"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஷிர்க் இல்லாமல் இருந்தால் தாவீஸ் அனியலாமா

பதில்.
அரபியர்கள் ஒரு எழும்பை எடுத்து அதை கட்டி தொங்க விட்டுக்கொள்வார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி அந்த எழும்பின் மூலம் கண்ணால் ஏற்படக்கூடிய தீங்கை விட்டு போக்கி கொள்வார்கள். இதுதான் தடுக்கப்பட்டுள்ளது. இவை அல்லாமல் குர்ஆன் வசனங்கள் அல்லது அல்லாஹ்வின் பெயர்கள் இருந்தால் அனியலாம் என்று   கூறுகிறீர்கள்.
குர்ஆன் வசனமாக இருந்தால் அல்லது அல்லாஹ்வின் பெயர்களாக இருந்தால் அவைகளை கட்டிக் கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்றோ அல்லது கட்டிக் கொள்ளலாம் என்றோ சொன்னதாகவோ ஒரு ஆதாரத்தைக் கூட காட்டவில்லை.

இது ஒரு புறமிருக்க ஷிர்க் இல்லாமல் இருந்தால் அதைக்கட்டிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் ஏன் சொல்லவில்லை.?

நபி (ஸல்) அவர்கள் பொதுவாக ஒன்றை சொல்­ருந்தால் அதை பொதுவாகத்தானே, அனைத்துக்கும் தானே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி இருக்க ஷிர்க் இல்லாமல் இருந்தால் அனியலாம் என்று   எப்படி சொல்ல முடியும்?
நபி (ஸல்) அவர்கள்  குர்ஆன் வசனங்களை கட்டிப்போடாமல் ஏன் ஓதிப்பார்த்தார்கள்.? அதற்கு மட்டும் ஏன் அனுமதி கொடுத்தார்கள்.?
இன்னும் சொல்லப்போனால் பொதுவான இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராகவும் இந்த தாயத்துகள், தாவீஸ்கள் இருக்கின்றன.
குர்ஆன் சொல்கிறது.
மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. அல் குர்ஆன் (10 : 57)
ஒருவர் குர்ஆன் வசனங்களை படிப்பதினால்தான் அவருக்கு நோய் நீங்கும் என்று இந்த திருக்குர்ஆன் சொல்கிறது. இதை விடுத்து ஒருவர் குர்ஆனை தனனுடைய கழுத்தில் கட்டித்தொங்க விட்டுக் கொண்டார் என்று சொன்னால் அவருக்கு நோய் நீங்குமா?

இதை விளங்க ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.
ஒருவர் மருத்துரிடம் சென்று அவடைய நோய்க்காக மருத்துவரிடம் காட்டி மருந்து சீட்டு வாங்கி வருகிறார். வாங்கி வந்தவர் அதைக்கட்டி தன்னுடைய கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டார். இப்போது அவருடைய நோய் குணமாகுமா? மருத்துவர் எழுதி தந்த சீட்டை மருந்து கடைகளிடம் காட்டி மருந்துகளை வாங்கி சாப்பிட்டதானே நோய் நீங்கும். இதே போல்தான் குர்ஆனும் குர்ஆனை ஓதினால்தான் நிவாரணம் கிடைக்கும்.
  அவர் மருத்துவ சீட்டை கழுத்தில் மாட்டிக் கொண்டால் அவருடைய நோய் தீர்ந்து விடும். இது அறிவுக்கு கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கிறதா?
அறிவுக்குப் பொருத்தமில்லாத காரணத்தினால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை செய்யவுமில்லை, செய்ய கட்டலையிடவுமில்லை.
அடுத்து ஸஹாபாக்கள் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்களே என்று   வாதத்தை எடுத்து வைக்கின்றீர்கள்.
ஸஹாபாக்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ர­) அவர்கள் செய்ததாக திர்மிதியில் (3451) ல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் அய்யாஸ் என்பவர் இடம் பெருகிறார். இவர் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக்கொள்வாôர்கள். இங்கே இடம் பெற்றிருக்கூடிய இஸமாயீல் பின் அய்யாஸ் அவர்களுக்கு அறிவித்தவர் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவராகும்.  இவர் தங்கிய ஊர் மதினாவாகும். அவர் இறந்த ஊர் பக்தாத் ஆகும். இவருக்கும் ஷாம் என்ற ஊருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அடுத்து ஒரு ஸஹாபி இந்த மாதிரி ஷிர்க்கான காரியங்கள் செய்திருப்பாரா? குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக செய்திருப்பாரா? என்ற எண்ணத்தின் அடிப்படையில் பார்த்தாலும் இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
(சில நேரங்களில் நபித்தோழர்கள் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக சில செயல்களை செய்தது உண்டு இது தனிவிஷயம்)

நீங்கள் எந்த செய்தியை வைத்து தாவீஸ் அனியக்கூடாது என்று சொன்னீர்களளோ அதே செய்தியில் ஓதிப்பார்ப்பதையும் தடை செய்தார்கள் என்று வருகிறதே அதை தடை என்று சொல்வீர்களா? என்று   ஒரு கேள்வியையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.
உன்மையில் நீங்கள் சொல்வதைப் போன்று ஷிர்க் இருந்தால் ஓதிப்பார்க்ககூடாது. ஷிர்க் இல்லாமல் இருந்தால் ஓதிப்பார்க்காமல் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களே கூறியிருக்கிறார்கள்.
அவ்ஃப் பின் மா­ரிக் அல்அஷ்ஜஈ (ரரி­) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), ”அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்ரி­க்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்பார்த்தரில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள். நூல்: முஸ்­ம் (4427)

இந்த செய்தியை வைத்துதான் நாம் ஷிர்க் இல்லாமல் இருந்தால் ஓதிப்பார்க்கலாம் என்று சொல்லி­ வருகிறோம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தாயத்தில் இப்படி இணைவைப்பு இல்லாமல் இருந்தால் போட்டுக் கொள்ளலாம் என்று எந்த முன்மாதிரியும் இல்லை.

ரசூல் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்த்தார்கள் என்று வந்துள்ளதால் தடை செய்தது அறியாமைக்காலத்தில் உள்ளதைதான் என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் தாயத் அனிவது தடை என்று சொல்­விட்டு அதற்கு அனுமதி கொடுத்ததாகவோ, அதை செய்ததாகவோ எந்த செய்தியும் இல்லை. எனவே குர்ஆன் ஆயத்துக்களை வைத்தோ அல்லது நபி மொழியில் உள்ள துஆக்களை வைத்தோ ஓதிப்பார்ப்பதை  தடை செய்ய முடியாது.
அடுத்து உங்களது நம்பிக்கை படி பாத்ரூமில் குர்ஆன் வசனங்களை கொண்டு செல்ல கூடாது அப்படி இருக்கையில் நீங்கள் குர்ஆன் ஆயத்துகள் உள்ள தாவீஸை அனிந்து கொண்டு பாத்ரூம் செல்லலாம் என்று கூற வருகிறீர்களா? நீங்கள் சொல்வது உங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக இருக்கிறதே இதற்கு நீங்கள் பதில் சொல்ல கடமை பட்டிருக்கின்றீர்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை விளங்க செய்வானக.

 நன்றி   http://abusameeha.com*************
🔊 தாயத்து தட்டுகளுக்கு சக்தி உண்டா
https://youtu.be/bO5p5U0h17Y

🔊 தாயத்து கட்ட அனுமது உண்டா
https://www.youtube.com/watch?v=d4CjAke0AQE
🔊 தாயத்தும் ஒருவகை மருத்துவம் தானே
https://www.youtube.com/watch?v=hYWx-Bp71Cw
🔊 தாயத்து, தகடு, போத்தல் குப்பி
https://www.youtube.com/watch?v=YRlaghPsSYY

தயாத்து அணியலாமா?
https://shirkinethiri.blogspot.com/





கூட்டு துஆவுக்கு ஆதாரம் காட்டுகிறார் –

– தொழுகைகளுக்குப் பின்னும் ஏனைய சந்தர்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறும்  முறைக்கு கூட்டு துஆ எனப்படுகிறது.  கூட்டு துஆவுக்கு ஆதாரங்கள் உண்டு எனக் கூறி சில ஹதீஸ்களை முன்வைத்து மரியாதைக்குரிய முஹம்மது சூபி (இம்தாதி) மவ்லவி அவர்கள்  ஒரு பிரசுரததை வெளியிட்டார்கள்.

மவ்லவி அவர்கள் முன்வைத்த ஹதீஸ்கள் தகுந்த ஆதாரத்திற்குரியவை அல்ல எனற மறுப்பு சத்தியக்குரல் பத்திரிக்கையில் தொடராக எழுதி வந்தோம் பிறகு கூட்டு துஆ- குழப்பங்களுக்கான தெளிவு எனும் தலைப்பில் அதனை ஒரு நூலகவும் 14.03.2008 அன்று வெளியிட்டோம்.இப்போது அதனை இங்கு பிரசுரிப்பது மக்களுக்கு தெளிவை தரும் எனும் நோக்கில் வெளியிடுகிறோம்.

முன்வைக்கப்படும் ஆதாரம் 

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு அருளியுள்ளார்கள்.

யூதர்கள் ஓர்; பொறாமைக்காரர்களான சமுதாயம். அவர்கள் எமக்கு இஸ்லாமும், ஆமீன் எனும் வார்த்தையும் கிடைத்தற்காகப் பொறாமைப்படுவது போன்று வேறு எதற்கும் பொறாமைப்படுவது கிடையாது. ஆதாரம் : இப்னு குஸைமா, பாகம் 1, பக்கம் 288 (பாபு திக்ரி    ஹஸதில் யஹுத்)

மறுப்பு

மவ்லவி கூறுவது போல் இந்த ஹதீஸில் இஸ்லாமும் ஆமீனும்|| என்று வார்த்தை ஹதீஸ் மூலத்தில் கிடையாது. ஸலாமும் ஆமீனும் என்ற வார்த்தைதான் ஹதீஸ் மூலத்தில் உள்ளது. மௌலவி அவர்கள் ஸலாம் என்ற வார்த்தையை இஸ்லாம் என்று தவறுதலாக மொழி பெயர்த்திருக்கலாம்.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக்கொள்வதைக் கண்டு யூதர்கள் பொறாமைப் படுகிறார்கள். அதுபோல் ஆமீன்|| சொல்வதைக் கேட்டும் பொறாமைப்படுகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

மௌலவி முஹம்மது அவர்கள் இந்த ஹதீஸை பார்ரத்ததும் கூட்டு துஆ பற்றி நபியவர்கள் கூறுவதாக தவறுதலாக புரிந்துகொண்டு தன்னுடைய கருத்தை நிலைநாட்ட தப்பான விளக்கம் கொடுக்க முனைந்திருக்கிறார். ஆமீன் என்று வரக்கூடிய செய்தியெல்லலாம் கூட்டு துஆ பற்றி பேசுவதாக முடிவுசெய்கிறார்.?

ஆமீன்|| சொல்லுகின்றபோது யூதர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்றால் எச்சந்தர்ப்பத்தில் பொறாமைப்படுகிறார்கள்? தொழுகை முடிந்தபின் ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறுகின்ற போதா? அல்லது தொழுகையில் இமாம் சப்தமிட்டு சூரதுல் பாதிஹா ஓதி முடியும் போது எல்லோரும் ஆமீன் கூறுகின்ற போதா? எதைக் குறித்து நபி (ஸல்) அவர்கள்  இந்தஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்?

தொழுகையில் இமாம் சப்தமிட்டு சூரதுல் பாதிஹாவை ஓதி முடியும் போது எல்லோரும் ஆமீன் கூறுவதைக் கண்டுதான் யூதர்கள் பொறாமைப்படுகிறார்கள் அதை குறித்துதான் நபி (ஸல்) அவர்கள் விளக்கப்படுத்துகிறார்கள் என்பதை இந்த ஹதீஸுக்கு முன்னால் பதிவாகியுள்ள ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஷஷஇமாம் இப்னு குகைஸா (ரஹ்) இந்த ஹதீஸையும் இன்னும் சிலஹதீஸ்களையும் கொண்டுவந்து அவைகளுக்கு தலைப்பிடும்போது ”இமாம் சப்தமிட்டு தொழுகையில் சூரதுல் பாதிஹா ஓதி முடியும்போது சப்தமிட்டு ஆமீன் கூறுதல்|| பாடம்(138)என தலைப்பிட்டு பின்வரும் ஹதீஸ்களை பதிவுசெய்துள்ளார்கள்.

  அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். நிச்சயமாக மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைகின்றதோ அவரதுமுன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.

  அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என நபி (ஸல்) கூறினார்கள்.

  அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உம்முல் குர்ஆன் (சூரதுல் பாதிஹா) ஓதி முடிந்தால் ஆமீன் என்று சப்தமிட்டு கூறுவார்கள்.

இப்னு குஸைமாவில் உள்ள இம்மூன்று ஹதீஸ்களும் சூரதுல் பாதிஹா சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஆமீன் கூறும்போது மஃமூம்களும் இமாமுடன் சேர்ந்து சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும் என்பதைத்தான் கூறுகின்றன.

இந்த ஹதீஸ்களுக்கு இன்னும் விளக்கமாக புகாரியில் வரக்கூடிய 782வது ஹதீஸில் (மஃமூம் சப்தமிட்டு ஆமீன் கூறுதல் எனும் பாடத்தில்) இமாம், கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாலீன்|| என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகையில் சூரதுல் பாதிஹா ஓதும் போது மட்டும் ஆமீன் கூறவேண்டும் என்று வரக்கூடிய  ஹதீஸ்களை தொழுகை முடிந்தபின் அல்லது ஏனைய சந்தர்ப்பங்களில் கூட்டு துஆ ஓதி ஆமீன் கூறுவதற்கு ஆதாரமாக காட்டுவது மிகப் பெரிய தவறாகும். அபத்தமாகும்.

அதுமட்டுமன்றி மௌலவி முஹம்மது சூபி எந்த ஹதீஸை கூட்டு துஆவுக்கு ஆதாரமாக காட்டுகிறாரோ அந்த ஹதீஸின் பாடத்தின் தலைப்புகூட இவருடைய கருத்துக்கு (அதாரத்திற்கு) எதிராகவே உள்ளதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.

அதனால்தான் அந்தப் பாடத்தின் தலைப்பின் ஒரு பகுதியை மட்டும் அரபியில் (ஹஸதில் யஹுத்) என்று காட்டிவிட்டு அதனுடன் சேர்ந்த மற்றப் பகுதியை எழுதாமல் மறைத்து விட்டார். அவர் எடுத்துக் காட்டிய (ஹஸதில் யஹுத்) வாசகத்தின் பொருள் ஷஷயஹுதிகள் பொறாமை படுதல்|| என்பதாகும்.

அவர் எடுத்;து காட்டாமல் விட்ட மற்ற வாசகம் ஷஷமுஃமின்கள் ஆமீன் சொல்வதை யஹுதிகள் பொறாமைப்படுதல். சில அறிவீனர்கள் இமாம் கிராத் ஓதும்போது, இமாம்களும் மஃமூம்களும் ஆமீன் சொல்வதைவிட்டும் தடுப்பது. யஹுதிகளின் செயல்களில் ஒரு பண்பாகும். மேலும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களுடன் (யஹுதிகள்) பொறாமைக் கொள்ளுதல்|| என்பதாகும்.

இந்த தலைப்பை முறையாக முழுமையாக படித்திருந்தால் இது தொழுகையில் பாதிஹா சூராவுக்கு ஆமீன் சொல்வதைத் தான் குறிப்பிடுகின்றன-தொழுகை முடிந்த பின் ஒருவர் துஆ ஒதமற்றவர் ஆமீன் கூறுவதை குறிப்பிடவில்லை- என்பதை புரிந்துகொண்டிருப்பார்.ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் மற்றவர்களை திட்டித் தீர்ப்பதில் எந்தப் பயனுமில்லை.

தொழுகையில் சூரதுல் பாதிஹாவை இமாம் சப்தமிட்டு ஓதிமுடியும்போது ஆமீன் கூறவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு கிடையாது. முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையில் ஆமீன் கூறித்தான் வருகிறார்கள்.

ஆனால் இந்த ஹதீஸை கூட்டு துஆவுக்கு ஆதாரமாக எடுப்பதுதான் தவறு என்று கூறுகி றாம்.தொழுகையில் பாதிஹா சூராமுடிந்த பின் அனைவரும் ஆமீன் கூறவேண்டும் என கற்றுத்தந்து செய்துகாட்டிய நபியவர்கள் தொழுகைக்கு பின் ஆமீன் கூறவேண்டும் என்று கற்றுத்தரவுமில்லை செய்துகாட்டவுமில்லை. இந்த ஹதீஸைக்காட்டி தொழுகையல்லா சந்தர்ப்பங்களில் கூட்டுதுஆ ஓதலாம் என்று புரிந்து கொள்ளளமுடியும் என்றால்; இவரைவிட பன்மடங்கு சிறப்பபுக்குரிய நபி(ஸல்) அவர்கள் சிறப்புக்குரிய அமலை புரிந்து செயல்படுத்திகாட்டமுடியாமல் போய்விட்டார்கள் எனகூறப்போகிறார்களா?

ஒரு வாதத்திற்கு இது கூட்டுதுஆவுக்குரிய ஆதாரமென்று வைத்துக்துக் கொண்டால் கூட இமாம் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறவேண்டும் என வாதிடமுடியாது.ஏனெனில் சூரதுல் பாதிஹா ஓதி முடியும் போது இமாமுடன் சேர்ந்து மஃமூம்களும் ஆமீன் கூறவேண்டும் என்றே நபியவர்கள் கூறுகிறார்களே தவிர இமாம் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறவேண்டும்என்று கூறவில்லை.

மௌலவி முஹம்மது சூபி அவர்களைப் போன்றவர்கள் உருவாக்கிக் கொண்ட- உருவாக்கிக் கொணடுவருகின்ற-  துஆக்களுக்கு இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வது தவறாகும்.

*****************
கூட்டுதுஆ பற்றி  மேலும் அறிந்திட

பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ
https://shirkinethiri.blogspot.com/2020/02/parlutholuhai-koottudua.html

மூஸா நபியின் துஆ விட்கு ஹாரூன் (அலை) ஆமீன் சொன்னார்களா ?
https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua_67.html

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?
https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua_14.html

கூட்டு துஆ ஓதலாமா? கூட்டு துஆ என்றால் என்ன?
https://shirkinethiri.blogspot.com/2020/02/koottu-dua.html

கூட்டு துஆ (துவா ) உண்டா ?
https://www.youtube.com/watch?v=4T55c0h87TM





பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ

நபி (ஸல் ) அவர்கள் காலத்தில்  பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.
அதாவது
மாம் துஆ ஓத மற்றவர் “ஆமீன் ஆமீன்” என்று கூறும் நிலை (ன்று நமது பகுதிகளில் நடைமுறையில் ருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது. 
நம்மைவிட துஆ கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி (ஸல் ) அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் ஒரு நேரத் தொழுகையிலும் கூட மாம் துஆ ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் ருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி(ஸல் )   அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே துஆ ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.
    நபி(ஸல் ) அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் “மும்முறை” أأَسْتَغْفِرُ اللهَ அஸ்தஃபிருல்லாஹ்” என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள். (பின்னர்)اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم  “அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்க்ராம்” என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம், திர்மிதீ,ப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
    பொருள்:யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன். மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும். மேற்காணும் துஆவை நபி(ஸல் )   அவர்கள் தாம் தொழ வைத்துவிட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்தபின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை. ஆகவே நபி(ஸல் ) அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.
நபி(ஸல்)  அவர்கள், உங்களில் ஒருவர் தொழுதுவிட்டால் அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி (ஸல் ) அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம் கேட்டுப்) பிரார்த்திப்பாராக! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபுழாலத்து பின் உபைத்(ரழி) நூல்: திர்மிதீ)
   
நான் ஒரு முறை நபி(ஸல் ) அவர்களுடன் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் ருக்கும் போது தொழுது கொண்டிருந்தேன். நான் தொழுதுமுடித்து உட்கார்ந்தவுடன் அல்லாஹ்வை போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி(ஸல் ) அவர்கள் மீது ஸலவாத்து கூறிவிட்டுப் பின்னர் எனக்காக துஆ கேட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நபி(ஸல் ) அவர்கள் நீர் கேளும்! தரப்படும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) நூல்:திர்மிதீ)
    அல்லாஹ்வின்  தூதரே!  (அல்லாஹ்விடம்) மிகவும்  ஏற்று  கொள்ளப்படுவதற்கு தகுதிவாய்ந்த துஆ (வின் நேரம்) எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், கடைசி ரவின் நடுப்பகுதியும், பர்லான தொழுகைகளுக்குப் பிறகும் என்றார்கள். (அபூ உமாமா(ரழி) திர்மிதீ)
    மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக பர்லான தொழுகைகளுக்குப் பிறகுள்ள நேரம் துஆ கபூலாகக்கூடிய நேரம் என்பதையும் நமது தேவைகளை நாமே கேட்டுப்பெற முயற்சிக்க வேண்டும் என்றும் நபி(ஸல் ) அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதையும் அறிகிறோம்.
   
மாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் நீங்கள் அனைவரும் ஆமின் கூறுங்கள்! நீங்கள் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு ஒத்தாக அமைந்து விட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தமது ஸஹாபாக்களுக்கு ஆமீன் கூறும்படி ஆர்வ மூட்டிய நபி(ஸல் ) அவர்கள் பர்லான தொழுகைகளுக்குப் பிறகு நான் மட்டும் துஆ ஓதுகிறேன் நீங்கள் அனைவரும் நான் ஓதும் துஆவுக்கு ஆமீன் சொல்லிக்கொண்டிருங்கள் என்று ஒருபோதும் ஒரு வார்த்தைகூட அவர்கள் கூறியதாக சரித்திரமே ல்லை. வ்வாறு எந்த ஸஹாபியும் தாம் மக்களுக்குத் தொழவைத்த பின் அவர்கள் துஆ ஓத மக்கள் ஆமீன் கூறினார்கள் என்று ஹதீஸ் நூல்களில் காணப்படவில்லையே என்று தான் ஹதீஸ் கலா வல்லுனர்கள் கேட்கிறார்கள்.
    இமாம் துஆஓத பின்பற்றி தொழுதவர்கள் ஆமீன் ஆமீன் என்று கூறுவது நல்லது தானே வ்வாறு செய்தால் என்ன தவறு?
என்று பலர் கருதுகிறார்கள். நல்லது தானே என்று கூறுபவர்கள் அந்த நல்லதை நபி
(ஸல் ) அவர்கள் நமக்கு காட்டித் தராமல் சென்று விட்டார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.
    ஒன்றை நல்லதுதான் என்று நாமாகக் கருதிக் கொண்டு எதையும் செய்துவிட்டுப் போவதா? மார்க்கத்தில் நல்லதென்று ஒன்றிருக்குமானால், அது நபி(ஸல் ) அவர்கள் கூறிய, அல்லது செய்து காட்டிய, அல்லது அங்கீகாரம் செய்த ஒன்றாகத்தான் அது ருக்க வேண்டுமே அன்றி, நாமாக நடைமுறை படுத்தினால் நல்லதாகிவிட முடியாது.
    உங்களை நரகத்தை விட்டும் தூரப்படுத்தி, சுவர்க்கத்தின் பக்கம் உங்களை அணுகச் செய்யும் (எந்த ஒரு நன்மையும் தீமையும்) உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படாது ஒரு விஷயமும் விடுபட்டு விடவில்லை என நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள். (அபூதர்ரு(ரழி) நூல்: தப்ரானி)
    “நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன்சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.”
அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி(ஸல் ) அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.” என தாபியீன்களின் தலை சிறந்தவரும், சீரிய கலீபஃபாவுமான ப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.