"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கையாகும்.

ஆனால் வழிகெட்ட கொள்கையைப் பின்பற்றக்கூடிய சிலர் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று கூறி அதற்குச் சில சான்றுகளை முன்வைக்கின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் சான்றுகளையும் அவர் ஆதாரப்பூர்வமானவையா என்பதையும் நாம் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று வாதிப்பவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக வரக்கூடிய அனைத்து செய்திகளும் மவ்கூஃப் ஆகும். அதாவது இப்னு அப்பாஸ் அவர்களின் சொந்தக் கூற்றாகும். எந்த ஒரு செய்தியிலும் இப்னு அப்பாஸ் அவர்கள் இதனை நான் நபியவர்களிடம் செவியேற்றேன் என்று குறிப்பிடவில்லை. அனைத்து செய்திகளிலும் அவருடைய இஜ்திஹாத் (சொந்த ஆய்வின்) மூலம் கூறியதாகவே வந்துள்ளது. மேலும் இப்னு அப்பாஸ் அவர்களின் இந்த இஜ்திஹாத் நபியவர்களின் விளக்கத்திற்கு மாற்றமாகவும் அமைந்துள்ளது.

நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செய்தியாகப் பார்ப்போம்.

செய்தி : 1

3201 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمْرِو بْنِ نَبْهَانَ بْنِ صَفْوَانَ الْبَصْرِيُّ الثَّقَفِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْعَنْبَرِيُّ أَبُو غَسَّانَ حَدَّثَنَا سَلْمُ بْنُ جَعْفَرٍ عَنْ الْحَكَمِ بْنِ أَبَانَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رَأَى مُحَمَّدٌ رَبَّهُ قُلْتُ أَلَيْسَ اللَّهُ يَقُولُ لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ قَالَ وَيْحَكَ ذَاكَ إِذَا تَجَلَّى بِنُورِهِ الَّذِي هُوَ نُورُهُ وَقَالَ أُرِيَهُ مَرَّتَيْنِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ رواه الترمدي

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முஹம்மத் (ஸல்) தன்னுடைய இறைவனைப் பார்த்தார் என்று கூறினார்கள். அப்போது நான் : அவனைப் பார்வைகள் அடையாது. அவன்தான் பார்வைகளை அடைகிறான் என்று அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டேன். அதற்கவர் : உனக்கு நாசமுண்டாகட்டும். அது அல்லாஹ்வின் பரிபூரணமான ஒளியிலே அவன் வெளிப்படும் போதுதான் என்று கூறினார்கள். இன்னும் நபியவர்கள் அல்லாஹ்வை இருமுறை பார்த்துள்ளார்கள் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இக்ரிமா

நூல் : திர்மிதி (3201)

இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் தன்னுடைய சொந்தக் கருத்தாகத்தான் கூறுகிறார். நபியவர்கள் கூறியதாகக் கூறவில்லை. எனவே இது சான்றாகாது.

மேலும் அல்லாஹ் இருமுறை நபியவர்களுக்குக் காட்டப்பட்டுள்ளான் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எதிலிருந்து விளங்கிக் கொண்டார் என்பதை பின்னால் தெளிவுபடுத்தியுள்ளோம். அதனை விளங்கிக் கொண்டால் இப்னு அப்பாஸின் ஆய்வு தவறு என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

செய்தி : 2

سنن النسائي الكبرى - (ج 6 / ص 472)  11539 - أخبرنا إسحاق بن إبراهيم قال أخبرنا معاذ بن هشام قال حدثني أبي عن قتادة عن عكرمة عن بن عباس قال : أتعجبون أن تكون الخلة لإبراهيم والكلام لموسى والرؤية لمحمد صلى الله عليه و سلم

المستدرك - (ج 2 / ص 309)  3114 - أخبرنا أبو زكريا العنبري ثنا محمد بن عبد السلام ثنا إسحاق بن إبراهيم أنبأ معاذ بن هشام صاحب الدستوائي ثنا أبي عن قتادة عن عكرمة عن ابن عباس رضي الله عنهما قال : ما تعجبون أن تكون الخلة لإبراهيم و الكلام لموسى و الرؤية لمحمد صلى الله عليه و سلم

 هذا حديث صحيح على شرط البخاري و لم يخرجاه  تعليق الذهبي قي التلخيص : على شرط البخاري ومسلم

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (இறைவனின்) நட்பு இப்ராஹீமிற்கு உரியதாகவும், நேரடிப் பேச்சு மூஸாவிற்குரியதாகவும், பார்த்தல் முஹம்மதிற்குரியதாகவும் இருப்பதை நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?

நூல் : நஸாயீ (11539) ஹாகிம் (3114)

இந்தச் செய்தியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்துதான் (மவ்கூஃப்), நபியவர்கள் கூறியது கிடையாது.

யாருடைய சொந்தக் கருத்தும் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது.

மேலும் நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) எப்படி விளங்கிக் கொண்டார் என்பதை அடுத்த செய்தியில் விளக்கியுள்ளோம். அதனைப் புரிந்து கொண்டால் இப்னு அப்பாஸ் அவர்களின் கருத்து தவறு என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

செய்தி : 3

3202 حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ فِي قَوْلِ اللَّهِ وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى قَالَ ابْنُ عَبَّاسٍ قَدْ رَآهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ رواه الترمدي

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார் (53 : 13, 14) தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான் (53 : 10) அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. (53 : 9) என்ற இறைவசனங்கள் விசயத்திலே இப்னு அப்பாஸ் கூறும்போது நபியவர்கள் அவனை (அல்லாஹ்வைக்) கண்டுள்ளார்கள்.

      நூல் :திர்மிதி (3202)

இது நபியவர்கள் கூறியது கிடையாது. இப்னு அப்பாஸ் அவர்களின் சொந்தக் கூற்றுதான்.

மேற்கண்ட செய்தியை நன்றாகக் கவனிக்க வேண்டும். இப்னு அப்பாஸ் 53 வது அத்தியாயம் 9, 10, 13, 14 ஆகிய வசனங்களின் விளக்கம் நபியவர்கள் அல்லாஹ்வைக் கண்டது தான் என்று கூறுகிறார்.

இப்போது அந்த வசனங்களை வரிசையாகப் படிப்போம்.

7 .அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார்.

8. பின்னர் இறங்கி நெருங்கினார்.

9. அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது.

10. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான்.

11. அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை.

12. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?

13, 14. ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

15. அங்கேதான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது.

முதலில் நபியவர்கள் அல்லாஹ்வை (இப்னு அப்பாஸ் கருத்தின்படி) அடிவானத்தில் காண்கிறார்கள். பிறகு இறைவன் இரு வில்லின் முனைகள் அளவு அல்லது அதைவிட நெருக்கமாக நெருங்கினான். அவருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்தான். இந்தக் காட்சியை நபியவர்களின் உள்ளம் பொய்யுரைக்காது. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் நபியவர்கள் இறைவனைப் பார்க்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் கருத்தின் படி மேற்கண்ட விளக்கம் வருகிறது.

இப்னு அப்பாஸ் இந்த வசனங்களின் அடிப்படையில்தான் நபியவர்கள் இருமுறை இறைவனைக் கண்டார்கள் என்று கூறுகிறார்.

இப்னு அப்பாஸ் இந்த வசனங்களின் அடிப்படையில்தான் நபியவர்கள் இறைவனை இருமுறை பார்த்ததாக தீர்மானிக்கிறார் என்பதை பின்வரும் செய்தியும் உண்மைப்படுத்துகிறது.

258 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ جَمِيعًا عَنْ وَكِيعٍ قَالَ الْأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ زِيَادِ بْنِ الْحُصَيْنِ أَبِي جَهْمَةَ عَنْ أَبِي الْعَالِيَةِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى قَالَ رَآهُ بِفُؤَادِهِ مَرَّتَيْنِ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ الْأَعْمَشِ حَدَّثَنَا أَبُو جَهْمَةَ بِهَذَا الْإِسْنَادِ رواه مسلم

அபுல் ஆலிலியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை'' (53:11), "நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது அகத்தால் பார்த்தார்கள்.                          நூல : முஸ்லிம் (285)

257 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصٌ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رَآهُ بِقَلْبِهِ مسلم

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை அகத்தால் பார்த்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (53:13ஆவது வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (285)

மேற்கண்ட செய்திகளின் மூலம் நபியவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்பதை இப்னு அப்பாஸ் 53 : 13, 53 : 11 ஆகிய வசனங்களை வைத்துதான் முடிவு செய்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

மேற்கண்ட வசனங்களுக்கு இப்னு அப்பாஸ் அவர்களின் விளக்கம் தவறானதாகும். ஏனென்றால் நபியவர்கள் மேற்கண்ட வசனங்களின் பொருளைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட இரண்டு வசனங்களும் நபியவர்கள் ஜிப்ரீலைக் கண்டதைத்தான் குறிக்கின்றன என்பதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَنْظِرِينِي وَلَا تَعْجَلِينِي أَلَمْ يَقُلْ اللَّهُ عَزَّ وَجَلَّ وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى فَقَالَتْ أَنَا أَوَّلُ هَذِهِ الْأُمَّةِ سَأَلَ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّمَا هُوَ جِبْرِيلُ لَمْ أَرَهُ عَلَى صُورَتِهِ الَّتِي خُلِقَ عَلَيْهَا غَيْرَ هَاتَيْنِ الْمَرَّتَيْنِ رَأَيْتُهُ مُنْهَبِطًا مِنْ السَّمَاءِ سَادًّا عِظَمُ خَلْقِهِ مَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ رواه مسلم (259)

"இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்' (81:23) என்றும், "நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்' (53:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.                  

நூல் : முஸ்லிம் (287)

நபியவர்கள் அடிவானத்தில் கண்டதும் ஜிப்ரீல் அவர்களைத்தான். மற்றொரு முறை கண்டதும் ஜிப்ரீல் அவர்களைத்தான் என்பதை நபியவர்களே தெளிவு படுத்திவிட்டார்கள்.

இறைவனிடமிருந்து நமக்கு இறக்கப்பட்ட வேதத்தை இறைத்தூதர்தான் தெளிவுபடுத்த வேண்டும். இறைத்தூதர் தெளிவுபடுத்திய பிறகு வேறு யாருடைய விளக்கமும் தேவையற்றதாகும்.

இப்போது குர்ஆனிற்கு விளக்கமாக நபியவர்கள் கூறியதை இவர்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா?

அல்லது நபியவர்களுக்கு எதிராக இப்னு அப்பாஸ் அவர்கள் கூறியதை ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா?

வளரும்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்