"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கபுரை முத்தமிட்ட பிலால் காலடியோசை சுவர்க்கத்தில்..

கபுரை முத்தமிட்ட பிலால் காலடியோசை சுவர்க்கத்தில் ‘’ என்று சமாதி வழிபாட்டினர் அடிக்கடி கூறுவதை நாம் பார்க்கிறோம்
பிலால் (ரலி )காலடியோசை சுவர்க்கத்தில் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் பிலால்( ரலி ) அவர்கள் கபுரை முத்தமிட்டார் எனும் இந்த அச்சம்பவம் சரியா என்று பார்ப்போம்
அச்சம்பவம் எம்மத்தியில் பரவலடைந்ததற்கு நாகூர் E.M. ஹனீபா அவர்களும் முக்கிய காரனம்.

சம்பவம் இதுதான்:

(நபி (ஸல்) அவர்களின் அவர்களின் மரணத்திற்குப் பின்) பிலால் (ரழி) அவர்கள் கலீபா அபூ பக்கர் (ரழி) அவர்களிடம் வந்து
"ஒரு விசுவாசியின் சிறந்த நற்செயல் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதே" என நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்" எனக் கூறினார்கள். அதற்கு அபூ பக்கர் (ரழி) அவர்கள் "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் கேட்க "நான் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் பிரிய விரும்புகிறேன்" என பதிலளித்தார்கள்.

அதற்கு அபூ பக்கர் (ரழி) அவர்களோ "பிலாலே நீங்கள் சென்றுவிட்டால் யார் அதான் சொல்வது? எனவே நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள் " எனக் கூறினார்கள்.

பிலால் (ரழி) அவர்களோ "நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான் யாருக்கும் அதான் சொல்ல மாட்டேன்; நீங்கள் அடிமையாக இருந்த என்னை உங்களுக்காகவே உரிமை விட்டிருந்தால் நான் இங்கேயே தங்கியிருக்கிறேன். இல்லை அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் உரிமைவிட்டிருந்தால் என்னை அவனுக்காகவே விட்டுவிடுங்கள்" எனக் கூறினார்கள்.

அதற்கு அபூ பக்கர் (ரழி) அவர்கள் " நான் உங்களை அல்லாஹ்வுக் காகவே உரிமை விட்டேன்" எனக் கூற பிலால் (ரழி) அவர்கள் ஷாம் தேசம் புறப்பட்டு அங்கே அல்லாஹ்வின் பாதையில் போராடினார்கள்.

சில வருடங்கள் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரழி) அவர்களது கனவில் வந்து "பிலாலே! எம்மீது என்ன கோபம்?எம்மை தரிசிக்க வரமாட்டீரோ" எனக் கேட்டார்கள்.

கவலையுடன் விழித்தெழுந்த பிலால் (ரழி) அவர்கள் மதீனாவுக்கு வந்து நபியவர்களின் கப்ரடிக்குச் சென்று அங்கே அழுது புரண்டார்கள். அப்போது அங்கே வந்த ஹஸன் ,ஹுஸைன் (ரழி) அவர்கள் இருவரையும் பிலால் (ரழி) அவர்கள் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். அவ்விருவரும் ஸஹர் வேளையில் பிலால் (ரழி) அவர்களை அதான் சொல்லும் படி வேண்டிக் கொண்டார்கள்.

உடனே பிலால் (ரழி) அவர்கள் பள்ளிவாயிலின் கூரை மீதேறி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என அதான் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்போது மதீனா நகரமே அதிர்ந்தது. அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்றதும் இன்னும் அதிர்ந்தது.அஷ்ஹது அன்ன முஹம்மது ரஸூலுல்லாஹ் என்றதும் வீடுகளில் இருந்த பெண்கள் எல்லாம் வெளியே வந்து அழலானார்கள். என்றுமேயில்லாதவாறு அன்று அவர்கள் அழுதார்கள். உமர் (ரழி) அவர்கள் எல்லோரையும் விட அதிகம் அழுதவ்ராக இருந்தார்கள்.

இதுதான் சம்பவம், இதைத்தான் நாகூர் ஈ எம் ஹனீபா அவர்கள் இன்னும் சில விடயங்களையும் சேர்த்து மெருகூட்டி
"பெரியார் பிலாலின் தியாக வாழ்வை கூறுவேன் இதோ..... பிரியாத அன்பு பூண்டனர் பெருமானார் மீதிலே..நபி பெருமானார் மீதிலே.... எனப் பாடியுள்ளார்.

இனி, இச்சம்பவம் உன்மையிலேயே நிகழ்ந்தா? ஆதாரபூர்வமானதா? என்பதை நோக்கிவிடுவோம்.

குறித்த சம்பவம் இமாம் இப்னு அஸாகிர் அவர்கள் எழுதிய (தாரீ கு திமிஷ்க்) டமஸ்கஸ் நகர வரலாறு என்ற நூலிலும் இமாம் இப்னு அபீ யஃலா அவர்களின் தபகாதுல் ஹனாபிலா என்ற கிரந்தத்திலும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் குன்யதுத் தாலிபீன் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் அறிவிப்பாளர் வரிசையில் பின் வரும் கோளாறுகள் இருப்பதை அறிவிப்பாளர் திறனாய்வுக்கலை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

1-இதில் இடம் பெறும் இப்றாஹீம் பின் முஹம்மத் என்பவர் யார் என்றே அறியப்படாத ஒரு அனாமோதய மனிதராவார்.

2-இன்னும் இதில் இடம் பெறும் ஸுலைமான் பின் பிலால் என்பவர் பற்றிய இமாம் இப்னு அஸாகிர் அவர்கள் பதிவு செய்திருந்தாலும் அவரது நம்பகத்தன்மை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இதன் காரணமாக இச்செய்தியை இமாம்களான தஹபி மற்றும் மற்றும் இப்னு அப்தில் ஹாதி ஆகியோர் கடும் பலவீனமானது எனக்கூற
இமாம் ஷௌகானி அவர்கள் அடிப்படையே இல்லாத செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்களோ இச் செய்தி தொளிவாக இட்டுக் கட்டப்பட்டதாகும் என விமர்சித்துள்ளார்கள்.

ஆகவே இந்த பலவீனமான அடிப்படையே இல்லாத இட்டுக் கட்டப்பட்ட செய்தியை ஆதாரமாக வைத்து கபுருகளை முத்தமிட வேண்டாம் என சமாதி வலிபாட்டினரை கேட்டுக்கொள்கிறேன்

----------------------------------------------------------------------------------------------------------------------
கபுர்களை சந்திக்க சென்றால் அதை தொடுதல் முத்தம் கொடுத்தல் அதன் மேல் அமருதல் யூதர்களின் பழக்கமாகும்

Shaykh Abdul Qadir Jeelani RA said
“When you visit the graves then do not put your hands on them or kiss them as this is the habit of the jews, nor sit on the graves or rest against them..” (al-Ghuniyyah (1/91).

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்