை. எந்த லாஜிக்கும் இல்லை.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும் திருக்குர்ஆனின் அற்புதநடை தெள்ளத் தெளிவான கொள்கை காரணமாகவும் இது இறைவேதம் தான் என்று நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சென்றார்கள்.

நபித்தோழர்கள் தான் அடுத்த தலைமுறையினருக்கு திருக்குர்ஆனைக் கொண்டு சேர்த்த காரணத்தால் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

 உதாரனத்திட்காக.....  நீதி மன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் ஒரு தபால் ஊழியர் உங்களிடம் கொண்டு வந்து தந்தால் அல்லது நீதி மன்ற ஊழியர் கொண்டு வந்தால் அதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்களா?

நீதிமன்ற உத்தரவை இவர் தான் என்னிடம் கோண்டு வந்து தந்தார். இவர் நீதிமன்ற உத்தரவை நாணயமாக என்னிடம் கொண்டு வந்து தராமல் இருந்தால் அந்த உத்தரவு எனக்குக் கிடைக்காமல் போய் இருக்கும். எனவே இனிமேல் இந்த தபால்துறை ஊழியர் சொல்வதையெல்லாம் நான் பின்பற்றுவேன்; எனக்கு ஏதாவது வழக்கில் தீர்ப்பு தேவைப்பட்டால் இந்த ஊழியரிடமே தீர்ப்பு கோருவேன் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது உலகில் யாராவது இப்படி கூறுவார்கள் என்று கருதுகிறீர்களா?

உலகில் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளாத இந்த வாதத்துக்கும் உங்கள் வாதத்துக்கும் கடுகளவு வேறுபாடு கூட இல்லை.

குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்து தந்திருந்தும் நபித்தோழர்கள் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்கிறீர்களே அதுவாவது உண்மையா? கேள்வி கேட்கும் உங்களுக்கும் எனக்கும் நபித்தோழர்கள் குர்ஆனைக் கொண்டு வந்து தரவில்லை. நமக்கு முந்திய தலைமுறையினர் தான் கொண்டு வந்து சேர்த்தனர். எனவே அவர்களைப் பின்பற்றலாம் என்று சொல்வோமா?

நமக்கு முந்தின தலைமுறையும் நபியிடம் நேரடியாகக் கேட்டு நமக்கு சொல்லவில்லை. அவர்கள் தமக்கு முந்திய தலைமுறையினர் சொன்னதைத் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பின்பற்ற வேண்டும் என்று ஆகாதா....?

இதையே இன்னும் தீவிரமாக சிந்தித்தால் நபித்தோழர்கள் தான் இதைக் கொண்டு வந்த சேர்த்தனர் என்றால் அவர்கள் நபித்தோழர்கள் என்று எப்படி அறிந்து கொண்டோம்? அவர்களுக்கு அடுத்த தலைமுறை தான் அவர்களை நபித்தோழர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டினார்கள்.

இப்படியெல்லாம் கூர்மையாக சிந்தித்தால் உங்கள் வாதம் பொருளற்றது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற வாதங்களுக்கு பதிலாக நாம் பல ஆண்டுகளுக்கு முன்னா எழுதிய கருத்து வேறு தகவல் வேறு என்ற ஆய்வுக்கட்டுரை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இன்னும் தெளிவு கிடைக்கும்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோரின் தவறான வாதங்களுக்குப் பதில் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்.

நூலை வாசிக்க இங்கே சொடுக்கவோம்