ஒரு மரம் எப்படி ஸஹாபி யாகமுடியும் என்றோ அல்லது "ஸஹாபி" என்றால் யார் அவருக்கான இஸ்லாமிய வரைவிலக்கணம் என்ன என்றோ தெரியாமல் குறித்த பதிவு அமைந்துள்ளது..
அது தொடர்பில் நான் (கட்டுரையாளர்) இட்ட பின்னூட்டத்தை முக்கியத்துவம் கருதி இங்கு பதிவேற்றுகிறேன்.
இது பற்றி நான் தேடியதில் "வரலாற்றாசிரியர்களும் ஸீறா ஆசிரியர்களும் அறிவிக்கிறார்கள்.. நம்புகிறார்கள்" என்று எழுதப்பட்டுள்ளதே தவிர எந்த ஆசிரியர்கள் எந்த நூல் என்ற விபரங்களைக் காணவில்லை..
அத்துடன் நபியவர்கள் இந்த மரத்தின் அடியில்தான் இளைப்பாறினார்கள் என்று எப்படி உறுதிப்படுத்தினார்கள் என்ற விபரங்களையும் காண முடியவில்லை..
இது போக,ஜோர்தான் நாட்டின் றோயல் புவியியல் ஆய்வு மையத்தின் முன்னை நாள் ஆலோசகரும் ஆய்வுகளுக்கான பிரிவின் நிர்வாகியுமான பேராசிரியர் இப்றாஹீம் மூஸா ஸக்றதி அவர்கள் இது தொடர்பில் நடாத்திய ஆய்வில்:
1.இப்னு ஹிஷாம் மற்றும் தபரி (ரஹ்) ஆகியோரின் ஸீறா நூற்களில் "நபியவர்கள் இளைப்பாறிய இடத்துக்கான வரைபடைங்களை பின்னிணைக்கவில்லை"
2.அத்துடன் நபிகளார் காலத்தில் இம்மரத்தின் வழியே எந்த ஒரு வியாபார ,ஹஜ் பயனப் பாதைகளும் இருக்கவில்லை
3.விவயாசயத் திணைக்கள ஆய்வின் பிரகாரன் அம்மரத்தின் அடியினை பரிசோதனைக்கு உட்படுத்திய போது ஆகக் கூடியதாக அம்மரம் 520 வருடங்களைக் கொண்டதாகும்.
4.குறித்த மரத்தின் அடி பட்டுப் போய் பலவீனமடைந்து அதன் அடியிலும் கிளைகளில் இருந்தும் தழைகள் ஏற்பட்டுள்ளன.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்