ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் நிற்க
வேண்டும். அதற்காக எத்தகைய தியாகத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனால்
கூறப்படும் இவ்வரலாற்று நிகழ்ச்சியை, பல தெய்வக் கொள்கையை இஸ்லாத்தில்
நுழைத்திடுவதற்குத் துணையாக்கிக் கொண்ட அவலமும் நடந்தேறியது.
குகைவாசிகளின் வரலாற்றுத் தொடரைக் கூறும்
வசனங்களில் 21 வது வசனமும் ஒன்றாகும். இவ்வசனத்தில் 'தங்கள் காரியத்தில்
மிகைத்தவர்கள் இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம்' என்று கூறியதாக
அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த வார்த்தையைத் தான் சமாதி வழிபாட்டை
நியாயப் படுத்துவதற்குரிய ஆதாரமாக இவர்கள் கருதுகின்றனர். அவர்கள் நல்லடியார்களாக
இருந்ததன் காரணமாகத் தான் அவர்கள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பப் பட்டதாக அல்லாஹ்
கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.
இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா
என்றே தெரியவில்லை.
அவர்கள் மீது வழிபாட்டுத் தலம்
எழுப்பியதற்கும் அந்த நல்லடியார்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வழிபாட்டுத்
தலம் எழுப்பியோர் வலிமை பெற்றவர்களாக மிகைத்தவர்களாக இருந்தார்கள் என்று தான்
அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லடியார்கள் என்று
அல்லாஹ் கூறவில்லை.
இவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள்
நல்லவர்களா? கெட்டவர்களா? ஏன் இப்படி எழுப்பினார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் வழிகாட்டுதலில் தேவையான விளக்கம் கிடைக்கின்றது.
'யூதர்களும் கிறித்தவர்களும் தங்களின்
நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கியதால் அவர்களை அல்லாஹ் சபித்து
விட்டான் என்பது நபிமொழி.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள்
எச்சரிக்காவிட்டால் அவர்களது அடக்கத்தலமும் உயர்த்திக் கட்டப் பட்டிருக்கும் என்று
வேறு சில அறிவிப்புக்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் பல
நூற்களில் பதிவு செய்யப்பட்டதாகும்.
புகாரி - 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம் - 529, 530, 531
அபூதாவூது - 3227
நஸயீ - 703, 2046, 2047
முஅத்தா - 414, 1583
தாரமி - 1403
அஹ்மத் - 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363
இப்னு ஹிப்பான் - 2326, 2327, 3182, 6619
நஸயீயின் குப்ரா - 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093
பைஹகீ - 7010, 7011, 11520, 18530
அபூயஃலா - 5844
தப்ரானி (கபீர்) - 393 - 411, 4907
இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
புகாரி - 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம் - 529, 530, 531
அபூதாவூது - 3227
நஸயீ - 703, 2046, 2047
முஅத்தா - 414, 1583
தாரமி - 1403
அஹ்மத் - 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363
இப்னு ஹிப்பான் - 2326, 2327, 3182, 6619
நஸயீயின் குப்ரா - 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093
பைஹகீ - 7010, 7011, 11520, 18530
அபூயஃலா - 5844
தப்ரானி (கபீர்) - 393 - 411, 4907
இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
நல்லடியார்களின் அடக்கத்தலத்தின் மீது
வழிபாட்டுத்தலம் எழுப்புவது யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழக்கமாக இருந்ததை
இந்த நபிமொழிகளிலிருந்து நாம் அறிகின்றோம். அந்த வழக்கப் படிதான் அவர்கள்
குகைவாசிகள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பினார்கள்.
சில நடவடிக்கைகள் முந்தைய சமுதாயங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிந்தைய சமுதாயத்திற்குத் தடுக்கப் படுவதுண்டு. அத்தகைய காரியங்களில் இதைச் சேர்க்கவே முடியாது.
சில நடவடிக்கைகள் முந்தைய சமுதாயங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிந்தைய சமுதாயத்திற்குத் தடுக்கப் படுவதுண்டு. அத்தகைய காரியங்களில் இதைச் சேர்க்கவே முடியாது.
முந்தைய காலத்திலும் இது தடை செய்யப் பட்டே
இருந்தது. அனுமதிக்கப்பட்டதை அவர்கள் செய்து இருந்தால் சாபத்துக்குரியவர்கள் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.
எனவே குகைவாசிகளான நல்லடியார்கள் மீது
வழிபாட்டுத் தலத்தை எழுப்பியவர்கள் இறைவனின் சாபத்துக்குரியவர்களே தவிர
நல்லடியார்கள் அல்ல.
சமாதிகளில் கட்டடம் கட்டுவதை நபி (ஸல்)
அவர்கள் தடுத்தார்கள். (முஸ்லிம்)
கட்டப்பட்ட சமாதிகளை இடிக்குமாறு நபி (ஸல்)
அவர்கள் கட்டளையிட்டார்கள். (முஸ்லிம்)
என் அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக
ஆக்காதீர்கள். (அஹ்மத், அபூயஃலா)
என்றெல்லாம் கடுமையாக நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் எச்சரித்து விட்டார்கள். நானே இறைவன் என்று பிர்அவ்ன் கூறினான். இதை
அல்லாஹ்வும் குர்ஆனில் சுட்டிக் காட்டுவதால் நானே இறைவன் என்று நாமும் கூறலாம் என்று
வாதிட முடியாது.
அதுபோலத் தான் இந்தத் தீயவர்களின் செயலையும்
எடுத்துக் கூறுகின்றான்.
இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் நாம்
சுட்டிக் காட்ட வேண்டும். 19 வது வசனத்தில் 'வல்யதலத்தஃப்' என்ற வார்த்தையை மட்டும்
மிகப் பெரிய எழுத்தாக இந்தியாவில் அச்சிடப்படும் குர்ஆனில் அச்சிட்டுள்ளார்கள்.
குர்ஆனின் எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் இந்த இடத்தில் சரி பாதி வருகின்றது என்று
காரணம் கூறுகின்றார்கள்.
எழுத்துக்களை எண்ணுவதில் பல்வேறு அளவுகோல்கள்
உள்ளன. ஒவ்வொரு அளவுகோலின் படி சரிபாதியானது வௌ;வேறு இடங்களில் அமையும். சரிபாதியாக
அமைவது ஒரு பெரிய ஆராய்ச்சி அல்ல. எழுத்துக்களை எண்ணுவதற்காக குர்ஆன் அருளப்படவில்லை
என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்