அடுத்து காரியங்களில் திகைப்படைந்து விடுவீர்களேயானால் அவுலியாக்கள் கபுருகளுக்கு சென்று உதவி தேடிக்கொள்ளுங்கள்
என்று கபுறு வணங்கிகளால் முவைக்கப்படும் ஹதீஸ் பற்றி பார்ப்போம்
.
வாதம்:-
பெருமானார் (ஸல்) அலைஹி வஸல்லம் கூறினார்கள்
اذا تحيرتم في الامور فاستعينوا باهل القبور
நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடவும்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி
ஆதாரம் தஃப்ஸீருல் ரூஹூல் பயான் பாகம் 5
பதில்
கப்ர் வணங்கிகள் எத்தகைய கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதை இந்த வாதத்தின் மூலம் அவர்களை அறியாதவர்களும் அறிந்து கொள்ளலாம்.
தங்கள் வழிகெட்ட கொள்கையை நிலைநாட்டவும் மக்களிடம் அதை விற்கவும் எந்த செயலிலும் இறங்குவார்கள் என்பதை புரிய இது ஒன்றே போதுமானது.
நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரில் உள்ள வலிமார்களைக் கொண்டு உதவி தேடவும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களாம்.
இந்தச் செய்தி கட்டுக்கதைகளின் தொகுப்பான ரூஹுல் பயான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹனபி மத்ஹப் வெறியரான இஸ்மாயீல் ஹக்கீ என்பவரால் எழுதப்பட்டதே இந்த நூல். ஹிஜ்ரி 1127 ஆம் ஆண்டு மரணித்த மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தவர் இவர். ஹதீஸ் திரட்டிய காலத்தின் அறிஞர் அல்ல. இதையும் தூக்கி அடிக்கக் கூடிய கட்டுக்கதைகள் எல்லாம் இந்தக் குப்பை நூலில் மலிந்து காணப்படுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தி என்றால் அந்த ஹதீஸ் நபிகளில் தொடங்கி நூலாசிரியர் வரை அறிவிப்பாளர் தொடர் இருக்க வேண்டும். அல்லது அறிவிப்பாளர் தொடருடன் கூடிய நூல்களில் பதிவு செய்யப்பட்டதை எடுத்துக் காட்ட வேண்டும்.
அப்படி ரூஹுல் பயானில் குறிப்பிடப்படவில்லை.
(إذا تحيرتم في الأمور فاستعينوا من أصحاب القبور) كذا في الأربعين لابن كمال باشا - روح البيان (5/ 178)
இதுதான் ரூஹுல் பயான் என்ற கட்டுக்கதை
நூலில் உள்ள விபரம். அதாவது இந்த ஹதீஸ் இப்னு கமால் பாஷா என்பவரின் நாற்பது
ஹதீஸ்கள் என்ற நூலில் உள்ளதாக இந்த அறிவிலி குறிப்பிடுகிறார்.
இப்னு கமால் பாஷா என்பவர் ஹதீஸ் தொகுத்த காலத்தவர் அல்லர். ஹிஜ்ரி 940ல் வாழ்ந்தவர் தான் இவர். நபிகள் சொன்ன செய்தி 940ல் வாழ்ந்தவருக்கு எப்படி கிடைக்கும்? 940 ஆன்டுகளாக வாழ்ந்த எந்த அறிஞரும் பதிவு செய்யாத செய்தி இவருக்கு எப்படி கிடைக்கும்?
இந்த ஆசாமியும் ஹனபி மத்ஹப் வெறியராவார். ஹதீஸ்கள் பற்றியோ, அதன் தராதரம் பற்றியோ அறிவில்லாதவர். இந்தப் பொய்யர் சுயமாக இட்டுக்கட்டி நபியின் பெயரால் சொன்னதை இன்னொரு பொய்யரான ரூஹுல் பயான் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
இப்னு கமால் பாஷா என்று ஒரு ஷைத்தான்
தோன்றுவான். அவனை நம்பாதீர்கள் என்று நபி சொன்னதாக இப்போது ஒருவர்
பதிவிட்டால் அதன் தரம் என்னவோ அந்தத் தரம் தான் இவரது நூலுக்கும் உள்ளது.
தர்காவாதிகளுக்கு பகிரங்க சவால் விடுகிறோம்.
இந்தச் செய்தி எந்த ஹதீஸ் நூலில் உள்ளது? இதன் முழு அறிவிப்பாளர் தொடர் என்ன?
இணைவைப்பை ஒழிக்க வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படி கூறினார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?
நபிகளார் மீது இட்டுக்கட்ட எப்படி மனம்வந்தது? என்றெல்லாம் கப்ர் வணங்கிகளிடம் கேட்க முடியாது. அவர்களின் தொழிலே அது தானே.
தங்கள் கருத்தை நிலைநாட்ட நபிகள் நாயகத்தின் பெயரை பயன்படுத்தி பொய்களை அள்ளிவிடுவது கப்ர் வணங்கிகளுக்கு கைவந்த கலை. அவர்கள் படித்த மத்ஹபு நூற்கள் அவர்களை அப்படி பயபக்தி கொண்டவர்களாக பரிணமிக்கச் செய்கிறது.
அதனால் எப்படி நபி மீது
இட்டுக்கட்டினீர்கள் என்ற கேள்வியைத் தவிர்த்து விட்டு வேறு சில கேள்விகளை
தர்காவாதிகளிடம் கேட்கிறோம். முடிந்தால் பதிலளிக்கட்டும்.
கேள்வி 1
ஒரு செயலில் தடுமாற்றம் ஏற்படும் போது
வலிமார்களின் கப்ரில் உதவி வேண்டுமாறு நபிகளார் சொன்னது உண்மை எனில்
பிறகேன் அதை செய்த யூத, கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
சபித்தார்கள்?
நபி (ஸல்)
அவர்கள் (தமது மரணத்தருவாயில்) நோயுற்றிருந்தபோது, "யூதர்களையும்
கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!
அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக
ஆக்கிவிட்டார்கள்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ரலி, நூல் : புகாரி 1390
கப்ர் வணங்கிகளின் வாதப்படி நபிகளார் சொன்னதைத் தானே யூதக்கிறித்தவர்கள் செய்தார்கள்?
பிறகேன் இந்த யூதர்களும் கிறித்தவர்களும்
நபிகள் நாயகத்தால் சபிக்கப்பட்டார்கள் என்பதை யூதக்கிறித்தவ கூட்டாளிகளான
தர்காவாதிகள் விளக்குவார்களா?
கேள்வி 2
எதைக் கேட்பதாக இருந்தாலும் அல்லாஹ்விடம் மட்டுமே கேள் என்று குர்ஆன் வழியில் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்.
என்னைப்
பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன்.
பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப்
பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே
நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) அல்குர்ஆன் 2 186
இந்த இறைவசனத்தை நமக்கு கற்றுத்தந்த நபிகளார் இதற்கு மாற்றமாக உனக்கு தடுமாற்றம் வந்தால் கப்ரில் உள்ளோரிடம் போய் உதவி வேண்டு, அவர்களிடம் போய் பிரார்த்தனை செய் என்று எப்படி கூறுவார்கள்?
தர்காவாதிகள் பதிலளிப்பார்களா? அல்லது பல்லிளிப்பார்களா?
கேள்வி 3
நபிகள் நாயகம் கூறியதாக கப்ர் வணங்கிகள் இட்டுக்கட்டிச் சொன்ன செய்தியை சற்று நன்றாகக் கவனியுங்கள்.
நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடவும்.
இதில் வலிமார்களை என்பது நேரடிச் சொல்லில் இல்லை. அடைப்புக்குறிக்குள் தான் உள்ளது.
அப்படி பார்த்தால் கப்ரு உடையவர்களை அதாவது கப்ரில் உள்ளவர்களைக் கொண்டு உதவி தேடவும் என்று தான் அந்தப் பொய்யான செய்தியில் உள்ளது.
கப்ரில் உள்ளவர்கள் என்பது பொதுவான சொல்லாகும்.
கப்ரில் நல்லோரும் இருப்பார்கள் தீயோரும் இருப்பார்கள்.
அதன்படி கப்ரில் உள்ள யாரைக் கொண்டும் உதவி தேடலாம் என்று சொல்லவேண்டியது தானே?
மேலும் முஸ்லிம்கள் மட்டுமின்றி இறைமறுப்பாளர்களும் கப்ரில் உள்ளவர்கள் தாம். கப்ரில் உள்ளவர்களைக் கொண்டு உதவி தேடு என்று நபி சொன்னது உண்மை எனில் கப்ரில் இறைமறுப்பாளர்களை கொண்டும் உதவி கேட்க வேண்டியது தானே? நபி சொன்னதற்குப் பிறகு அவர்களைக் கொண்டு உதவி தேடுவதில் இவர்களுக்கு என்ன தடை?
நபி மீது இட்டுக்கட்டிச் சொல்வது என்றாகி விட்டதற்கு பிறகு வலிமார்களிடம் என்பது மட்டும் ஏன் அடைப்புக்குறிக்குள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்க வேண்டும். அதையும் நேரடியாக நபியின் வார்த்தையாக இட்டுக்கட்டி இது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாமே?
இப்படி பல கேள்விகள் இவர்களிடம் கேட்கலாம்.
பல வருடங்களாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு வாய்திறக்க மறுப்பவர்கள் இதற்கா பதிலளிக்க போகிறார்கள்?
---onlinepj.com---
---onlinepj.com---
********************************************************************************
-حديث: (( إذا أعيتكم الأمور فعليكم بأصحاب القبور)) وفي لفظ: ((إذا تحيرتم في الأمور فاستعينوا بأهل القبور)) .
تخريجه:
لم أقف عليه مسنداً في شيء من الكتب.
الحكم عليه:
الحديث موضوع باطل فلا أصل له .
قال
شيخ الإسلام -رحمه الله- : "ويروون حديثاً هو كذب باتفاق أهل المعرفة ،
وهو: ((إذا أعيتكم الأمور فعليكم بأصحاب القبور)) ، وإنما هذا وضع من فتح
باب الشرك" مجموع الفتاوى(11/293) ..
وقال
-رحمه الله-: "ويروون أحاديث مكذوبة من جنس أكاذيب الرافضة ؛ مثل قولهم:
((لو أحسن أحدكم ظنه بحجر نفعه الله به)) ، وقولهم : ((إذا أعيتكم الأمور
فعليكم بأصحاب القبور))" منهاج السنة(1/483) .
وقال
-رحمه الله- : "وإن كان بعض الناس من المشايخ المتبوعين يحتج بما يرويه عن
النبي -صلى الله عليه وسلم- أنه قال: ((إذا أعيتكم الأمور فعليكم بأهل
القبور-أو قال:- فاستعينوا بأهل القبور)) فهذا الحديث كذب مفترى على النبي
-صلى الله عليه وسلم- بإجماع العارفين بحديثه ، لم يروه أحد من العلماء
بذلك ، ولا يوجد في شيء من كتب الحديث المعتمدة" مجموع الفتاوى(1/356) ،
ومجموعة الرسائل والمسائل(1/23،24).
وقال
ابن القيم -رحمه الله-:"ومنها أحاديث مكذوبة مختلقة وضعها أشباه عباد
الأصنام من المقابرية على رسول الله -صلى الله عليه وسلم- تناقض دينه وما
جاء به ، كحديث : ((إذا أعيتكم الأمور فعليكم بأصحاب القبور)) ، وحديث:
((لو أحسن أحدكم ظنه بحجر نفعه)) ، وأمثال هذه الأحاديث التي هي مناقضة
لدين الإسلام ، وضعها المشركون ، وراجت على أشباههم من الجهال الضلال ،
والله بعث رسوله بقتل من حسن ظنه بالأحجار ، وجنب أمته الفتنة بالقبور بكل
طريق" إغاثة اللهفان(1/215) ..
وقال
الشوكاني -رحمه الله- : "وأما حديث: ((إذا أعيتكم الأمور)) فإنه مكذوب ،
ومن وضع الزنادقة الذين قصدوا إفساد الدين" الدر النضيد في إخلاص كلمة
التوحيد(ص/65) . والله أعلم.
***********************************************************************
இதுபற்றிய மேலும் சில பதிவுகள் .....
- காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மவ்லூத் மறுப்புக்கான காரணம் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்