"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா?

சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் இறந்தோர்களை வணங்கும் கூட்டத்தினர்,  சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் பொய்யான தகவல்களையும் கொண்டு வந்து இறந்தவர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூசாமல் எழுதியுள்ளனர்.

இந்தக் கட்டுரையில் இவர்கள் ஆதாரங்களாக குறிப்பிடும் சிலவற்றிற்கு   சரியான விளக்கத்தை அறிந்துகொள்வோம்.

சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா?

இறந்தோர்களை வணங்கக்கூடியவர்கள் இவர்களின் ஷிர்க் கொள்கையை நியாயப்படுத்த இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களை முஷ்ரிக்காகக் காட்டும் கேவலமான முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு இவர்கள் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார். "உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?'' என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்.  அல்குர்ஆன் 27:40

இந்த வசனத்தில் அரசியின் சிம்மாசனத்தை கண் மூடித் திறப்பதற்குள் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது கூறியது என அல்லாஹ் கூறுகிறான்.

நீண்ட தொலைவில் உள்ள சிம்மாசனத்தை கண் மூடித்திறப்பதற்குள் கொண்டு வருவது சாதாரண மனிதனுக்கு இல்லாத ஆற்றல். இப்படிப்பட்ட ஆற்றல் ஒரு இறைநேசருக்கு இருந்துள்ளது. அந்த இறைநேசரிடம் சுலைமான் (அலை) அவர்கள் உதவி கேட்டுள்ளார்கள். எனவே இறந்துவிட்ட அவ்லியாக்களிடம் எதை வேண்டுமானாலும் கேட்டுப் பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

கூறியது ஜின்னா? மனிதரா?

வேதம் வழங்கப்பட்ட இறைநேசர் இவ்வாறு கூறினார் என்று அல்லாஹ் கூறவில்லை. இந்த வசனத்தை அவ்லியாக்களுடன் கோர்ப்பதற்காக குர்ஆனில் இல்லாத இறைநேசர் என்ற இவர்களின் சொந்தச் சரக்கை இவர்களாகப் புகுத்தியுள்ளனர். அப்போது தான் இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்ற இணைவைப்பை நியாயப்படுத்தும் முயற்சியைத் தொடங்க முடியும்.

சிம்மாசனத்தை யார் கொண்டு வருவார் என்று சுலைமான் (அலை) அவர்கள் கேட்டபோது இப்ரீத் என்ற ஜின், "நீங்கள் எழுவதற்கு முன்பு கொண்டு வருகிறேன்' என்று கூறியது. இதன் பின்னே வேத ஞானம் வழங்கப்பட்டது, "நான் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டுவருகிறேன்' என்று கூறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டுவந்தது மனிதரல்ல. ஜின் என்பது தான் பல காரணங்களால் சரியான கருத்தாகும்.

அல்லாஹ் மனிதர்களைக் காட்டிலும் ஜின்களை வலிமையான படைப்பாகப் படைத்துள்ளான். விண்ணுலகத்தில் பல லட்சக்கணக்கான கிலோ மீட்டர் . பயணத்தைக் குறுகிய நேரத்தில் செய்யும் ஆற்றலையும் அல்லாஹ் ஜின்களுக்கு வழங்கியுள்ளான். இந்த ஆற்றல் தீய ஜின்களுக்குக் கூட வழங்கப்பட்டுள்ளது. எனவே தான் ஜின்கள் வானுலகத்தில் பேசப்படும் விஷயங்களை ஒட்டுக்கேட்பதற்காகப் பயணம் செய்கின்றன. ஜின்களுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்பதற்குக் குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் ஆதாரமாக உள்ளது. சாதனம் ஏதுமின்றி விண்ணில் சுயமாக நீண்டதூரம் சுலபமாகப் பயணம் செய்யும் இத்தகைய சக்தியை அல்லாஹ் மனித இனத்திற்கு வழங்கவில்லை.

இத்தகைய ஜின்களை அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். நபி சுலைமான் (அலை) அவர்களால் செய்ய முடியாத காரியங்களை ஜின்கள் அவர்களுக்கு செய்து கொடுத்தன. எனவே தான் சுலைமான் (அலை) அவர்கள்  ஜின்களைப் பார்த்து யார் சிம்மாசனத்தை கொண்டு வருவார்? என்று கேட்டார்கள்.

சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட கேள்விக்கு இப்ரீத் என்ற ஜின் பதிலளித்துள்ளது. எனவே சுலைமான் (அலை) அவர்கள் ஜின்களைப் பார்த்துத் தான் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியும்.

அல்லாஹ் எதையும் சுருக்கமாக பேசக்கூடியவன். இப்ரீத் என்ற ஜின் கூறியது என்று சொன்ன பிறகு வேத ஞானமுள்ள ஒருவர் கூறினார் என்றாலே அந்த ஒருவர் ஜின் தான் என்பதை எளிதாக விளங்க முடியும். அந்த ஒருவரும் ஜின் தான் என மறுபடியும் கூற வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக ஐந்தும் ஐந்தும் எத்தனை என்று ஆசிரியர் கேட்டார். ஒரு மாணவன் எட்டு என்று கூறினான். அறிவுள்ள ஒருவன் பத்து என்று கூறினான் என்று சொன்னால் அறிவுள்ள ஒருவன் என்று சொல்லப்பட்டவனும் மாணவன் தான் என்பதை விபரமுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள். இதே போன்று தான் முன்பு நாம் சுட்டிக்காட்டிய வசனமும் அமைந்துள்ளது.

எனவே கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டுவந்தது வேதஞானமுள்ள ஜின்னே தவிர மனிதரல்ல.

இறைவாக்கை துஷ்பிரோயகம் செய்யும் பரேலவிகள்

ஒரு வாதத்திற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தை கொண்டு வந்தவர் மனிதர் என்றும் இறைநேசர் என்றும் நம்பினாலும் இவர்களின் இணைவைப்பை நியாயப்படுத்த முடியாது.

சுலைமான் (அலை) அவர்கள் உதவி தேடியதற்கும் இவர்கள் இறந்தவர்களிடம் உதவி தேடுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

இறந்தவர்களை நாம் கண்ணால் காண முடியாது. அவர்களால் நாம் பேசுவதைச் செவியுறவும் முடியாது. நாம் பேசினால் அதற்கு அவர்கள் பதிலளிக்கவுமாட்டார்கள். அவர்கள் இவ்வுலகவாழ்வை விட்டும் பிரிந்து திரையிடப்பட்ட மறைமுகமான வாழ்வுக்குள் சென்று உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேலவிகள் இத்தகையவர்களிடம் தாங்கள் விரும்பிய உதவிகளைக் கேட்கிறார்கள்.

மனதிற்குள் ரகசியமாக எங்கிருந்து கொண்டும் எத்தனை பேர் அழைத்தாலும் இறந்தவர் உதவி செய்வார் என்று நம்புகின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்கும் இறந்தவர்களிடம் உதவி தேடுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்று தான். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போன்று அப்படியே இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் முஷ்ரிக்குகளாக இருக்கிறார்கள்.

சுலைமான் (அலை) அவர்கள்  இவர்களைப் போன்று இறந்தவரிடம் உதவி தேடவில்லை. கண்களுக்குத் தெரிகின்ற, சுலைமான் (அலை) பேசுவதைக் கேட்கின்ற, அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கின்ற ஒருவரிடத்திலேயே சிம்மாசனத்தைக் கொண்டு வருமாறு கூறினார்கள். எங்கிருந்து அழைத்தாலும் எப்படி அழைத்தாலும் எத்தனைபேர் அழைத்தாலும் என்ற வாதத்திற்கே இங்கு வேலையில்லை. சுலைமான் (அலை) அவர்கள் இந்த அடிப்படையில் யாரையும் அழைக்கவில்லை.

சுலைமான் (அலை) அவர்கள் சிம்மாசனத்தைக் கொண்டு வருமாறு கூறிய போது அந்த இறைநேசர் (இவர்களின் வாதப்படி) "நான் கொண்டு வருகிறேன்' என்று பதிலளித்தார். அதை சுலைமான் (அலை) அவர்கள் தம் காதால் கேட்டார்கள். மேலும் சுலைமான் (அலை) அவர்களின் கண்களுக்கு முன்னால் அந்த சிம்மாசனத்தையும் கொண்டு வந்தார்.

அவ்லியாக்களின் அழைப்புக்கு இதை ஆதாரமாகக் காட்டும் இந்த பரேலவிகள், "இறந்தவர்கள் நமது பிரார்த்தனைக்கு எழுந்து வந்து நாம் கேட்கும் விதத்தில் பதிலளிப்பார்களா? நமது தேவைகளை நமது கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி நிறைவேற்றுவார்களா?' ஆகிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

அவ்லியாவே! எனக்குக் குழந்தை பாக்கியத்தைக் கொடுங்கள் என்று நான் கேட்டால் அவ்லியா எனக்கு முன்னால் தோன்றி நான் தருகிறேன் என்று சொல்ல வேண்டும். அவர் சொன்னது போல் அது கிடைக்கவும் வேண்டும். இதை நாம் உணரும் விதத்தில் இருந்தாலே இறந்தவர்களிடம் கேட்க முடியும். ஆனால் இது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. எனவே இறந்தவர்களிடம் நாம் தேவைகளை முறையிடவும் முடியாது.

சுலைமான் (அலை) அவர்கள் சிம்மாசனத்தைக் கொண்டுவருமாறு கூறியது சாதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் பேசுவதைப் போன்று தான் அமைந்துள்ளது. இவர்கள் இறந்தவர்களை அழைப்பது போன்ற அழைப்பு இல்லை.

நபி சுலைமான் (அலை) அவர்களின் காலத்தில் குறிப்பிட்ட ஒருவருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டு வரும் ஆற்றல் இருந்தது என்று அல்லாஹ் கூறுகிறான். இதை நாம் நம்ப வேண்டும்.

சுலைமான் நபி காலத்தில் ஒருவருக்கு ஒரு ஆற்றல் இருந்தது என்பதால் அவ்லியா (?) என்று இவர்கள் யாருக்கெல்லாம் பட்டம் தருகின்றார்களோ அவர்கள் அனைவரும் இத்தகைய ஆற்றல் உள்ளவர்கள் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமாகும். 

நீங்கள் ஒரு மனிதருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்று நான் கேள்விப்பட்டால் அந்த மனிதருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்பதைத் தாண்டி வேறு எதையும் அதிலிருந்து புரிய முடியாது. அவரல்லாத பலருக்கும் குறிப்பாக இன்னாருக்கும் இன்னாருக்கும் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்று அறிவுள்ள யாரும் புரிய மாட்டார்கள்.

ஆனால் இந்த பரேலேவிகள் அல்லாஹ்வுடைய ஆற்றல் விசயத்தில் இவ்வாறு புரியாமல் ஏறுக்குமாறாகப் புரிந்ததால் இணைவைப்புக்குக் குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டுகிறார்கள். 

இன்னாருக்கு இந்த ஆற்றல் இருந்தது என்று அல்லாஹ் சொன்னால் நாம் நம்ப வேண்டும். இந்த பரேலவிகள் சொன்னால் நாம் நம்ப வேண்டுமா? 
இவர்களாக அல்லாஹ் இந்த அவ்லியாவுக்கு வழங்கியுள்ளான். அந்த அவ்லியாவுக்கு வழங்கியுள்ளான் என்று துணிந்து கூறுகிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் அதிகாரத்தை இவர்கள் கையில் எடுக்க முனைகிறார்கள். அல்லாஹ் இந்த அவ்லியாக்களுக்கு வழங்கும் போது அதை இவர்கள் பார்த்தார்களா? குருட்டு நம்பிக்கையைத் தவிர இதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது?

அல்லாஹ் நபிமார்களில் சிலருக்கு குறிப்பிட்ட சில ஆற்றலை விஷேசமாக வழங்கிய போது மக்கள் அனைவரும் வெளிப்படையாகக் கண்டு அது உண்மை என்று நம்பும் விதத்தில் அந்த ஆற்றல் இருந்தது. நபி ஈசா (அலை) அவர்களுக்கு குருடருக்குப் பார்வை கொடுப்பது, குஷ்ட நோயாளியின் தோலைச் சரிசெய்வது, இறந்தவரை உயிர்பிப்பது போன்ற ஆற்றலை வழங்கினான். ஈசா (அலை) அவர்கள் இதை மக்கள் கண்கூடாக கண்டு நம்பும் விதத்தில் மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

மூசா (அலை) அவர்களுக்கு கைத்தடியைப் பாம்பாக மாற்றும் அற்புதத்தை வழங்கினான். இதை மூசா (அலை) அவர்கள் மக்களுக்கு முன்னால் செய்து காட்டி மக்களை நம்பச் சொன்னார்கள். எனக்கு அல்லாஹ் சக்தி வழங்கியுள்ளான் என்று குருட்டுத்தனமாக நம்புங்கள் என்று அவர்கள் கூறவில்லை. இந்த சம்பவங்களை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு எடுத்துச் சொல்வதால் அதை நாம் கண்கூடாக பார்க்காவிட்டாலும் நம்புகிறோம்.

எனவே இறந்தவர்களுக்குப் பலவகையான ஆற்றல்கள் உண்டு என்றால் அதை நம் கண்களுக்கு முன்னால் வெளிப்படுத்தி நிரூபிப்பது இந்த பரேலவிகளின் கடமையாகும். ஆனால் இவர்களால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது. பிறகு ஏன் அவ்லியாக்களுக்கு (?) அது முடியும். இது முடியும் என்று குருட்டு நம்பிக்கை வைத்துக் கதை விட வேண்டும்?

மூசா (அலை) அவர்களுடை கைத்தடி பாம்பாக மாறியது என்பதால் உலகில் உள்ள மற்ற கைத்தடிகளும் பாம்பாக மாறும் என்று கூறுவதை மிஞ்சிய அறிவீனம் எதுவுமில்லை. ஈசா (அலை) அவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததால் மற்றவர்களும் உயிர்பிப்பவார்கள் என்று அறிவுள்ளவன் கூறமாட்டான்.

ஆனால் இந்த பரேலேவிகள் சுலைமான் நபி காலத்தில் ஒருவருக்கு ஒரு ஆற்றல் இருந்ததால் இறந்துவிட்ட இறைநேசர்களுக்கும் (?) இந்த ஆற்றல் உண்டு; எனவே அவர்களிடம் நேரடியாக உதவி தேடலாம் என்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்பதை அறிய முடிகின்றது.

சுலைமான் (அலை) அவர்கள் குறிப்பிட்ட ஆற்றல் ஒருவரிடம் இருந்ததைக் கண்ட போது அதற்குரிய வேலையைச் செய்யுமாறு உத்தரவிட்டார்கள். இவர்களோ அவ்லியாக்களிடம் (?) கணக்கு வழக்கில்லாமல் கண்டதையும் கேட்கிறார்கள். அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய விஷயங்களையும் கேட்கிறார்கள்.

அல்லாஹ் வேறு, அவ்லியாக்கள் வேறு என்பதெல்லாம் இவர்களின் வெறும் வார்த்தை தான். இவர்களின் நம்பிக்கையைப் பார்த்தால் அல்லாஹ்விற்குரிய அத்தனை ஆற்றல்களையும் அவ்லியாக்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.

சிலை வழிபாட்டிற்கும் இவர்களின் கப்று வழிபாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை கல்லின் மீது வைத்தால் ஷிர்க் என்றும் குஃப்ர் என்றும் கூறும் இவர்கள் அதே நம்பிக்கையை இறந்தவர்களின் மீது வைத்தால் ஷிர்க் இல்லை என்கிறார்கள்.

பாருங்கள்! இறந்தவர்களின் பெயரால் ஷைத்தான் இவர்களை எப்படி ஷிர்க்கில் தள்ளுகிறான்?
நன்றி : http://www.onlinepj.com
********************************************************************************* 
இதுபற்றிய மேலும் சில பதிவுகள் .....
  1. காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  2. இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  3. மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  4. டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  5. கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  6. யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  7. ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  8. உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  9. இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  10. யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  11. யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  12. சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  13. ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில்  உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  14. மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  15. இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  16. யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  17.  நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  18. மவ்லூத் மறுப்புக்கான காரணம்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்