"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

குகைவாசிகள் பற்றியவசனம் தர்கா கட்ட ஆதாரமா

ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் நிற்க வேண்டும். அதற்காக எத்தகைய தியாகத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனால் கூறப்படும் இவ்வரலாற்று நிகழ்ச்சியை, பல தெய்வக் கொள்கையை இஸ்லாத்தில் நுழைத்திடுவதற்குத் துணையாக்கிக் கொண்ட அவலமும் நடந்தேறியது.
    குகைவாசிகளின் வரலாற்றுத் தொடரைக் கூறும் வசனங்களில் 21 வது வசனமும் ஒன்றாகும். இவ்வசனத்தில் 'தங்கள் காரியத்தில் மிகைத்தவர்கள் இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம்' என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான்.
    இந்த வார்த்தையைத் தான் சமாதி வழிபாட்டை நியாயப் படுத்துவதற்குரிய ஆதாரமாக இவர்கள் கருதுகின்றனர். அவர்கள் நல்லடியார்களாக இருந்ததன் காரணமாகத் தான் அவர்கள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பப் பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.
    இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
    அவர்கள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பியதற்கும் அந்த நல்லடியார்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வழிபாட்டுத் தலம் எழுப்பியோர் வலிமை பெற்றவர்களாக மிகைத்தவர்களாக இருந்தார்கள் என்று தான் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.
    இவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? ஏன் இப்படி எழுப்பினார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் தேவையான விளக்கம் கிடைக்கின்றது.
    'யூதர்களும் கிறித்தவர்களும் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கியதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான் என்பது நபிமொழி.
    இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்காவிட்டால் அவர்களது அடக்கத்தலமும் உயர்த்திக் கட்டப் பட்டிருக்கும் என்று வேறு சில அறிவிப்புக்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் பல நூற்களில் பதிவு செய்யப்பட்டதாகும்.
புகாரி - 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம் - 529, 530, 531
அபூதாவூது - 3227
நஸயீ - 703, 2046, 2047
முஅத்தா - 414, 1583
தாரமி - 1403
அஹ்மத் - 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363
இப்னு ஹிப்பான் - 2326, 2327, 3182, 6619
நஸயீயின் குப்ரா - 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093
பைஹகீ - 7010, 7011, 11520, 18530
அபூயஃலா - 5844
தப்ரானி (கபீர்) - 393 - 411, 4907
இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
    நல்லடியார்களின் அடக்கத்தலத்தின் மீது வழிபாட்டுத்தலம் எழுப்புவது யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழக்கமாக இருந்ததை இந்த நபிமொழிகளிலிருந்து நாம் அறிகின்றோம். அந்த வழக்கப் படிதான் அவர்கள் குகைவாசிகள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பினார்கள்.
சில நடவடிக்கைகள் முந்தைய சமுதாயங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிந்தைய சமுதாயத்திற்குத் தடுக்கப் படுவதுண்டு. அத்தகைய காரியங்களில் இதைச் சேர்க்கவே முடியாது.
    முந்தைய காலத்திலும் இது தடை செய்யப் பட்டே இருந்தது. அனுமதிக்கப்பட்டதை அவர்கள் செய்து இருந்தால் சாபத்துக்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.
    எனவே குகைவாசிகளான நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பியவர்கள் இறைவனின் சாபத்துக்குரியவர்களே தவிர நல்லடியார்கள் அல்ல.
    சமாதிகளில் கட்டடம் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (முஸ்லிம்)
    கட்டப்பட்ட சமாதிகளை இடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (முஸ்லிம்)
    என் அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்காதீர்கள். (அஹ்மத், அபூயஃலா)
    என்றெல்லாம் கடுமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டார்கள். நானே இறைவன் என்று பிர்அவ்ன் கூறினான். இதை அல்லாஹ்வும் குர்ஆனில் சுட்டிக் காட்டுவதால் நானே இறைவன் என்று நாமும் கூறலாம் என்று வாதிட முடியாது.
    அதுபோலத் தான் இந்தத் தீயவர்களின் செயலையும் எடுத்துக் கூறுகின்றான்.
    இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். 19 வது வசனத்தில் 'வல்யதலத்தஃப்' என்ற வார்த்தையை மட்டும் மிகப் பெரிய எழுத்தாக இந்தியாவில் அச்சிடப்படும் குர்ஆனில் அச்சிட்டுள்ளார்கள். குர்ஆனின் எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் இந்த இடத்தில் சரி பாதி வருகின்றது என்று காரணம் கூறுகின்றார்கள்.
    எழுத்துக்களை எண்ணுவதில் பல்வேறு அளவுகோல்கள் உள்ளன. ஒவ்வொரு அளவுகோலின் படி சரிபாதியானது வௌ;வேறு இடங்களில் அமையும். சரிபாதியாக அமைவது ஒரு பெரிய ஆராய்ச்சி அல்ல. எழுத்துக்களை எண்ணுவதற்காக குர்ஆன் அருளப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கத்து காபிரும் நாமும் ஒன்றா ?

கேள்வி :
மக்கத்து காஃபிர்களையும், எங்களையும் ஒன்றாக்கி பார்க்கும் உங்கள் வாதம் பலவீனமானது, அவர்கள் நபிகள் நாயகதை எதிர்த்தார்கள், அடித்தார்கள், பைத்தியம் என்றார்கள், நாங்கள் அப்படி இல்லையே

பதில்:
நபிகள் நாயகத்தை மக்கத்து காஃபிர்கள் எதிர்கவில்லை, நபிகள் சொன்ன அந்த தவ்ஹீதிற்காக தான் எதிர்த்தார்கள், நீங்கள் அல்லாஹ்வுடன் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் என்று கூறியிருந்தால் நபிகள் நாயகத்தை அவர்கள் துன்புருத்தி இருக்கமாட்டார்கள்.

இப்பொழுது உள்ள கபுறு வணங்கிகள் நபிகள் நாயகத்தை எதிர்க்க வில்லை என்பது உண்மை தான், ஆனால் நபிகள் நாயகம் சொன்ன அந்த தவ்ஹீதை சொன்ன யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடி உதை விழாமல் இருந்ததில்லை, அவர்களை பைத்தியம், வழித்தவரியவர்கள் என்று ஏன் சில தவ்ஹீத் சகோதரர்களை கொன்றும் இருக்கிறார்கள். பள்ளிவாயல் களை எரித்தும் அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தியும் உள்ளனர்
மக்காவில் இணைவப்பவர்கள் நபிகள் நாயகத்தை எவ்வாறு துன்புறுத்தினார்களோ, அது போல தவ்ஹீதை ஏற்று கொண்ட அனைவரும் கபுறு வணங்கிகளால்  துன்புருத்த பட்டனர்.
துன்புறுத்தப்படுகின்றனர் 
அதை நபிகள் நாயகத்தயும் அல்லாஹ்வையும் எதிர்த்தாகதான் நாம் எடுத்து கொள்ள முடியும்.
எனவே மக்கத் காஃபிர்களும் இவர்களும் ஒன்றில்லை என்று கூறமுடியாது.

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்

இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கை யிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

இந்தக்காலமும் கடந்து, அக்கால மக்களும் மரணித்த பின்னால் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மனிதர்கள் அவர்களிலுள்ள ‘வத்து’ ‘சுவா’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ போன்ற நல்லடியார்களின் உருவங்களை தீட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் கடவுள்களாக எண்ணி வணங்கி, வழிபட எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அதிலிருந்து அம்மக்களைத்தடுத்து நிறுத்துவதற்காக உலகில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் இப்பூமியில் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் தத்தமது கற்பனைகளில் உதிக்கின்றவற்றை தாமாக வணங்கி, வழிபட தலைப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வானவர்களை யும், மற்றும் சிலர் நபிமார்களையும், நல்லடியார் களையும், வேறு சிலர் ஜின்களையும், இன்னும் சிலர் மாட்டையும் வணங்கி வந்தனர்.
மக்கா வாழ் காஃபிர்கள் , அல்லாஹ்தான் இவ்வுலகைப் படைத்தவன், வானங்களில் இருந்து மழை பொழி விப்பவன், அதிலிருந்து உணவளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டாலும் தமது வணக்க வழிபாடுகளில் அல்லா ஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை காஃபிர்களே! எனக் கூறி அழைக்கின்றான்.