"அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? - குர்ஆன் 2:170
அவ்லியாக்கள்
எனப்படுபவர்கள் அன்பியாக்கள், சஹாபாக்கள் போன்று வலிமார்கள் எனப்படுவோரும்
உள்ளனர். இப்படியான இறைநேசர்கள் தான் தர்காவில் அடங்கப்பட்டுள்ளனர் என்று
சிலரை குறிப்பிட்டு வருகின்றனர். இவ்வலிமார்களைத் தான் அல்லாஹ் தன்
திருமறையில் அவ்லியாக்கள் என்று குறிப்பிடுகின்றான். அவர்களை நினைவு
கூருமுகமாக விழாக்கள் எடுக்கின்றோம் என கூறிவருவோரை பார்க்கின்றோம்.
அல்குர்ஆனில் கூறுப்படும் அவ்லியாக்கள் என்றால் யார் ..? என்பதினை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
அல்குர்ஆனில் கூறுப்படும் அவ்லியாக்கள் என்றால் யார் ..? என்பதினை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
"அல்லாஹுவின் நேசர்கள் " என்றால் யார்?
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அல்குர்ஆனில் "أَوْلِيَاءَ" என்ற வார்த்தை 36 இடங்களில் பயன்ப்படுத்தப்பட்டுள்ளன. "பாதுகாவலர்கள்", "நண்பர்கள்", "நேசர்கள்" என பொருள் படுத்தப்பட்டுள்ளது.
"வலீ" என்ற வார்த்தையின் பன்மைதான் அவ்லியாவாகும். "வலீயுல்லாஹ்" என்றால் அல்லாஹுவின் நேசர், "அவ்லியா அல்லாஹ்" என்றால் அல்லாஹுவின் நேசர்கள் என்பது பொருளாகும்.
அல்லாஹுவின் நேசர்களின் பண்புகளையும் அவர்கள் யார் என்பதினையும் அல்லாஹ் பின்வரும் வசனங்களின் மூலம் அறிய தருகின்றதைப் பாருங்கள்.
இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம். (2;38)
ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும் போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (7:35)
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை)அஞ்சுவோராக இருப்பார்கள். (10:62,63)
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள்.மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (2:2,3,4)
யார் அல்லாஹுவின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கைக் கொண்டு, அவன் தூதர்களின் மூலம் காட்டிய நேர்வழியை முழுமையாக பின்பற்றி அல்லாஹுவை அஞ்சி நடக்கின்றாரோ அவரே அல்லாஹுவின் நேசரகளாவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற)நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். அத்தகைய அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்
காட்டிய நேர்வழியை பின்பற்றி நடக்கின்ற அனைவரும் அல்லாஹுவின் நேசர்கள்
என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆறாம் நூற்றாண்டில் இறக்கப்பட்ட வசனங்கள் ஏதோ
சில வருடங்களுக்கு முன் வாழ்ந்து மரணித்த சிலரை குறிப்பதாக சொன்னால்
இவர்களின் கூற்றை என்னவென்று சொல்வது...!
முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை பின்பற்றி நடந்தவர்களையும் அல்லாஹ் நேசர்கள் என்றே பின்வரும் வசனங்களில் கூறுகின்றான்.
நம்பிக்கை
கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில்
அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர் களின் கூலி
அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை.
கவலைப்படவும் மாட்டார்கள். (2:62),(5:69)
أَلَا
إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
இந்த வசனத்தின் நோக்கம் எல்லோரும் அல்லாஹ்வின் நேசர்களாக மாறவேண்டும்
என்பதைப் பற்றிதான் குறிப்பிடுகின்றன என்பதினை நாம் விளங்கிக்கொள்ள
வேண்டும்.
1. நல்வழியில் செலவிட்டு , நல்லறங்கள் புரிபவர்களுக்கு கூலி உண்டு,
தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2:274)
நம்பிக்கை
கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து
வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்குஎந்த
அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2;277)
2. நல்வழியில் செலவிட்டதை சொல்லிக்காட்டாதவர்களுக்கு கூலி உண்டு
அல்லாஹ்வின்
பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக்
காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின்
இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும்
மாட்டார்கள். (2: 261)
3. அல்லாஹுவின் பாதையில் உயிர்த்தியாகம் செய்பவர்களுக்கு கூலி உண்டு
தமக்கு
அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இது வரை) சேராமல்
பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை.
அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
(3:170)
4. தூதர்களை நம்பி, தவறை திருத்திக் கொள்வோருக்கு கூலி உண்டு
நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (6:48)
5. அல்லாஹுக்கு மட்டுமே அடிப்பணிந்தவருக்கு கூலி உண்டு
அவ்வாறில்லை!
தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும் செய்பவருக்குஅவரது
கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள்
கவலைப்படவும் மாட்டார்கள். (2: 112)
அல்லாஹ் நேசிக்கின்ற காரியங்களை இன்னும் நிறைய அடிக்கிக்கொண்டே போகலாம் .அல்லாஹுவும், அவனின் தூதர்களும் எந்த வழியை இஸ்லாம் என்று காட்டிதந்தார்காலோ அத்தகைய வழியை பின்பற்றி நடந்தால் தான் நாம் அல்லாஹுவின் நேசர்களாக மாற முடியும்,அல்லாஹ் நேசிக்கின்ற அடியானாக மாற நற்காரியங்களில் போட்டிபோடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றதைப் பாருங்கள்.
நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள். உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர். முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்.போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும். (83:23,24,25,26)
****************
இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள் என்பதைகான இங்கே கிளிக் செய்யவும்
இறைநேசரைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்