கபுருகளை கட்டக்கூடாது, உயர்த்தி
கட்டப்பட்ட கபுருகளையும் , தர்காக்களையும்
இடிக்க வேண்டும்
என்று நாம்
ஆதாரத்துடன் கூறும்போது
/// உலகத்திலே பெரிய தர்கா மதீனா ... இது ஒன்று போதும் தர்கா கட்டுவதற்கு ஆதாரம் // என்று கப்ரு வணக்கம் புரிபவர்கள் அதை ஆதரிப்பவர்கள் கூறுவர்
அது மட்டுமல்லாமல் . பள்ளிவாசலில் கப்ருகள் கட்டக் கூடாது என்றால் கப்ரு உள்ள பள்ளியில் தொழக் கூடாது என்றால் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு பள்ளிவாசலுக்குள் தானே இருக்கிறது. அந்த நிலையில் தான் மக்கள் தொழுகிறார்கள். இது கூடும் என்றால் அவ்லியாக்களின் கப்ருகள் உள்ள பள்ளியிலும் தொழலாம் தானே என்றும் கூறுகிறார்கள்.
இவர்கள் நபிமார்களை சாதாரண மக்களினது அந்தஸ்திற்கு இறக்கி இவர்கள் நம்பும் அவ்லியாக்களை உயர்வாக்கி இப்படி கேட்கிறார்கள்
/// உலகத்திலே பெரிய தர்கா மதீனா ... இது ஒன்று போதும் தர்கா கட்டுவதற்கு ஆதாரம் // என்று கப்ரு வணக்கம் புரிபவர்கள் அதை ஆதரிப்பவர்கள் கூறுவர்
அது மட்டுமல்லாமல் . பள்ளிவாசலில் கப்ருகள் கட்டக் கூடாது என்றால் கப்ரு உள்ள பள்ளியில் தொழக் கூடாது என்றால் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு பள்ளிவாசலுக்குள் தானே இருக்கிறது. அந்த நிலையில் தான் மக்கள் தொழுகிறார்கள். இது கூடும் என்றால் அவ்லியாக்களின் கப்ருகள் உள்ள பள்ளியிலும் தொழலாம் தானே என்றும் கூறுகிறார்கள்.
இவர்கள் நபிமார்களை சாதாரண மக்களினது அந்தஸ்திற்கு இறக்கி இவர்கள் நம்பும் அவ்லியாக்களை உயர்வாக்கி இப்படி கேட்கிறார்கள்
நபி (ஸல்)
அவர்கள் கப்ரு
கட்டுவதை வன்மையாக
கண்டித்திருக்கும் போது கப்ருகளை
மஸ்ஜிதுகளாக ஆக்கியது லஃனத்திற்குரிய காரியம் என்று
எச்சரித்திருக்கும்போது அதற்கு மாற்றமாக
எனது கப்ரை
பள்ளிவாசலுக்குள் வையுங்கள். பள்ளிவாசலும் என்பது கப்ரும்
ஒன்றாக இருக்க
வேண்டும். அந்த
நிலையில் மக்கள்
வந்து தொழ
வேண்டும் என்று
கூறுவார்களா?
“யாஅல்லாஹ்! எனது கப்ரை விழா கொண்டாடக்
கூடிய இடமாக
ஆக்காதே! யாஅல்லாஹ்
எனது கப்ரை
வணங்கப்படக் கூடியதாக ஆக்காதே! என்று தான்
நபி(ஸல்)
அவர்கள் பிரார்த்தனை
செய்தார்கள். நபியவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கும் எச்சரிக்கைக்கும் ஏற்றார்போல்
தான் ஸஹாபாக்கள்
நடந்து கொண்டார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் மரணித்த
போது அவர்களுடைய
ஜனாஸாவை மஸ்ஜிதுந்
நபவிக்குள் சஹாபாக்கள் அடக்கம் செய்யவில்லை. அவர்களுடைய
வீட்டுக்குள்ளேதான் அடக்கம் செயதார்கள்
என்பதை முதலில்
புரிய வேண்டும்.
நபி (ஸல்)
அவர்கள் மரணித்தபோது
அவர்களை எங்கே
அடக்கம் செய்வது
என்று ஸஹாபாக்கள்
கருத்து வேறுபாடு
கொண்டபோது “நபிமார்கள் மரணித்த
இடத்தில் அடக்கம்
செய்யப்பட வேண்டும்”
என்ற ஹதீஸை
அபூபக்கர் (ரலி) நினைவு படுத்தினார்கள். உடனே
ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்த
இடமான ஆயிஷா
(ரலி) அவர்களுடைய
வீட்டுக்குள்ளேயே குழிதோன்றி நல்லடக்கம் செய்தார்கள்.
நபியவர்களின் வீடு மஸ்ஜிதுந் நபவிக்கு பக்கத்திலேயே
இருந்தது. மஸ்ஜிதுந்
நபவியும் நபியவர்களின்
வீடும் ஒரே
சுவராக இருந்தது.
வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால்
பள்ளியில் என்ன
நடக்கிறது என்று
தெரிந்துவிடும். ஸஹாபாக்கள் ஒரு போதும் பள்ளிக்குள்
நபியவர்களை அடக்கம் செய்யவில்லை.
அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர்
மரணித்தபோது நபி (ஸல்) அவர்களது கப்ருக்கு
பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
இம்மூவரும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும்
அந்த இடம்
நபி(ஸல்)
அவர்கள் ஆயிஷா
(ரலி) அவர்களுடன்
வாழ்ந்த வீடாகும்.
அந்த வீடு
மஸ்ஜிதின் எல்லைக்குள்
வந்தபோதும் கூட அதனை வேறுபடுத்தி வேலி
போட்டு சுவர்
கட்டி மறைத்து
வைத்தார்கள். இன்றும் கூடஅந்த வீட்டை வேறு
படுத்திதான் வைத்துள்ளார்கள் என்பதை மதீனாவுக்குச் சென்றவர்கள்
அறிந்திருப்பார்கள்.
உமர் (ரலி)
அவர்கள் மரணத்தருவாயிலில்
இருந்தபோது- தான் மரணித்தால் நபியவர்களின் கப்ருக்கு
பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என
விரும்பி அதற்காக
ஆயிஷா (ரலி)
அவர்களின் அனுமதியை
கேட்டு வருமாறு
தனது மகன்
இப்னு உமர்(ரலி) யை
ஆயிஷா (ரலி)யிடம் அனுப்பி
வைத்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள்
அந்த இடத்தை
தனக்கென்று வைத்ததாகவும் அமீருல் முஃமினின் உமர்(ரலி) அவர்களுக்காக
அந்த இடத்தை
விட்டு தருவதாகவும்
கூறினாரகள். (நூல்: புகாரி)
நபி (ஸல்)
அவர்கள் ஆயிஷா
(ரலி) வீட்டில்
அடக்கம் செய்யப்பட்டதனாலேயே
உமர் (ரலி)
அனுமதி வேண்டினாரகள்.
பள்ளி வாசலாக
இருந்தால் ஏன்
அனுமதி கோரவேண்டும்.?
அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான்
(ரலி) அலி
(ரலி) ஆகியோர்களது
ஆட்சிக் காலங்களில்
மஸ்ஜிதுந் நபவி
வேறாகவும் நபியவர்கள்
அடக்கம் செய்யப்பட்ட
வீடு வேறாகவும்தான்
இருந்தது. அதாவது
நபி (ஸல்)
அவர்கள் உயிரோடு
இருக்கும் போது
எப்படி இருந்ததோ
அப்படித்தான் இருந்தது. கால ஓட்டத்தில் மஸ்ஜிதை
விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய நிலை வந்த
போது ஆட்சித்
தலைவர் மர்வானுடைய
காலத்தில் நபி
(ஸல்) அவர்கள்
அடக்கம் செய்யப்பட்டிருந்த
அந்த வீடும்
அதனை அண்டியப்
பகுதிகளும் சேர்த்து மஸ்ஜிதுக்குள் வந்தது.
பள்ளி விஸ்தரிப்பின்
போது இந்த
வேலையை செய்யவேண்டிய
அவசியம் இருந்ததாக
அன்று கருதப்பட்டது.
கப்று வணக்கத்தை
ஊக்கு விக்க
நபியவர்களினதோ சஹாபாக்களினதோ கப்றுகளை பள்ளிவாசலுக்குள் கொண்டு வரவில்லை.
நபி (ஸல்)
அவர்களுடைய கப்ரு அபூபக்கர் (ரலி) உமர்
(ரலி) ஆகியோரது
கப்ருகள் உள்ள
அந்த வீடு
மஸ்ஜிதுக்குள் வந்துள்ளது என்பதை காட்டி மஸ்ஜிதுக்குள்
கப்ருகள் இருக்கக்
கூடாது அந்த
கப்ருகளை தோன்றி
ஜனாஸாக்களை வெளியில் எடுத்து வேறு இடத்தில்
அடக்கம் செய்யவேண்டும்
என கூற
முடியாது. கூடாது.
அப்படி செய்ய
வேண்டும் என்று
எந்த முஸ்லிமும்
சொல்லவும் மாட்டான்.
முனையவும் மாட்டான்.
ஒரு வாதத்திற்காக
அபூபக்கர்(ரலி)
உமர் (ரலி)
ஆகியோர்களது கப்ருகளை தோன்றி ஜனாஸாக்களை வேறு
இடத்தில் அடக்கம்
செய்தாலும் நபி (ஸல்)அவர்களது கப்ரை
தோன்றி வேறு
இடத்தில் அடக்கம்
பண்ண முடியாது.
“நபிமார்கள் மரணித்த
இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்ற
ஹதீஸுக்கு ஏற்ப
நபியவர்களின் கப்ரை அகற்ற நினைப்பது பெரும்பாவமாகும்.
மஸ்ஜிதுன் நபவியின் இந்த உண்மையான வரலாற்றை
அறியாமல் கப்ருவணக்கம்
புரிபவர்கள் தங்களது அபிமானத்திற்குரியவர்களின்
கப்ருகளை பள்ளியினுள்
கட்டி வைப்பதற்கும்
அந்த இடங்களில்
தொழுவதற்கும் பூஜிப்பதற்கும் நபி (ஸல்) அவர்களது
கப்ரை ஆதாரம்
காட்டி பேசுவதும்
நபி (ஸல்)
அவர்களுக்குச் சமமாக அந்த மகான்களை கணிப்பதும்
மாபெரும் தவறாகும்.
இது எல்லாவற்றையும்
விட நபியவர்களினதும்
சஹாபாக்களினதும் கப்ருகளுடன் இன்றுள்ள கப்றுகளை ஒப்பிட்டு
பேசுவதற்கு ஈமானுள்ள ஒரு மனிதன் முனைவானா?
யாருடைய கப்றை
எவருடைய கப்ருடன்
ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லையா?
இப்றாஹீம் நபிக்கு கஃபாவில் சிலை கட்டபட்டது
தானே, ஏன்
அவ்லியாவுக்கு பள்ளியில் சிலை வைக்கக்கூடாது என்று
இனிவரும் காலங்களில்
இவர்கள் கேட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நிலையில்
தான் இவர்களுடைய
போக்கு போய்கொண்டிருக்கிறது.
எனவே மேலேயுள்ள
ஹதீஸ்களின் பிரகாரம் கப்ருகள் கட்டக் கூடாது
கப்ருகள் உள்ள
இடங்களை மஸ்ஜிதுகளாக
எடுக்கவும் கூடாது தொழவும் கூடாது என்பதை
புரிந்து கொள்வோமாக!