நூதன
அனுஷ்ட்டானங்கள் (பித்அத்கள்) முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட
மிகப் பெரியதோர் முஸீபத்தாகும். அவைகள் மூலம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை
அடைந்து கொள்ள முடியும் என்று அதிக முஸ்லிம் மக்கள் எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா எடுத்தல், மௌலிது பாடல்கள் பாடுதல், அதற்கு மத்தியில் எழுந்து மரியாதை செய்தல், அவர்களுக்கு ஸலாம் சொல்லுதல், அவ்லியாக்கள் நல்லடியார்களின் பெயரில் விழாக்கள் எடுத்தல் இவைகள் அனைத்தும் மார்க்கத்தின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட வழிகெட்ட நூதனங்கள் ஆகும். நபியோ ஸஹாபாக்களோ செய்யாத ஒன்று.
'எவர் நமது விஷயத்தில் (மார்க்கத்தில்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துவாரோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'ஒவ்வொரு நூதனமும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்
தனது திருமறையில், 'இன்றையத் தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை
நான் பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது
முழுமையாக்கிவிட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை நான் மார்க்கமாகப்
பொருந்திக்கொண்டேன்' (அல்மாயிதா 5:3)
இது
போன்ற நூதன அனாச்சாரங்களை இவர்கள் நபி (ஸல்) பெயரில் அரங்கேற்றுவதன் மூலம்
விளங்குவது யாதெனில் அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கவில்லை
என்பதுதான்! பிற்காலத்தில் வந்தவர்கள் பல நூதன அனுஷ்டானங்களை ஏற்படுத்தி
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற முடியுமென நினைக்கிறார்கள். இது
அல்லாஹ்வையும், ரஸுலையும் புறக்கணிப்பதாகும். மௌலிதுகள், பிறந்த நாள்
விழாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இருக்குமானால், மேலும் அல்லாஹ்
அவைகளை பொருந்திக் கொள்வான் என்றால் இறைத்தூதர் அவர்கள் சமுதாயத்துக்கு
அவற்றை அறிவித்துக் கொடுத்திருப்பார்கள். அறிஞர்கள் இந்த அனைத்து
மௌலிதுகளையும் நிராகரித்திருக்கிறார்கள். ஏனென்றால் இவைகள் அனைத்தும்
வழிகெட்ட நூதன வழிபாடுகள். குறிப்பாக நபியின் மீதுள்ள அன்பு, அளவு கடந்து
சென்றதே இந்த நூதனங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன.
பெண்கள்,
ஆண்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்திருத்தல், இசைக்கருவிகளைப்
பாவித்தல் போன்ற அனாச்சாரங்களும், நபியிடத்தில் உதவி தேடல்,
பிரார்த்தித்தல் பாதுகாப்புத் தேடல், இவை போன்ற பெரிய ஷிர்க்குகளும்
நிகழ்வதற்கு வழிவகுக்கிறது. இது போன்ற எத்தனையோ நிராகரிப்புக்கு
இட்டுச்செல்லும் விஷயங்கள் அங்கு நிகழ்கின்றன.
சிலர்
மீண்டும் மீண்டும் புர்தா எனும் பெயரில் அரங்கேற்றும் பூஸரியின்
பாடல்களில் நிறைந்து காணப்படும் ஷிர்க்கான வார்த்தைகளைப் பாருங்கள் .
يا أكرم الخلق مالي ألوذ به --- -- سواك عند حدوث الحادث العمم
إن لم تكن آخذا يوم المعاد يدي ---- - صفحا وإلا فقل يا زلة القدم
فإن من جودك الدنيا وضرتها ------ ومن علومك علم اللوح والقلم
இதன் அர்த்தத்தில் எத்தனை ஷிர்க்குகள் நிறைந்து கிடக்கின்றன என்று சற்று கவனியுங்கள்.
படைப்புகளில்
சங்கை மிகுந்த நபியவர்களே.. (மறுமை நிகழ்ந்தவுடன்) திடுக்கமும், அச்சமும்
சூழ்ந்து கொள்ளும் அந்த நேரத்தில் நான் அடைக்கலம் தேடுவதற்கு எனக்கு உங்களை
விட்டால் வேறு யார் இருக்கின்றார்...
அந்த
மறுமை நாளன்று நீங்கள் எனது கரம் பிடித்து, எனக்கு உதவி செய்ய
வில்லையென்றால் நான் கால் தடுக்கி நரகத்தில் விழுவதைத் தவிரவேறு
வழியில்லை...
உங்கள்
கருனை மிகுந்த அருட்கொடையினாலேயே இவ்வுலகமும், அதன் சக்களத்தியான
வானங்களும் நிலை பெற்றிருக்கின்றன. இன்னும் லௌஹூல் மஹ்பூழ் எனும்
பலகையிலும், கலம் எனும் எழுதுகோல் பற்றிய அறிவும் உம்மிடம் உள்ள அறிவின்
ஒரு பகுதியே...
இது
போன்ற இறைபண்புகள், மறைவான ஞானம், மறுமை நாளில் பாவங்களை மன்னிப்பது, இவ்
உலகத்திலும் மறுமையிலும் காரியங்களைத் திட்டமிடுவது அனைத்துமே வானங்களையும்
பூமியையும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் அல்லாஹ்விற்கு மாத்திரம் உரிய
பண்புகளாகும். நபிக்காக நடைபெறும் மௌலிது விழாக்களில் அல்லது வேறு
நல்லடியார்களின் பெயரில் நடைபெறும் மௌலிதுகளில் இது போன்ற பெரும் தவறுகள்
நிகழ்வதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். அவர்கள் நாம் இவ்வாறான மௌலிதுகளை
கொண்டு ரஸுலை நினைவு கூர்வதற்காகவும், அவரது வரலாறை மக்களுக்கு எடுத்துச்
சொல்வதற்காகவுமே செய்கின்றோம் என்று கூறுகின்றனர். சரி அப்படியானால் ஏன்
அதைக் குறிப்பிட்ட ஒரு தினத்தில் நடத்துகின்றீர்கள்? ஏனைய காலங்களிலும்
பொது மேடையைப் போட்டு அல்லது கூட்டங்களைக் கூட்டி அவர்களின் வரலாற்றை
மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே...
சரி
இதை ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் என்றே எடுத்துக் கொள்வோம். அல்லாஹ்
கூறுகின்றான், 'நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேற்றுமைப்பட்டால்
அத(ன்தீர்வி)னை அல்லாஹ் ரஸூலின் பக்கம் விட்டு விடுங்கள்' என்று
கூறுகின்றான் இதன் படி நாம் இந்த மௌலீது விவகாரத்தை, அல்குர்ஆனின் ஒளியில்
தீர்வு தேடினால் அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்கள் கூறியபடி வாழுமாறும்,
மார்க்கம் முழுமை பெற்று விட்டது என்றும்தான் இருக்கின்றது.
சரி நபியவர்களிடம் எடுத்துக் கூறி இதற்குக் தீர்வு காண முற்பட்டால் அப்போதும் இவ்வாறான மௌலீதுகளை நபியவர்களோ, ஸஹாபாக்களோ செய்ய வில்லை என்பதே எமக்கு விடையாகக் கிடைக்கின்றது. எனவே இது ஒரு பித்அத் - நபியவர்கள் காட்டித்தராத நூதன அனுஷ்டானம் என்பது தெரிய வருகின்றது. அது மட்டுமல்ல எமது விரோதிகளான யூத கிருஸ்தவர்களிடம் இருந்து காப்பியடிக்கப்பட்ட இவ்வனுஷ்டானங்களை நாமும் புரிவதால் நாம் அவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்றியதாகவே கணிக்கப்படும்.
நாம் இப்படியான மௌலிது விழாக்களை மறுக்கிறோம். நபியை பின்பற்றுமாறு புனித இறைவேதம் நமக்குச் சொல்கிறது, இறைவேதம் நமக்கு மார்க்கம் பூர்த்தியாகி விட்டதாக அறிவிக்கின்றது. நபியோ ஸஹாபாக்களோ செய்யாத, நமக்கு கற்றுத்தராத இந்த மௌலிதுகளை விழாக்களை நாம் மறுக்கிறோம். இவைகள் மார்க்கத்தில் உள்ளவைகள் அல்ல. இவைகள் நிராகரிக்கப்பட வேண்டிய வழிகெட்ட பித்அத்துகள், இன்னும் யூதர்களின் கிருஸ்தவர்களின் கொண்டாட்டங்களுக்கு ஒப்பான செயல்கள், மனிதர்களில் அதிகமானவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பார்த்து மனிதனின் புத்தி ஏமாந்து விடக்கூடாது.

தனது திருமறையில், (நபியே) நீர் பூமியில் பெரும்பான்மையானவர்களைப்
பின்பற்றினால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியை விட்டு (திருப்பி)
வழிகெடுத்து விடுவார்கள்'. (அல் அன்ஆம் 6:116).
சில ஆச்சரிய நிகழ்வுகள்
இப்படி
அனாச்சாரங்கள் நிறைந்த கொண்டாட்டங்களுக்கு வருகை தருவதில் கவனம்
செலுத்தும் அதிகமானவர்கள் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ போன்ற தொழுகையில் கவனம்
செலுத்தாமல் இருக்கிறார்கள். இன்னும் சிலர் மௌலிது நடக்கும் சபைக்கு
நபிகளார் (ஸல்)அவர்கள் வருகை தருகிறார்கள் எனும் மூடத்தனமான நம்பிக்கையில்
இருக்கிறார்கள். அதனால் தான் நபியை வரவேற்பதற்காக எழுந்து பாடல்களை
பாடுகின்றனர் இது வழிகெட்டதும் அறியாமைத்தனமான ஒரு செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டு கப்ரில் இருப்பார்கள். மறுமை நாள் சம்பவிக்கும் வரை அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் அவர்களுடைய உயிரோ இல்லிய்யீன் எனும் உயர்ந்த நல்லடியார்களின் உயிர்கள் வைக்கப்படும் இடத்தில் ரப்பிடத்தில் இருக்கின்றது. இதனைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, 'மறுமை நாளில் கப்ரில் இருந்து முதலில் எழுப்பப்படுபவனாக நான் இருப்பேன்'.

நபியின்
மீது ஸலாவாத்தும் ஸலாமும் சொல்வதும் (அல்லாஹ்விடத்தில் அருளுக்காகவும்
சாந்திக்காவும் பிறார்த்திப்பதுமே) சிறந்த முறையாகும்.
அல்லாஹ்
தனது திருமறையில் 'நிச்சயமாக அல்லாஹ் நபியின் மீது அருள் புரிகிறான்,
அவனது வானவர்களும் நபிக்காக அருள்வேண்டி பிறார்த்திக்கின்றனர், முஃமின்களே
நீங்களும் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்'. (அஹ்ஸாப் 33:66).
ஒரு
அடியான் நபியின் மீது முழுமையான அன்பு செலுத்தாத வரை அவன் பரிபூரண
முஃமினாக மாட்டான் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
நபியவர்களுக்கே
உரிய முறையில் அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும், பின்பற்றப்படும்
வழிகாட்டியாக அவர்களை எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் மார்க்கமாக்கிய
வணக்க வழிபாடுளைத்தவிர அளவு கடந்து செல்லக்கூடாது.
அல்லாஹ்
தனது திருமறையில், '(நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக நீங்கள்
அல்லாஹ்வை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்
(அப்போது) அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்களது பாவங்களையும் மன்னிப்பான்
அல்லாஹ் மன்னித்து கிருபை செய்யக்கூடியவனாக இருக்கிறான்'. (ஆலு இம்ரான்
3:31).
---chittarkottai.com
---chittarkottai.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்