வலிமார்களின் கபுருகள் இடிக்கப்பபட வேண்டியவை அல்ல மாறாக கண்ணியப்படுத்தப்பட வேண்டியவை என்ற கருத்தில் கப்ர் வணங்கி ஒருவர் ஒரு கட்டுரையை எழுதி அதில் ஆதாரம் என்ற பெயரில் பல தவறான, அபத்தமான வாதங்களையும் முன்வைத்திருந்தார்.
அதற்குரிய விளக்கத்தை கப்ர் வழிபாட்டை நியாயப்படுத்த பின்வருமாறு வாதத்தை எழுப்புகிறார்கள்.
அதற்குரிய விளக்கத்தை கப்ர் வழிபாட்டை நியாயப்படுத்த பின்வருமாறு வாதத்தை எழுப்புகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கப்ர் கட்டப்படக் கூடாது, இடிக்க வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை. மாறாக கப்ரை சீராக்கி, அழகாக்குமாறுதான் நமக்கு உத்தரவிடுகிறார்கள்.
عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ رواه مسلم
உயரமான எந்தக் கப்ரையும் அழகுபடுத்தாமல் விட்டு விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நபிமொழி)
இதனைத்தான் தவ்ஹீத்
கொள்கையில் இருப்பவர்கள் மாற்றி, மறைத்து கப்ர் கட்டப்படக் கூடாது. தரை மட்டத்திற்கு மேல் இருக்கும் கப்ரை இடிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
உயரமான கப்ர்களைக் கண்டால் சீராக்க வேண்டும் என்ற மேற்கண்ட தீஸில் ஸவ்வா எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அழகுபடுத்தல், சீராக்குதல் என்பதுதான் பொருள். குர்ஆனில் இச்சொல் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் சீராக்குதல் என்ற பொருளில்தான் வருகிறது. எங்கேயும் இடித்தல் என்ற பொருளில் வரவேயில்லை.
هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ [البقرة : 28 ، 29
அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.(அல்குர்ஆன் 2:29)
ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ [السجدة : 9]
பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.(அல்குர்ஆன் 32:9)
உதாரணமாக இந்த இடங்களில் எல்லாம் ஸவ்வா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு இடித்தல் என்று பொருள் செய்யவே இயலாது. அப்படி பொருள் செய்தால் வசனத்தின் கருத்தே அனர்த்தமாகி விடும்.
எனவே உயரமான கப்ருகளைச் சீர்படுத்துமாறுதான் அலி அவர்களுக்கு நபிகள் நாயகம் உத்தரவிட்டுள்ளார்கள். இடிக்குமாறு உத்தரவிடவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தவறாக பொருள் செய்து கப்ருகளை நபிகள் நாயகம் இடிக்கச் சொன்னார்கள் என்று கூறிவருகிறார்கள்.
பதில்:
இது தான் அவர்களின் மற்றுமொரு வாதமாகும். இதன் மூலம் சமாதி வழிபாட்டை மார்க்க அடிப்படையில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.
சவ்வா என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் தரைமட்டமாக்குதல் என்பது கிடையாது. சீர்படுத்துதல் என்பதுதான் பொருள். சீர்படுத்துதல் என்பதோடு எதைக் கூறுகிறோமோ அதைக் கவனித்து தான் சவ்வா என்பதற்கு பொருள் செய்ய வேண்டும்.
கிழிந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஆடையைத் தைக்க வேண்டும் என்பது அர்த்தம். உடைந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஒட்டுவது என்று அர்த்தம். மேடாக உள்ளதை சீர்படுத்துவது என்றால் சமமாக்குதல் என்று அர்த்தம். பள்ளமாக இருப்பதை சீர்படுத்துதல் என்றால் உயர்த்துவது என்று அர்த்தம்.
எதுவும் கூறாமல் சீர்படுத்துங்கள் என்றால் அழகுபடுத்துங்கள் என்று பொருள். உயரமாக உள்ளதைச் சீர்படுத்து என்று கூறினால் தரைமட்டமாக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
இதனைப் பின்வரும் தீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَنَزَلَ أَعْلَى الْمَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ فَأَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي السُّيُوفِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَأَبُو بَكْرٍ رِدْفُهُ وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ وَكَانَ يُحِبُّ أَنْ يُصَلِّيَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ وَأَنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَأَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي النَّجّ
َارِ فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا قَالُوا لَا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ فَقَالَ أَنَسٌ فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ قُبُورُ الْمُشْرِكِينَ وَفِيهِ خَرِبٌ وَفِيهِ نَخْلٌ فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ ثُمَّ بِالْخَرِبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ وَهُوَ يَقُولُ اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் "பனூ அம்ர் பின் அவ்ஃப்' என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக தமது) வாட்களைத் தொங்கவிட்ட படி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் வாகனம் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது. தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். - பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். (அவர்கள் வந்தபோது), "பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்'' என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர். நான் உங்களிடம் கூறும் கீழ்க்கண்டவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சில பேரீச்சை மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்சை மரங்களை வரிசையாக நட்டனர்.
பள்ளிவாசலின் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். "ரஜ்ஸ்' எனும் ஒரு வித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர்.
"இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே (மறுமையின் நன்மைகளுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முாஜிர்களுக்கும் நீ மன்னிப்பிப்பாயாக!''என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) இருந்தார்கள்.நூல் :புகாரி - 428
இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி இருந்த இடத்தில் கப்ருகள் இருந்தன எனவும், சின்னஞ்சிறு சுவர்கள் இருந்தன எனவும், அதனைத் தரைமட்டமாக்கத் தான் நபி (ஸல்) அவர்கள் உத்தவிட்டார்கள் எனவும் வந்துள்ளது. இதில் தரைமட்டமாக்க சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குட்டிச்சுவரை அலங்காரப்படுத்துங்கள் என்று பொருள் செய்ய முடியுமா?
அதுபோலத்தான் கப்ருகளைச் சீர்படுத்துதல் என்பதன் பொருள்,
நபி (ஸல்) அவர்கள் கப்ரு கட்டக்கூடாது என தடை செய்தார்கள். அவர்கள் தடை செய்த ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. மார்க்க அடிப்படையில் அதனைச் சீர்படுத்துங்கள் என்றால் கப்ருகளைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பது தான் பொருள்.
மேலும் ஸவ்வா என்று குர்ஆனில் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் அழகுபடுத்தல் என்பது தான் பொருள் எனும் கப்ர் வணங்கிகளின் வாதமும் முற்றிலும் தவறானதாகும்.
கீழ்க்காணும் வசனம் இதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا (42) [النساء : 42]
(ஏக இறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் "தம்மை பூமி விழுங்கி விடாதா?'' என்று அந்நாளில் விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.(அல்குர்ஆன் 4:42)
மேற்கண்ட வசனத்திலும் சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பூமியில் எங்களை அலங்காரமாக வைக்க காஃபிர்கள் விரும்புவார்கள் எ னப் பொருள் செய்ய முடியுமா?
எனவே சவ்வா என்பதற்கு, அது எதோடு சேர்ந்து வருகிறதோ அதைக் கவனித்தே பொருள் செய்ய வேண்டும்.
கப்ர் கட்டுவது கூடாது என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிற காரணத்தால் உயரமாகக் கட்டப்பட்ட கப்ரை சமமாக்க வேண்டும் என்பதுதான் இந்த ஹதீஸின் பொருள் என்பதை எளிதாக உணரலாம்.
கப்ர் கட்டுவது கூடாது; ஆனால் கப்ர் கட்டி அதை அழகுபடுத்தலாம் என்று பொருள் செய்தால் அது மார்க்கத்தைக் கேலி செய்யும் விதமாக அமையும். இறைத்தூதரின் வார்த்தைகளில் கேலிப்பொருளுக்கு இடமேயில்லை என்பதை மறந்து விடக்கூடாது.
மேலும் சவ்வா என்ற சொல் இடம் பெற்ற இந்த தீஸுக்கு மட்டும்தான் இப்படி கிறுக்குத்தனமாக உளறுகிறார்கள். கப்ரின் மேல் பூசக் கூடாது என்றும், கப்ரின் மேல் கட்டக்கூடாது என்றும் வரும் தீஸ்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. கப்ரைக் கட்டக் கூடாது என்றால் கட்டலாம் என்று பொருள். பூசக் கூடாது என்றால் பூசலாம் என்று பொருள் என்று பதில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கப்ரின் மேல் சாயக்கூடாது என்பதில் கப்ர் கட்ட ஆதாரம் உண்டா?
இன்னொரு சாரார் கப்ர் கட்டுவதற்கு ஹதீஸ்களில் தெளிவான ஆதாரம் உண்டு என்று கூறி
அஹ்மதில் இடம்பெறும் ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
அந்தச் செய்தி இதுதான்.
حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ أَنَّ ابْنَ حَزْمٍ إِمَّا عَمْرٌو وَإِمَّا عُمَارَةُ قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُتَّكِئٌ عَلَى قَبْرٍ فَقَالَ انْزِلْ عَنْ الْقَبْرِ لَا تُؤْذِ صَاحِبَ الْقَبْرِ وَلَا يُؤْذِيكَ
அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்: நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவருக்கு நோவினை செய்யாதீர் என்று நபிகள் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நூல் : அ்மத் 20934
கப்ரின் மேல் சாயக்கூடாது என்று இச்செய்தியில் நபிகள் நாயகம் தடை செய்துள்ளார்கள். சாயும் அளவு கப்ர் கட்டப்பட்டு இருந்தால் தான் அதில் சாய்ந்து கொள்ளவோ அல்லது சாய்ந்து கொள்ளக் கூடாது என்று கூற முடியும்.
எனவே சாயக்கூடாது என்று தடுத்த நபிகள் நாயகம் சாயும் அளவு கப்ர் கட்டடம் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்கவில்லை. எனவே கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக அமைகின்றது.
இவ்வாறு ஒரு வாதம் எழுப்புகின்றனர்.
முதலில் இது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
இந்தச் செய்தி ஹாகிம் 6502, ஷர் மஆனில் ஆஸார் 2944 இன்னும் பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு லீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
பார்க்க நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64,தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153
எனவே இதை ஆதாரமாக்க் கொண்டு கப்ரைக் கட்டலாம் என்பதை ஒரு பாேதும் நிருவமுடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா?
பரேலவிகள் நரகில் தள்ளும் தர்கா வழிபாட்டை சரிகாண நபிகள் நாயகம் மற்றும் சில நபித்தோழர்களின் கப்ர்கள் உயரமாக இருப்பதை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.
நபிகள் நாயகம் கப்ரின் அமைப்பிற்கும் நபிகளாருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் இறந்து விட்ட பிறகு அவர்களின் கப்ரை ஒருவர் குறிப்பிட்ட அமைப்பில் அமைப்பதால் அதற்கு நபிகளாரின் அங்கீகாரமோ, இஸ்லாமிய மார்க்கத்தின் அங்கீகாரமோ உண்டு என்பதாகாது.
நபிகள் நாயகம் உயிருடன் உள்ளபோதே இஸ்லாமிய மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. நபிகளாரின் இறப்பிற்குப் பிறகு நடக்கும் எந்தச் செயலும் இஸ்லாமாகாது.
எனவே கப்ர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதரின் போதனை என்ன என்பதைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர நபிகளாரின் இறப்பிற்குப் பின் நடைபெற்ற, விஹியின் தொடர்பு இல்லாத ஏனைய மனிதர்கள் நபிகள் நாயகம் கப்ரை எப்படி அமைத்தார்கள் என்பதை ஆதாரமாகக் குறிப்பிடுவது அறிவீனத்தின் உச்சமாகும்.
நபிகள் நாயகத்தின் கப்ர் எப்படி உள்ளது என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் கவனிப்பு இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய விஷயம்.
மேலும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் கப்ரின் மேல் கட்டடம் கட்டுவது கூடாது என்று தெளிவாக தடை செய்வதால் நபிகளாரின் கப்ர் கட்டப்பட்டு இருந்தால் கூட அப்போதும் ஆதாரமாகாது.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 5:3
ஒரு சாண் அளவு கப்ரை உயர்த்தலாம் என்று இமாம் நவவீ அவர்கள் கூறிய கூற்றில் ஏதோ கப்ர் கட்ட ஆதாரம் இருக்கிறது என்றெண்ணியவர்கள் அதே நவவீ அவர்கள் தனது மின்ஹாஜ் எனும் நூலில் நேரடியாக கப்ர் கட்டுவது பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்க தவறிவிட்டார்கள்.
منهاج الطالبين وعمدة المفتين - (1 / 85)
وَيُكْرَهُ تَجْصِيصُ الْقَبْرِ وَالْبِنَاءُ وَالْكِتَابَةُ عَلَيْهِ. وَلَوْ بُنِيَ فِي مَقْبَرَةٍ مُسَبَّلَةٍ هُدِمَ.
கப்ரை பூசுவது, கட்டடம் எழுப்புவது அதன் மீது எழுதுவது ஆகியவை வெறுப்பிற்குரியாதாகும்.
மின்ஹாஜூத் தாலிபீன் 1 பக் 85
கப்ர் கட்டுவது வெறுப்பிற்குரியது என்று தெளிவாக தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
அத்தகைய நவவீ இமாம் அவர்கள் மண்ணறை ஒரு சாண் அளவு தரையிலிருந்து உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறியதை ஏதோ கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்று கூறியது போல் ஜோடனை செய்து மக்களிடம் பரப்புகிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய கடைந்தெடுத்த கயவர்கள் என்பதை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.
மேலும் மற்றுமொரு முக்கிய மத்பு இமாம் அபூனிபா அவர்கள் கூறியதையும் பாருங்கள்.
حاشية رد المختار على الدر المختار - (2 / 237(
وعن أبي حنيفة يكره أن يبنى عليه بناء من بيت أو قبة أو نحو ذلك لما روى جابر نهى رسول الله عن تجصيص القبور وأن يكتب عليها وأن يبنى عليها رواه مسلم وغيره
அபூனிபா கூறுகிறார்: கப்ரின் மீது கட்டடம், குப்பா போன்றவைகளைக் கட்டுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் கப்ர்களை பூசுவதையும், அதன் மீது எழுதுவதையும் அதன் மேல் கட்டடம் கட்டுவதையும் தடை செய்துள்ளார்கள்.
ரத்துல் முக்தார் பாகம் 2 பக் 237
இப்படி தங்கள் மனோஇச்சைக்குத் தகுந்த படி இமாம்களின் கூற்றை வளைக்கிறார்கள் எனில் இவர்களிடம் சத்தியம் இருக்குமா என்பதையும் இவர்கள் இமாம்களைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ள உண்மையுன்டா என்பதையும் நியாயவான்கள் சிந்திக்க வேண்டும்......
******************************************************************************
மேலும் சில பதிவுகள் .....
- இறந்துவிட்ட மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஸவ்வா என்றால் உடைத்தலா ? அழகு படுத்தலா ? அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- நபிமார்கள், அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சின்னங்களா? அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மதுகப் வாதிகளே பதில் தாருங்கள் கேளிவியை காண இங்கே கிளிக் செய்யவும்
- குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மவ்லூத் மறுப்புக்கான காரணம் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்