"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கற்சிலைகளா? பெரியவர்களா?

மக்கத்துக் காபிர்கள் சிலைகளைத் தான் வணங்கினார்கள்! நாங்கள் பெரியார்களைத் தானே வணங்குகிறோம் என்று கூறக் கூடியவர்களின் கருத்தை ஆராய்வோம்.
சிலைகளை வணங்கினார்கள் என்பதும் உண்மைதான் என்றாலும், எவரும் அந்தக் கல்லுக்கு சக்தி இருக்கிறதென்று நம்பி அதற்கு அடிபணியவில்லை. மாறாக ஏதாவது ஒரு பெரியாரை மரியாதை செய்கிறோம் என்று கருதிக் கொண்டு, அவர்களை ஓர்முகப்படுத்துவதற்காக ஏதேனும் சின்னங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. சிலர் பெரியார்களின் உருவங்களை சமைத்துக் கொள்கிறார்கள். சிலர் கப்ருகளை சின்னமாக்குகிறார்கள். பெரியார்களுக்கு வழிபாடுகள் செய்ய இன்று கப்ருகள் எப்படி சின்னமாக அமைந்து இருக்கிறதோ, அதுபோல் அன்று கற்சிலைகள் இருந்தன.
நூஹ்நபி அவர்கள் காலத்தில் யகூஸ், யவூக், நஸ்ரு, வத் என்ற கற்சிலைகளை வணங்கி வந்தனர் என்பதை நூஹ் அத்தியாயம் 23வது வசனம் கூறுகிறது. இதற்கு இமாம் இப்னு ஜரீர் தப்ரீ, அவர்கள் தனது விரிவுரையில் “அவர்களெல்லாம் நல்லடியார்களாக இருந்தவர்கள். ஷைத்தான் அவர்கள் பெயரால் வழிகெடுத்து விட்டான்” என்று தெளிவு தருகிறார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இந்தக் கருத்தை சொன்னதாக ஹாபிழ் இப்னு அஸாகிர் அவர்கள் சனதுடன் குறிப்பிடுகிறார்கள். இன்னும் பல அறிவிப்புகளை ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இவைகளெல்லாம் சிலைகளாக அமைத்துக் கொண்டது நல்லடியார்களைத் தான் அவர்க் பெயரைச் சொல்லித்தான் ஷைத்தானால் மக்களை எளிதாக வழி கெடுக்க இயலும்.
மக்கத்துக் காபிர்களில் மிகச் சிலர் சிலைகளை அழைத்துப் பிரார்த்தித்தது போல், வேறு சிலர் சிலைகள் யார் பெயரால் உருவகப்படுத்தப்பட்டதோ அந்த சிலைகள் யார் பெயரால் உருவகப்படுத்தப்பட்டதோ அந்த அல்லாஹ்வின் அடியார்களையும் அழைத்து வந்துள்ளனர். அதை உணர்த்தும் குர்ஆன் வசனங்களையும் காண்போம்.

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்
இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கை யிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

இந்தக்காலமும் கடந்து, அக்கால மக்களும் மரணித்த பின்னால் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மனிதர்கள் அவர்களிலுள்ள ‘வத்து’ ‘சுவா’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ போன்ற நல்லடியார்களின் உருவங்களை தீட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் கடவுள்களாக எண்ணி வணங்கி, வழிபட எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அதிலிருந்து அம்மக்களைத்தடுத்து நிறுத்துவதற்காக உலகில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் இப்பூமியில் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் தத்தமது கற்பனைகளில் உதிக்கின்றவற்றை தாமாக வணங்கி, வழிபட தலைப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வானவர்களை யும், மற்றும் சிலர் நபிமார்களையும், நல்லடியார் களையும், வேறு சிலர் ஜின்களையும், இன்னும் சிலர் மாட்டையும் வணங்கி வந்தனர்.
மக்கா வாழ் காஃபிர்கள் , அல்லாஹ்தான் இவ்வுலகைப் படைத்தவன், வானங்களில் இருந்து மழை பொழி விப்பவன், அதிலிருந்து உணவளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டாலும் தமது வணக்க வழிபாடுகளில் அல்லா ஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை காஃபிர்களே! எனக் கூறி அழைக்கின்றான்.

இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், “ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே” என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால்,
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை; இறைநேச செல்வர்களின் கப்ருகளுக்கு சென்று அவர்களிடம் தானே பிரார்த்திக்கின்றோம் (துஆச் செய்கின்றோம்)! அந்த இறை நேச செல்வர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்து கண்ணியப்படுத்துகிறோம்! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம்! ஆனால் நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்று கூறுகின்றனர்.
இங்கு நாம் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு தெரிந்துக் கொள்ள வேண்டும். வணக்கம் என்றால் என்ன?
என்று அவர்களிடம் கேட்டால், உடனே அவர்கள் “தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகியவை வணக்கமாகும்” என்று பதில் கூறுவார்கள். வணக்கம் என்பது மேற் கூறியவைகள் மட்டுமன்று.
பிரார்த்தனை,
வேண்டுதல்,
நேர்ச்சை செய்தல் ,
அறுத்துப் பலியிடுதல்,
உதவி கோருதல்,
பாதுகாவல் தேடுதல்
இவைகள் அனைத்துமே வணக்கமாகும். இவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பிராத்தனையும் (துஆவும்) வணக்கமாகும்” (அபூதாவூத்)
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கை எவ்வாறிருந்தது எனில், இவ்வுலகத்தையும் அதில் உள்ளவர்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் என்றே அறிந்து வைத்திருந்தனர். இதை இறைவனுடைய திருமறையும் பின்வருமாறு கூறுகிறது.
உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக. (அல்-குர்ஆன் 10:31)
மேலும் பார்க்கவும் அல்-குர்ஆனின் வசனங்கள் 43:87 மற்றும் 29:63.
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொணடிருந்தார்களே! பிறகு எதற்காக இறைவன் அவர்களை “முஷ்ரிக்குகள்”  என்று அழைக்க வேண்டும்? காரணம் என்னவெனில் அவர்கள் முன் சென்ற நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் உருவங்களை சிலைகளாக வடித்து அந்த சிலைகளிடம் தங்களின் தேவைகளை முறையிட்டு வந்தனர். அந்த சிலைகளிடமே உதவி தேடினர். ஆபத்து காலங்களில் பாதுகாவலும் தேடி வந்தனர்.
“படைத்தவனிருக்க அவனை விட்டு விட்டு, ஏன் இந்த சிலைகளிடம் பிரார்த்திக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதில், “எங்களுடைய தேவைகள் நிறைவேறுவதற்காக மற்றும் அவைகள் எங்களை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கிவைக்கும் என்பதற்காகத்தான் நாங்கள் அந்த சிலைகளை வணங்குகிறோம்” என்று கூறினர். இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகிறான்.
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). (அல்-குர்ஆன் 39:3)
 ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளின் செயல்களோடு தற்போது கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களின் செயல்களை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், இவைகளிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்,
அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இந்த ‘அகில உலகங் களையும் படைத்து பரிபாலித்து ஆட்சி செலுத்தி வருபவன் அல்லாஹ் ஒருவனே’ என்று நம்பியிருந்தார்கள்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் ஒரே இறைவனாகிய அல்லாஹ் வின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

அன்று :
ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் நபிமார்கள், இறந்த நல்லடி யார்கள் ஆகியோர்களிடம் தங்களின் தேவைகளை கேட்டும், ஆபத்து காலங்களில் பாதுகாவல் தேடியும்  வந்தனர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்களிடமும், இறைநேசர்களிடமும் ஷெய்கு மார்களிடமும் தங்களின் கோரிக்கைகளையும் பிரார்தனைகளையும் செய்கின்றனர். ஆபத்து காலங்களில் அவர்களிடம் பாதுகாவலும் தேடுகின்றனர்.

அன்று :
ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இறந்து போன அந்த நல்லடி யார்களின் உருவங்களைச் சிலைகளாக வடித்து, அவற்றை பூஜித்து வந்தனர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர் இறந்தவுடன் அவர்களுடைய கல்லறைகளில் கட்டடங்கள் (தர்ஹா) எழுப்பி அவர்களுடைய கப்றுகளை உயரமாக எழுப்பி, அவற்றிற்கு சந்தனம் பூசி, போர்வைகள் போர்த்தி, பூமாலைகள் அணிவித்து பூஜை புணஸ்காரங்கள் செய்கின்றனர்.

அன்று :
ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் அந்த சிலைவடிவத்தில் உள்ள நல்லடியார்களுக்காக நேர்ச்சை செய்து அவர்களுக்காக காணிக்கை செய்து அறுத்துப் பலியிட்டனர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் கப்ருகளில் அடக்கமா கியிருக்கும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படு வோர்களுக்காக நேர்ச்சைகள் செய்தும் அறுத்துப் பலியிட்டும் வருகின்றனர்.

அன்று :
ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள், நல்லடியார்களின் உருவத்தில்  உள்ள சிலைகளை தவாபு செய்து அவர்களிடம் மன்றாட்டம் செய்து வந்தனர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் நல்லடியார்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மன்றாடுகின்றனர்.

அன்று :
ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகளிடம் படைத்த இறைவனை விட்டு விட்டு நீங்கள் ஏன் இந்த சிலைகளை இப்படி வழிபடுகறீர்கள் என்று கேட்டால், “நாங்கள் இந்த சிலைவடிவத்தில் இருக்கின்ற நல்லடியார்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்” என்று கூறினர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளிடம், அதே போல் கேட்டால் “நாங்கள் இந்த கப்றுகளில் அடக்கமாகியிருக்கும் இறை நேசர்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்” என்று கூறுகிறார்கள்.

என தருமை சகோதர, சகோதரிகளே! சற்று சிந்தனை செய்து பாருங்கள்! ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளுக்கும் இன்றைய காலக் கட்டத்தில் வாழும் கப்று வணக்க முறைகளை ஆதரிப்போருக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் செய்தவற்றையே தான் இவர்களும் செய்கின்றார்கள். அவர்கள் கூறிய காரணத்தையே இவர்களும் கூறுகின்றார்கள்.

சிலருக்கு கோபம் வரலாம். நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே! எங்களை ஏன் கப்று வணங்கி என்று திட்டுகிறீர்கள் என்று?
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நல்லடியார்களின் வடிவத்தில் இருந்த உருவச்சிலைகளை வலம் வந்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்தி அதன் மூலம் அந்த நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்தனர். அதனால் அவர்களை சிலை வணங்கிகள் என்கிறோம்.
மாற்று மதத்தவர்கள் தங்களின் கடவுள் உருவத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்ற அந்த சிலைகளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அந்த தெய்வங்களை வணங்குவதால் அவர்களையும் சிலை வணங்கிகள் என்கிறோம்.
ஆனால் இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் கப்ருகளை வலம் வந்து, அதற்கு பூசி, மெலுகி, போர்வை போர்த்தி, நெய் விளக்கு ஏற்றி, சந்தனம் பூசி, பத்தி கொழுத்தி, பூமாலை அணிவித்து அந்த சிலைகளை வணங்குவோர் என்னென்ன காரியங்களை அந்த சிலைகளுக்கு செய்கிறார்களோ அவையனைத்தையும் அந்த நல்லடியாரின் கப்றுகளுக்கு செய்பவரை கப்று வணங்கி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பதை விட்டு விட்டு அந்த நல்லடியார்களின் சிலைகளிடம் இவர்கள் கேட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் “முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)” என்றான். அதே செயல்களையே செய்யும் தற்காலத்தவர்களை என்ன சொல்வது? சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருந்தாலும் தான் நாடினால் மன்னித்து விடுவேன் என்று கூறுகிறான். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறுகிறான். இறைவனால் மன்னிப்பே கிடைக்காத அத்தகைய படுபயங்கரமான பாவம் என்னவெனில் “இறைவனுக்கு இணை வைத்தலாகும்”. அதாவது எந்த தேவைகளையும் இறைவனிடம் நேரடியாக கேட்டுப் பெறாமல் இடைத்தரகர் (அவுலியா, இறை நேசர் போன்றவர்கள்) மூலம் கேட்டு பெறுவது இத்தகைய இணைவைப்பாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
அல்லாஹ் நம் முஸ்லிமான நம் அனைவரையும் காப்பாற்றி நமக்கு அவனுடைய நேர்வழியை காட்டுவானாகவும்.
source:http://suvanathendral.com

***********************************************