"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கற்சிலைகளா? பெரியவர்களா?

மக்கத்துக் காபிர்கள் சிலைகளைத் தான் வணங்கினார்கள்! நாங்கள் பெரியார்களைத் தானே வணங்குகிறோம் என்று கூறக் கூடியவர்களின் கருத்தை ஆராய்வோம்.
சிலைகளை வணங்கினார்கள் என்பதும் உண்மைதான் என்றாலும், எவரும் அந்தக் கல்லுக்கு சக்தி இருக்கிறதென்று நம்பி அதற்கு அடிபணியவில்லை. மாறாக ஏதாவது ஒரு பெரியாரை மரியாதை செய்கிறோம் என்று கருதிக் கொண்டு, அவர்களை ஓர்முகப்படுத்துவதற்காக ஏதேனும் சின்னங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. சிலர் பெரியார்களின் உருவங்களை சமைத்துக் கொள்கிறார்கள். சிலர் கப்ருகளை சின்னமாக்குகிறார்கள். பெரியார்களுக்கு வழிபாடுகள் செய்ய இன்று கப்ருகள் எப்படி சின்னமாக அமைந்து இருக்கிறதோ, அதுபோல் அன்று கற்சிலைகள் இருந்தன.
நூஹ்நபி அவர்கள் காலத்தில் யகூஸ், யவூக், நஸ்ரு, வத் என்ற கற்சிலைகளை வணங்கி வந்தனர் என்பதை நூஹ் அத்தியாயம் 23வது வசனம் கூறுகிறது. இதற்கு இமாம் இப்னு ஜரீர் தப்ரீ, அவர்கள் தனது விரிவுரையில் “அவர்களெல்லாம் நல்லடியார்களாக இருந்தவர்கள். ஷைத்தான் அவர்கள் பெயரால் வழிகெடுத்து விட்டான்” என்று தெளிவு தருகிறார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இந்தக் கருத்தை சொன்னதாக ஹாபிழ் இப்னு அஸாகிர் அவர்கள் சனதுடன் குறிப்பிடுகிறார்கள். இன்னும் பல அறிவிப்புகளை ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இவைகளெல்லாம் சிலைகளாக அமைத்துக் கொண்டது நல்லடியார்களைத் தான் அவர்க் பெயரைச் சொல்லித்தான் ஷைத்தானால் மக்களை எளிதாக வழி கெடுக்க இயலும்.
மக்கத்துக் காபிர்களில் மிகச் சிலர் சிலைகளை அழைத்துப் பிரார்த்தித்தது போல், வேறு சிலர் சிலைகள் யார் பெயரால் உருவகப்படுத்தப்பட்டதோ அந்த சிலைகள் யார் பெயரால் உருவகப்படுத்தப்பட்டதோ அந்த அல்லாஹ்வின் அடியார்களையும் அழைத்து வந்துள்ளனர். அதை உணர்த்தும் குர்ஆன் வசனங்களையும் காண்போம்.

“நீங்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடிமைகளே யாவர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வேண்டுமானால்) அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்! அவர்கள் பதில் தரட்டுமே!” (அல்குர்ஆன் 7 : 194)

இந்நிராகரிப்போர் , நம்மை விட்டு விட்டு, நம்முடைய அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள எண்ணுகின்றார்களா? நிச்சயமாக இந்நிராகரிப்போரை உபசரிப்பதற்காகவே நரகத்தையே நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம். (அல்குர்ஆன் 18: 102)

(அவர்கள் மாடு போன்றவைகளை கப்ருக்கு அருகே அறுத்துப் பலியிடுபவர்களாக இருந்தனர். இவ்வாறு) அறுத்துப் பலியிடுதல் இஸ்லாத்தில் இல்லை என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார். ஆதாரம் : அபூதாவூத், பக்கம் 103 பாகம் 2)

இவ்விரு வசனங்களில் முதல் வசனத்தில் “உங்களைப் போன்ற அடியார்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது விக்கிரகங்களையா விக்கிரகங்கள் நம்மைப் போன்ற அடியார்களா? வாசகர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.


இரண்டாவது வசனத்தில் “எனது அடியார்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது விக்கிரகங்களையா? விக்கிரகங்களுக்கு அடியார்கள் என்று சொல்ல இயலுமா? அல்லாஹ்வின் அடியார்களைத்தான் அவர்கள் பிரார்த்தித்து அழைத்துள்ளனர் என்பதை இவ்விரு வசனங்களும் தெளிவு படுத்தும்.

அல்லாஹ்வையன்றி எவர்களை இவர்கள் அழைக்கின்றார்களோ, அவர்களால் எந்தப் பொருளையும் படைக்க முடியாது. மாறாக அவர்களே படைக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் இறந்தவர்களே! உயிருள்ளவர்களன்று மேலும் எப்பொழுது எழுப்பப்படுவர் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 16 : 20, 21)

இந்த வசனத்தில் “மக்கத்துக் காபிர்கள் யாரைப் பிரார்த்தித்தார்களோ அவர்களை இறந்தவர்கள், உயிருள்ளவர்கள் அல்ல” என்று அல்லாஹ் கூறுகிறான். “உயிருள்ளவர்கள் அல்ல” என்பதும், இறந்தவர்கள் என்பதும் மனிதன் மற்றும் உயிரினங்களையே குறிப்பிடும். “அவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதை அறியமாட்டார்கள்” என்று அல்லாஹ் கூறி இருப்பதும் இக்கருத்தை உறுதி செய்கின்றது. மாறாக மனிதனுக்குத்தான் அது பயன்படுத்தப்படும். இந்த வசனத்திலிருந்தும் மக்கத்துக் காபிர்கள் “அடியார்களைத் தான் அழைத்தார்கள்” என்பது தெளிவு்.

இவை எல்லாவற்றையும் விட மிகத் தெளிவாகப் பின்வரும் வசனம் இந்தக் கருத்தை ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது.
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள் தானா உங்களை வணங்கிக் கொண்டு இருந்தார்கள் என்று அல்லாஹ் கேட்பான். (இதற்கு மலக்குகள்) நீ மிகத் தூய்மையானவன்! நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்ல. எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் அவர்கள் மீது விசுவாசம் கொண்டிருந்தனர்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 34 : 40,41)
“இங்கே மலக்குகளை வணங்கியவர்களும் தப்ப முடியாது” என்று தெளிவாக்குகின்றான். நல்லடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்றால், மலக்குகள் நல்லடியார்கள் அல்லவா? அவர்கள் கற்சிலைகள் அல்லவே. அப்படியிருந்தும் அவர்கள் நரக வேதனையைச் சுவைப்பார்கள் என்று இதற்கு அடுத்த வசனத்திலேயே அல்லாஹ் கூறிவிட்டானே! அது ஏன்? 3 : 80 வசனமும், 3 : 79 வசனமும் இந்த உண்மையைத் தெளிவாக்கும்.

 நன்றி : annajaath.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்