அவ்லியாக்களான இறைநேசர்களிடம்? நேரடியாக
உதவி கோரலாம் என்று குர்ஆனே வழிகாட்டுகிறதாம். அதற்கு அவர்கள் குறிப்பிடும்
ஆதாரத்தை பாருங்களேன்.
வாதம் 5
அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.
குர்ஆன் கூறுகிறது:
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' –
குர்ஆன் கூறுகிறது:
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' –
அல்குர்ஆன் 16:43
இவ்வசனம்,
உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்த காரியம் கைகூட வேண்டுமோ,
அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்கு தெரியாத விஷயங்களை நல்லபடியாக
முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை
மிகத் தெளிவாகவே விளக்குகிறது.
பதில் 5
இதைப் படித்ததும் நபிகள் நாயகம் காலத்து இறைமறுப்பாளர்களும் யூதர்களும் தான் நம் சிந்தனைக்கு வருகிறார்கள்.
அவர்கள் தான் இறைவனின் வசனத்தையும்
இறைத்தூதரின் போதனையையும் தங்கள் மனோ இச்சைக்கு தகுந்தவாறும் தங்களுக்கு
சாதகமாகவும் திரித்து கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அதனாலே இறைவனின்
சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.
நம்பிக்கை
கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல்
(இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும்
தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம்
வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர்.
வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது
(சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது
கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர்.
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர்
அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க
விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும்
வேதனை உண்டு.
அல்குர்ஆன் 5 41
இன்றைய கப்ர் வணங்கிகளின் செயல் அச்சரம் பிசகாமல் அன்றைய காஃபிர்கள் - யூதர்களின் செயலை அப்படியே ஒத்திருக்கின்றது.
இருக்கின்ற குர்ஆன் வசனங்களை தங்கள்
கருத்திற்கு தோதாக வளைத்து திரிப்பது, இல்லாத நபிமொழிகளை நபிகள் நாயகம்
கூறியதாக அபாண்டமாக பொய் சொல்வது இவ்விரண்டுமே கப்ர் வணங்கிகளின் ஆதார
செயலாகும். இவ்விரண்டு வழிமுறையை பயன்படுத்தியே தங்களின் அழிந்து போன
கொள்கைகளை மக்களிடையே உயிரூட்ட முற்படுகிறார்கள்.
வலீமார்களிடம் உதவி தேடலாம் எனும் இந்தத் தலைப்பிலும் தங்களின் வழக்கமான பாணியில் அதே வழியில் தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.
இனி இவர்களின் அளப்பரிய அறிவாற்றலை வெளிப்படுத்தும் ஆதாரத்திற்கு வருவோம்.
குர்ஆன் கூறுகிறது:
உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' – அல்குர்ஆன் 16:43
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' – அல்குர்ஆன் 16:43
இது தான் அவ்லியாக்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்பதற்கு கப்ர் வணங்கிகள் குறிப்பிடும் ஆதாரம்.
அது சரி ஏழாம் நாள் பாத்திஹா ஓத அல்ஹம்து சூரா 7 வசனம் உள்ளதை ஆதாரம் காட்டிய மூளையற்ற கூட்டம்தானே.
மண்ணை வணங்கும் மடையர்களிடம் வேறு என்ன ஆதாரத்தை எதிர்பார்க்க இயலும்?
திக்ர் உடையவர்கள் என்றால் அவ்லியாக்களாம். என்னே இவர்களது குர்ஆன் ஞானம்.
ஒரு வாதத்திற்கு இவர்கள் செய்த பொருளின்
படி திக்ர் செய்பவர்கள் - திக்ரை உடையவர்கள் என்று அர்த்தம் வைத்தாலும்
திக்ர் செய்யும் அனைவரையும் தானே அது குறிக்கின்றது.
திக்ர் செய்யும் அனைவரையும் கொண்டு உதவி தேடலாம் என்று சொல்ல வேண்டியது தானே?
ஒரு வார்த்தைக்கு என்ன பொருள் செய்தாலும்
அடைப்புக்குறி ( ) போட்டு அதில் அவ்லியா என்று மறக்காமல் எழுதி விட வேண்டும்
என்று யார் தான் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களோ?
இவர்கள் குறிப்பிட்ட வசனத்தை முழுமையாகப்
படித்தாலே திக்ர் உடையவர்கள் என்றால் யார்? அவர்கள் அவ்லியாக்களா? என்பதை
இலகுவாக புரியலாம்.
(முஹம்மதே!)
உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான
சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள்
அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! அல்குர்ஆன் 16 43
உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம் என்பது இறைவன் நபிகள் நாயகத்திற்கு சொல்லும் சேதியாகும்.
இதுவரை ஆண்களையே இறைத்தூதர்களாக
அனுப்பியதாக அல்லாஹ் நபிகளாரிடம் தெரிவித்து விட்டு வேண்டுமானால் திக்ர்
உடையவர்களிடம் கேட்டுப்பார் என்கிறான்.
இவர்கள் செய்த பொருளின் படி அவ்லியாக்களிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அல்லாஹ் சொன்னான் என்றாகி விடும்.
நபிகள் நாயகம் எந்த அவ்லியாவிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்? முஹ்யித்தீனா? ஷாகுல் ஹமீது பாதுஷாவா? அல்லது வேறு யாருமா?
முதலில் அஹ்லுத் திக்ர் என்றால் அவ்லியா
என்று இவர்களுக்கு யார் சொன்னது? என்ன ஆதாரம்? மனம் போன போக்கில் அர்த்தம்
வைத்து பழகியதன் விளைவினாலும் திக்ர் மஜ்லிஸ் என்று அவ்லியாக்களின் பெயரால்
அதிகம் கூத்தடிப்பதாலும் எங்கே திக்ர் என்று பார்த்தாலும் இவர்களுக்கு
அவ்லியாக்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள் போலும்.
அதற்காக குர்ஆனில் திக்ர் என்று வந்தாலும்
கூட இறைவனை நினைவு கூராமல் அவ்லியாக்கள் என்று மனிதர்களை நினைவு கூர்வது
திக்ர் மஜ்லிஸ் தாக்கம் சற்றே அதிகம் எனத்தோன்றுகிறது.
திக்ர் என்றால் அறிவுரை என்று பொருள்.
குர்ஆனும் திக்ர் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
அல்குர்ஆன் 15 6,9
அஹ்லுத் திக்ர் என்றால் அறிவுரை வழங்கப்பட்டவர் எனப்பொருளாகும். எந்த அகராதியிலும் அவ்லியா என்று பொருள் கிடையாது.
உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக
அனுப்பியுள்ளோம் எனக் கூறிவிட்டு வேண்டுமானால் திக்ர் வழங்கப்பட்டவர்கள்
அதாவது தவ்ராத் இன்ஜீல் எனும் அறிவுரைகள் வழங்கப்பட்டவர்களிடம்
கேட்டுப்பாருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இது தான் இந்த வசனத்திற்கு விளக்கமாகும்.
இதில் எங்கே அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு ஆதாரமுள்ளது?
மனம் போன போக்கில் இறைவசனத்திற்கு
அர்த்தம் வைக்க ஆரம்பித்தால் இப்படித்தான் கண்டதையும் உளறும் படி மறை
கழன்று போகும் என்பதை அறிவுறுத்துகிறோம்.
---onlinepj
மேலும் சில பதிவுகள்
என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் எனும் செய்தியின் உண்மை நிலையை காண இங்கே கிளிக் செய்யவும்
எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன் என்பதின் விளக்கத்தினை காண இங்கே கிளிக் செய்யவும்
அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கையா?என்பதனை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
ஹுனைஃப் ரலி) நபிகளாரின் பொருட்டால் துஆ செய்தார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
---onlinepj
மேலும் சில பதிவுகள்
என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் எனும் செய்தியின் உண்மை நிலையை காண இங்கே கிளிக் செய்யவும்
எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன் என்பதின் விளக்கத்தினை காண இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்