"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

உமர் (ரலி ) முஹம்மதே முஹம்மதே என்று அழைத்தார்களா?

உமர் (ரலி ) முஹம்மதே முஹம்மதே என்று  அழைத்தார்களா 

ஒரு முறை இப்னு உமர் (ரழி) அவர்களின் கால் மரித்துப் போய்விட்டது , அப்போது அங்கிருந்த ஒருவர் இப்னு உமர் அவர்களிடம் உமக்கு மிக விருப்பமான நபரை அழையும் என்றார் ; அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் " முஹம்மதா" முஹம்மதே என்றழைத்தார்கள் ; உடனே கால் குணமடைந்து விட்டது ( அல் அதபுல் முப்ரத் 1/355)

ஸூபிய்யாக்கள் தரீக்காவாதிகளினால் அடிக்கடி இச்செய்தி சொல்லப்படுவதுண்டு

இது ஆதாரமற்ற அறிவிப்பாகும் , இச்செய்தியில் வரும் " அபூ இஸ்ஹாக் அஸ்ஸப்இ" பிரபலமான இருட்டடிப்பாளாவார் ,இங்கு " அன்" என்ற இருட்டடிப்பிற்கான சொல்லையே அவர் பாவித்துள்ளார்

மேலும் இதே செய்தியை இப்னுஸ் ஸுன்னி " அமலுல் யௌமி வல் லைலா "( 169) கொண்டு வருகிறார் அதிலும் மேலே சொன்ன இஸ்ஹாக் வருகிறார் , மேலும் அதில் " முஹம்மத் பின் முஸ்அப்" என்ற பலமற்ற ஒருவரும் உள்ளார் என்பதோடு அதில் இஸ்ராஈல் என்ற "இக்திலாத்" நிலையில் உள்ளவரும் இடம் பெறுகிறார்

இதே இப்னுஸ் ஸுன்னி அவர்கள் கொண்டு வரும் இன்னுமொரு அறிவிப்பும் பலமற்றதாகும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்