சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் இறந்தோர்களை வணங்கும் கூட்டத்தினர், சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் பொய்யான தகவல்களையும் கொண்டு வந்து இறந்தவர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூசாமல் எழுதியுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் இவர்கள் ஆதாரங்களாக குறிப்பிடும் சிலவற்றிற்கு சரியான விளக்கத்தை அறிந்துகொள்வோம்.
மூன்றாவது ஆதாரம்?
"என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டிய போது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே'' என்றார். "நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 2:260)
/////இறந்த பறவைகளை அதன் பெயர் கூறி, மயிலே, புறாவே, கோழியே, காகமே என்று அழைத்ததால் ஷிர்க்கை எதிர்த்துப் போராடிய இப்ராஹீம் நபி ஷிர்க் வைத்து விட்டார் என்று கூறுவார்களா?/////
இப்ராஹீம் நபி உதவி தேடும் நோக்கில் அழைக்கவில்லை; அல்லாஹ் அவர்களுக்குக் காட்டிய அற்புதத்தைக் காண, அவனது கட்டளைப்படி அழைத்தார்கள் என பளிச்சென்று தெரியும் இந்த விஷயத்தை சம்பந்தமில்லாமல் பொருத்துகின்ற இவர்களின் புத்தியை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை.
இப்ராஹீம் நபி செத்த பறவையை அழைத்துள்ளார்கள். சுலைமான் நபி உயிருள்ள பறவையை அழைத்துள்ளார்கள். இன்னும் பலவற்றையும் அழைத்துள்ளனர். இவை இறைத்தூதர் என்ற சிறப்புத் தகுதியின் அடிப்படையில் அழைத்ததாகும்.
இது இறைத்தூதர்களுக்கான சிறப்புத் தகுதி என்று இந்தக் கூறுகெட்டவர்களும் நினைப்பதால் தான் செத்துப் போன பறவைகளையும் பாம்பையும் பல்லியையும் உஹது மலையையும் இவர்கள் அழைப்பதில்லை. தாங்கள் எதை நம்பவில்லையோ அதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இங்கு அழைப்பவர்கள் உயர்வானவர்களாகவும், அழைக்கப்படுபவர்கள் ஆற்றல் குறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். இதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதன் மூலம் அப்துல்காதிர் ஜீலானி செத்த பறவையைப் போன்றவர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றார்கள் என்று தான் அர்த்தம்.
(ஏகத்துவம் டிசம்பர் 2012)
*********************************************************************************
மேலும் சில பதிவுகள் ..*********************************************************************************
- ஹுனைப் ரலி நபிகளாரின் பொருட்டால் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- பிலால் ரலி கபுரை முத்தமிட்டாரா ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- அபு அய்யூப் அழ அன்சாரி கபுரை முத்தமிட்டாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- அவுலியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஒரு நல்லடியாருக்கு பல கபுருகள்..! காண இங்கே கிளிக் செய்யவும்
- சிலைகள் வேறு சமாதிகள் வேரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- முஷ்ரிக்குகள் அன்றும் இன்றும் .!அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஷிர்க் என்றால் என்ன ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- உணவளிக்கும் அதிகாரம் நபிகளாருக்கு உண்டா ? தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஜியாரத்தின் இன்றைய நிலை என்ன ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மதுகபுக்கும் இமாமுக்கும் தொடர்பு உண்டா ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- கபுரின் மேல் சாயக்கூடது என்பது கபூர் கட்ட ஆதாரமா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்துவிட்ட மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- அப்துல்காதர் வரமாட்டார் நிரூபிக்க நாங்க தயார் .! சவாலை எதிர் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- நபிகளாருக்கு உதவி செய்த மூசா நபி ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- கேட்கமாட்டார்கள் என்றால் சலாம் சொல்வது ஏன்?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- அல்லாஹ் காட்டிய உதாரணம் தவறாகுமா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்