"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

படத்தை வணங்கும் பரேலவிகள்

நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்ற பெயரில் ஒரு புகைப்படத்தை பரேலவிகள் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இது குறித்து லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த ஃபத்வா இதோ:

 பெறுதல்: முதல்வர் முஃப்தி ஹள்ரத் அவர்கள் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி, லால்பேட்டை


கேள்வி: கண்ணியமிகு முஃப்தி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எங்களூரில் சமீப காலமாக பொது இடங்களிலும் வீடுகளிலும் நமது பெருமானார் (ஸல்) அவர்களின் முபாரக்கான கப்ருடைய புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வைக்கப்படுகின்றது. புனிதமிகு புகாரி ஷரீப் மஜ்லிஸிலும் இப்படம் மாட்டப்பட்டு பச்சைக் குழல் விளக்கு பொருத்தப்படுகின்றது. இது உண்மையிலேயே நம் பெருமானாரின் கப்ருடைய படம் தானா? என்பதை ஆய்வு செய்வதற்காக எங்கள் முஹல்லாவைச் சேர்ந்த உலமாக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்படி புகைப்படம் அருமைப் பெருமானாரின் கப்ருடைய புகைப்படம் என்பது தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா? என நாங்கள் கேட்ட கேள்விக்கு புகைப்பட ஆதரவாளர்கள் சரியான பதிலும் சொல்லவில்லை. ஆதாரமும் காட்டவில்லை. உண்மையில் அது பெருமானாரின் கப்ருடைய படமாக இருந்தாலும் அதற்கு ஒளிவிளக்கு பொருத்தி வைப்பது ஆகுமா? மேலே குறிப்பிட்ட புகைப்படம் பெருமானாரின் முபாரக்கான கப்ருடைய படம் தானே? மேலே கண்ட கேள்விக்கு மார்க்க ரீதியாக ஃபத்வா வழங்கும்படியாக அன்புடன் வேண்டுகிறோம். வல்ல ரஹ்மான் என்றும் தூய்மையான நேர்மையான வழியில் செல்வதற்கு அருள்புரிவானாக! இங்ஙனம்: மௌலவி அல்ஹாஜ் முஹம்மது பாரூக் ஆலிம், அல்ஹாஜ் ஷெய்கு முஹம்மது ஸாலிஹ் ஆலிம், மௌலவி அல்ஹாஜ் பாஸில் அஷ்ரப் ஆலிம், பேராசிரியர்கள் மற்றும் இமாம்கள், காயல்பட்டிணம்

பதில்: நபியுடைய கப்ரு எப்படி இருந்தது என்பதற்கு அபூதாவூதுடைய ஹதீஸ் ஆதாரமாகும். புகைப்படத்தில் உள்ள கப்ரின் தோற்றம் நபியுடைய கப்ராக இருப்பதற்கு சாத்தியக்கூறு அறவே இல்லை. மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கப்ரை புகைப்படம் எடுத்து நபியின் கப்ராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் வலைத்தளங்களில் காணக் கிடைக்கின்றன. இப்போதும் கூட நபியின் கப்ரும், இரு தோழர்களின் கப்ருகளும் பூமி மட்டத்திலிருந்து சில அங்குலங்கள் மட்டுமே உயரமாக மேல்புறத்தில் சிகப்பு நிற மண்ணுடன் இருப்பதாக வரலாற்று கிதாபுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சில முஸ்தஹப்பாக்களையும், ஆகுமான விஷயங்களையும் கூட பித்அத் பட்டியலில் ஆக்கி, அறவே இடம் தராத சவூதி அரசு, ஹதீசுக்கு மாற்றமாக நபியின் கப்ரு இருப்பதற்கு அறவே இடம் தராது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவைகளுக்கும் அப்பால் ஒருக்கால் அது கப்ரின் தோற்றமாக இருந்தாலும் அந்தப் புகைப்படத்திற்கு விஷேச விளக்குகள் பொருத்துவதும் மற்றுமுள்ள சடங்குகள் செய்வதும் முற்றிலும் ஹராமாகும்.
இதுவே பின்பு சிலை வணக்கமாக ஆக அல்லது பூஜிக்கும் பொருளாக ஆகிவிட சாத்தியம் உண்டு. எனவே அதை அகற்றுவது அவசியமாகும்.

நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்கள் மேனியில் இருந்த பொருட்கள் ஆதாரப்பூர்வமாகக் கிடைத்தால் மட்டும் வரம்பு மீறாமல் அதிலிருந்து பரகத் பெறுவது ஆகுமானதாகும்.

இது லால்பேட்டை மதரஸா கொடுத்த மார்க்கத் தீர்ப்பாகும்.

இந்த மார்க்கத் தீர்ப்பைப் பொறுத்த வரையில், அது அசத்தியத்தின் மண்டைக் கபாலத்தை உடைத்துக் கலக்கும் அளவுக்கு சம்மட்டி அடியாக விழவில்லை. மாறாக, அசத்தியத்தை மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றது. எனினும் இந்த அளவுக்கு லால்பேட்டை மதரஸா வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஆனால் பரேலவிகளால் இதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த ஃபத்வாவுக்கு எதிராக பரேலவிகள் பாய்கின்ற பாய்ச்சலைப் பாருங்கள். மேலுள்ள கேள்வியைக் கேட்டிருப்பவர்கள் வஹ்ஹாபிசத்தை ஆதரிப்பவர்கள் என்று மிகத் தெளிவாக உணர முடிகின்றது. அதனால் தான் இந்தக் கேள்வியை வஹ்ஹாபிசத்தை ஆதரிக்கும் லால்பேட்டை மதரஸாவில் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையை விளங்க வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் ஃபத்வா பெறுவதற்கு மிக உயர்ந்த இடமான அவர்கள் வசிக்கும் காயல்பட்டணத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தின் கோட்டை, தமிழகத்தின் மிகப் பழமையான அரபுக் கல்லூரிகளில் ஒன்றான மஹ்லரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியில் இக்கேள்வியைக் கேட்டுத் தெளிவுபெற்றிருக்கலாம். எந்தக் கப்ரைப் பற்றி வினா எழுப்பப்பட்டுள்ளதோ அந்தக் கப்ரு அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் கப்ரு என்று கூறுவதற்கு தக்க ஆதாரம் எதுவும் எடுத்து வைக்கப்படவில்லை.
நபி (ஸல்) அவர்களின் கப்ரை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக கப்ரைச் சுற்றிலும் மறைப்பு ஏற்படுத்தியுள்ளது இன்றைய வஹ்ஹாபிய அரசு. சவூது குடும்பம் ஹிஜாஸ் மாகாணத்தை ஆக்கிரமித்து ஒரு நூற்றாண்டு கூட முடிவடையவில்லை. அப்படியெனில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் கப்ரு எல்லோரும் பார்க்கும்படியாகத் தான் இருந்தது. இக்காலத்தில் பல இடங்களிலும் படமாகக் காட்சிப்படும் அந்தக் கப்ரு நிழற்படம் கருவியின் மூலம் படம் பிடிக்கப்பட்டதன்று. மாறாக, அது வரையப்பட்டதாகும். பிற்காலத்தில் தொழில் நுட்பத்தால் நிழற்படம் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது என்பது உலகம் அறிந்த உண்மை. பொதுவாக மிகச் சிறந்த ஓவியர்கள் ஒரே ஒரு தடவை மட்டும் பார்த்தால் அவர்கள் தங்களின் மூளையில் பதிவேற்றம் செய்து கொண்டு அதை அப்படியே வரைந்து விடுவார்கள் என்பதை நாம் அறிவோம். அப்படித் தான் இப்படமும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை நேரில் பார்த்த ஒரு ஓவியர் வரைந்துள்ளார். பின்பு உலகெங்கும் அப்படம் பரவியுள்ளது. அப்படம் நபி (ஸல்) அவர்களின் கப்ருடைய படம் கிடையாது என்று உறுதியுடன் கூற ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி இறைத்தூதர்களின் கப்ரு படங்களையும் இறைநேசர்களின் கப்ரு படங்கûயும் மாட்டி வைப்பதில் தவறேதும் இல்லை.
அந்தக் கப்ருக்கு மாலையிடுவதும், அல்லது ஊதுபத்தி கொளுத்தி வைப்பதும் அதை பூஜிப்பதும் முற்றிலும் ஹராமாகும் என்று தீர்ப்பு கொடுப்பதை கைவிடுத்து சவூதியை மேற்கோள் காட்டித் தங்களின் உண்மை நிலைபாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் மதரஸா மன்பவுல் அன்வார் ஆசிரியர்கள். லால்பேட்டை மதரஸாவின் ஃபத்வாவை விமர்சித்து பரேலவிகள் தங்கள் பத்திரிகையில் எழுதியிருப்பது இது தான்.

பொதுவாக பரேலவிகள் சமாதிகளை வணங்குபவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் சமாதிகளின் புகைப்படத்தையும் வணங்கச் சொல்லும் பைத்தியங்கள் என்பதை இவர்களின் இந்த விமர்சனம் நமக்கு உணர்த்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கப்ரு உட்பட அனைத்தையும் தகர்க்கச் சொல்கின்றார்கள். ஆனால் இந்தப் பரேலவிகள் கப்ருகளின் புகைப்படத்திற்காகக் கச்சை கட்டிக் கொண்டு கத்த ஆரம்பித்து விட்டார்கள். நல்ல வேளை! சவூதி அரசு நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சுற்றி சுவர் கட்டி வைத்துள்ளது. இல்லையெனில் இவர்கள் அதிலிருந்து கல், மண்ணை எடுத்து வந்து இங்கொரு சிலையை எழுப்பி விடுவார்கள். பரேலவிகளின் இலட்சணம் எப்படியிருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களது இந்த விமர்சனம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

source : ஏகத்துவம் 11/ 2013

----------------------------------------------------------------------------------------------------------------------------

 

Fake Tomb Pictures of Prophet Muhammad (pbuh)


Assalam Alaykum,

This is just a plan of  Few Bad Unbelievers,who created this false image of  Prophet Muhammad (pbuh) Tomb.

as We are guided by the greatest personality of  Mankind,we are not allowed to do anything wrong with them or with there believes.

Below listed pictures with title and “FAKE IMAGE “  claimed as Prophet Muhammad  Tomb picture.I have added all pictures being used on net.It was sent for an auction also.

The only known photograph,above, of the tomb of the Prophet Muhammad in Medina, a site revered by Muslims across the globe, is expected to fetch at least £90,000.

It was this picture that was auctioned(i think) :

(without added sticker ofcource)

picture 1

Rauza-e-rasool

picture : 2

prophet_muhammad_pbuh_tomb4

picture 3

prophet_muhammad_pbuh_tomb1

Picture 4:

prophet_muhammad_pbuh_tomb2

Picture 5:

prophet_muhammad_pbuh_tomb3

Picture 6:

prophet_muhammad_pbuh_tomb5

People’s are so much blind that many have taken print out of picture and hanging on Walls in home.

WHERE IS PROPHET TOMB ,CAN WE SEE ???


Its behind these walls.We are not allowed to see ! those who try,they just see darkness,few dust ,light .



7395949941eeb826589bxy0 copy



SO,WHOSE TOMB PICTURES ?????


The tomb on the photo’s are not the BLESSED one of our Prophet (salallahu aleyhi was salaam) but it is the tomb of Osman Ghazi, the first sultan of the Ottoman Empire and MAULANA RUMI(Turkey).

For More Information about Osman-Gazi .

And here is the proof : match these pictures..


Osman-Gazi tomb old postcards:

osmangazi3rp6



osmangazikartpostaldl0

And the state of the tomb in recent times:

osman_gazi



othmangazi_grave2

othmangazi_grave


separator

MAULANA RUMI TOMB PICTURES



What a pity that in many Muslim countries this tomb is presented as the tomb of the Prophet (salallahualeyhi sallam) and pictures are sold and are hanged into houses.

PS: The Prophet’s (salallahu aleyhi was salaam) has no tomb or sanduqa on it.

Al-Qadi ‘Iyad has reported from the major scholars that it is best to make a hump over the grave because Sufyan an-Nammar told him that he had seen the grave of the Prophet, peace be upon him, with a hump over it.” (Bukhari)
Ja’far bin Muhammad reported from his father: “The grave of the Prophet, peace be upon him, was raised one hand from the ground and was coated with red clay and some gravel.” This was narrated by Abu Bakr An-Najjad





நபிகளாரின் கப்ரை ஜியாரத் செய்ய பயணம் மேற்கொள்ளலாமா

பொதுமக்களில் சிலர் எண்ணிக்கொண்டிருப்பது போல் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது ஹஜ்ஜின் கடமையான செயல்களிலோ, அல்லது அதன் நிபந்தனை களிலோ உள்ளதன்று. மாறாக மஸ்ஜிதுன் நபவிக்கு வருகை தருபவர்கள் அல்லது அதனருகில் இருப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது விரும்பத்தக்க செயலாகும். ,,


மதீனாவை விட்டும் தூரமாக இருப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பயணம் மேற்கொள்வது கூடாது. மாறாக புனிதப் பள்ளிக்கு -மஸ்ஜிதுன் நபவிக்கு- செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் பயணம் மேற்கொள்வது சுன்னத்தாகும். பள்ளிக்கு வருகை தருபவர் நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் இரு தோழர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்வார். மஸ்ஜிதுன் நபவியை ஜியாரத் செய்வதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் அவர்களின் இரு தோழர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்யும் வாய்ப்பும் கிடைத்து விடுகிறது.

(وَلَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ َمَسْجِدِي هَذا وَالْمَسْجِدِ الْحَرَامِ وَالْمَسْجِدِ الْأَقْصَى )
மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -நன்மையை நாடி- பயணம் மேற்கொள்ளக் கூடாது.
அவை : மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய மஸ்ஜித், மஸ்ஜிதுல் அக்ஸா என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.   
(அறிவிப்பாளர் : அபூஸயீத் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் கப்ரையோ அல்லது பிறரின் கப்ரையோ -ஜியாரத் செய்ய- பயணம் மேற்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்திருந்தால் அதனை உம்மத்தினருக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருப்பார்கள். அதன் சிறப்பையும் கூறியிருப்பார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் மக்களுக்கு மிகத் தெளிவாக உபதேசம் செய்பவர்கள், அனைவரையும் விட அல்லாஹ்வைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள், அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவர்கள். நிச்சயமாக அவர்கள் மக்களுக்கு மிகத் தெளிவாக -மார்க்கத்தை- எடுத்துரைத்து விட்டார்கள். தம் உம்மத்தினருக்கு நல்லவைகள் அனைத்தையும் எடுத்துச் சொல்லி விட்டார்கள். அனைத்துத் தீமைகளை விட்டும் எச்சரித்து விட்டார்கள். மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -வேறு எங்கும் நன்மையை நாடி- பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரித்த நபி (ஸல்) அவர்கள்,
( لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ ) 

உங்கள் வீடுகளை கப்ருகளாக்கிவிடாதீர்கள்! என்னுடைய கப்ரை விழாவாக ஆக்கிவிடாதீர்கள்! என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்! நிச்சயமாக நீங்கள் எங்கிருந்து ஸலவாத்துக் கூறினாலும் அது என்னை வந்தடையும் என்றும் கூறியுள்ளார்கள் எனும்போது கப்ர் ஜியாரத்திற்காக பயணம் செய்வதை எவ்வாறு அனுமதித்திருப்பார்கள்?!  
(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல்:அபூதாவூத்)


நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்ற கூற்று அவர்கள் கப்ரை விழாக் கூடமாக்குவதற்கும் அவர்களை அளவு கடந்து புகழ்வதற்கும் வறம்புமீறி உயர்த்துவதற்கும் -சுருக்கமாகக் கூறவேண்டுமானால்- நபி (ஸல்) அவர்கள் எதனை பயந்து எச்சரித்தார்களோ அவைகள் அனைத்தும் அரங்கேறுவதற்குக் காரணமாக அமையும். அதிகமான மக்கள் இத்தவறுகளைச் செய்யக் காரணம் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்குப் பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்று அவர்கள் -தவறாக- நம்பியிருப்பதே! 



நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என சில ஆதாரங்கள் கூறப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்களின் தொடர்களை உடைய, மாறாக, அவைகள் -நபி (ஸல்) அவர்கள் கூறாததை, அவர்கள் கூறியதாக- இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ள செய்திகளாகும். ஹதீஸ் கலை வல்லுனர்களான தாரகுத்னீ, பைஹகீ, ஹாஃபிழ் இப்னு ஹஜர் போன்றோர் அதன் பலவீனங்களைக் கூறி எச்சரித்துள்ளார்கள். எனவே -இட்டுக் கட்டப்பட்ட- அந்தச் செய்திகளை மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -வேறு எங்கும் நன்மையை நாடி- பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ் களுக்கு எதிராகக் கூறுவது கூடாது. 
இத்தலைப்பு தொடர்பான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் அதனைக் கண்டு ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும் அதில் சிலவற்றை தங்கள் முன் வைக்கின்றேன்;

 
مَنْ حَجَّ وَلَمْ يَزُرْنِيْ فَقَدْ جَفَانِيْ
யார் ஹஜ் செய்து, என்னை ஜியாரத் செய்யவில்லையோ நிச்சயமாக அவர் என்னை வெறுத்துவிட்டார்

.
مَنْ زَارَنِيْ بَعْدَ مَمَاتِيْ فَكَأَنَّمَا زَارَنِيْ فِيْ حَيَاتِيْ 
நான் மரணித்ததற்குப்
பிறகு என்னை ஜியாரத் செய்பவர் நான் உயிருடன் இருக்கும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.


مَنْ زَارَنِيْ وَزَارَ أَبِيْ إِبْرَاهِيْمَ فِيْ عَامٍ وَاحِدٍ ضَمِنْتُ لَهُ عَلَى اللهِ الْجَنَّةَ 

ஒரே வருடத்தில் என்னையும் எனது தந்தை இப்ராஹீம் அவர் களையும் ஜியாரத் செய்தவருக்கு அல்லாஹ்விடத்தில் சொர்க் கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
مَنْ زَارَ قَبْرِيْ وَجَبَتْ لَهُ شَفَاعَتِيْ 
என்னுடைய கப்ரை ஜியாரத் செய்தவருக்காக என்னுடைய பரிந்துரை கடமையாகிவிட்டது.

ஹதீஸ்களாக கூறப்படும் இவை போன்றவைகளை நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. 


ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தல்கீஸ் எனும் நூலில் இது தொடர்பான அறிவிப்பாளர்களின் பல வரிசைகளைக் கூறிவிட்டு இந்த ஹதீஸின் அனைத்துத் தொடர்களும் பலவீனமானவைகளே! என்று கூறியுள்ளார்கள். 



இச்செய்தி தொடர்பாக வரும் எந்த ஒன்றும் ஆதாரப் பூர்வமானதல்ல என ஹாஃபிழ் உகைலீ அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்டவைகளே! என ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.



இச்செய்திகளை நீங்கள் அறிந்து, நினைவில் நிறுத்தி, பிறருக்கும் எடுத்துரைக்க இதுவே போதுமானதாகும். இதில் ஏதேனும் ஒரு செய்தி ஆதாரப் பூர்வமானதாக இருந்திருந்தால் அதனை செயல்படுத்துவதிலும் மக்களுக்கு விளக்கிக் கூறுவதிலும் அதன்பால் அவர்களை அழைப் பதிலும் நபித்தோழர்கள் மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்திருப்பார்கள். ஏனெனில் நிச்சயமாக நபிமார்களுக்குப் பிறகு அவர்களே மக்களில் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் சட்டங்களையும் அவன் தன் அடியார்களுக்கு இட்ட கட்டளைகளையும் நன்கறிந்தவர்கள், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு மக்களுக்கு அதிகமாக உபதேசம் செய்தவர்கள். இத்தகையோர் -மேற்கூறிய- எதனையும் செய்ததாக எந்தச் செய்தியும் வராதது அவைகள் மார்க்கத்தில் உள்ளவையல்ல என்பதை உணர்த்துகிறது. மேற்கண்ட செய்திகளில் ஏதேனும் ஒன்று ஆதாரப் பூர்வமானதாக இருந்திருந்தால் -இதுதொடர்பான ஹதீஸ்களை ஒருங்கிணைக்கும் விதமாக- கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் செய்யாமல் -வேறு நோக்கத்திற்காக பயணிக்கும் போது கப்ரைக் கண்டால் அதனை ஜியாரத் செய்வதை- மார்க்கம் அனுமதித்துள்ள ஜியாரத்துடன் இதனையும் இணைப்பது அவசியமாகியிருக்கும். -ஆனால் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை- மிகத் தூய்மையான, மிக உயர்ந்தவனான அல்லாஹ்வே மிக அறிந்தவன்

------------------------------------------------------------------------------

السؤالما مدى صحَّة الحديث الذي يقول: "مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لهُ شَفاعتي
الإجابة: الحمد لله، والصلاة والسلام على رسول الله، وعلى آله وصحبه ومن والاه، ثم أما بعد: 
فالحديثُ أخرجهُ الدُّولابِيُّ في (الكُنَى والأسماء:2/846)، عن عليٍّ بنِ مَعْبَدِ بن نوحٍ، وابنُ خُزَيْمَةَ في (صحيحه) -كما في (ميزان الاعتدال: 6/567)- عن محمَّدٍ بنِ إسماعيلَ الأَحْمَسِيِّ، وابنُ خُزَيْمَةَ في (صحيحه) -كما في (لسان الميزان: 6/135)، والدَّارَقُطْنِيُّ في (سُنَنِه: 2/278)، والبَيْهَقِيُّ في (شُعَبِ الإيمان[  ] : 3/490) من طريقِ عُبَيْدِ اللهِ بنِ محمَّدٍ الوَرَّاق، والعُقَيْلِيُّ في (الضُّعفاء: 4/170) من طريق جعفرِ بنِ محمِّدٍ البُزُورِيِّ، والدِّينَوَرِيُّ في (المجالسة وجواهر العلم[  ] : 129)، وابنُ عَدِيٍّ في (الكامل: 6/351)- ومن طريقه البَيْهَقِيُّ في (شُعَبْ الإيمان: 3862)

 -من طريق محمَّدٍ بنِ إسماعيلَ بنِ سَمُرَةَ؛ جميعُهم عن موسى بن هلال، عن عبد الله بن عمر العُمَرِيِّ - وقال بعضهم: عُبَيْدالله بن عمر- عن نافعٍ، عنِ ابنِ عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: "مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لهُ شَفاعتي". 

قلتُ: فيه موسى بنُ هلال؛ قال ابنُ أبي حاتم في (الجَرْح والتَّعديل: 8/166): سألت أبى عنه فقال: "مجهولٌ". قال ابنُ القَطَّان في (بيان الوهم والإيهام: 4/323): "وهو كما قالَ". 

قال العُقَيْلِيُّ: "موسى بنُ هلال سَكَنَ الكوفةَ، عن عُبيْدِ الله بنِ عمرَ، ولا يَصِحُّ حديثُهُ، ولا يُتَابَعُ عليه ... والرواية في هذا البابِ فيها لِينٌ". 

قال ابنُ عَدِيٍّ: "وقد روى غيرُ ابنِ سَمُرَة هذا الحديثَ عن موسى بن هلال فقال: عن عبيدِ الله، عن نافع، عن ابنِ عمرَ". قال -أي ابنُ عَدِيٍّ-: "وعبدُ الله أَصَحُّ، ولموسى غيرُ هذا، وأرجو أنَّه لا بأسَ به". 

قال ابنُ القَطَّان في (بيان الوهم والإيهام: 4/324): "وهذا من أبي أحمد قولٌ صَدَرَ عن تَصَفُحِّ رواياتِ هذا الرَّجل، لا عن مباشرَةٍ لأحوالِه؛ فالحقُّ فيه أنَّه لم تثبتْ عدالته". 

قال ابنُ عبد الهادي في (الصَّارم المُنْكِي: ص34): "وهذا الذي صحَّحه ابنُ عَدِيٍّ هو الصَّحيحُ، وهو أنَّه من رواية عبدِ الله بنِ عمرَ العُمَريِّ الصَّغيرِ المُكَبَّرِ المضعَّفِ، ليس من رواية أخيه عُبَيْدِ الله العُمَرِيِّ الكبيرِ المُصَغَّر الثَّقةِ الثَّبْتِ؛ فإنَّ موسى بنَ هلالٍ لم يلحقْ عُبَيْدَ الله؛ فإنَّه ماتَ قديمًا سنةَ بضعٍ وأربعينَ ومائةٍ، بخلاف عبدِ الله؛ فإنَّه تأخَّر دهرًا بعد أخيه، وبقيَ إلى سنة بضعٍ وسبعينَ ومائةٍ. 

ولو فُرِضَ أنَّ الحديثَ من رواية عُبَيْدِ الله لم يلْزمْ أنْ يكونَ صحيحًا؛ فإنَّ تَفَرُّدَ موسى بنِ هلالٍ به عنهُ دونَ سائر أصحابه المشهورينَ بملازمته وحفظِ حديثه وضَبْطِه - من أَدَلِّ الأشياءِ على أنَّه منكرٌ غيرُ محفوظٍ، وأصحابُ عُبَيْدِ الله بنِ عمرَ المعروفون بالرِّواية عنهُ؛ مثلُ: يحيى بنِ سعيدٍ القَطَّان، وعبدِ الله بنِ نُمَيْرٍ، وأبي أسامة حمَّادِ بنِ أسامة، وعبدِ الوهَّاب الثَّقَفِيِّ، وعبدِ الله بنِ المبارَك، ومُعْتَمِرٍ بنِ سليمان، وعبد الأعلى بنِ عبدِ الأعلى، وعليِّ بنِ مُسْهِر، وخالدِ بنِ الحارثِ، وأبي ضَمْرَةَ أنسِ بنِ عِيَاضٍ، وبِشْرِ بنِ المُفَضَّلِ، وأشباهِهم وأمثالهِم منَ الثِّقاتِ المشهورينَ. 

فإذا كان هذا الحديثُ لم يرْوِهِ عن عبيدِ الله أحدٌ من هؤلاء الأثبات، ولا رواهُ ثقةٌ غيرُهم؛ عَلِمْنَا أنَّه منكرٌ غيرُ مقبولٍ، وجَزَمْنَا بخطأ مَنْ حسَّنَهُ أو صحَّحَهُ بغير علمٍ". أهـ. 

قال البَيْهَقِيُّ: "وسواءٌ قال عُبَيْدُ الله أو عبدُ الله؛ فهو منكَرٌ عن نافعٍ عن ابنِ عمرَ، لم يأتِ به غيرُهُ". 

قال ابنُ عبدِ الهادي في (الصارم المُنْكِي: ص32): "وهذا الذي قالَهُ البَيْهَقِيُّ في هذا الحديث، وحَكَمَ به عليه - قولٌ صحيحٌ بَيِّنٌ، وحُكْمٌ جَلِيٌّ واضحٌ، لا يشكُّ فيه مَنْ له أدنى اشتغالٍ بهذا الفنِّ، ولا يردُّه إلا رجلٌ جاهلٌ بهذا العِلْمِ. 

وذلك أنَّ تَفَرُّدَ مثلَ هذا العَبْدِيِّ المجهولِ الحالِ، الذي لم يَشْتَهِرْ من أمره ما يُوجِبُ قَبولَ أحاديثه وخَبَرِه عن عبدِ الله بنِ عمرَ العُمَريِّ، المشهورِ بسوء الحفظ، وشدَّة الغفلة[  ]  - عن نافعٍ، عن ابنِ عمرَ بهذا الخَبَر، من بين سائرِ أصحابِ نافعٍ الحُفَّاظِ الثِّقاتِ الأثْبَاتِ، مثلِ يحيى بن سعيدٍ الأنصاري، وأيُّوبٍ السَّخْتِيَانِيِّ، وعبدِ الله بن عَوْنٍ، وصالحِ بنِ كَيْسَانَ، وإسماعيلَ بنِ أُمَيَّةَ القُرَشيِّ، وابنِ جُرَيْجٍ، والأوزاعيِّ، وموسى بن عُقْبَةَ، وابنِ أبي ذئبٍ، ومالكِ بنِ أَنَسٍ، واللَّيْثِ بنِ سعدٍ، وغيرِهم منَ العالمين بحديثِه، الضَّابِطينَ لرواياتِه، المُعْتَنِينَ بأخبارِه، المُلازِمينَ له - من أقوى الحُجَج، وأَبْيَنِ الأدلَّة، وأوضحِ البراهينِ على ضَعْفِ ما تفرَّدَ به، وإنكارِه، وردِّه، وعدمِ قَبوله. وهل يشك في هذا مَنْ شَمَّ رائحةَ الحديث، أو كان عنده أدنى بَصَرٍ به؟!! 

هذا مع أنَّ أَعْرَفَ النَّاس بهذا الشَّأن في زمانه، وأثبتَهم في نافعٍ، وأعلمَهم بأخباره، وأضبطَهم لحديثه، وأشدَّهم اعتناءً بما رواهُ مالكُ بنُ أنسٍ؛ إمامُ دار الهجرة - قَدْ نَصَّ على كراهية قول القائل: "زُرْتُ قبرَ النبي[  ] ِّ صلى الله عليه وسلم، ولو كان هذا اللفظُ معروفًا عنده، أو مشروعًا، أو مأثورًا عن النبيِّ صلى الله عليه وسلم؛ لم يَكْرَهْهُ. 

ولو كان هذا الحديثُ المذكورُ من أحاديث نافعٍ التي رواها عنِ ابنِ عمرَ؛ لم يَخْفَ على مالكٍ، الذي هو أَعْرَفُ الناس بحديث نافعٍ، ولَرَوَاهُ عن مالكٍ بعضُ أصحابه الثِّقاتِ. فلمَّا لم يَرْوِهِ عنه ثقةٌ يُحْتَجُّ به ويُعْتَمَدُ عليه؛ عُلِمَ أنَّه ليس من حديثه، وأنَّه لا أصلَ لهُ؛ بل هو ممَّا أُدْخِلَ على بعض الضُّعفاءِ المغفَّلينَ في طريقه؛ فرواهُ وحدَّثَ به".أهـ. 

قال ابنُ خُزَيْمَةَ - كما في (لسان الميزان: 6/135): "إنْ ثَبَتَ الخَبَرُ؛ فإنَّ في القَلْبِ مِنْهُ.."!! وقال: "أنا أَبرأُ من عُهْدَتِهِ، هذا الخبر من رواية الأَحْمَسِيِّ أَشْبَهُ؛ لأنَّ عُبَيْد الله بنِ عمرَ أَجَلُّ وأحْفَظُ من أنْ يرويَ مثلَ هذا المنكر؛ فإن كان موسى بنُ هلال لم يَغْلَطْ فيمَنْ فوقَ أحد العُمَرِيَّيْن، فيُشْبِهُ أنْ يكونَ هذا من حديث عبدِ الله بنِ عمرَ. فأمَّا من حديث عُبَيْدِ الله بنِ عمرَ؛ فإنِّي لا أشكُّ أنَّه ليس من حديثه". 

قال الحافظُ: "هذه عبارتُهُ بحروفها، وعبدُ الله بنُ عمرَ العُمَرِيُّ -بالتّكبير- ضعيفُ الحديث، وأخوه عُبَيْدُ الله بنُ عمرَ-بالتَّصْغِير- ثقةٌ حافظٌ جليلٌ. ومع ما تَقَدَّمَ من عبارة ابنِ خُزَيْمَةَ، وكَشْفِهِ عن علَّة هذا الخبر؛ لا يَحْسُنُ أن يُقالَ: (أخرجهُ ابنُ خُزَيْمَةَ في صحيحه)، إلا مع البيان". اهـ. 

قال الحافظُ في (تلخيص الحَبِير: 2/267): "فَائدَةٌ: طُرُقُ هذا الحديث كلُّها ضعيفةٌ!". 

هذا؛ وقد تَكَلَّمَ على طُرُقِ الحديث بما لا مزيد عليه الحافظُ ابنُ عبدِ الهادي، في كتابه الماتع (الصَّارمُ المُنْكِي)، فانْظُرْهُ، والله أعلم.

-------------------------------------------------------


ما صحة حديث : من زار قبري بعد مماتي فكأنما زارني في حياتي
visit....
https://islamqa.info/ar/2534


பெரும்பான்மையைப் பின்பற்ற வேண்டுமா?

முன்னோர்களை, பெருங் கூட்டத்தை பின்பற்றலாமா?
 முன்னுரை

இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டுவிட்டு முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அல்லது பெரும்பான்மை மக்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவோ அவற்றை பின்பற்றுபவனுக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவான அறிவுரையை கூறுகிறது.
وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـًٔـا وَّلَا يَهْتَدُوْنَ‏
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் ”எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 2:170)
وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا‌ ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــًٔـا وَّلَا يَهْتَدُوْنَ‏
”அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் ”எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 5:104)
மேற்கண்ட வசனங்கள் நம்முடைய முன்னோர்கள் மார்க்கம் என்ற பெயரில் தவறான காரியங்களைச் செய்திருந்தால் நாம் அவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு தெளிவான சான்றுகளாகும். திருமறைக்குர்ஆனும், நபிவழியும் ஒன்றைப் போதிக்கும் போது அதற்கு மாற்றமாக யார் கூறினாலும் அதனைப் புறக்கணிப்பவனே உண்மையான இறைநம்பிக்கையாளனாவான்.
குர்ஆனிற்கும், நபி வழிக்கும் மாற்றமாக முன்னோர்களையும் பெரியார்களையும் பின்பற்றியவனின் மறுமை நிலை.
يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا
رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا
”அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ”நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:66…68)
முன்னோர்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் மாற்றமாக இருக்கிறது, முரணாக இருக்கிறது என்பதற்காகவோ புதிய கருத்தாக இருக்கிறது என்பதற்காவோ ஒரு கருத்தை மறுக்கக் கூடாது. எந்த கருத்தாக இருந்தாலும் அது திருக்குர்ஆன் நபிமொழிக்கு ஒத்ததாக இருக்கிறதா? அல்லது முரணாக இருக்கிறதா? என்பதை பார்த்து, திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் ஒத்து இருக்கும் கருத்தை ஏற்று, முரணாக இருக்கும் கருத்தை புறக்கணிக்க வேண்டும்.
பெரும்பான்மையைப் பின்பற்ற வேண்டுமா?
மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பவர்கள் அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக் கூறுகின்றனர்.
3950- حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، حَدَّثَنَا مُعَانُ بْنُ رِفَاعَةَ السَّلاَمِيُّ , حَدَّثَنِي أَبُو خَلَفٍ الأَعْمَى ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ، يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ ، يَقُولُ :
إِنَّ أُمَّتِي لاَ تَجْتَمِعُ عَلَى ضَلاَلَةٍ ، فَإِذَا رَأَيْتُمُ اخْتِلاَفًا فَعَلَيْكُمْ بِالسَّوَادِ الأَعْظَمِ.
”என்னுடைய சமுதாயத்தினர் வழிகேட்டில் ஒன்றுபட மாட்டார்கள். நீங்கள் கருத்து வேறுபாடுகளைக் கண்டால் பெரும் கூட்டத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: இப்னு மாஜா 3940
அதாவது மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் மேற்கண்ட ஹதீஸ் மத்ஹபைப் பின்பற்றுதவற்கு ஆதரரமாகும் எனக்கூறுகின்றனர்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அபூகலஃப் அல் அஃமா என்பவர் பலவீனமானவர். இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார். இதே தொடரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான வலீத் பின் முஸ்லிம் என்பவர், தனக்கு அறிவித்தவர்களில் பலவீனமான அறிவிப்பாளரை மறைத்து விட்டு அறிவிப்பவர் ஆவார்.இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
2167- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ البَصْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ الْمَدَنِيُّ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
إِنَّ اللَّهَ لاَ يَجْمَعُ أُمَّتِي ، أَوْ قَالَ : أُمَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، عَلَى ضَلاَلَةٍ ، وَيَدُ اللهِ مَعَ الجَمَاعَةِ ، وَمَنْ شَذَّ شَذَّ إِلَى النَّارِ.
”என்னுடைய சமுதாயத்தை அல்லது முஹம்மது நபியின் சமுதாயத்தை அல்லாஹ் வழிகேட்டில் ஒன்று சேர்த்து விட மாட்டான். அல்லாஹ்வுடைய அருள் ஜமாஅத்துடன் தான் இருக்கிறது. யார் தனித்து இருக்கிறானோ அவன் தனித்து நரகத்தில் இருப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: திர்மிதீ 2093
இந்த ஹதீஸில் இடம் பெறும் சுலைமான் அல் மதனீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீசும் ஆதாரப்பூர்வமானது அல்ல.
குர்ஆனின் கருத்து
பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன. மேலும் இது திருக்குர்ஆன் வசனத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.
وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِى الْاَرْضِ يُضِلُّوْكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ‏
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை. அல்குர்ஆன் 6:116
இந்த வசனம், பெரும்பான்மைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று அறிவிக்கின்றது. இதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலும் மேற்கண்ட ஹதீஸ்கள் மேலும் பலவீனம் அடைகின்றன.
மேலும் இந்த ஹதீஸ்கள் சரியானவை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் பெரும் கூட்டம் என்பதற்கு அளவு கோல் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.
இன்று பெரும்பான்மையானவர்கள் வரதட்சணை வாங்குகிறார்கள்; சினிமா பார்க்கிறார்கள்; பல்வேறு தீமைகளைச் செய்கிறார்கள். இவர்களைப் பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே கருத்து அடிப்படையிலும் இந்த ஹதீஸ்கள் பலவீனமடைகின்றன.
ஒரே மத்ஹபை பின்பற்றுவார்களா?
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஹதீஸ்களில் மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. காரணம், இந்த ஹதீஸ் பெரும் கூட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றது. மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் கூட ஒரே மத்ஹபைப் பின்பற்றுவதில்லை. நான்கு மத்ஹபுகள் என்று கூறுகின்றார்கள்.
இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்த்தால் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது; ஒரே மத்ஹபை பின்பற்ற வேண்டும் என்று தான் கூற வேண்டும். எனவே மத்ஹபுகளுக்கு இந்த ஹதீஸ் எதிரானது என்று தான் கூற வேண்டும்.
எனவே, இது போன்ற மூடத் தனத்திலிருந்து விடுபட்டு, குர்ஆன், ஹதீஸை பின்பற்றி நடந்து, மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!