"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நல்லடியாரும் சிலையும்

  நல்லடியார்களை அழைத்துப் பிரார்த்திப்பதும், கற்சிலைகளை அழைத்துப் பிரார்த்திப்பதும் ஒன்று தான்” என்று நாம் கூறும் பொழுது .....
, பாமர மக்களை திசைத் திருப்புவதற்காக, அவர்கள் நம்மீது ஆத்திரப்பட வேண்டும் என்பதற்காக – இப்படிக் கூறுகிறார் பார்த்தீர்களா? “நல்லடியார்களையும், கற்சிலைகளையும் சமம் என்கிறார்கள்  ”   

“முஸ்லிமுடைய பொருளைத் திருடுவதும், காபிருடைய பொருளைத் திருடுவதும் குற்றம்” என்று ஒருவர் சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதைக் கேட்ட இன்னொருவன் “பார்த்தீர்களா? முஸ்லிமையும் காபிரையும் சமம் என்கிறான்” என்றால் அதை எவராவது ஏற்க முடியுமா? இங்கே சமப்படுத்துவது இவ்வகை திருட்டுக்களும் தான். முஸ்லிமையும், காபிரையும் சமமாக்கவில்லை என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.
இதே போல், “நல்லடியார்களை வணங்குவதும், கற்சிலைகளை வணங்குவதும் சமம் என்றால், இரண்டு வணக்கங்களும் தான் சமப்படுத்தப் படுகின்றன. நல்லடியார்களும், கற்சிலைகளும் சமமாக்கப்பட்டு விட்டதாக அறிவுடைய எவரும் கருத மாட்டார்கள்.
ஐந்தறிவுப் பிராணிகள் கூட கற்களை விடச் சிறந்தது என்றிருக்கும் போது, ஒரு சாதாரண மனிதனும், கற்களும் சமமாகாதே! ஒரு நல்லடியாரும் கற்சிலையும் சமமானது தான் என்று ஒரு முஸ்லிம் எப்படிச் சொல்வான்?
நல்லடியார்களை அழைத்துப் பிரார்த்திப்பதும், கற்சிலைகளை அழைத்துப் பிரார்த்திப்பதும் தான் சமம் என்கிறோம்.

கற்சிலைகளா? பெரியவர்களா?

மக்கத்துக் காபிர்கள் சிலைகளைத் தான் வணங்கினார்கள்! நாங்கள் பெரியார்களைத் தானே வணங்குகிறோம் என்று கூறக் கூடியவர்களின் கருத்தை ஆராய்வோம்.
சிலைகளை வணங்கினார்கள் என்பதும் உண்மைதான் என்றாலும், எவரும் அந்தக் கல்லுக்கு சக்தி இருக்கிறதென்று நம்பி அதற்கு அடிபணியவில்லை. மாறாக ஏதாவது ஒரு பெரியாரை மரியாதை செய்கிறோம் என்று கருதிக் கொண்டு, அவர்களை ஓர்முகப்படுத்துவதற்காக ஏதேனும் சின்னங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. சிலர் பெரியார்களின் உருவங்களை சமைத்துக் கொள்கிறார்கள். சிலர் கப்ருகளை சின்னமாக்குகிறார்கள். பெரியார்களுக்கு வழிபாடுகள் செய்ய இன்று கப்ருகள் எப்படி சின்னமாக அமைந்து இருக்கிறதோ, அதுபோல் அன்று கற்சிலைகள் இருந்தன.
நூஹ்நபி அவர்கள் காலத்தில் யகூஸ், யவூக், நஸ்ரு, வத் என்ற கற்சிலைகளை வணங்கி வந்தனர் என்பதை நூஹ் அத்தியாயம் 23வது வசனம் கூறுகிறது. இதற்கு இமாம் இப்னு ஜரீர் தப்ரீ, அவர்கள் தனது விரிவுரையில் “அவர்களெல்லாம் நல்லடியார்களாக இருந்தவர்கள். ஷைத்தான் அவர்கள் பெயரால் வழிகெடுத்து விட்டான்” என்று தெளிவு தருகிறார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இந்தக் கருத்தை சொன்னதாக ஹாபிழ் இப்னு அஸாகிர் அவர்கள் சனதுடன் குறிப்பிடுகிறார்கள். இன்னும் பல அறிவிப்புகளை ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இவைகளெல்லாம் சிலைகளாக அமைத்துக் கொண்டது நல்லடியார்களைத் தான் அவர்க் பெயரைச் சொல்லித்தான் ஷைத்தானால் மக்களை எளிதாக வழி கெடுக்க இயலும்.
மக்கத்துக் காபிர்களில் மிகச் சிலர் சிலைகளை அழைத்துப் பிரார்த்தித்தது போல், வேறு சிலர் சிலைகள் யார் பெயரால் உருவகப்படுத்தப்பட்டதோ அந்த சிலைகள் யார் பெயரால் உருவகப்படுத்தப்பட்டதோ அந்த அல்லாஹ்வின் அடியார்களையும் அழைத்து வந்துள்ளனர். அதை உணர்த்தும் குர்ஆன் வசனங்களையும் காண்போம்.

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்
இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கை யிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

இந்தக்காலமும் கடந்து, அக்கால மக்களும் மரணித்த பின்னால் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மனிதர்கள் அவர்களிலுள்ள ‘வத்து’ ‘சுவா’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ போன்ற நல்லடியார்களின் உருவங்களை தீட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் கடவுள்களாக எண்ணி வணங்கி, வழிபட எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அதிலிருந்து அம்மக்களைத்தடுத்து நிறுத்துவதற்காக உலகில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் இப்பூமியில் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் தத்தமது கற்பனைகளில் உதிக்கின்றவற்றை தாமாக வணங்கி, வழிபட தலைப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வானவர்களை யும், மற்றும் சிலர் நபிமார்களையும், நல்லடியார் களையும், வேறு சிலர் ஜின்களையும், இன்னும் சிலர் மாட்டையும் வணங்கி வந்தனர்.
மக்கா வாழ் காஃபிர்கள் , அல்லாஹ்தான் இவ்வுலகைப் படைத்தவன், வானங்களில் இருந்து மழை பொழி விப்பவன், அதிலிருந்து உணவளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டாலும் தமது வணக்க வழிபாடுகளில் அல்லா ஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை காஃபிர்களே! எனக் கூறி அழைக்கின்றான்.