"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இறைவனுக்கு இணை வைத்ததினால், இறுதித் தூதரின் பெற்றோருக்கும் நரகமே!


இந்த உலக மக்கள் நேர்வழி பெற்று மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கச் சோலையில் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த நபியின் பெற்றோர்களின் மறுமை நிலை என்ன என்பதைப் பற்றி நாம் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.


ஏன் என்றால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த நபியவர்கள் முதன்மையாக இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாக லா இலாக இல்லல்லா முஹம்மதுன் ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபியவர்கள் இறைவனின் தூதராவார் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தார்கள்.
இந்தக் கொள்கையில் யார் உடன் படுகிறார்களோ அவா்கள் முஸ்லீம்கள் என்றும் யார் இதற்கு மாறு செய்கிறார்களோ அவா்கள் காபிர்கள் – மறுத்தவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.
இந்த வகையில் நபியின் காலத்திற்கு அதாவது நபியவர்கள் தங்களை இறைவனின் தூதர் என்று பிரச்சாரம் செய்வதற்கு முன்பாகவே நபியுடைய தாயும் தந்தையும் மரணித்துவிட்டார்கள். இந்த இருவரினுடையவும் மறுமை நிலை என்ன  என்பதைப் பற்றி ஆய்வதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.
நபியைப் பிள்ளையாய்ப் பெறுவதே சுவர்க்கம் செல்லப் போதுமானதா?
ஒருவர் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்றால் இஸ்லாம் காட்டிய அடிப்படையில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவனுடைய தூதரை ஏற்றுக் கொண்டு அவா் காட்டிய வழிப்பிரகாரம் வாழ வேண்டும் இதற்கு மாற்றமாக வாழ்ந்தால் அவா் நரகத்திற்குறியவராக ஆகிவிடுவார்.
இந்த வகையில் நபி இப்றாஹீம் அவா்களுடைய தந்தை ஆஸர் அவா்களைப் பற்றி இறைவன் சொல்லும் செய்தியைப் பார்த்தால் இதன் முழுத்தகவல் அழகாக புரிந்து விடும்.
சிலைகளை கடவுல்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்றாஹீம் தன் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவுட்டுவீராக ! (திருக்குா்ஆன் 6:74)

இப்றாஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே  அவர் அல்லாஹ்வின் எதிரி என்று அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்றாஹீம் பணிவுள்ளவர் சகிப்புத் தன்மை உள்ளவர். (திருக்குா்ஆன் 9:114)

மேற்கண்ட இரண்டு வசனங்களும் நபி இப்றாஹீம் அவா்களின் தந்தை ஆஸர் காபிராக நரகத்தில் நுழைந்தார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
நபியுடைய தந்தையாக இருந்தாலும் அவர் ஏக இறைவனுக்கு இணை வைக்காமல், அவனை மாத்திரம் வணங்கி அவனுடைய தூதருக்கு கட்டுப்பட்டு நடந்தால் மாத்திரமே அவருக்கு சுவர்க்கம் கிடைக்குமே தவிர, நபிமார்களைப் பெற்றெடுத்தார்கள் என்பதற்காக நபிமார்களின் பெற்றோருக்கு இறைவன் சுவர்க்கத்தை தரமாட்டான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நபியின் பெற்றோர் எந்த நபியைப் பின்பற்றினார்கள்?
நபி (ஸல்) அவா்கள் தூதராக அனுப்பப் படுவதற்கு முன்பு மரணித்த நபியின் தாயும், தந்தையும் எந்த மார்க்கத்தைப் பின்பற்றினார்கள்? எந்த மார்க்கத்தையும் பின்பற்றவில்லை என்றால், அவர்களின் நிலை என்ன அவா்களுக்கு என்ன தீர்பு சொல்லப்படும் என்பது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.
நபியவர்களுக்கு முன் வாழ்ந்த நபி (ஸல்) அவா்களின் போதனைகள் கிடைக்கப்பெறாத நபியின் பெற்றோர்களின் சமுதாயத்திற்கென்று எந்த நபிமார்களும் அனுப்பப்படவில்லை. ஆனாலும் அவா்கள் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்கு இணை வைக்காமல் வாழ்ந் ஒரு கூட்டத்தினர் இருந்தார்கள் அவா்கள் தான் ஸாபியீன்கள்.
நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும்ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:62)

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள், மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 5:69)

நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணை கற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில் தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன். (திருக்குர்ஆன் 22:17)
மேற்கண்ட வசனங்கள் ஸாபியீன்கள் என்றொரு பிரிவினர் வாழ்ந்தனைநமக்குத் தெளிவுபடுத்துகிறது.
ஸாபியீன்கள் நல்லவர்களா? நரகவாதிகளா?
ஸாபியீன்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் நபியின் காலத்திற்கு முன்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆனால் நபியவர்கள் எந்தக் கொள்கையை சொன்னால்களோ அந்தக் கொள்கைக்கு ஒப்பானவர்களாகத் தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது  ஹதீஸ்களை நாம் ஆய்வுசெய்யும்  போது தெரிய வரும் உண்மையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள் நபியவர்களுக்கு ஸாபிஇ என்றே பெயர் வைத்து அழைத்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபிஈ என்று தான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்ப்தையும்  மேற்கண்ட  ஹதீஸில்இருந்து நாம் அறியலாம்.
ஸாபிஈ என்ற வார்த்தை நல்ல மனிதர்களை அதாவது காபிர்களின் பார்வையில் சிலைகளை வணங்காதவர்களை குறிப்பதற்காகவே கையாளப்பட்டுள்ளது இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித் தோழர்கள் அந்தப் பெண்ணிடம் குறிப்பிட்ட வார்த்தை பற்றி ஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொல்கிறார்கள் எற்றால் கண்டிப்பாக ஸாபிஈ என்ற வார்த்தை இணை வைக்காதவர்களை குறிப்பதாகத் தான் இருந்திருக்கிறது என்பதை நாம் அறிய முடியும்.
அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்காவின் சிலை வணங்கிகள் இந்த ஸாபியீ யை அடியுங்கள் எனக் கூறி தாக்கினார்கள்.(புஹாரி 3522)
பல கடவுள் கொள்கையை மறுத்து தூய இஸ்லாமியக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மக்கத்துக் காபிர்கள் வைத்த பேர் ஸாபியீ என்பதாகும். அதனால் தான் அபூதர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிவித்த நேரம் இந்த ஸாபியீயை அடியுங்கள் என்று சொல்லித் தாக்கினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர்.வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத் தூதர்கள் வழியாகத் தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.
இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்.
நபியின் பெற்றோர் ஸாபியீன்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவா்களின் தாயும், தந்தையும் ஸாபியீன்களாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் நல்லவர்கள் பட்டியலி்ல் சேர்ந்து விடுவார்கள் ஆனால் ஹதீஸ்களைப் பார்க்கும் போது நபியவர்களின் பெற்றோர் ஸாபியீன்களாகவும் இருக்கவில்லை என்பதும் காபிர்களா – ஏக இறைவனை மறுத்தவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதும் தெரியவருகிறது.
நபியின் பெற்றோர் நரகவாதிகளே !
நபி (ஸல்) அவா்களின் பெற்றோர் காபிர்கள் – இறை மறுப்பாளர்கள் என்று நாமாக நமது சொந்தக் கருத்தையோ, அல்லது கற்பனைக் கதையையோ குறிப்பிடவில்லை.
தனது தாய், தந்தையர் நரகவாதிகள் என்று நபியவர்களே தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். 
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில் என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் ( இருக்கிறார்கள் )என்று கூறினார்கள். (முஸ்லிம் – 347)
மேற்கண்ட செய்தியில் தனது தந்தையின் நிலை பற்றி ஒருவர் நபியிடம் கேட்கிறார், அவருடைய தந்தை நரகத்தில் இருப்பதாக நபியவர்கள் சொன்னவுடன் அவர் திரும்பிச் செல்கிறார் அப்போது அவரை மீண்டும் அழைத்த நபியவர்கள் என் தந்தையும் (அப்துல்லாஹ்) உன் தந்தையும் நரகத்தில் இருக்கிறார்கள் என்று தனது தந்தையும் நரகத்தில் தான் இருக்கிறார் என்ற தகவலை குறிப்பிட்ட நபரிடத்தில் தெரிவித்து ஆறுதல் படுத்தி அனுப்புகிறார்கள்.
நபியின் தந்தை நரகத்தில் தான் இருக்கிறார் என்பதற்கு நேரடியான சான்றாக மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகிறது. 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள். (முஸ்லிம் – 1777)
நபியவர்கள் மரணித்த தன் தாய்க்காக பாவ மன்னிப்புக் கோர இறைவனிடம் அனுமதி கேட்கிறார்கள், இறைவன் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று மேற்கண்ட செய்தி சொல்கிறது. நபியின் தாய் முஸ்லிமாக இருந்திருந்தால் இறைவன் நபியின் தாய்க்காக பாவ மன்னிப்பு கேட்பதை ஆகுமாக்கியிருப்பான். அவர்கள் இணைவைத்து, குப்ரிய்யத்தில் இருந்ததினால் தான் அவா்களுக்காக பாவ மண்ணிப்புக் கேட்பதற்கு இறைவன் அனுமதி கொடுக்கவில்லை. என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
ஏன் என்றால் யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாறோ அவருக்காக நாம் பாவ மன்னிப்புக் கோர முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.
உங்களைவிட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதைவிட்டும் நாங்கள் விலகியவர்கள், உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டுவிட்டது. என்று தமது சமுதாயத்திடம் கூறிய விஷயத்தில் இப்றாஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்றாஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா ! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. (திருக்குா்ஆன் 60-4)
இப்றாஹீம் நபியவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்ட இறைவன், தனது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் பாவ மன்னிப்புத் தேடியதை மாத்திரம் தடை செய்கிறான். காரணம் இப்றாஹீம் நபியின் தந்தை தெளிவான குப்ரில் – இறை நிராகரிப்பில் இருந்தார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், நான் உங்களிடம், எனக்கு மாறுசெய்ய வேண்டாம் என்று கூற வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள்,இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது? என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம்,நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்) என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன  இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள்  கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும். (புகாரி – 3350)
மேலே உள்ள செய்தியில் இறை மறுப்பாளர்களுக்கு இறைவன் சுவர்க்கத்தை தடை செய்துவிட்டதாகவும் அதனால் தான் இப்றாஹீம் நபியின் தந்தைக்கும் நரகம் விதிக்கப் பட்டதாகவும் குறிப்பிடுகிறான்.
நீர் இணை கற்பித்தால் உனது நல்லறம் அழிந்துவிடும். நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக ! நன்றி செலுத்துவோரில் ஆவீராக ! என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குா்ஆன் 39:65)
யாராக இருந்தாலும், அது நபிமார்களாகவே இருந்தாலும் இறைவனுக்கு இணை வைத்தால் அவா்களின் நன்மைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அவா்கள் நரகத்தில் தான் நுழைவிக்கப்படுவார்கள் என்பதை மேற்கண்ட திருமறை வசனம் நமக்கு அறிவிக்கிறது.
நபி (ஸல்) அவா்களின் தந்தை அப்துல்லாஹ் அவா்களும், நபியவர்கள் தாயார் ஆமினா அவா்களும் இஸ்லாமிய அடிப்படையான ஏகத்துவத்திற்கு மாற்றமாக இறை நிராகரிப்பில் இருந்ததினால் இப்றாஹீம் நபியவர்களின் தந்தை ஆஸரைப் போல் நபியின் பெற்றோரும் நரகத்திற்குறியவர்கள் தாம் என்பது திருமறைக் குா்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து நமக்குத் தெரியவரும் தெளிவான நிலைபாடாகும்.

RASMIN M.I.Sc
*********************************************************************************


நபியின் பெற்றோர் பற்றிய ஹதீஸ் பலவீனமானதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தை காபிராக இருந்தார் என்ற கருத்தில் முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் பலவீனமானது என்றும் ஹம்மாத் பின் சலமா என்பவர் வழியாகவே முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர் என்றும் கூறுகிறார்கள். இது சரியா

ஷரஃபுத்தீன் அதிரை

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عفان حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس أن رجلا قال يا رسول الله أين أبي قال في النار فلما قفى دعاه فقال إن أبي وأباك في النار

இது தான் நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் ஆகும்.

அல்லாஹ்வின் தூதரே என் தந்தை எங்கே இருப்பார் என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நரகத்தில் இருப்பார் என்று நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அவர் திருபிச் சென்ற போது அவரை அழைத்து என் தந்தையும் உன் தந்தையும் நரகத்தில் தான் என்று கூறினார்கள்

நூல் முஸ்லிம்

இதில் ஹம்மாத் பின் சலமா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுவது உண்மை தான். ஆனால் ஹம்மாத் பின் சலமா என்பவர் மிகவும் நம்பகமானவர் என்பதிலோ அவர் உறுதியான நினைவாற்றல் உள்ளவர் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை.

அவர் மீது உள்ள விமர்சனம் என்னவென்றால் அவர் முதுமை அடைந்த போது மனக்குழப்பத்துக்கு உள்ளானார் எனப்து தான். இது போன்ற நிலை எல்லா மனிதருக்கும் ஏற்படக்கூடியது தான். இது போன்றவர்கள் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது?

·அவர் மனக்குழப்பம் ஏற்பட்ட பிறகு தான் ஒரு ஹதீஸை அறிவித்தால் அதை நாம் நிராகரித்து விட வேண்டும்

·அவர் நம்பகமானவராக இருந்து மனக்குழப்பம் ஏற்படாமல் இருந்த காலகட்டத்தில் அறிவித்தது உறுதி செய்யப்பட்டால் அப்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

·அவர் அறிவிக்கும் ஹதீஸ் அவரது மனக்குழப்பத்துக்கு முன்பா பின்பா என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தால் அவரது அறிவிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

பொத்தாம் பொதுவாக இவரது அறிவிப்பைத் தள்ளிவிடக் கூடாது.

تهذيب التهذيب - ابن حجر (3/ 11)

 14 - خت م 4 البخاري في التعاليق ومسلم والأربعة حماد بن سلمة بن دينار البصري أبو سلمة مولى تميم ويقال مولى قريش وقيل غير ذلك روى عن ثابت البناني وقتادة وخاله حميد الطويل وإسحاق بن عبد الله بن أبي طلحة وأنس بن سيرين وثمامة بن عبد الله بن أنس ومحمد بن زياد القرشي وأبي الزبير المكي وعبد الملك بن عمير وعبد العزيز بن صهيب وأبي عمران الجوني وعمرو بن دينار وهشام بن زيد بن أنس وهشام بن عروة ويحيى بن سعيد الأنصاري وأيوب السختياني وخالد الحذاء وداود بن أبي هند وسليمان التيمي وسماك بن حرب وخلق كثير من التابعين فمن بعدهم وعنه بن جريج والثوري وشعبة وهم أكبر منه وابن المبارك وابن مهدي والقطان وأبو داود وأبو الوليد الطيالسيان وأبو سلمة التبوذكي وآدم بن أبي إياس والأشيب وأسود بن عامر شاذان وبشر بن السري وبهز بن أسد وسليمان بن حرب وأبو نصر الثمار وهدبة بن خالد وشيبان بن فروخ وعبيد الله العيشي وآخرون قال أحمد حماد بن سلمة أثبت في ثابت من معمر وقال أيضا في الحمادين ما منهما إلا ثقة وقال حنبل عن أحمد أسند حماد بن سلمة عن أيوب أحاديث لا يسندها الناس عنه وقال أبو طالب حماد بن سلمة أعلم الناس بحديث حميد وأصح حديثا وقال في موضع آخر هو أثبت الناس في حميد الطويل سمع منه قديما يخالف الناس في حديثه وقال إسحاق بن منصور عن بن معين ثقة وقال الدوري عن بن معين من خالف حماد بن سلمة في ثابت فالقول قول حماد وقال جعفر الطيالسي عنه من سمع من حماد بن سلمة الأصناف ففيها اختلاف ومن سمع منه نسخا فهو صحيح وقال بن المديني لم يكن في أصحاب ثابت أثبت من حماد بن سلمة وقال الأصمعي عن عبد الرحمن بن مهدي حماد بن سلمة صحيح السماع حسن اللقي أدرك الناس لم يهتم بلون من الألوان ولم يلتبس بشيء أحسن ملكه نفسه ولسانه ولم يطلقه على أحد فسلم حتى مات وقال بن المبارك دخلت البصرة فما رأيت أحدا أشبه بمسالك الأول من حماد بن سلمة وقال أبو عمر الجرمي ما رأيت فقيها أفصح من عبد الوارث وكان حماد بن سلمة أفصح منه وقال شهاب بن المعمر البلخي كان حماد بن سلمة يعد من الأبدال وعلامة الأبدال أن لا يولد لهم تزوج سبعين امرأة فلم يولد له وقال عفان قد رأيت من هو أعبد من حماد بن سلمة ولكن ما رأيت أشد مواظبة على الخير وقراءة القرآن والعمل لله من حماد بن سلمة وقال بن مهدي لو قيل لحماد بن سلمة إنك تموت غدا ما قدر أن يزيد في العمل شيئا وقال بن حبان كان من العباد المجابين الدعوة في الأوقات ولم بنصف من جانب حديثه واحتج في كتابه بأبي بكر بن عياش فإن كان تركه إياه لما كان يخطىء فغيره من أقرانه مثل الثوري وشعبة كانوا يخطئون فإن زعم أن خطاءه قد كثر حتى تغير فقد كان ذلك في أبي بكر بن عياش موجودا ولم يكن من أقران حماد بن سلمة بالبصرة مثله في الفضل والدين والنسك والعلم والكتب والجمع والصلابة في السنة والقمع لأهل البدع قال سليمان بن حرب وغيره مات سنة 167 زاد بن حبان في ذي الحجة استشهد به البخاري وقيل أنه روى له حديثا واحدا عن أبي الوليد عنه عن ثابت قلت الحديث المذكور في مسند أبي بن كعب من رواية ثابت عن أنس عنه وقد ذكره المزي في الأطراف ولفظه قال لنا أبو الوليد فذكره وقد عرض بن حبان بالبخاري لمجانبته حديث حماد بن سلمة حيث يقول لم ينصف من عدل عن الاحتجاج به إلى الاحتجاج بفليح وعبد الرحمن بن عبد الله بن دينار واعتذر أبو الفضل بن طاهر عن ذلك لما ذكر أن مسلما أخرج أحاديث أقوام ترك البخاري حديثهم قال وكذلك حماد بن سلمة إمام كبير لمدحه الأئمة  وأطنبوا لما تكلم بعض منتحلي المعرفة أن بعض الكذبة أدخل في حديثه ما ليس منه لم يخرج عنه البخاري معتمدا عليه بل استشهد به في مواضع ليبين أنه ثقة وأخرج أحاديثه التي يرويها من حديث أقرانه كشعبة وحماد بن زيد وأبي عوانة وغيرهم ومسلم اعتمد عليه لأنه رأى جماعة من أصحابه القدماء والمتأخرين لم يختلفوا وشاهد مسلم منهم جماعة وأخذ عنهم ثم عدالة الرجل في نفسه وإجماع أئمة أهل النقل على ثقته وأمانته انتهى وقال الحاكم لم يخرج مسلم لحماد بن سلمة في الأصول إلا من حديثه عن ثابت وقد خرج له في الشواهد عن طائفة وقال البيهقي هو أحد أئمة المسلمين إلا أنه لما كبر ساء حفظه فلذا تركه البخاري وأما مسلم فاجتهد وأخرج من حديثه عن ثابت ما سمع منه قبل تغيره وما سوى حديثه عن ثابت لا يبلغ اثني عشر حديثا أخرجها في الشواهد وقال عفان اختلف أصحابنا في سعيد بن أبي عروبة وحماد بن سلمة فصرنا إلى خالد بن الحارث فسألناه فقال حماد احسنهما حديثا واثبتهما لزوما للسنة فرجعنا إلى يحيى القطان فقال أقال لكم وأحفظها قلنا لا وقال القطان حماد عن زياد الأعلم وقيس بن سعد ليس بذاك وقال عبد الله عن أبيه أو يحيى عن القطان إن كان ما يروي حماد عن قيس بن سعد فهو كذا قال عبد الله قلت لأبي لأي شيء قال لأنه روى عنه أحاديث رفعها وقال أحمد بن حنبل أثبتهم في ثابت حماد بن سلمة وقال الدولابي ثنا محمد بن شجاع البلخي حدثني إبراهيم بن عبد الرحمن بن مهدي قال كان حماد بن سلمة لا يعترف بهذه الأحاديث التي في الصفات حتى خرج مرة إلى عبادان فجاء وهو يرويها فسمعت عباد بن صهيب يقول إن حمادا كان لا يحفظ وكانوا يقولون أنها دست في كتبه وقد قيل إن بن أبي العوجاء كان ربيبه فكان يدس في كتبه قرأت بخط الذهبي بن البلخي ليس بمصدق على حماد وأمثاله وقد اتهم قلت وعباد أيضا ليس بشيء وقد قال أبو داود لم يكن لحماد بن سلمة كتاب غير كتاب قيس بن سعد يعني كان يحفظ علمه وقال عبد الله بن أحمد عن أبيه ضاع كتاب حماد عن قيس بن سعد وكان يحدثهم من حفظه وأورده له بن عدي في الكامل عدة أحاديث مما ينفرد به متنا أو إسنادا قال وحماد من أجلة المسلمين وهو مفتي البصرة وقد حدث عنه من هو أكبر منه سنا وله أحاديث كثيرة وأصناف كثيرة ومشائخ وهو كما قال بن المديني من تكلم في حماد بن سلمة فاتهموه في الدين وقال الساجي كان حافظا ثقة مأمونا وقال بن سعد كان ثقة كثير الحديث وربما حدث بالحديث المنكر وقال العجلي ثقة رجل صالح حسن الحديث وقال إن عنده ألف حديث حسن ليس عند غيره وحكى أبو الوليد الباجي في رجال البخاري إن النسائي سئل عنه فقال ثقة قال الحاكم بن مسعدة فكلمته فيه فقال ومن يجترئ يتكلم فيه لم يكن عند القطان هناك ثم جعل النسائي يذكر الأحاديث التي انفرد بها في الصفات كأنه خاف أن يقول الناس تكلم في حماد من طريقها وقال بن المديني أثبت أصحاب ثابت حماد ثم سليمان ثم حماد بن زيد وهي صحاح


ஹம்மாத் பின் சலமாவின் நினைவாற்றல் அவரது அபாரத்திறமை ஆராய்ச்சியில் ஆழம் இத்துடன் வணக்க வழிபாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு என பல அறிஞர்கள் பாராட்டியதை 
தஹ்தீபுத்தஹ்தீப் நூலில் இப்னு ஹஜர் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றை மேலே அரபு மூலத்தில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

நமக்குத் தேவையான பகுதியை மட்டும் சிவப்பு எழுத்தில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

இமாம் முஸ்லிம் அவர்கள் இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யும் போது நன்கு ஆய்வு செய்து இவர் மனக்குழப்பத்துக்கு ஆளாவதற்கு முன் அறிவித்தவை என்று உறுதி செய்து கொண்டு பதிவு செய்துள்ளார்கள் என்று பைஹகீ இமாம் கூறுகிறார்கள்.


அதாவது மனக்குழப்பம் ஏற்பட்ட பின்னர் இவர் அறிவித்தவைகளை இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவு செய்யவில்லை மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன் அறிவித்த ஹதீஸ்களையே இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் என்று பைஹகீ கூறுகிறார்


அடுத்து ஸாபித் எனபவர் வழியாக ஹம்மாத அறிவித்தால் அதற்கு மாற்றமாக யார் அறிவித்தாலும் ஹம்மாதின் அறிவிப்பைத் தான் ஏற்க வேண்டும் என்று இப்னு மயீன் கூறுகிறார்.

மேற்கண்ட ஹதீஸ் இவருக்கு மூளைக் குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் அறிவித்தது மேலும் இது ஸாபித் என்பார் வழியாக அறிவிக்கப்படுவது. எனவே இது ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஹதீஸ் கலையை அறைகுயாக விளங்கிக் கொண்டு சிலர் இதை பலவீனமாக்க முயல்கின்றனர்.


இவர்கள் (ஜமாலி கும்பல்) நபிகள் நாயகத்தின் பெற்றோர் முஸ்லிம்கள் என்பதற்கு இப்னு அசாகிரில் ஆதாரம் உள்ளது என்று பேசி நம்முடன் நடந்த விவாதத்தின் போது அதை எடுத்துக் காட்டச் சொன்ன போது எடுத்துக் காட்ட முடியாமல் ஊமையாக நின்றவர்கள் என்பதை அந்த விவாத வீடியோவில் இருந்து அறியலாம்.


மேலும் இதே ஹம்மாத் அவர்கள் அறிவிக்கும் மகரந்தச் சேர்க்கை பற்றிய ஹதீஸை ஆதாரமாக்க் காட்டி பித்அத்தை நியாயப்படுத்தியவர் தான் ஜமாலி என்பதையும் அந்த விவாத சீடியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒரே ஆள் அறிவுக்கும் இரு ஹதீஸ்களில் இரு வேறு நிலை எடுத்தவர்கள் என்பதில் இருந்து இது தவறான விமர்சனம் என்பது மேலும் உறுதிப்படுகின்றது.
onlinepj.com.

---------------------------------------------------------------

மார்க்க ஆதாரங்களைப் புறந்தள்ளிவிட்டு, தங்களது சொந்த அபிப்ராயங்களையே எப்போதும் முன்னிறுத்தி, பரேலவிச நாற்றத்தைப் பரப்பும் பரேலவிகள், நபியின் தாயார் முஸ்லிம் தான் என்பதை நிறுவ அரும்பாடு படுகிறார்கள். அதற்காகவே பல பொய்களையும் வாதங்கள் எனும் பெயரில் முன்வைக்கிறார்கள்.
நபியின் தாயார் முஸ்லிம் தான் என்பதை நிலைநாட்ட மேற்படி பரேலவிசச் சிற்றேடும் சில வாதங்களை முன்வைத்துள்ளது.
பரேலவிச இதழின் சிரிப்பூட்டும் வாதங்கள்
தலைப்புக்கு ஏற்ப எள்ளி நகையாடும் வகையிலேயே அந்தச் சிற்றேட்டில் வைக்கப்பட்ட வாதங்கள் அமைந்துள்ளன. அவர்களின் மொத்த வாதங்களையும் பார்த்தால் நாம் போட்ட தலைப்பு சரிதான். என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.
இதோ அவர்களின் வாதம்…
ஈமான் கொண்டோரே! என்னுடைய விரோதியையும் உங்களுடைய விரோதியையும் அவர்கள் பால் (உங்கள்) நேசத்தைச் சேர்த்து வைக்கின்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
(அல்குர்ஆன்:60:1)
இந்த வசனத்தில் இறை நிராகரிப்பாளர்களைத் தன்னுடைய விரோதி என்று கூறி விட்டு, அந்த விரோதியின் வயிற்றிலிருந்தா தன்னுடைய நேயரான, அகில உலக நாயகரான ஸல் அவர்களை சுமக்கச் செய்து இவ்வுலகில் பிறக்க வைத்தான்?
நபி(ஸல்) அவர்களை தனது ஹபீபாக (நேயராக)த் தேர்ந்தெடுத்த அல்லாஹ், அவர்களை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த மாதாவைத் தனது விரோதிகளில் ஒருவராக ஆக்கிக்கொண்டானா?
ஒரு ஹபீபை (நேயரை) சகலரிலும் விஷேசமாகத் தேர்ந்தெடுத்த அல்லாஹ் அவர்களைப் பெற்றெடுக்கும் அன்னையைத் தனது நேசத்திற்க் குறியவராகவும் ஆக்கிக் கொள்ளமாட்டானா?
இணை வைப்பவரைத் தனது விரோதி என்றும் நஜீஸ் (அசுத்தமானவர்) என்றும் கூறிய அல்லாஹ், தனது விரோதியிலிருந்தும் அசுத்தமானவரிலிருந்துமா இந்த அகில உலக நாயகரைப் பெற வைத்தான்?
இஸ்லாம் அல்லாஹ்வின் விரோதியிலிருந்தும் அசுத்தமானவரிலிருந்தும் பிறந்ததா?
இதுதான் அறிவுகெட்ட பரேலவிகளின் ஆவிபறக்கும் (சூடான) வாதம் (?)
அதாவது இணைவைப்பாளர் இறைவனின் விரோதி என்று திருக்குர்ஆன் கூறுகிறதல்லவா? அப்படியான விரோதிகளிலிருந்து இறைவன் தன் தூதரைத் தேர்வு செய்வானா?
இந்த ஒரு கேள்வியைத் தான் மேற்கண்டவாறு பல விதங்களில் பல கேள்விகளைப் போல் அடுக்கியுள்ளார்கள்? குர்ஆனைக் கருத்தூன்றிப் படிக்கும் யாரும் இது எந்தளவு அபத்தமான வாதம் என்பதைச் சிரமமின்றி அறிந்து கொள்வர்.
இணைவைப்பாளர் எனும் விரோதியிலிருந்து ஓர் இறைத்தூதர் தோன்ற மாட்டார் எனும் இவர்களின் கருத்து குர்ஆனின் கருத்தல்ல. நபிகளாரும் இந்த அடிப்படையை நமக்குப் போதிக்கவில்லை. மாறாக முழுக்க முழுக்க இவர்களின் கற்பனையான பிதற்றலின் வெளிப்பாடிது.
திருக்குர்ஆனில் இதற்கு நேர்மாறானதை அதிகமாகவே காண முடியும்.
இறைவனின் விரோதியிலிருந்து இறைநேசர் தோன்றுவதும், இறைநேசரிலிருந்து இறைவனின் விரோதி தோன்றுவதும் சாதாரணமான ஒன்று என்பதையே திருக்குர்ஆன் பிரதிபலிக்கின்றது.
ஆஸர் எனும் இணைவைப்பாளரான இறைவனின் விரோதியிலிருந்து தான் இப்ராஹீம் எனும் இறைத்தூதரை இறைவன் வெளிப்படுத்தினான்.
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.
(அல்குர்ஆன்:9:114)
அதே போல நூஹ் எனும் இறைத்தூதரிலிருந்து வெளிப்பட்ட அவரது மகன் இறைவனின் விரோதியாகவே இருந்தார். அப்படியே மரணிக்கவும் செய்தார்.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்’’ என்றார். “நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்’’ என்று அவன் கூறினான்.
(அல்குர்ஆன்:11:45,46)
இவ்விரண்டு வசனங்களே இவர்களின் தத்துவத்தை அடியோடு நிராகரித்து விடுகின்றது. இப்போது என்ன செய்ய போகிறார்கள்? திருக்குர்ஆனின் இந்த வசனங்களை எல்லாம் மறுக்க போகின்றார்களா? அல்லது திருக்குர்ஆனின் தெளிவான கருத்துக்கு மாற்றமாக நூஹ் நபியின் மகனும் முஸ்லிம் தான், இப்ராஹீம் நபியின் தந்தை ஆஸர் அற்புதமான முஸ்லிம் (?) என்று விளக்கமளிக்கப் போகிறார்களா?
பரேலவிகளின் பிதற்றல்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. நபியைப் பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த மாதாவைத் தன் நேசத்திற்குரியவராக ஆக்கிக் கொள்ளமாட்டானா?
ஒரு விரோதியின் வயிற்றிலிருந்தா தனது நேசத்திற்குரிய நபியை அல்லாஹ் வெளிப்படுத்துவான்? இவ்வாறு இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் இவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை அறிவு இல்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒருவரை முஸ்லிமாக்குகின்ற இஸ்லாம் எனும் பாக்கியத்தை, நேர்வழியை இறைவன் தான் நாடியோர்க்கு வழங்குவான். இஸ்லாத்தை ஒருவருக்கு வழங்குவது இறைவனின் அதிகாரத்தில் உள்ள அம்சமாகும்.
நபியின் விருப்பத்திற்குரிய, துவக்க காலத்திலிருந்து நபியின் பிரச்சாரத்திற்குப் பக்கபலமாக இருந்த நபியின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்குக் கூட அல்லாஹ் இஸ்லாம் எனும் நேர்வழியைக் கொடுக்கவில்லை.
(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’ எனக் கூறினார்கள்.
அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’ என்று கூறியதோடு ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறவும் மறுத்து விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும் வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது “இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி)
நூல்: புகாரி 1360
அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்பதை நபிகள் நாயகம் பெரிதும் விரும்பியிருந்தும் அவர்களுக்கு இஸ்லாம் எனும் பொக்கிஷத்தை இறைவன் வழங்கவில்லை என்பதை இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில் அல்லாஹ் இவரை இப்படி ஆக்குவானா? இவருக்கு இஸ்லாத்தை வழங்காமல் இருப்பானா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் அது முறையா? திருக்குர்ஆனின் அறிவு இல்லாதவர்கள் தாம் இப்படியான கேள்விகளை எழுப்புவார்கள்.
கொஞ்சம் சுதாரிப்பு இல்லையென்றால் ‘‘தன் சிறிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று தனது ஹபீப் பெரிதும் விரும்பிய நிலையில் அல்லாஹ் அபூதாலிபை முஸ்லிமல்லாதவராக மரணிக்கச் செய்வானா?” என்று கேள்வி எழுப்பி அபூதாலிபையும் இவர்கள் முஸ்லிம் என்றாக்கி விடுவார்கள்.
(அட மறந்து விட்டோமே! ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி எப்போதோ இந்த அரிய தத்துவத்தை உதிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)
///‘ஒரு விரோதியின் வயிற்றிலிருந்தா தனது நேசத்திற்குரிய நபியை அல்லாஹ் வெளிப்படுத்துவான்?’ ///
குர்ஆனைப் பற்றிய அரைகுறை அறிவுடன் இப்படிக் கேள்வி எழுப்ப ஆரம்பித்தால் குர்ஆனின் நிலை என்னாவது?
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!’’ என்று கூறப்பட்டது.
(அல்குர்ஆன்:66:10)
ஒரு இறைத்தூதரின் அந்தரங்கங்களை அறிந்த அவரின் மனைவியை இறைவன் தன் நேசத்திற்குரியவராக ஆக்காமல் இருப்பானா? என்று கேள்வி எழுப்பி இந்த வசனத்தையும் பரேலவிகள் மறுக்கலாம்.
உலக முஸ்லிம்கள் எல்லாம் இன்றளவும் ஓதி வரும், மறுமை வரையிலும் ஓதவிருக்கும் ஆயத்துல் குர்ஸீயை ஒரு கெட்டவன் மூலம் அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருவானா? ஒரு கெட்டவன் எப்படி ஆயத்துல் குர்ஸீயை முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுப்பான்? இவ்வாறு கேள்வி எழுப்பி ஆயத்துல் குர்ஸீ தொடர்பான புகாரி 2311வது செய்தியையும் இவர்கள் மறுத்து விடுவார்கள் போலும்.
இப்படிக் குர்ஆனையும் ஹதீஸையும் ஒரு சேர மறுக்கும் பரேலவிசக் கூட்டம் நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்பது உலக விந்தை.
இது தான் பரேலவிகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் இலட்சணம்.
இனி இடைவிடாத அவர்களின் புளுகல் பட்டியலைக் காண்போம்.
///கர்ப்ப ஸ்திரிகளுக்கு ஏற்படும் பளுவையும், வேதனையையும் அன்னை ஆமினா ரழி (?) அவர்களுக்கு இல்லாமல் இலகுவாக அல்லாஹ் ஆக்கினானே, தனது விரோதிக்கா இப்படிச் செய்தான்?////
ஆமினா அவர்களுக்கு நபியை ஈன்றெடுத்த பொழுது பிரசவ வலி ஏற்படவில்லையாம். அதனால் ஆமினா அவர்கள் முஸ்லிமாம். அப்படியானால் ஒரே பிரசவத்தில் மூன்று, நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் முதல் தர முஸ்லிம் என்ற முத்திரையைக் குத்திவிடுவார்கள் போலும்.
முதலில் ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்பெதல்லாம் காதில் பூ சுற்றும் வேலையாகும். ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்று சொல்வதாக இருந்தால் அதை சம்பந்தப்பட்ட ஆமினா அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
ஆமினா அவர்களே இதைக் குறிப்பிடுவதைப் போன்ற ஒரு செய்தி பைஹகீ அவர்களின் தலாயிலுன் நுபுவ்வத் எனும் நூல் (பாகம் 1, பக்கம் 136) உள்ளிட்ட சில நூல்களில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இதில் அஹ்மத் பின் அப்துல் ஜப்பார் என்பவர் இடம் பெறுகிறார். இவரை அறிஞர்கள் பொய்யர் என்றும் பலவீனமானவர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
(பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1, பக்கம் 44)
மேலும் இதில் ஜஹ்ம் பின் அபீ ஜஹ்ம் என்பவர் இடம் பெறுகிறார். இவரது நம்பகத்தன்மை ஹதீஸ்கலை அறிஞர்களிடம் உறுதி செய்யப்படவில்லை.
அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) யிடமிருந்து அறிவிக்கும் நபர் யாரென்றும் இதில் குறிப்பிடப்படவில்லை. இப்படிப் பல பலவீனங்கள் நிறைந்த பொய்யான செய்தி என்பது கவனத்தில் கொள்ளத்தக்க விஷயம்.
இது தவிர இந்த அறிவிப்பு கூட நபியின் தாயார் ஆமினா அவர்கள் சொன்னதைப் போன்று தான் உள்ளது. ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்பதை வஹி எனும் இறைச்செய்தி உறுதி செய்யவில்லை.
ஆமினா அவர்கள் முஸ்லிமே அல்ல எனும் போது அவர்கள் கூறும் செய்தி ஒன்றும் மார்க்கமாகாது. அதை முஸ்லிம்கள் நம்பத் தேவையுமில்லை.
/// அன்னை ஆமினா (ரழி) அவர்களின் கர்ப்ப காலத்தில் அல்லாஹ் தனது மலக்கை (அமரரை) அனுப்பி ஆமினாவே! நீர் இந்த உம்மத்துகளின் தலைவரைச் சுமந்திருக்கிறீர் என்று சொல்லச் செய்தானே! தனது விரோதியிடமா இப்படி சொல்லச் செய்தான்? ///
இது அவர்களின் அடுத்த புளுகல்.
நபியின் தாயார் ஆமினா அவர்களுக்கு மலக்கை அனுப்பி இவ்வாறு சொல்லச் சொன்னதாக அண்டப்புளுகு புளுகுகிறார்கள். இது ஏதோ பிரபலமான, மக்கள் நன்கு அறிந்த ஹதீஸ் நூல்களில் இருப்பதைப் போன்ற தொனியில் சொல்லிக் கடந்து விடுகிறார்கள். உண்மையில் இது எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை.
இதற்கு முழுமையான அறிவிப்பாளர் தொடர் ஏதும் கிடையாது.
பரேலவிச சித்தாந்த சிந்தனை கொண்ட இப்னு ஹஜர் அல்ஹைதைமீ (புகாரிக்கு விரிவுரை எழுதிய இப்னு ஹஜர் அல்ல, அவர் அஸ்கலானீ என்று அழைக்கப்படுவார்) என்பவர், தான் எழுதிய மவ்லிதுர் ரசூல் எனும் சிறிய நூலில் இதைத் தன் சொந்தக் கருத்தாகப் பதிவு செய்கிறார்.
தற்காலத்தில் எழுதப்பட்ட மவ்லித் புத்தகங்களைப் போன்று அக்காலத்தில் மேற்படி இப்னு ஹஜர் என்பவரால் எழுதப்பட்ட மவ்லித் புத்தகம் தானே தவிர ஹதீஸ் நூல் அல்ல, இதற்கு அறிவிப்பாளர் தொடரும் கிடையாது என்பதால் இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இது ஹதீஸ் அல்ல. எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அடிப்படை ஆதாரமற்ற செய்திதான் இது. எனவே ஆமினா அவர்கள் நபியை ஈன்றெடுத்த போது பிரசவ வலியை உணரவில்லை என்பது அடிப்படையற்ற கட்டுக்கதையாகும்.
அடுத்த இவர்களின் அண்டப்புளுகல்கள் யாவும் ஏற்கனவே கேட்டு சலித்தும் புளித்தும் போன பழைய புளுகல்களே. நபிகள் நாயகம் பிறக்கும் போது ஷாம் நகரின் கோட்டைகள் எல்லாம் பிரகாசம் அடைந்தது. ஒரு மலக்கை அனுப்பி முஹம்மத் என்று பெயர் வைக்குமாறு கூறினார் என்பவை தான் அவர்களின் பழைய புளுகல்கள்.
ஒரு வாதத்திற்கு நபி பிறக்கும் போது இந்த அற்புதங்கள் (?) நடைபெற்றன என்று வைத்துக் கொண்டாலும் அதன் காரணத்தினால் நபியின் தாயார் ஆமினா அவர்கள் முஸ்லிம் என்றாகுமா?
கெட்டவர்கள் மூலம் கூட சில வேளைகளில் சில அற்புத நிகழ்வுகள் ஏற்படலாம் என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.
ஸாமிரி என்ற கெட்டவன் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. (பார்க்க: அல்குர்ஆன் 20:7, 88) அதனால் ஸாமிரி முஸ்லிமாகி விடுவானா?
மறுமை நாளின் நெருக்கத்தில் தஜ்ஜால் எனும் கெட்டவன் மூலம் சில அற்புத நிகழ்வுகள் நடைபெறும். அதனால் தஜ்ஜாலும் முஸ்லிம் என்ற பட்டியலில் வந்து விடுவானா? இந்த பரேலவிகள் ஸாமிரி, தஜ்ஜால் ஆகிய இருவரையும் முஸ்லிம்கள் என்று இந்த அற்புத அளவுகோலின் படி தீர்ப்பளிப்பார்களா?
ஒருவருக்குக் குறிப்பிட்ட வேளையில் அற்புத நிகழ்வு நடந்தேறியது என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர்கள் முஸ்லிமாகி விடமாட்டார்கள் என்பது தான் திருக்குர்ஆன் போதிக்கும் அறிவுரையாகும். திருக்குர்ஆனை மறுக்கும் பரேலவி கூட்டத்திடம் குர்ஆனின் அறிவுரையைக் கூறி என்ன பயன்?


 --------------------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ் காட்டிய உதாரணம் தவறாகுமா ?  என்பதை  அறிந்து கொள்ள  இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்