"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள்

கபுருகளை வணங்காதீர்கள் என்று நாம் கூறும்போது ....வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறி

என்னுடைய ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள்

 என்று கபுரை வணங்கும் பரலேவிகள் ஒரு பலவீனமான ஹதீஸை காட்டுவார்கள் 
இவர்கள் காட்டும் ஆதாரத்தின் நிலையயும் அதற்கான பதில்களையும் அறிந்து கொள்வோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

 اطلبوا الحوائج الي ذوي الرحمة من امتي
 
 'என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.' (ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்.)

பதில் 1

இது பலவீனமான செய்தியாகும். அத்துடன் இதில் இவர்களின் குட்டும் அம்பலமாகிறது.
இச்செய்தி இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் பைஹகீ, தப்ரானீயில் இல்லை. மாறாக இப்னு அஸாகிரின் தாரீகு திமிஷ்க் பாகம் 43 பக்கம் 5 மற்றும் இப்னு முன்தஹ் அவர்களின் மஜாலிஸ் பக் 33 உள்ளிட்ட நூல்களில் தான் இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் இடம் பெற்றுள்ளது.
இச்செய்திகளில் உள்ள பலவீனத்தை அறியும் முன் இதற்கு இவர்கள் செய்த பொருள் சரியா? என்பதை பார்ப்போம்.

اطلبوا الحوائج الي ذوي الرحمة

என்ற வார்த்தைக்கு ரஹ்மத்தான கூட்டத்தார்களிடம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று பொருள் செய்து ரஹ்மத்தான கூட்டத்தார் என்றால் அவர்கள் தான் வலீமார்கள், நாதாக்கள். அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்டு பிரார்த்திக்கலாம் என வியாக்கியானம் அளிக்கிறார்கள்.

இச்சொல்லுக்கான அர்த்தம் இதுவல்ல. இவர்கள் குறிப்பிடும் பொருளில் இச்செய்தி இல்லை.

மனிதர்களிடம் துஆ செய்வதைப் பற்றி இச்செய்தி பேசவில்லை. யாசகம், பொருளாதார உதவி கேட்பது பற்றித்தான் இச்செய்தியில் சொல்லப்படுகிறது. யாரிடம் யாசகம் கேட்கலாம் - யாரிடம் கேட்கக் கூடாது என்பதை தான் இச்செய்தி சொல்கிறது என்பதை அதன் முழுமையான மொழிபெயர்ப்பை அறியும் போது தெரியலாம்.

اطلبوا الحوائج إلى ذوي الرحمة من أمتي ترزقوا وتنجحوا فإن الله يقول رحمتي في ذوي الرحمة من عبادي ولا تطلبوا الحوائج عند القاسية قلوبهم فلا ترزقوا ولا تنجحوا

என் சமுதாயத்தில் உள்ள இரக்கமுடையோரிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள். அப்போது தான் உணவளிக்கப்படுவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். எனது அருள் என் அடியார்களில் உள்ள இரக்கமுடையோருக்குத்தான் என்று அல்லாஹ் கூறியுள்ளான். கடின சித்தம் கொண்டோரிடம் தேவைகளைக் கேட்காதீர்கள். அவர்களிடம் கேட்டால் நீங்கள் உணவளிக்கப்பட மாட்டீர்கள். வெற்றியும் கிடைக்காது என நபிகள் நாயகம் கூறினார்கள்.

ரஹ்மத் என்றால் அன்பு, இரக்கம், அருள் என பல அர்த்தங்கள் உள்ளன.
ரஹ்மத் உடையோரிடம் கேட்டால் உணவு கிடைக்கும் என்றால் இந்த ரஹ்மத் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

இரக்கம் உள்ளவனிடம் யாசகம் கேட்டால் தான் அவன் எதையாவது தருவான். உண்ண உணவு கிடைக்கும்; கடுகடுப்பான நபர்களிடம் கேட்டால் அவர்கள் எதையும் தரமாட்டார்கள், உண்ண உணவும் கிடைக்காது என்றும் தான் இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே இது மனிதர்களிடம் யாசகம், பொருளாதார உதவி கேட்பதைப் பற்றித் தான் குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்.
மற்றபடி மனிதர்களிடம் துஆச் செய்து உங்கள் தேவைகளைக் கேளுங்கள் என்று இந்த பலவீனமான செய்தியில் (கூட) இல்லை.
ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்லும் பொருளில் தான் இச்செய்தி உள்ளது என்றாலும் அப்போதும் இது ஏற்கப்படாது. காரணம் இது மிகவும் பலவீனமான செய்தியாகும்.

இப்னு அஸாகிரின் அறிவிப்பில் கல்ஃப் பின் யஹ்யா என்பார் இடம் பெறுகிறார்.
الجرح والتعديل (3/ 372)

1697 - خلف بن يحيى الخراساني بخارى

وسألته عنه فقال: متروك الحديث كان كذابا لا يشتغل به ولا بحديثه
இவரை அபூஹாதம் அவர்கள் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர், பொய்யர், இவரும் இவரது ஹதீஸ்களும் கண்டு கொள்ளப்படாது என்று விமர்சித்துள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 3 பக்கம் 372

மேலும் இதில் இடம்பெறும் அலீ பின் தாஹிர் அல்குரஷீ என்பவரின் நம்பகத்தன்மை ஹதீஸ் கலை அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை.
இப்னு முன்தஹ் அவர்களின் அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்ஹாரிஸ் என்பார் இடம்பெறுகிறார்.
இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று அறிஞர்களால் சந்தேகிக்கப்படுபவர் ஆவார்.

நம்பகமானவர்கள் பெயரில் அரிதானவைகளைச் சொல்கிறார் என்று ஹாகிம் அவர்களும் பலவீனமானவர் என்று அபூஸூர்ஆ அவர்களும் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என்று அபூஹாதம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இன்னும் பல விமர்சன்ங்கள் இவர் மீது உள்ளது.
பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம் 2 பக்கம் 496

அடுத்து இதில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் மர்வான் என்பவரையும் அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று நஸாயி மற்றும் அபூஹாதம் அவர்களும் மதிப்பற்றவர் என்று ஸஃதீ, நம்பகமானவர் அல்ல என்று இப்னு மயீன் அவர்களும் இவரது செய்திகள் கண்டிப்பாக எழுதப்படாது என்று புகாரி அவர்களும் விமர்சித்துள்ளனர்.
பார்க்க தஹ்தீபுல் கமால் பாகம் 26 பக்கம் 392, 393


அந்தோ பரிதாபம்
கப்ர் வணங்கிகளின் நிலையைக் கண்டால் உண்மையில் பரிதாபமாகவே உள்ளது.
மிகவும் பலவீனமான செய்தியைக் கூட உள்ளதை உள்ளபடி கூறி தங்கள் கருத்தை நிலைநாட்ட இவர்களால் முடியவில்லை. மிகவும் பலவீனமான செய்தி, மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியில் அதன் யதார்த்த அர்த்தத்தை மாற்றி தங்கள் சொந்தச் சரக்குகளை உள்ளே திணித்தால் மட்டுமே தங்கள் கருத்தை நிலைநாட்ட முடியும் எனும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கப்ர் வணக்கத்தின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகம் அந்த இழிநிலைக்கும் இவர்களை இட்டுச்சென்று விட்டது என்பதை இது பளிச்சென்று காட்டுகிறது.

தப்ரானியில் என்ன உள்ளது?

இவர்கள் தப்ரானியில் உள்ளதாகக் குறிப்பிட்டார்கள் அல்லவா?
இவர்கள் குறிப்பிட்ட தப்ரானீயில் அபூஹூரைராவின் அறிவிப்பாக பின்வரும் வாசக அமைப்பில் உள்ளது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"اطْلُبُوا الْحَوَائِجَ إِلَى حِسَانِ الْوُجُوهِ".
அழகிய முகம் கொண்டவர்களிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள்.
தப்ரானீ பாகம் 19 பக்கம்  309

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அழகானவர்களிடம் துஆச் செய்யலாம், அழகற்றவர்களிடம் துஆச் செய்யக் கூடாது என்று கப்ர் வணங்கிகள் வாதிடுவார்கள் போலும். வாதிட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இமாமைப் பள்ளியில் சேர்க்க அவரின் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொன்னவர்கள் அவ்லியா என்றால் அவர் அழகாக இருக்க வேண்டும், அழகான அவ்லியாவிடம் தான் நாம் துஆச் செய்ய முடியும் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்பட என்னவுள்ளது?

இந்தச் செய்தியின் பொருள் என்ன என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இதுவும் பலவீனமான செய்தியே.

தப்ரானியின் அறிவிப்பில் தல்ஹா பின் அம்ர் இடம்பெறுகிறார்.
இவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று அஹ்மத் மற்றும் நஸாயி அவர்களும் இவர் ஒரு பொருட்டாக கருதப்பட மாட்டார் என்று புகாரி அவர்களும் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும் ஹதீஸில் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார் என்று இப்றாஹீம் பின் யஃகூப் அவர்களும் விமர்சித்துள்ளனர்.
தஹ்தீபுல்  கமால் பாகம் 13 பக்கம் 427

ஜாபிர் (ரலி) அறிவிப்பு

இதே செய்தி  தமாமுர் ராஸி அவர்களின் ஃபவாயித் எனும் நூலில் ஜாபிர் (ரலி) அறிவிப்பாக உள்ளது.
இதில் இடம்பெறும் சுலைமான் பின் கராஸ் மற்றும் உமர் பின் சுஹ்பான் ஆகிய இரு அறிவிப்பாளர்களுமே பலவீனமானவர்கள் ஆவர். அறிஞர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுலைமான் பின் கராஸை இப்னு அதீ, அபூஹாதம் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் பாகம் 2 பக்கம் 23

அவரது அதிகமான செய்திகளில் தவறு உள்ளது என்று உகைலீ குறிப்பிடுகிறார்.
அல்லுஅஃபாஉ லில் உகைலீ பாகம் 2 பக்கம் 138

உமர் பின் சுஹ்பானை புகாரி மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.
தாரீகுல் கபீர் பாகம் 6 பக்கம் 165

அபூஹாதம் அவர்களும் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 6 பக்கம் 116

தப்ரானீயின் மற்றொரு அறிவிப்பில்
المعجم الأوسط (5/ 76)
قال رسول الله صلى الله عليه و سلم اطلبوا الفضل إلى الرحماء من امتي تعيشوا في اكنافهم
எனது சமுதாயத்தில் உள்ள இரக்கம் கொண்டோரிடம் செல்வத்தை வேண்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் பொறுப்பில் நீங்கள் வாழலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
முஃஜமுல் அவ்ஸத் பாகம் 5 பக்கம் 76

இச்செய்தியில் முஹம்மத் பின் மர்வான் என்பவர் இடம் பெறுகிறார். அவரது விமர்சனம் முந்தைய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மூஸா பின் முஹம்மத் என்பாரும் இதில் இடம் பெறுகிறார்.
ميزان الاعتدال (4/ 219)
 موسى بن محمد بن عطاء الدمياطي البلقاوى المقدسي الواعظ، أبو طاهر، أحد التلفى
كذبه أبو زرعة، وأبو حاتم.
وقال النسائي: ليس بثقة.
وقال الدارقطني وغيره: متروك.
قال الاسدي: فلم أعد إليه.
وقال ابن حبان: لا تحل الرواية عنه، كان يضع الحديث.
وقال ابن عدى: كان يسرق الحديث.
இப்னு ஹிப்பான், அபூஹாதம், அபூஸூர்ஆ உள்ளிட்ட பலரும் இவரைப் பொய்யர், ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம் 4 பக்கம் 219

மேலும் இறுதியாகக் குறிப்பிட்ட இச்செய்தியில் இவர்கள் சொன்ன கருத்து எதுவுமில்லை. நாம் முன்னர் சொன்ன கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த பலவீனமான செய்தி அமைந்துள்ளது. அதாவது உணவோ பொருளாதார உதவியோ கேட்பதாக இருந்தால் இரக்கமுள்ளவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு தந்து வாழ்வளிப்பார்கள் என்று தான் இதன் பொருள் அமைந்துள்ளது.

இந்தச் செய்தியும் பல்வேறு வாசக மாற்றங்களுடன் வரும் இச்செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
 -- onlinepj.in ---

-------------------------------------------------------------------------------
 حديث (اُطْلُبُوْا الْحَوَائِجَ إلى ذَوِي الرَّحْمَةِ ... ) 
"اُطْلُبُوْا الْحَوَائِجَ إلى ذَوِي الرَّحْمَةِ مِنْ أُمَّتِي تُرْزَقُوْنَ وَتَنْجَحُوْا، فَإنَّ اللهَ تَعَالىَ يَقُوْلُ: " رَحْمَتِي فِي ذَوِي الرَّحْمَةِ مِنْ عِبَادِي، وَلاَ تَطْلُبُوْا الحَوْائِجَ عِنَّدَ الْقَاسِيَةِ قُلُوْبُهُمْ، فَلاَ تُرْزَقُوْا وَلاَ تَنْجَحُوْا، فَإنَّ اللهَ تَعْالى يَقُوْلُ: إنَّ سُخْطِيَ فِيْهِمْ".

إسْنَادُهُ ضَعِيْفٌ جِدَّاً:

أَخْرَجَهُ العُقَيْلِيُّ فِي الضُّعَفَاءِ الكَبِيْرِ (1104)، مِنْ طَرِيقِ عَبْدِ الرَّحْمَنٍ السُّدِيِّ، عَنْ دَاوُدَ بْنِ أبِي هِنْدٍ، عَنْ أَبي نَضْرَةَ، عَنْ أبِي سَعِيْدٍ الخُدْرِيِّ، مَرْفُوْعَاً. وَمِنْ طَرِيْقِ السُّدِيِّ بهِ، 
أَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي الأَوْسَطِ (4717)،
 وَالخَرَائِطِيُّ فِي مَكَارِمِ الأخْلاَقِ (532)،
وابْنُ حِبَّانَ فِي المَجْرُوْحِيْنَ (2/286)،
وَأبُونُعَيْمٍ فِي أخْبَارِ أصْبَهَانَ (2009)، 
وَفِي طَبِقَاتِ المُحَدِّثيْنَ بِأصْبَهَانَ (791)،
 وَابْنُ الجَوْزِيِّ فِي المَوْضُوْعَاتِ (2/158).
 وَإسْنَادُهُ ضَعِيْفٌ جِدَّاً، السُّدِيُّ، هُوَ: الصَغِيْرُ، وَاسْمُهُ: مُحَمَّدٌ بْنِ مَرْوَانَ، قَاَلَ البُخَارِيُّ:" سْكَتُوْا عَنْهُ، لاَ يُكْتَبُ حَدِيْثُهُ البَتَّةَ"،
 وَقَاْلَ أبُوحَاتِمٍ: " ذَاهِبُ الحَدِيْثِ، مَترُوْكُ الحَدِيْثِ، لايُكْتَبُ حَدِيْثُهُ". 
وَقَالَ ابْنُ حِبَّانَ: "رَوَى عَنْهُ العِرَاقُيُوْنَ، كَانَ مِمَنْ يَرْوِى المَوْضُوْعَاتِ عَنِ الأثْبَاتِ، لاَيحِلُّ كِتَابَةُ حَدِيْثِهِ إلاَّ عَلى جِهْةِ الاعْتِبَارِ، وَلاَ الاحْتِجَاجُ بِهِ بِحَالٍ مِنْ الأحْوَالِ". 
وَقَاْلَ الذَّهْبِيُّ:" تَرْكُوْهُ، وَاتَّهَمَهُ بَعْضُهُمْ بِالكَذِبِ"، 
(1).وَقَالَ الحَافِظُ فِي التَّقْرِيْبِ: " مُتَّهَمٌ بِالكَذِبِ"(8/125): وَقَالَ الهَيْثَمِيُّ فِي المَجْمَعِ


  "رَوْاهُ الطَّبَرَانِيُّ فِي الأَوْسَطِ، وَفِيْهِ مُحَمَّدٌ بْنِ مَرْوَانٍ السُّدِيُّ الصَغِيْرِ، وَهُوَ مَتْرُوْكٌ".
 وَأَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي مُسْنَدِ الشِّهَابِ (700)، وَتَمَّامٌ الرَّازِيِّ فِي الفَوَائِدِ (1090)، مِنْ طَرِيْقِ عَبْدِ الغَفْارِ بْنِ الحَسَنِ بْنِ دِينَارَ، عَنْ دَاوُد بْنِ أبِي هِنْدٍ، بِهِ وَقاْلَ: "تَفْرَّدَ بِهِ عَبْدُ الغَفارِ بْنِ الحَسَنِ بْنِ دِينَارَ، وَهُوَ غَرِيْبٌ".
 وَأَخْرَجَهُ ابْنِ سَمْعُوْنَ فِي الأمَالِيِّ (26)، مِنْ طَرِيْقِ مُحَمَّدٍ بْنِ سِنَان، عَنْ هَانِئ بْنِ المُتَوْكِّلِ، عَنْ عَبْدِ الملِكِ بْنِ الخَطَّابِ، عَنْ دَاوُد بْنِ أبي هِنْدٍ بِهِ. وَهُوَ ضَعِيْفٌ أيْضَاً، مُحمَّدٌ بْنِ سِنَان، ضَعِيْفٌ، كَمَا فِي التَّقَرِيْبِ (5936)، وَهَانِئ بْنِ المُتَوْكِّلِ، قَالَ ابْنُ حِبَّانَ فِي المَجْرُوْحِيْنَ (3/97): "لاَ يَجُوْزُ الاحْتِجَاجُ بِهِ بِحَالٍ". وَلَهُ شَاهِدٌ مِنْ حَدِيْثِ عَليِّ رَضِيَ اللهُ عَنْهُ،
 أَخْرَجَهُ الحَاكِمُ فِي المُسْتَدْرَكِ (8023)، مِنْ طَرِيْقِ حِبَّانَ بْنِ عَليِّ عَنْ سَعْدٍ بْنِ طَرِيْفٍ عَنْ الأصْبغِ بْنِ نَباتَةَ،عَنْهُ وَصَحَحَهُ، وَقَالَ الذَّهْبِيُّ:" الأصْبغُ وَاهٍ،وَحِبَّانَ ضَعَّفُوْهُ".وَانْظُر:تَخْرِيْجَ الإحْيَاءِ (3276)، وَمِيْزَانَ الاعْتِدَالِ (2/602) ، وَلِسَانَ المِيْزَانِ(2/104)،وَمَجْمَعَ الزَّوَائِدِ (8/195)، وَاللآلِئِ المَصْنُوْعَةِ (2/63)، وَتَنْزِيْهَ الشَّرِيْعَةِ (2/130)، وَتَذْكِرَةَ المَوْضُوْعَاتِ (1/61)، وَالفَوَائِدَ المَجْمُوْعَةِ (28)، وَ كَشْفَ الخْفَاءِ (1/140)، وَالسِّلْسِّلَةَ الضَّعِيْفَةِ (1577)، وَ ضَعِيْفَ الجَامِعِ (900).
-------------------------------------------------------------------------------------------------------------------- 

இதுபற்றிய மேலும் சில பதிவுகள் .....
  1. காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  2. இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  3. மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  4. டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  5. கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  6. யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  7. ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  8. உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  9. இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  10. யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  11. யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  12. சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  13. ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில்  உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  14. மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  15. இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  16. யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  17.  நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  18. மவ்லூத் மறுப்புக்கான காரணம்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்