இன்னொரு சாரார் கப்ர் கட்டுவதற்கு தீஸ்களில் தெளிவான ஆதாரம் உண்டு
என்று கூறி அ்ஹ்மதில் இடம்பெறும் ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
என்று கூறி அ்ஹ்மதில் இடம்பெறும் ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
அந்தச் செய்தி இதுதான்.
حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ أَنَّ ابْنَ حَزْمٍ إِمَّا عَمْرٌو وَإِمَّا عُمَارَةُ قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُتَّكِئٌ عَلَى قَبْرٍ فَقَالَ انْزِلْ عَنْ الْقَبْرِ لَا تُؤْذِ صَاحِبَ الْقَبْرِ وَلَا يُؤْذِيكَ
அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்: நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவருக்கு நோவினை செய்யாதீர் என்று நபிகள் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நூல் : அ்மத் 20934
கப்ரின் மேல் சாயக்கூடாது என்று இச்செய்தியில் நபிகள் நாயகம் தடை செய்துள்ளார்கள். சாயும் அளவு கப்ர் கட்டப்பட்டு இருந்தால் தான் அதில் சாய்ந்து கொள்ளவோ அல்லது சாய்ந்து கொள்ளக் கூடாது என்று கூற முடியும்.
எனவே சாயக்கூடாது என்று தடுத்த நபிகள் நாயகம் சாயும் அளவு கப்ர் கட்டடம் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்கவில்லை. எனவே கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக அமைகின்றது.
இவ்வாறு ஒரு வாதம் எழுப்புகின்றனர்.
பதில்
முதலில் இது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
இந்தச் செய்தி ஹாகிம் 6502, ஷர் மஆனில் ஆஸார் 2944 இன்னும் பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு லீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
பார்க்க நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64,தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153
எனவே இதை ஆதாரமாக்க் கொண்டு கப்ரைக் கட்டலாம் என்பதை ஒரு போதும் நிறுவ முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா?
பரேலவிகள் நரகில் தள்ளும் தர்கா வழிபாட்டை சரிகாண நபிகள் நாயகம் மற்றும் சில நபித்தோழர்களின் கப்ர்கள் உயரமாக இருப்பதை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.
நபிகள் நாயகம் கப்ரின் அமைப்பிற்கும் நபிகளாருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் இறந்து விட்ட பிறகு அவர்களின் கப்ரை ஒருவர் குறிப்பிட்ட அமைப்பில் அமைப்பதால் அதற்கு நபிகளாரின் அங்கீகாரமோ, இஸ்லாமிய மார்க்கத்தின் அங்கீகாரமோ உண்டு என்பதாகாது.
நபிகள் நாயகம் உயிருடன் உள்ளபோதே இஸ்லாமிய மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. நபிகளாரின் இறப்பிற்குப் பிறகு நடக்கும் எந்தச் செயலும் இஸ்லாமாகாது.
எனவே கப்ர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதரின் போதனை என்ன என்பதைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர நபிகளாரின் இறப்பிற்குப் பின் நடைபெற்ற, வயின் தொடர்பு இல்லாத ஏனைய மனிதர்கள் நபிகள் நாயகம் கப்ரை எப்படி அமைத்தார்கள் என்பதை ஆதாரமாகக் குறிப்பிடுவது அறிவீனத்தின் உச்சமாகும்.
நபிகள் நாயகத்தின் கப்ர் எப்படி உள்ளது என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் கவனிப்பு இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய விஷயம்.
மேலும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் கப்ரின் மேல் கட்டடம் கட்டுவது கூடாது என்று தெளிவாக தடை செய்வதால் நபிகளாரின் கப்ர் கட்டப்பட்டு இருந்தால் கூட அப்போதும் ஆதாரமாகாது.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 5:3
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்