'இறந்தவர்கள் செவியேற்பார்கள்' என்ற பிழையான கருத்தை சமூகத்தில் கூறி வருபவர்கள், தங்கள் கூற்றிற்கு முன்வைக்கும் ஆதாரங்களை தொடராக நாம் பார்த்து வருகிறோம்;. அவர்கள் முன்வைக்கும் ஏனைய ஆதாரங்களையும், அவற்றிற்கான தக்க பதில்களையும் இந்தத் தொடரில் நோக்குவோம்.
வழிகேடர்களின் ஆறாவது ஆதாரம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) 'பகீஉல் ஃகர்கத்' பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்: அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வஅத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: முஸ்லிம்: 1773
இதிலிருந்து இவர்கள் முன்வைக்கும் வாதம்
////மரணித்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள் என்றால் எப்படி
மரணித்தவர்களை விழித்து ஸலாம் கூறுமாறு இஸ்லாம் கூறியிருக்கும்? எனவே மரணித்தவர்களுக்கு நாம் ஸலாம் கூறுவதிலிருந்து, 'இறந்தவர்கள் இங்குள்ள விடயங்களை அறிகிறார்கள்' என்பதே அதன் அர்த்தமாகும்.//////
எமது பதில்: இது கூட இவர்கள் சரியான ஆதாரத்தை தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவே ஆகும். இப்றாஹீம் நபியவர்கள் சிலைகளிடம் சென்று பேசியதாக அல்லாஹ் அல்குர்ஆனின் 37:91 வது வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான். இப்றாஹீம் நபி சிலையிடம் பேசியதால் சிலை கேட்கும் என்று விளங்குவது அறிவுபூர்வமாக அமையுமா?; அமையவே அமையாது. ஒரு மனிதன் சிலைகளிடம் பேசினால் அவன் பேசியது தவறு என்றுதான் நாம் கூறலாமே தவிர சிலைகள் கேட்கும் என்று வாதிடுவது முட்டாள்தனமானதாகும். இப்றாஹீம் நபி கூட சிலைகள் கேட்காது என்பதை புரிய வைக்கவே பேசினார் என்பதை குறித்த வசனங்களை அடுத்துள்ள பகுதிகளை வாசிக்கும் போது நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். எம்மைப் பொருத்தமட்டில் இஸ்லாத்தின் மூலாதாரமாக திருக்குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மாத்திரம் தான் பின்பற்றுகிறோம். இறந்தவர்கள் செவியுறுகிறார்கள் என வாதிடுவோர் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் எனும் கொள்கையில் உள்ளவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே! நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டுமெனும் கொள்கையில் இவர்கள் உறுதியாக இருந்தால் இவர்கள் எடுத்து வைத்த மேற்குறித்த ஆதாரத்திற்கு உமர் (ரலி) அவர்களது பின்வரும் சம்பவம் சிறந்த பதிலடியாகத் திகழுகிறது. உமர்(ரழி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட வரும் போது இவ்வாறு கூறுகிறார்கள்.
'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். அறிவிப்பவர்: உமர்(ரழி) நூல்: புஹாரீ 1597
கல் என்பது ஒரு சடப்பொருளாகும். அதனால் எதையும் கேட்க இயலாது. ஓன்றும் செய்ய இயலாது. உமர்(ரழி) அவர்கள் கல்லுடன் பேசினார்கள் என்பதால் நாம் பேசுவது கல் கேட்கும் என்று வாதிடலாமா? வாதிட்டால் அது முட்டாள்தனமல்லவா? ஒரு மனிதன் கல்லுடன் பேசினால் அவன் பேசியது தவறு என்றுதான் நாம் கூறலாமே தவிர கல் கேட்கும் என்று வாதிடுவது முட்டாள்தனமானதாகும். உமர்(ரழி) அவர்கள் கூட நபி(ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றுகிறேன் என்பதைப் புரிய வைக்கவே கல்லை நோக்கிப் பேசினார்கள் என்பதை அவரது பின்னுள்ள வாசகம் நன்கு உறுதி செய்கின்றது.
இந்த வசனத்தின் சரியான அர்த்தம் என்ன?
மண்ணறைகளை தரிசனம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் எமக்கு அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள். மண்ணறைகளை தரிசனம் செய்வது மறுமையையும் மரணத்தையும் நினைவூட்டக் கூடியது என்பதை எமக்கு அழகாக விளக்கியுள்ளார்கள். எனவே நாம் அங்கு சென்று அவர்களுக்கு ஸலாம் கூறி, எமது மரணத்தையும், மறுமைநிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும். இதற்கு மாற்றமாக அங்குள்ளவர்களுக்கு நாம் ஸலாம் கூறுவதால் அதற்கு அவர்கள் பதில் அளிக்கிறார்கள் என்று விளங்குவது மிகவும் தவறான விளக்கமாகும்.
*****************************************************************************
இதுபற்றிய மேலும் சில பதிவுகள் .....
இறந்தவருக்கு ஸலாம் சொல்வது ஏன்
- காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மவ்லூத் மறுப்புக்கான காரணம் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்