"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இஸ்லாத்தின் பார்வையில் கபுர் கட்டுதல்

முன்னுரை!
இறந்து விட்ட மனிதரின் மண்ணறைக்கு மேல் இஸ்லாத்தின் பார்வையில் கட்டடம் கட்டுவது கூடாது. அவர்கள் நபிமார்களாகவோ, உயிர்த் தியாகிகளாகவோ இருந்தாலும் சரியே. அவர்களின் கப்ருக்கு மேல் கட்டடம் கட்டுவது முற்றிலும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதைப் பின்வரும் நபிமொழிகளிலிருந்து அறியலாம்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ
يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ ‏عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ رواه مسلم

ஜாபிர் பின் அப்துல்லா் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
நூல் : முஸ்லிம் (1765)


عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا ‏مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ رواه مسلم

அபுல்ய்யாஜ் அல்அசதீ அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!”என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் (1764)

أَنَّ ثُمَامَةَ بْنَ شُفَيٍّ حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ بِرُودِسَ فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا فَأَمَرَ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ بِقَبْرِهِ فَسُوِّيَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى ‏اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِتَسْوِيَتِهَا رواه مسلم

ஸுமாமா பின் ஷுஃபை (ர்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ‘ரோடிஸ்’ தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (1763)

கப்ரின் மேல் கட்டடம் எழுப்புவதை இந்நபிமொழிகள் வன்மையாகக் கண்டித்து தடை செய்வதை அறிகிறோம்.

பிமார்கள், நல்லோர்கள் என்று காரணம் கூறி அவர்கள் கப்ரின் மேல் கட்டடம் கட்டுவது நாளடைவில் இணை வைப்பின்பால் கொண்டு செல்லும் காரணியாகி விடும். யூத, கிறித்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் கப்ரின் மேல் கட்டடம் எழுப்பியேதே அவர்களை இணைவைப்பின் பக்கம் கொண்டு சென்றது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ ‏مَسَاجِدَ رواه البخاري

“அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத்தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூூரைரா (ரலி),
நூல் : புகாரி (437)


எப்படி ஆரம்பித்தது?

வத் சுவா யஊஸ் யஹூக் ஆகிய நல்லோர்கள் மரணித்த போது அவர்களது கப்ருகளில் நிiவு சின்னங்களை நட்டுமாறும் அதிலே அவர்களது பெயர்களை பொறிக்குமாறும் ஷைத்தான் மக்களை தூண்டினான். நாளடைவில் கப்ரிலுள்ளவர்களை வணங்க தொடங்கினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்.புகாரி)

யூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு பிரதான காரணம் கப்ரு வணக்கம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இந்த உலகத் தில் மிகச் சிறந்த மனிதர்களாக அவ்லியாக் களாக மகான்களாக திகழ்ந்த நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களுக்கு கப்ரு கட்டி வழிபாடு நடத்தியதால் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானார்கள். அந்த நல்லடியார்களின் கப்ருகளை வணங்குமிடங்களில் (மஸ்ஜிதுகளில்) கட்டிவைத்து வணங்கினார்கள். இதனை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் மூலம் வன்மையாக கண்டித்தான்.

நபி (ஸல்) அவர்களின் மரணவேளை நெருங்கிய போது தமது போர்வையை தமது முகத்தின் மீதுபோடுபவர்களாகவும் மூச்சித்தினரும் போது அதை முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் இருக்கும் போது தங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக (சுஜுது செய்யும் இடங்களாக) எடுத்துக்கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என கூறி அவர்களுடைய செயலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி
அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நீங்களும் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அதைவிட்டும் உங்களை நான் தடை செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியுற்றேன் என ஜுன்துப் (ரலி) அறிவிக் கிறார்கள். நூல்: முஸ்லிம்

இன்று நாட்டில் எத்தனை கப்ருகளை கட்டிவைத்துக் கொண்டு வழிபாடு நடாத்துகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் பள்ளி வாசலிலும் ஒரு மகானின் பெயரால் கப்ரை கட்டிவைத்து அதற்குப் பச்சை போர்வை போர்த்தி சந்தனம் பூசி பண்ணீர் தெளித்து ஊது பத்தி பற்றவைத்து சாம்பரானி புகை போட்டு விளக்கேற்றி எண்ணை ஊற்றி கொடி ஏற்றி வழிபாடு நடாத்துகிறார்கள். அல்லாஹ்வின்தூதரின் எச்சரிக்கையையும் பொறுப்படுத்தாமல் அல்லாஹ்வுடைய சாபம் (லஃனத்)தைப் பற்றியும் பயப்படாமல் ஈடுபாடு கொள்கிறார்கள்.

எனவே பள்ளிவாசல்களாக இருந்தாலும் சரி வேறு எந்த இடங்களில் இருந்தாலும் சரி கப்ருகள் கட்டக்கூடாது. கட்டப்பட்ட கப்ருகளை உடைக்க வேண்டும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதரின் கப்ரின் மேலும் கட்டடம் கட்டுவதோ மரியாதை என்ற பெயரில் அதில் வழிபாடு செய்வதோ அறவே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து தெளிவாக அறியலாம்.

ஆனால் கப்ரு வணங்கிகள் எப்படியாவது தங்கள் கப்ர் வழிபாட்டை நியாயப்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இல்லாத செய்திகளை எல்லாம் பரப்பி மக்களைக் குழப்பும் கொடிய வேலையைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சமாதி வழிபாடு என்பது சவக்குழிக்குள் தள்ளப்படும் இக்காலத்தில் அதை எப்படியாவது மீட்டெடுக்கவும், மறு எழுச்சி பெறச்செய்யவும் மும்முரமான முயற்சியில் பரேலவிகள் இறங்கியுள்ளனர்.

நிரந்தர நரகில் தள்ளும் சமாதி வழிபாட்டின் பால் மக்களை அழைக்கும் நாசவேலையை இந்தக் குழப்பவாதிகள் தங்கள் சன்மார்க்க ஏடுகளில் (?) சேவையாகக் கருதி செய்து வருகிறார்கள். அதில் மார்க்கத்தை வளைத்து, இல்லாத கருத்தைத் திணிக்கும் திரிபு வேலையைச் செய்கிறார்கள்.
நபிமார்கள் மற்றும் வலிமார்களின் கப்ருகள் இடிக்கப்பட வேண்டியவை அல்ல  மாறாக கண்ணியப்படுத்தப்பட வேண்டியவை என்ற கருத்தில் கப்ர் வணங்கி ஒருவர் ஒரு கட்டுரையை எழுதி அதில் ஆதாரம் என்ற பெயரில் பல தவறான, அபத்தமான வாதங்களையும் முன்வைத்திருந்தார். அதற்குரிய விளக்கத்தைக் காண்போம்.

நபிமார்கள், அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சின்னங்களா?
நபிமார்கள், நல்லடியார்கள், மகான்கள் என்போர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாவர். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.
எனவே அவ்லியாக்களை, மகான்களை நாம் கண்ணியப்படுத்துவது நமது மார்க்கக் கடமை. இதனடிப்படையில் நபிமார்கள், இறந்து விட்ட நல்லடியார்களின் கப்ருகளை அழகாகக் கட்டுவதுதான் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயலாகும்.
இவ்வாறு கப்ர் வணங்கிகள் சமாதி வழிபாட்டை சரிகாண துடியாய்த் துடிக்கின்றனர்.
பதில்
இதைப் படிக்கும்போதே இது எவ்வளவு அபத்தமான வாதம் என்பதை அறிவுடையோர் அறிந்து கொள்வார்கள்.
அல்லாஹ்வின் சின்னம் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
ஆனால் அல்லாஹ்வின் சின்னம் எது? என்பதையும் அதை எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும்? என்பதையும் அல்லாஹ்வும் அவனது தூதரும்தான் கற்றுத்தர வேண்டும்.
ஸபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்றும் அதை கண்ணியப்படுத்தும் முறையையும் அல்லாஹ்வும் தூதரும் கற்றுத் தந்துள்ளார்கள்.
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் 2:158

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னங்கள் எனவும் அது எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மார்க்கம் கற்றுத் தந்துள்ளது.
(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான். அல்குர்ஆன் 22:36
எது அல்லாஹ்வின் சின்னம் என்பதை அல்லாஹ்தான் கூற வேண்டுமே தவிர கற்பனையின் அடிப்படையில் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
ஸபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறிய இறைவன், ஸயீ செய்வதே அதைக் கண்ணியம் செய்யும் முறை எனவும் கற்றுத் தந்துள்ளான்.
ஸபா, மர்வா இரண்டும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதால் அதை வழிபாடு செய்யலாம், அதனிடத்தில் தேவைகளை முறையிடலாம் என்பதற்கு ஒரு போதும் இது ஆதாரமாகாது.

அதுபோல பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்று கூறிய அல்லாஹ் அதை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்கிறான். இதுதான் அதைக் கண்ணியப்படுத்துவதாகும். பிராணிகளுக்கு தர்கா கட்டுவது அல்ல.

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அதைக் கண்ணியம் செய்ய வேண்டும். எனவே யாரும் அதை அறுக்கக் கூடாது என்று அறிவுடையோர் வாதிப்பார்களா?

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அது இறந்த பின் அதை அடக்கம் செய்து அங்கே கட்டடம் கட்டியெழுப்பலாம், வண்ண விளக்குகளால் அதை அலங்கரிக்கலாம், நம் தேவைகளை அந்த பலிப்பிராணியிடம் முறையிடலாம் என்று வாதம் வைத்தால் அது சரியா? அவர்களை மூளையுள்ளவர்கள் என்று யாரும் கருதுவார்களா?
அல்லாஹ்வின் சின்னம் என்பதால் அங்கே கட்டடம் எழுப்பலாம், அங்கே நம் தேவைகளை முறையிடலாம் என்று வாதிடுபவர்களை எந்தப் பட்டியலில் இணைப்போமோ அந்தப் பட்டியலில் தான் இந்த கப்ர் வணங்கிகளைச் சேர்க்க வேண்டும்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதில் கைதேர்ந்தவர்கள் இந்தக் கப்ர் வணங்கிகள்.
ஸபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதற்கும், நபிமார்களுக்கு கப்ர் கட்டலாம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?
பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதற்கும் அவ்லியாக்களின் கப்ர்களின் மேல் கட்டடம் எழுப்பலாம், அவர்களிடம் தங்கள் தேவைகளை முறையிடலாம், தலை சாய்த்து சஜ்தா செய்யலாம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?

இதிலிருந்தே தங்கள் மனோ இச்சையை மார்க்கமாக்க இவர்கள் எத்தகைய தில்லுமுல்லு வேலைகளையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதைக் காணலாம்.
மேலும் ஒன்றை அல்லாஹ்வின் சின்னம் என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த நேரடிச் சான்று இருக்க வேண்டும்.
நபிமார்களோ, இறைநேசர்களோ அல்லாஹ்வின் சின்னங்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அல்லாஹ்வோ, நபிகள் நாயகமோ அவ்வாறு நமக்குச் சொல்லவுமில்லை. அவ்வாறிருக்க இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் விதமாக நாமாக முடிவு செய்வது அல்லாஹ்விற்கே அவனது மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும்.
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 49:16
ஒரு வாதத்திற்கு நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று இருந்தால் கூட அத்தகைய தூதர்களில் ஒருவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கப்ருகள் கட்டுவது கூடாது என்று வன்மையாகத் தடை செய்துள்ளார்கள். கப்ரின் மேல் கட்டடம் எழுப்புவது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என்று எச்சரித்துள்ளார்கள்.

நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று நம்பினால் அவர்கள் சொன்னதைப் பின்பற்றுவதுதான் உண்மையில் அவர்களைக் கண்ணியப்படுத்தும் முறையாகும். இதனடிப்படையில் கப்ர்கள் இடிக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நடைமுறைப்படுத்துவது தான் அல்லாஹ்வின் சின்னமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகும்.

இறைத்தூதர்களுக்கும், நல்லடியார்களுக்கும் கப்ர் கட்டுவது, அலங்கரிப்பது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயல்களாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் அதைச் செய்திருப்பார்கள்.
இந்த கப்ர் வணங்கிகளின் வாதப்பிரகாரம் நபிமார்களின் கப்ர்களுக்கு கட்டடம் எழுப்பி, அல்லாஹ்வின் சின்னத்தைக் கண்ணியப்படுத்திய யூதக் கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்திருக்கமாட்டார்கள்.
நபிமார்களின் கப்ரில் கட்டடம் எழுப்பி, அதை அழகுபடுத்துவது இந்தக் குருடர்களின் பார்வையில் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயலாக இருந்திருந்தால், நபிமார்களுக்கு சிலை வடிப்பது கப்ர் கட்டுவதையும் விட மேலான கண்ணியம் இல்லையா?

இப்றாீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு சிலைகளை வடித்து கண்ணியம் செய்த மக்கத்து இணைவைப்பாளர்களை நபிகள் நாயகம் ஏன் கண்டிக்க வேண்டும்? அந்தச் சிலைகளை ஏன் தகர்க்க வேண்டும்?
இதிலிருந்தே கப்ர் கட்டி வழிபாடு செய்வது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய யூதக்கிறித்தவ கலாச்சாரம் தான். அது இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல என்பதைத் தெளிவாக புரியலாம்.

அல்லாஹ்வின் சின்னம், அதைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இந்த கப்ர் வணங்கிகள் பிதற்றுவது இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையிலானது அல்ல. முழுக்க முழுக்க தங்கள் மனோஇச்சையை மார்க்கமாக்குவதற்காகத்தான் என்பதை மறந்து விடக்கூடாது.
கப்ரை சீராக்கி, அழகாக்க வேண்டுமாம்!
கப்ர் வழிபாட்டை நியாயப்படுத்த பின்வருமாறு வாதத்தை எழுப்புகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கப்ர் கட்டப்படக் கூடாது, இடிக்க வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை. மாறாக கப்ரை சீராக்கி, அழகாக்குமாறுதான் நமக்கு உத்தரவிடுகிறார்கள்.

عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا ‏مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ رواه مسلم

உயரமான எந்தக் கப்ரையும் அழகுபடுத்தாமல் விட்டு விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நபிமொழி)

இதனைத்தான் தவ்ீத் கொள்கையில் இருப்பவர்கள் மாற்றி, மறைத்து கப்ர் கட்டப்படக் கூடாது. தரை மட்டத்திற்கு மேல் இருக்கும் கப்ரை இடிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

உயரமான கப்ர்களைக் கண்டால் சீராக்க வேண்டும் என்ற மேற்கண்ட தீஸில் ஸவ்வா எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அழகுபடுத்தல், சீராக்குதல் என்பதுதான் பொருள். குர்ஆனில் இச்சொல் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் சீராக்குதல் என்ற பொருளில்தான் வருகிறது. எங்கேயும் இடித்தல் என்ற பொருளில் வரவேயில்லை.

هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ [البقرة : 28 ، 29‏

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:29)

ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ [السجدة : 9‏]
பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
(அல்குர்ஆன் 32:9)

உதாரணமாக இந்த இடங்களில் எல்லாம் ஸவ்வா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு இடித்தல் என்று பொருள் செய்யவே இயலாது. அப்படி பொருள் செய்தால் வசனத்தின் கருத்தே அனர்த்தமாகி விடும்.
எனவே உயரமான கப்ருகளைச் சீர்படுத்துமாறுதான் அலி அவர்களுக்கு நபிகள் நாயகம் உத்தரவிட்டுள்ளார்கள். இடிக்குமாறு உத்தரவிடவில்லை. தவ்ீத் ஜமாஅத்தினர் தவறாக பொருள் செய்து கப்ருகளை நபிகள் நாயகம் இடிக்கச் சொன்னார்கள் என்று கூறிவருகிறார்கள்.
பதில்:
இது தான் அவர்களின் மற்றுமொரு வாதமாகும். இதன் மூலம் சமாதி வழிபாட்டை மார்க்க அடிப்படையில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.
சவ்வா என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் தரைமட்டமாக்குதல் என்பது கிடையாது. சீர்படுத்துதல் என்பதுதான் பொருள். சீர்படுத்துதல் என்பதோடு எதைக் கூறுகிறோமோ அதைக் கவனித்து தான் சவ்வா என்பதற்கு பொருள் செய்ய வேண்டும்.

கிழிந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஆடையைத் தைக்க வேண்டும் என்பது அர்த்தம். உடைந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஒட்டுவது என்று அர்த்தம். மேடாக உள்ளதை சீர்படுத்துவது என்றால் சமமாக்குதல் என்று அர்த்தம். பள்ளமாக இருப்பதை சீர்படுத்துதல் என்றால் உயர்த்துவது என்று அர்த்தம்.
எதுவும் கூறாமல் சீர்படுத்துங்கள் என்றால் அழகுபடுத்துங்கள் என்று பொருள். உயரமாக உள்ளதைச் சீர்படுத்து என்று கூறினால் தரைமட்டமாக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

இதனைப் பின்வரும் தீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَنَزَلَ أَعْلَى الْمَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو ‏بْنِ عَوْفٍ فَأَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي السُّيُوفِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏عَلَى رَاحِلَتِهِ وَأَبُو بَكْرٍ رِدْفُهُ وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ وَكَانَ يُحِبُّ أَنْ يُصَلِّيَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ وَأَنَّهُ أَمَرَ ‏بِبِنَاءِ الْمَسْجِدِ فَأَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا قَالُوا لَا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ فَقَالَ أَنَسٌ فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ ‏قُبُورُ الْمُشْرِكِينَ وَفِيهِ خَرِبٌ وَفِيهِ نَخْلٌ فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ ثُمَّ بِالْخَرِبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ ‏وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ وَهُوَ يَقُولُ اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ ‏وَالْمُهَاجِرَهْ

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் “பனூ அம்ர் பின் அவ்ஃப்’ என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக தமது) வாட்களைத் தொங்கவிட்ட படி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது.

பி (ஸல்) அவர்களின் வாகனம் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது. தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். – பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். (அவர்கள் வந்தபோது), “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர். நான் உங்களிடம் கூறும் கீழ்க்கண்டவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சில பேரீச்சை மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்சை மரங்களை வரிசையாக நட்டனர்.

ள்ளிவாசலின் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். “ரஜ்ஸ்’ எனும் ஒரு வித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர்.
“இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே (மறுமையின் நன்மைகளுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முாஜிர்களுக்கும் நீ மன்னிப்பிப்பாயாக!”என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) இருந்தார்கள்.
நூல் :புகாரி – 428

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி இருந்த இடத்தில் கப்ருகள் இருந்தன எனவும், சின்னஞ்சிறு சுவர்கள் இருந்தன எனவும், அதனைத் தரைமட்டமாக்கத் தான் நபி (ஸல்) அவர்கள் உத்தவிட்டார்கள் எனவும் வந்துள்ளது. இதில் தரைமட்டமாக்க சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குட்டிச்சுவரை அலங்காரப்படுத்துங்கள் என்று பொருள் செய்ய முடியுமா?

அதுபோலத்தான் கப்ருகளைச் சீர்படுத்துதல் என்பதன் பொருள்,
நபி (ஸல்) அவர்கள் கப்ரு கட்டக்கூடாது என தடை செய்தார்கள். அவர்கள் தடை செய்த ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. மார்க்க அடிப்படையில் அதனைச் சீர்படுத்துங்கள் என்றால் கப்ருகளைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பது தான் பொருள்.

மேலும் ஸவ்வா என்று குர்ஆனில் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் அழகுபடுத்தல் என்பது தான் பொருள் எனும் கப்ர் வணங்கிகளின் வாதமும் முற்றிலும் தவறானதாகும்.

கீழ்க்காணும் வசனம் இதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا (42) [النساء : 42]‏

(ஏக இறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் “தம்மை பூமி விழுங்கி விடாதா?” என்று அந்நாளில் விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.
(அல்குர்ஆன் 4:42)

மேற்கண்ட வசனத்திலும் சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பூமியில் எங்களை அலங்காரமாக வைக்க காஃபிர்கள் விரும்புவார்கள் எனப் பொருள் செய்ய முடியுமா?

எனவே சவ்வா என்பதற்கு, அது எதோடு சேர்ந்து வருகிறதோ அதைக் கவனித்தே பொருள் செய்ய வேண்டும்.

கப்ர் கட்டுவது கூடாது என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிற காரணத்தால் உயரமாகக் கட்டப்பட்ட கப்ரை சமமாக்க வேண்டும் என்பதுதான் இந்த தீஸின் பொருள் என்பதை எளிதாக உணரலாம்.

கப்ர் கட்டுவது கூடாது; ஆனால் கப்ர் கட்டி அதை அழகுபடுத்தலாம் என்று பொருள் செய்தால் அது மார்க்கத்தைக் கேலி செய்யும் விதமாக அமையும். இறைத்தூதரின் வார்த்தைகளில் கேலிப்பொருளுக்கு இடமேயில்லை என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் சவ்வா என்ற சொல் இடம் பெற்ற இந்த தீஸுக்கு மட்டும்தான் இப்படி கிறுக்குத்தனமாக உளறுகிறார்கள். கப்ரின் மேல் பூசக் கூடாது என்றும், கப்ரின் மேல் கட்டக்கூடாது என்றும் வரும் தீஸ்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. கப்ரைக் கட்டக் கூடாது என்றால் கட்டலாம் என்று பொருள். பூசக் கூடாது என்றால் பூசலாம் என்று பொருள் என்று பதில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கப்ரின் மேல் சாயக்கூடாது என்பதில் கப்ர் கட்ட ஆதாரம் உண்டா?

இன்னொரு சாரார் கப்ர் கட்டுவதற்கு தீஸ்களில் தெளிவான ஆதாரம் உண்டு என்று கூறி அ்மதில் இடம்பெறும் ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
அந்தச் செய்தி இதுதான்.

حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ أَنَّ ابْنَ حَزْمٍ إِمَّا عَمْرٌو وَإِمَّا عُمَارَةُ قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ‏مُتَّكِئٌ عَلَى قَبْرٍ فَقَالَ انْزِلْ عَنْ الْقَبْرِ لَا تُؤْذِ صَاحِبَ الْقَبْرِ وَلَا يُؤْذِيكَ
அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்: நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவருக்கு நோவினை செய்யாதீர் என்று நபிகள் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நூல் : அ்மத் 20934

கப்ரின் மேல் சாயக்கூடாது என்று இச்செய்தியில் நபிகள் நாயகம் தடை செய்துள்ளார்கள். சாயும் அளவு கப்ர் கட்டப்பட்டு இருந்தால் தான் அதில் சாய்ந்து கொள்ளவோ அல்லது சாய்ந்து கொள்ளக் கூடாது என்று கூற முடியும்.
எனவே சாயக்கூடாது என்று தடுத்த நபிகள் நாயகம் சாயும் அளவு கப்ர் கட்டடம் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்கவில்லை. எனவே கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக அமைகின்றது.
இவ்வாறு ஒரு வாதம் எழுப்புகின்றனர்.
பதில்
முதலில் இது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

இந்தச் செய்தி ாகிம் 6502, ஷர் மஆனில் ஆஸார் 2944 இன்னும் பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு லீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
பார்க்க நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64,தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153
எனவே இதை ஆதாரமாக்க் கொண்டு கப்ரைக் கட்டலாம் என்பதை ஒரு போதும் நிறுவ முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா?
பரேலவிகள் நரகில் தள்ளும் தர்கா வழிபாட்டை சரிகாண நபிகள் நாயகம் மற்றும் சில நபித்தோழர்களின் கப்ர்கள் உயரமாக இருப்பதை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.
நபிகள் நாயகம் கப்ரின் அமைப்பிற்கும் நபிகளாருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் இறந்து விட்ட பிறகு அவர்களின் கப்ரை ஒருவர் குறிப்பிட்ட அமைப்பில் அமைப்பதால் அதற்கு நபிகளாரின் அங்கீகாரமோ, இஸ்லாமிய மார்க்கத்தின் அங்கீகாரமோ உண்டு என்பதாகாது.
நபிகள் நாயகம் உயிருடன் உள்ளபோதே இஸ்லாமிய மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. நபிகளாரின் இறப்பிற்குப் பிறகு நடக்கும் எந்தச் செயலும் இஸ்லாமாகாது.

எனவே கப்ர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதரின் போதனை என்ன என்பதைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர நபிகளாரின் இறப்பிற்குப் பின் நடைபெற்ற, வியின் தொடர்பு இல்லாத ஏனைய மனிதர்கள் நபிகள் நாயகம் கப்ரை எப்படி அமைத்தார்கள் என்பதை ஆதாரமாகக் குறிப்பிடுவது அறிவீனத்தின் உச்சமாகும்.

நபிகள் நாயகத்தின் கப்ர் எப்படி உள்ளது என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் கவனிப்பு இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய விஷயம்.
மேலும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் கப்ரின் மேல் கட்டடம் கட்டுவது கூடாது என்று தெளிவாக தடை செய்வதால் நபிகளாரின் கப்ர் கட்டப்பட்டு இருந்தால் கூட அப்போதும் ஆதாரமாகாது.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

இமாம்களின் தீர்ப்பு மார்க்க ஆதாரமாகுமா?
இந்தக் கப்ர் வணங்கிகள் கப்ர் தொடர்பான விவகாரத்திற்கு சில மத்பு இமாம்களை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
இவர்கள் செய்யும் மார்க்கத்திற்கு எதிரான பல அனாச்சாரங்களை மத்பு இமாம்களே கண்டித்திருத்தும் அவற்றைக் கொஞ்சம் கூட ஏறிட்டுப் பார்க்காமல் அலட்சியம் செய்து விடுவார்கள். தங்கள் மனஇச்சைக்கு உகந்த விதத்திலோ அல்லது அதன் சாயலிலோ இமாம்கள் கருத்துக்களைக் கூறியிருந்தால் அப்போது மட்டும் இமாம்களின் மீதான பாசம் பொங்கி பீறிட்டு எழும்.
எத்தனை விவகாரங்களில் இவர்கள் தங்கள் மத்பைக் கூட பின்பற்ற மறுக்கிறார்கள், இமாம்களின் கருத்தை மக்களிடம் மறைக்கிறார்கள் என்பதை பி.ஜே அவர்களின் இந்த உரையை கேட்டால் அறிந்து கொள்ளலாம்.

லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஷீஸீறீவீஸீமீஜீழீ.நீஷீனீ/ணீuபீவீஷீ_uக்ஷீணீவீளீணீறீ/sவீக்ஷீவீ்ணீ_uக்ஷீணீவீளீணீறீ/னீணீபீலீணீதீணீவீ_ஜீவீஸீஜீணீtக்ஷீணீtலீ/#.க்ஷிஙீநி-ஸீ9ரிீீளீஷீ

இதிலிருந்து இவர்கள் இமாம்களைப் பின்பற்றுவதாகக் கூறுவது கூட பொய்யே. முழுக்க முழுக்க தங்கள் மனோ இச்சையையும் முன்னோர்களையுமே பின்பற்றுகிறார்கள்.
குர்ஆன், தீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படையே தவிர இமாம்களின் விளக்கமோ, அவர்கள் தீஸிற்கு இடும் தலைப்புகளோ இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக ஒரு போதும் அமையாது.
எனவே அந்த இமாம் இவ்வாறு கூறினார்? இந்த இமாம் இவ்வாறு தலைப்பிட்டுள்ளார்? என்றெல்லாம் பிதற்றுவது இவர்களின் வாதத்திற்கு எள் முனையளவும் உதவாது.

இமாம்கள் இடும் தலைப்புகளில் இஸ்லாத்தின் மூச்சு இல்லை. குர்ஆனிலும் தீஸிலும் தான் இஸ்லாத்தின் அடிநாதம் அச்சாரமிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இமாம்கள் சரியாகத்தான் தலைப்பிட்டுள்ளார்கள். இவர்கள் தான் அதை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பிதற்றுகிறார்கள்.
இமாம்கள் இச்செய்தியை باب الأمر بتسوية القبر கப்ரை தகர்க்குமாறு அல்லது சமப்படுத்துமாறு கட்டளையிடும் பாடம் என்ற தலைப்பில் தான் கொண்டு வந்துள்ளார்கள்.

(ஸவ்வா என்பதன் பொருளைப் பற்றி மேலே விளக்கியுள்ளோம்.)
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்? என்பார்கள். அதுபோன்று ஸவ்வா என்றாலே அழகுபடுத்துதல் தான் பொருள் என்று கற்பனை செய்து கொண்டு அதன் கோணத்திலேயே இமாம்களின் தலைப்பை அணுகுவதே இவர்களின் இந்தக் கோளாறுக்கு மூல காரணமாகும்.

ஒரு சாண் அளவு கப்ரை உயர்த்தலாம் என்று இமாம் நவவீ அவர்கள் கூறிய கூற்றில் ஏதோ கப்ர் கட்ட ஆதாரம் இருக்கிறது என்றெண்ணியவர்கள் அதே நவவீ அவர்கள் தனது மின்ாஜ் எனும் நூலில் நேரடியாக கப்ர் கட்டுவது பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்க தவறிவிட்டார்கள்.

منهاج الطالبين وعمدة المفتين – (1 / 85‏)
وَيُكْرَهُ تَجْصِيصُ الْقَبْرِ وَالْبِنَاءُ وَالْكِتَابَةُ عَلَيْهِ. وَلَوْ بُنِيَ فِي مَقْبَرَةٍ مُسَبَّلَةٍ هُدِمَ.

கப்ரை பூசுவது, கட்டடம் எழுப்புவது அதன் மீது எழுதுவது ஆகியவை வெறுப்பிற்குரியாதாகும்.
மின்ாஜூத் தாலிபீன் 1 பக் 85

கப்ர் கட்டுவது வெறுப்பிற்குரியது என்று தெளிவாக தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

அத்தகைய நவவீ இமாம் அவர்கள் மண்ணறை ஒரு சாண் அளவு தரையிலிருந்து உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறியதை ஏதோ கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்று கூறியது போல் ஜோடனை செய்து மக்களிடம் பரப்புகிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய கடைந்தெடுத்த கயவர்கள் என்பதை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

மேலும் மற்றுமொரு முக்கிய மத்பு இமாம் அபூனிபா அவர்கள் கூறியதையும் பாருங்கள்.

حاشية رد المختار على الدر المختار – (2 / 237‏(
وعن أبي حنيفة يكره أن يبنى عليه بناء من بيت أو قبة أو نحو ذلك لما روى جابر نهى رسول الله عن تجصيص القبور وأن يكتب عليها وأن يبنى عليها رواه ‏مسلم وغيره

அபூனிபா கூறுகிறார்: கப்ரின் மீது கட்டடம், குப்பா போன்றவைகளைக் கட்டுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் கப்ர்களை பூசுவதையும், அதன் மீது எழுதுவதையும் அதன் மேல் கட்டடம் கட்டுவதையும் தடை செய்துள்ளார்கள்.
ரத்துல் முக்தார் பாகம் 2 பக் 237

இப்படி தங்கள் மனோஇச்சைக்குத் தகுந்த படி இமாம்களின் கூற்றை வளைக்கிறார்கள் எனில் இவர்களிடம் சத்தியம் இருக்குமா என்பதையும் இவர்கள் இமாம்களைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ள உண்மையுன்டா என்பதையும் நியாயவான்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு வேளை இவர்கள் கூறுவதைப் போலவே கப்ர் மீது கட்டடம் எழுப்பலாம் என்று அந்த இமாம்கள் கூறினால் கூட நாம் பின்பற்ற வேண்டியது வீ எனும் இறைச்செய்தி அருளப் பெற்ற அல்லாஹ்வின் தூதரைத் தானே தவிர இமாம்களை அல்ல என்பதை நினைவில் கொள்க.

ஜியாரத் செய்வது தவறா?

ஜியாரத் செய்வது தவறில்லை தான். மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.

حدثنا أبو بكر بن أبي شيبة وزهير بن حرب قالا حدثنا محمد بن عبيد عن يزيد بن كيسان عن أبي حازم عن أبي هريرة قال زار النبي صلى الله عليه وسلم قبر أمه فبكى وأبكى من حوله فقال استأذنت ربي في أن أستغفر لها فلم يؤذن لي واستأذنته في أن أزور قبرها فأذن لي فزوروا القبور فإنها تذكر الموت

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது தாயாரில் அடக்கத் தலத்தை சியாரத் செய்த போது அழுதார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அபோது அவர்கள் என் தாயாடுக்காக பாவ மன்னிப்பு தேட நான் என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என் தாயாரின் அடக்கத்தலத்தை சியாரத் செய்ய் அனுமதி கேட்டேன். அதற்கு அல்லாஹ் அனுமதித்தான். எனவே நீங்களும் கப்ரை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனின் அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று கூறினார்கள்.
முஸ்லிம் : 1622

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பொதுவாக அனுமதித்தவைகளை பொதுவாகவும் குறிப்பாக அனுமதித்தவைகளை குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கப்ரு சியாரத்தைப் பொருத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. மரணத்தை நினைவு படுத்தும் எண்ட காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்ட்டுள்ளது.
பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்காக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன. எனவே அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது.

حدثنا داود بن رشيد حدثنا شعيب بن إسحق عن الأوزاعي عن يحيى بن أبي كثير قال حدثني أبو قلابة قال حدثني ثابت بن الضحاك قال نذر رجل على عهد رسول الله صلى الله عليه وسلم أن ينحر إبلا ببوانة فأتى النبي صلى الله عليه وسلم فقال إني نذرت أن أنحر إبلا ببوانة فقال النبي صلى الله عليه وسلم هل كان فيها وثن من أوثان الجاهلية يعبد قالوا لا قال هل كان فيها عيد من أعيادهم قالوا لا قال رسول الله صلى الله عليه وسلم أوف بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم

“புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்” என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். “அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் “இல்லை’ என்றார். “இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது “இல்லை’ என்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)
நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே “இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.
ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?
மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில்
பிரம்மாண்டமான கட்டிடம்
மனதை மயக்கும் நறுமணம்
கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்
ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு
ஆடல், பாடல், கச்சேரிகள்
இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா?நிச்சயம் ஏற்படாது.
எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?
விழுந்து கும்பிடுவது
கையேந்திப் பிரார்த்திப்பது
பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்
தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்
விபூதி, சாம்பல் கொடுத்தல்
மார்க்கம் தடை செய்த கட்டடம்
என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.

186 – حدثنا أبو بكر بن أبى شيبة حدثنا وكيع عن سفيان ح وحدثنا محمد بن المثنى حدثنا محمد بن جعفر حدثنا شعبة كلاهما عن قيس بن مسلم عن طارق بن شهاب – وهذا حديث أبى بكر – قال أول من بدأ بالخطبة يوم العيد قبل الصلاة مروان فقام إليه رجل فقال الصلاة قبل الخطبة. فقال قد ترك ما هنالك. فقال أبو سعيد أما هذا فقد قضى ما عليه سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول « من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ».
صحيح مسلم [1 /50]

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 70

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது.
பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமைûயும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.
மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கபரஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.
எனவே. மறுமையை நாசமாக்கும் கப்ரு வணக்கத்தை விட்டொழிப்போம்!

சப்தம் போடாதே!

நபிகள் நாயகம் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்பதையும் அவர்கள் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது நபி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பு நின்று கொண்டு குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்கிறார்கள். ஏனெனில் நபி உயிருடன் உள்ளார்களாம்.

இவர்களுக்கு எந்த அளவு மூளை வறண்டு போய் விட்டது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

குரலை உயர்த்தக் கூடாது எனும் விதியை, நபிகள் நாயகத்தை மதிக்கும் வகையில் அவர்கள் வாழும் காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங் காகவே இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

ம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.அல்குர்ஆன் 49 2

இந்த வசனத்தை நன்கு கூர்ந்து படியுங்கள். இது நபிகள் நாயகம் நம்மிடையே வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக் கத்தையே கற்றுத் தருகிறது.
நபியின் குரலை விட உங்கள் குரலை உயர்த்தாதீர்கள் என்று கூற வேண்டும் என்றால் நபி நம்மிடையே வாழ்ந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் நம்மிடம் பேச வேண்டும். அப்போது தான் அவர்களது குரலை விட சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்று சொல்ல முடியும்.
இதற்கு அடுத்து வரக்கூடிய வசனங்கள் யாவும் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள் வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப் படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது.
அல்குர்ஆன் 49:3
(முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள்.
அல்குர்ஆன் 49:4

இதன் தொடர்ச்சியில் 7ம் வசனத்தில் \உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அப்படி என்றால் அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே இருந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் இருக்கும் போது நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தான் இது பேசுகிறது.
நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் எனும் இறைவார்த்தை இக்கருத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
இன்றைக்கு நபிகள் நாயகம் நம்முடன் இல்லை. அவர்களது குரலை நம்மால் செவிமடுக்க இயலாது. எனவே இச்சட்டம் இப்போது பொருந்தாது.
நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்றால் இது எப்படி நபிகள் நாயகம் உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும்?
இவர்களுக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி ஒரு வாதத்தை வைத்திருப்பார்களா?
அது சரி! சமாதி வழிபாட்டை ஆதரிப்பவர்களிடம் எப்படி சிந்தனைத் திறனை எதிர்பார்க்க முடியும்?
நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை

நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம், நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை நாம் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.
உயிருடன் உள்ளபோது அவர்களின் மனைவிமார்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் அது சரி. நபிகள் நாயகம் இறந்ததற்குப் பிறகும் அவர்களது மனைவியர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் என்ன பொருள்? நபிகள் நாயகம் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று தானே அர்த்தம்.
இவ்வாறு இந்த நவீன பரேலவிகள் பிதற்றுகிறார்கள்.
நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் பல்வேறு தனிச்சிறப்புகளை வழங்கி யிருக்கிறான். அவர்களது உடலை மண் தின்றுவிடாது என்பதைப் போன்று அவர்களது இறப்பிற்குப் பிறகு அவர்களது மனைவியரை மணக்கக் கூடாது என்பதையும் அல்லாஹ் ஒரு சிறப்புச் சட்டமாக ஆக்கி வைத்துள்ளான்.
நபியின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் மனைவியர்களை மணக்கக் கூடாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்து நபிகள் நாயகம் உயிருடன் இல்லை என்பது தான் தெளிவே தவிர அவர்கள் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப் பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக் காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண் டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.
அல்குர்ஆன் 33:53

அவருக்குப் பின் அவரது மனைவியரை மணக்கக் கூடாது என்றால் அதன் பொருள் என்ன?
நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்க கூடாது என்பது தானே இதன் பொருள்.
நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
மேலும் இறைமறை வசனம் நபிகள் நாயகம் மரணிப்பவரே என்பதை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.
(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.
அல்குர்ஆன் 39:30
(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!அல்குர்ஆன் 21:34, 35

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் காலத்திலேயே மரணத்தைத் தழுவி பர்ஸக் எனும் திரை மறைவு வாழ்க்கைக்குச் சென்று விட்டார்கள்.
(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். மேலும், (முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே என்னும் (39:30) இறை வசனத்தையும், முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.
நூல்: புகாரி 3668

நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் - உயிருடன் இல்லை என்பதை சஹாபாக்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.
பர்ஸக் வாழ்க்கைக்கு சென்று விட்ட நபிகள் நாயகத்தை உலகத்தில் உள்ளதைப் போன்று இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். பகிரங்க வழிகேடாகும்.
--source onlinepj --

கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்

கப்ரு வணங்கிகளின் கயமைத்தனம்

தர்கா வழிபாட்டை ஆதரிக்கும் வழிகெட்ட கூட்டத்தினருக்குக் குர்ஆன் என்றாலே ஆகாது. ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது.
இவர்களின் சன்மார்க்க (?) பிரச்சார ஏடுகளில் குர்ஆனையோ, ஹதீஸ் களையோ அதிகம் குறிப்பிட மாட்டார்கள். தங்களது மனோ இச்சையை நியாயப்படுத்தும் படி யாரேனும் சில கருத்துக்களைக் கூறியிருந்தால் அதைத் தேடி எடுத்து பக்கங்களை நிரப்பி விடுவார்கள்.

இக்குறைமதியாளர்கள் எதை ஹதீஸ் என்று கருதுகிறார்களோ அதை நபியின் பெயரால் எடுத்தெழுதி தங்கள் வழிகேட்டை நியாயப்படுத்த முனைவார்கள்.
அப்படித்தான் பரேலவிகளின் ஒரு பத்திரிக்கையை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அது அவர்களுக்கே உரிய சர்வ லட்சணங்களையும் பொதிந்திருந்தது.
இந்த லட்சணத்தில், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்ற ஓம்ஸ் (?) விதியின் படி... என்று தத்துவம் வேறு அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது நியூட்டனின்  மூன்றாம் விதி என்பதைக் கூட அறியாத அறிவிலிகள், அறிவியலும் தெரியாமல் ஆன்மீகமும் தெரியாமல் தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி இருக்கிறார்கள்.
அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு கட்டுரையில் தர்காவை ஆதரிக்கப் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.
இறந்தவர்கள் எங்கும் இருக்கிறார்கள், ஏன் முதல் ஆலயமான கஃபாவைச் சுற்றிலும் அதன் கீழும் எல்லா இடங்களிலும் அடக்கமாகி இருக்கிறார்கள். அதன் மேல்தான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை யாரும் தர்கா என்று சொல்வதில்லை.
கஃபாவின் வாசலில் ஆதித் தந்தையினர் தலைமாடு உள்ளதென்றும் சுமார் 7 நபிமார்கள் அதனைச் சுற்றி அடங்கப்பட்டுள்ளனர் என்றும் ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் மிஷ்காதுல் மஸாபீஹ்)

கஃபாவின் கீழேயும் அதைச் சுற்றிலும் நபிமார்கள், நல்லோர்களின் அடக்கத்தலங்கள் உள்ளதாம். அதன் மேல்தான் கஃபா எனும் புனித ஆலயமே எழுப்பப்பட்டுள்ளதாம். அப்படியிருக்க அதே போன்று இறந்தவர்களின் மேல் கட்டடம் - தர்கா எழுப்புவதை எப்படி குறை கூற முடியும்?
இது தான் கட்டுரையாளர் முன் வைக்கும் அறிவீன வாதமாகும்.

இவர்களுக்கு ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது என்ற நமது முன்னுரையை மெய்ப்பிக்கும் வகையில் தான் இந்த வாதம் அமைந்துள்ளது.
மார்க்கத்தின் பெயரால் ஒரு கருத்தைச் சொல்வதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லியிருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக மார்க்கம் தடுத்த ஒன்றை, அது ஆகுமானதே என்று கூறுவதாக இருந்தால் அதற்குச் சரியான, தகுந்த ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.
இறந்தவர்களின் மேல் சமாதியை எழுப்புவது இறை சாபத்திற்குரியது என்று பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன.
அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 437
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப் பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்து வானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர் என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330
கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காரு வதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் (1765)

இறந்தவர்களின் அடக்கத்தலத்தின் மேல் தர்கா எழுப்புவது கூடாது என்று இந்த நபிமொழிகள் தெளிவாக எடுத்துரைத்திருக்கும் போது, இல்லையில்லை தர்கா கட்டுவது குற்றமல்ல, கஃபாவுக்கு கீழேயே கப்ருகள் தான் உள்ளன என்று சொல்வதாக இருந்தால் மேற்கண்ட நபிமொழிகளுக்குத் தகுந்த விளக்கம் சொல்ல வேண்டும்.
மேலும் கஃபாவுக்குக் கீழே நபிமார்கள், நல்லோர்களின் கப்ர்கள் உள்ளது என்ற தங்கள் கருத்துக்குரிய வலுவான சான்றுகளை முன்வைக்க வேண்டும்.
கஃபாவின் வாசலில் ஆதித் தந்தையினர் தலைமாடு உள்ளதாம், அவர்களின் கால்மாடு எங்கே உள்ளது என்பதைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார்கள். அது போக கஃபாவைச் சுற்றி 7 நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்களாம்.
இப்படிப் போகிற போக்கில் சொல்வதெல்லாம் மார்க்கமாகி விடாது.
உலகில் முதலில் கட்டப்பட்ட ஆலயம் கஅபா என்று குர்ஆன் கூறுகிறது.

அகிலத்தின் நேர்வழிக்குரிய தாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
திருக்குர்ஆன் 3:96

ஆதம் (அலை) அவர்கள் தான் கஅபாவைக் கட்டினார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் கட்டப்பட்ட க அபா ஆலயத்தில் அவரது கப்ரு எப்படி இருக்கும்? தன்னை அடக்கம் செய்து விட்டு அவர் கஅபாவைக் கட்டினாரா?
ஹதீஸ் உண்டா?
சரி. இவர்கள் சொல்வதற்கு ஏதும் ஆதாரம் உள்ளதா? என்றால் கஃபாவைச் சுற்றிலும், அதன் கீழும் கப்ர்கள் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.
கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
இப்னு அப்பாஸ் ரலி கூறியதாவது
மஸ்ஜிதுல் ஹாரமில் இரண்டு கப்ருகள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. அவை இஸ்மாயீல் (அலை) மற்றும் ஷூஐப் (அலை) அவர்களின் கப்ருகளாகும். இஸ்மாயீல் அலை அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியில் ருக்னுல் அஸ்வத் - ஹஜருல் அஸ்வதிற்கு - நேராக உள்ளது.
அக்பாரு மக்கா, பாகம் 2,பக்கம் 124
இது நபிகள் நாயகம் கூறியதாக இல்லை. இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழரின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளதால் இதை நாம் ஏற்க வேண்டியதில்லை.

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக உள்ள இந்தச் செய்தியும் ஏற்கத்தக்க செய்தி அல்ல. முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
இதில் இடம்பெற்றுள்ள முஹம்மத் பின் ஸாயிப் அல்கல்பீ என்பவரை அறிஞர்கள் பலரும் பலவீனமானவர், பொய்யர், மூளை குழம்பியவர் என்று குறை கூறியுள்ளனர்.
இமாம் நஸாயி இவரை நம்பகமானவர் அல்ல, இவரது செய்திகள் எழுதப்படாது என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் இவரைப் பொய் சொல்பவராகக் கருதுகிறார்கள் என்று குர்ரா பின் காலித் என்பாரும் விமர்சித்துள்ளனர்.
இவர் ஹதீஸ் துறையில்  மதிப்பில்லாதவர். இவரைப் புறக்கணிப்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்துள்ளனர் என்று இமாம் அபூஹாதம் அவர்கள் விமர்சித்துள்ளார்.
இமாம் தாரகுத்னீ, ஹாகிம், ஸாஜி ஆகியோர் இவர் புறக்கணிக்கப்பட வேண்யடிவர் என்று குறை கூறியுள்ளனர்.
இப்னு அப்பாஸ், அபீ ஸாலிஹ் வழியாக நான் அறிவிக்கும் செய்திகள் பொய்யானாதாகும். அதை அறிவிக்காதீர்கள் என்று அவரே (கல்பீ) தன்னைப் பற்றி கூறியுள்ளதாக இமாம் சுப்யான் அஸ்ஸவ்ரீ கூறுகிறார்.
பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக் 158
மேற்கண்ட அறிவிப்பு இப்னு அப்பாஸ், அபீஸாலிஹ் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பல அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தொடர்புடைய ஹதீஸ் அறிவிப்பாளரே இது பொய்யான அறிவிப்பு என்று இனம் காட்டிய பிறகு இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வது அறிவீனத்தின் உச்சமாகும்.
எனவே இந்தப் பொய்யான செய்தியை அடிப்படையாக கொண்டு கஃபாவின் கீழ் கப்ருகள் உள்ளன என்ற தங்கள் கருத்தை நிலைநாட்ட இயலாது.
செய்தி: 2
இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பின்வரும் செய்தியும் அமைந்துள்ளது.
அப்துல்லாஹ் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது
மகாமு இப்றாஹீமிலிருந்து ருக்னுல் யமானீ பகுதி வரையிலும் ஜம்ஜம் அமைந்த இடத்திலிருந்து ஹிஜ்ர் பகுதி வரையிலும் உள்ள இடைப்பட்ட இடத்தில் சுமார் 99 நபிமார்களின் கப்ருகள் உள்ளன. அவர்கள் ஹஜ் செய்ய வந்தார்கள். (பிறகு) அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.
மஸாயிலுல் இமாம் அஹ்மத்,
பாகம் 1, பக்கம் 408

இந்தச் செய்தியை இமாம் அஹ்மத் அவர்களின் மகன் ஸாலிஹ் தனது மஸாயில் என்ற நூலில் கொண்டு வருகிறார்.
இந்தச் செய்தியும் நபிகள் நாயகம் கூறியதாகவோ, நபித்தோழர் கூறியதாகவோ இல்லை.
மாறாக அப்துல்லாஹ் பின் ளம்ரா என்ற தாபியி சொன்னதாகவே வருகிறது.
இதுவே இந்தச் செய்தியை நாம் ஆதாரமாக ஏற்க முடியாது என்பதற்கு போதுமான காரணமாகும்.
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் சுலைம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நினைவாற்றல் ரீதியாக பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
இவரது ஹதீஸில் சில குறைகள் உள்ளதாக இமாம் அஹ்மத் அவர்களும், இவரது ஹதீஸ் எழுதப்படும் ஆனால் ஆதாரமாகக் கொள்ளப்படாது என்று இமாம் அபூஹாதம் அவர்களும், உபைதில்லாஹ் பின் அம்ர் வழியாக அறிவிக்கும் போது இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் நஸாயீ அவர்களும், தூலாபி எனும் அறிஞர் இவர் அவ்வளவு உறுதியானவர் அல்ல என்று விமர்சித்துள்ளார்கள்.
இமாம் தாரகுத்னீ அவர்கள் இவர் நினைவாற்றல் மோசமானவர் ஆவார் என்று விமர்சித்துள்ளார்.
பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 11, பக்கம் 198

இத்தகைய விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டவர் இடம்பெற்றுள்ள, நபியின் கூற்றாகவும் இல்லாத இந்தச் செய்தி கண்டிப்பாக நமது கொள்கையை நிர்ணயிக்கவோ நமது நம்பிக்கையைத் தீர்மானிக்கவோ உதவாது.
மேலும் ஹஜ் செய்ய வந்த நபிமார்கள் அங்கே மரணித்து இருந்தாலும் அங்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்க முடியாது. இதில் சுட்டிக்காட்டப்படும் பகுதிதான் தவாப் செய்யும் பகுதியாகும். மக்கள் தவாப் செய்து கொண்டு இருக்கும் போது அந்த இடத்தில் எப்படி நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அதுவும் 90 நபிமார்களும் ஒரே நாளில் ஹஜ் செய்ய வந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒருவர் வந்திருக்கலாம்.
ஒவ்வொரு நபியும் மக்காவில் மரணித்த போதும் சொல்லி வைத்தது போல் தவாப் செய்வதைத் தடுக்கும் வகையில் அங்கே அடக்கம் செய்வார்களா?

இதை பரேலவிகள் உண்மை என்று நம்பினால் நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஏறி மிதிக்கலாம்;
அதற்கு எந்த மதிப்பும் கொடுக்கத் தேவை இல்லை என்று பத்வா கொடுக்க வேண்டும்.
அல்லது தவாப் செய்யும் சுற்றுப் பாதையில் நபிமார்களின் கப்ருகள் உள்ளதால் இனிமேல் கஅபாவை தவாப் செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டும்.
இரண்டில் எதைச் சொல்லப் போகிறார்கள்?

நபிகள் நாயகம் மற்றும் நபித்தோழர்கள் கூட சம்பந்தப்படாத இந்தச் செய்தி இவர்களது கருத்திற்கு ஒரு போதும் ஆதாரமாகாது.
கஃபாவைச் சுற்றி கப்ருகள் உள்ளது தொடர்பாக நபிகள் நாயகம் கூறியதாக அல்குனா வல் அஸ்மா என்ற நூலில் பின்வருமாறு ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
செய்தி: 3
ஆயிஷா (ரலி) அறிவிப்பதாவது
இஸ்மாயீல் (அலை) அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியிலே உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்குனா வல்அஸ்மா பாகம் 1, பக்கம் 239

இதில் யஃகூப் பின் அதாஃ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூசுர்ஆ மற்றும் இப்னு மயீன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் இவரை மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.
பார்க்க: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 9, பக்கம் 211
இமாம் தஹபீ அவர்களும் இவரை பலவீனமானவர் என்கிறார்
அல்காஷிஃப், பாகம் 2, பக்கம் 395

இது பலவீனமான செய்தி என்பதைப் பல அறிஞர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சுமார் 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த இமாம் ஸகாவீ அவர்கள் இதை பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்மகாஸிதுல் ஹஸனா,
பாகம் 1, பக்கம் 484
எனவே இதுவும் ஏற்கத்தக்க செய்தி அல்ல.

தவாப் செய்யும் சுற்றுப் பாதையில் எப்படி இஸ்மாயீல் (அலை) அவர்களை அடக்கம் செய்திருப்பார்கள்? அப்படியானால் தவாப் செய்யும் போது அந்தக் கப்ரை ஏறி மிதித்து தான் தவாப் செய்கிறார்களா?
அறிவற்ற கப்ர் முட்டிகள்

இஸ்மாயீல் (அலை) உள்ளிட்ட எந்த நபியும் கஃபாவின் கீழ்ப் பகுதியிலோ அல்லது கஃபாவைச் சுற்றியோ அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ எங்கும் சொல்லவில்லை.
மேலும் கஃபா என்பது இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும்.
ஆதம் அலை அவர்கள் காலத்திலேயே இந்த கஃபா கட்டப்பட்டு விட்டது.
எந்த நபிமார்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகப் புழுகுகிறார்களோ அவர்களது பிறப்பு - இறப்பிற்கு முன்பாகவே கஃபா ஆலயம் கட்டப்பட்டு விட்டது. இறைவனால் அது சிறப்பிக்கப்பட்டும் விட்டது.
அத்தகைய கஃபா ஆலயத்தின் சிறப்பு எந்த தனி மனிதர்களைக் கொண்டும் அல்ல என்பதை விளங்கி கொள்ள வேண்டும். இவர்கள் கூறிய படி அங்கே சிலர் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அதனால்கஃபா ஆலயத்திற்கு எந்தச் சிறப்பும் கிடையாது.
மஸ்ஜிதுந் நபவீ வரலாறு அறியாத மடையர்கள்
ஓரிடத்தில் பள்ளிவாசல் கட்டும் போது அங்கே சில மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர்களது உடல்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்.
மனித உடல்களை அப்புறப்படுத்திய பிறகே அங்கே பள்ளிவாசல் எழுப்ப இயலும். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறையாகும்.
மஸ்ஜிதுந் நபவீ இந்த அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி பணித் தார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப் பினார்கள். (அவர்கள் வந்தபோது), பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம் என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர்.
நான் உங்களிடம் கூறுபவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணை வைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சிலபேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப் பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 428

இந்த வரலாறு அறியாத மடையர்கள் தான் கஃபாவைச் சுற்றி நபிமார்கள் அடங்கி உள்ளதாக ஆதாரமற்றுப் பிதற்றுகிறார்கள்.
ஒரு வாதத்திற்கு இவர்கள் சொன்னபடி கஃபாவைச் சுற்றி பல நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் கூட இன்று அவை கண்டறிய முடியாத படி சமமாக உள்ளது.
அவற்றின் மீது வானுயர எந்தக் கோபுரமும், கட்டடமும் கட்டப்பட்டிருக்கவில்லை.
பூமாலைகள் இல்லை, சந்தனங்கள் இல்லை, ஊதுபத்திகளோ உண்டியல்களோ இல்லை.
சாதாரண தரையாகவே கஃபாவைச் சுற்றிலும் காட்சியளிக்கிறது.
அப்படியிருக்க இது எப்படி மேலெழும்பிய தர்கா கட்டி வழிபாடு என்ற பெயரில் இவர்கள் கூத்தடிப் பதற்கும், கும்மாளமிடுவதற்கும் ஆதாரமாகும்?
கல்லை வழிபடும் கப்ர் முட்டிகளிடம் அறிவார்ந்த வாதத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மறந்து விடக்கூடாது.

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.