"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும்.
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன்  திருக்குர்ஆன் 17:1

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் இறைவனுக்கு இது சாத்தியமானதே!

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை இறைவன் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் வசனத்தில் இருந்து அறியலாம்.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்  திருக்குர்ஆன் 17:60

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் கூறிய பொழுது சிலர் நம்ப மறுத்து மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று அல்லாஹ்  குறிப்பிடுகிறான்.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.

அல்லாஹ் நாடினால் மிகச் சிறிய அளவு நேரத்தில் விண்ணகம் அழைத்துச் செல்ல முடியும்; அவனது ஆற்றல் அளப்பரியது என்று நம்புவதுதான் மிஃராஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதை நம்ப மறுப்பவர் அல்லாஹ்வின் ஆற்றலில் ஐயம் கொண்டவராவார். அவரது ஈமான் சந்தேகத்துக்கு உரியதாகும்.

மிஃராஜ் நடந்தது எப்போது?

மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எந்தக் குறிப்பும் இல்லை.

எந்த ஆண்டில், எந்த மாதத்தில், எந்தத் தேதியில் நடந்தது என்பதில் அறிஞர்கள் சொந்தக் கருத்தாக பலவாறாக கூறியுள்ளனர். இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.

ரஜப் மாதம் 27 ல் தான் மிஃராஜ் நடந்தது என்று பரவலாக மக்கள் நம்புவது ஆதாரமற்றதாகும்.

அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஒரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை.

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்
ரஜப் 27 ஆம் இரவு தான் மிஃராஜ் நடைபெற்றது என்று நம்பி அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல பித்அத்தான காரியங்களைச் செய்கின்றனர்.

மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர் என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.

இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்லிகள், மவ்லித் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிக்கின்றனர்.

6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும்; அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3 ஆம் கலிமாவை 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.

3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.

இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃப, லிஈலாஃபி குறைஷ் ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.

இவை நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?

صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ

யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரீ 2697

صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல் : முஸ்லிம் 3243

தாமாக புதிய வணக்கங்களை உருவாக்கிக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கும் கேள்வியைக் காணுங்கள்!

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?திருக்குர்ஆன் 49:16

அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதாகக் கருதப்படும்.

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்குத்தான் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய வேண்டும். ஆனால் நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் அன்பை யாரும் பெற முடியாது என்று அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:31,32

இன்னும் சிலர் இந்த இரவில் பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! திருக்குர்ஆன் 7:205

உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். திருக்குர்ஆன் 7:55

அல்லாஹ்வின் இந்த அறிவுரையை எதிர்த்து பணிவில்லாமல் எழுந்து, குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

سنن النسائي
1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : நஸாயீ

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக!


தயாத்து அணியலாமா?


அல்லாஹ்வின் பெரும் கிருபையினால்   பல வருடங்களாக ஏகத்துவப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சாரங்களில் இணை வைப்பு காரியங்களையும், மூடப் பழக்க வழக்கங்களையும் கண்டித்து தெளிவுபடுத்தியதன் விளைவாக மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். இதில் தாயத்து என்ற இணை வைப்பு காரியத்தையும் கண்டித்து அதன் விளைவுகளையும் நாம் கூறி வருகின்றோம்.

உக்பா பின் ஆமிர் (ரலி ) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்து பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட் டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி  தன்னுடைய கையினால் நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தை தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (16781)
இந்த நபிமொழியையும் அடிப்படையாகக் கொண்டு தாயத்தை யாரும் அணியக் கூடாது. அது இணை வைப்பாகும் என்று கூறுகிறோம்.


மேலும் நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்ய நபிகளார் கட்டளையிட் டார்கள். இறைவனிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். ஆனால் தாயத்தை அணியச் சொல்லவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர), நூல் : புகாரி (5678)


அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரரி), நூல் : திர்மிதீ (1961), அபூதாவூத் (3357)


நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ அவர்களும் அனஸ் பின் மாக் (ரலி) அவர்களிடம்  சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் "அபூஹம்ஸாவே! நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன்” என்று சொல்ல, அனஸ் (ரலி ) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப் பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), "சரி (அவ்வாறேஓதிப் பாருங்கள்)” என்று சொல்ல, அனஸ் (ரலி ) அவர்கள், "அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்” என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமப்பாயாக! நீயே குணமப்பவன். உன்னைத் தவிர குணமப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமப்பாயாக.)
அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ், நூல் :புகாரி (5742)

நபிகளாரின் இந்தக் கட்டளையை மதிக்காமல் தாயத்து, தட்டு, தகடு என்று மூடநம்பிக்கையில் சில முஸ்லிம்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மூடநம்பிக்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில ஆலிம்கள் நம்முடைய ஆதாரங்களுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளனர். அந்த மறுப்பு சரியானதா? இல்லையா? என்பதைக் காண்போம்.

தமீமா என்றால் என்ன?
தாயத்து அணிவதைத் தடுத்தார்கள் என்ற செய்தியில் தாயத்து என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் தமீமா என்ற அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது.

இந்த தமீமா என்றவார்த்தையை வைத்துக் கொண்டு வார்த்தை விளையாட்டுகளை ஆலிம்கள் என்று சொல்பவர்கள் விளையாடி தாயத்து அணியலாம் என்று கூறி வருகிறார்கள்.
 தமீமா என்பது கருப்பும் வெள்ளையும் சேர்ந்த மணியாகும். வாரியில் இதை கோர்க்கப்படும் பின்னர் கழுத்தில் போடப்படும். (அல் காமூஸுல் முஹீத், பாகம் : 1, பக்கம் :1400)

தமீமா என்பது கறுப்பும் வெள்ளையும் கலந்த மணியாகும். அதை வாரியில் கோர்க்கப்படும் பின்னர் கழுத்தில் போடப்படும் என்று அபூ மன்ஸூர் கூறுகி றார். தமீமா என்பது ஒரு மாலையாகும் அதில் வாரும் பாதுகாப்பு பொருளும் இருக்கும் ஒன்றாகும் என்று இப்னு ஜின்னீ கூறுகிறார். (ரிஸானுல் அரப், பாகம் : 12, பக்கம் : 67)

தற்போது போடப்படும் தாயத்து என்பது தகடால் செய்யப்பட்டுள்ளது. நபிகளார் தடுத்தது இந்தத் தாயத்தை இல்லை. எனவே அஹ்மதில் இடம் பெறும் ஹதீஸை வைத்து தற்போது போடப்படும் தாயத்தை தடை செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்

இது விநோதமான விளக்கமாகும். எந்த அறிவாளியும் இதுபோன்ற விளக்கத்தைக் கூறத் துணிய மாட்டான். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தாயத்து என்பது அவர்களுக்குக் கிடைத்த மூலப்பொருள் மூலம் செய்திருப்பார்கள். அதனால் அந்த மூலப்பொருளில் இருந்தால்தான் தடை செய்ய முடியும் என்று சொன்னால் நபிகளார் காலத்தில் இருந்த சிலைகள் எதனால் செய்யப் பட்டிருக்கும்? அவர்கள் காலத்தில் இருந்த கல், மண், மரம் போன்ற பொருள் களால் செய்யப்பட்டிருக்கும். நபிகளார் காலத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருளால் ஒருவர் சிலையை செய்து வைத்துக் கொண்டு இந்தச் சிலையை வணங்கலாம். ஏனெனில் நபிகளார் காலத்தில் இருந்த சிலைகள் கல்லால் மண்ணால் செய்யப்பட்டது அதைத்தான் தடுத்தார்கள் என்று கூறினால் அறிவுள்ள யாராவது ஏற்றுக் கொள்வார்களா? நபிகளார் காலத்தில் கல் மண்ணால் செய்திருந்தால் அன்றைய கால மக்க ளின் நம்பிக்கை என்ன? அந்தச் சிலைக்கு கடவுளின் ஆற்றல் உள்ளது என்பதுதான். இந்த நம்பிக்கை பிளாஸ்டிக் சிலைகளுக்கு உள்ளது என்று நம்புவதால் இதுவும் கூடாது என்று கூறுவோம்.
இதைப்போன்றுதான் தாயத்து என்பது எந்த மூலப் பொருளில் இடம் பெற்றிருந்தாலும் அன்றைய கால மக்களின் நம்பிக்கையைப் போன்றிருந்தால்

எந்தப் பொருளில் தாயத்து செய்திருந்தாலும் அதையும் கூடாது என்றுதான் நாம் கூறுவோம்.
தாயத்து என்பது மணியாகும். அல்லது தலையில் மாற்றப்படும் மாலையாகும். அறியாமைக் காலத்தில் ஆபத்துகளிரிருந்து இது காப்பாற்றும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள். (பத்ஹுல் பாரி, பாகம் : 10, பக்கம் : 196)

தாயத்து என்பது ஆபத்துக்களிலிருந்து  காப்பாற்றும் சாதனம் என்று நம்பிக்கை அன்றைய அறியாமைக்கால மக்களிடம் இருந்துள்ளது. எனவே இந்த நம்பிக்கை எந்தப் பொருளில் இருந்தாலும் அது கூடாது என்றே கூறவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தடை செய்தது ஷிர்க்கான வாசகம் உள்ள தாயத்தைத்தான். திருக்குர்ஆன் வசனங்கள் உள்ள தாயத்தை அணிந்தால் அது இணை வைத்ததில் சேராது என்று தாயத்தை அணிவது கூடும் என்று கூறுபவர்கள் சொல்கிறார்கள்.

தாயத்தைப் பொதுவாக தடை செய்த நபிகளார். அதில் திருக்குர்ஆன் வசனங்கள் இருந்தால் தடையில்லை என்று எங்கும் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிக்காத ஒன்றில் நாம் விதிவிலக்கு அளிப்பது மார்க்கத்தில் கை வைப்பதாகும். ஓதிப் பார்த்ததைத் தடை செய்த நபிகளார் அவர்கள் ஓதிப் பார்க்கும் வாசகங்களில் இணை வைப்பு வாசகங்கள் இல்லையானால் கூடும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து வந்தோம். எனவே (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் ஓதிப் பார்ப்பதை என்னிடம் சொல்ரிரிக் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப் பார்த்தரில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாரிக் (ரரி), நூல் :முஸ்ரிம் (4427)


இதைப்போன்று நீங்கள் தாயத்தில் எழுதி வைக்கும் வாசகங்களைக் காட்டுங்கள் என்று கேட்டு அதில் இணை வைப்பு வாசகங்கள் இல்லையா னால் தாயத்தை அணிந்து கொள்ளலாம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு எந்தத் தகவலும் இல்லாதபோது எந்த வாசகம் இருந்தாலும் அது கூடாது என்று கூறுவதே சரியான கருத்தாகும்.

தாயத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் இருந்தால் கூடும் என்று சில அறிஞர் கள் கூறியுள்ளார்களே என்று கேட்கிறார்கள்.
இஸ்லாத்தில் ஒரு விஷயத்தைக் கூடும் என்று சொல்வதற்கும் கூடாது என்று சொல்வதற்கும் தகுதியானவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமாவார்கள். மற்ற எவரும் ஒன்றைக் கூடும் என்று கூற அல்லது கூடாது என்று கூறஅனுமதியில்லை இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

தாயத்து இவ்வாறு இருந்தால் அணியலாம், இவ்வாறு இருந்தால் அணியக் கூடாது என்று கூறும் நபர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களின் கூற்று மார்க்கமாக ஆகாது எனவே திருக்குர்ஆனோ நபிமொழியோ அல்லாத இந்த கூற்றுகள் ஆதாரமாக ஆகாது.

ஷிர்க் இல்லாமல் இருந்தால் தயாத்து அனியலாமா ??என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்



ஷிர்க் இல்லாமல் இருந்தால் தாவீஸ் அனியலாமா

பதில்.
அரபியர்கள் ஒரு எழும்பை எடுத்து அதை கட்டி தொங்க விட்டுக்கொள்வார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி அந்த எழும்பின் மூலம் கண்ணால் ஏற்படக்கூடிய தீங்கை விட்டு போக்கி கொள்வார்கள். இதுதான் தடுக்கப்பட்டுள்ளது. இவை அல்லாமல் குர்ஆன் வசனங்கள் அல்லது அல்லாஹ்வின் பெயர்கள் இருந்தால் அனியலாம் என்று   கூறுகிறீர்கள்.
குர்ஆன் வசனமாக இருந்தால் அல்லது அல்லாஹ்வின் பெயர்களாக இருந்தால் அவைகளை கட்டிக் கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்றோ அல்லது கட்டிக் கொள்ளலாம் என்றோ சொன்னதாகவோ ஒரு ஆதாரத்தைக் கூட காட்டவில்லை.

இது ஒரு புறமிருக்க ஷிர்க் இல்லாமல் இருந்தால் அதைக்கட்டிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் ஏன் சொல்லவில்லை.?

நபி (ஸல்) அவர்கள் பொதுவாக ஒன்றை சொல்­ருந்தால் அதை பொதுவாகத்தானே, அனைத்துக்கும் தானே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி இருக்க ஷிர்க் இல்லாமல் இருந்தால் அனியலாம் என்று   எப்படி சொல்ல முடியும்?
நபி (ஸல்) அவர்கள்  குர்ஆன் வசனங்களை கட்டிப்போடாமல் ஏன் ஓதிப்பார்த்தார்கள்.? அதற்கு மட்டும் ஏன் அனுமதி கொடுத்தார்கள்.?
இன்னும் சொல்லப்போனால் பொதுவான இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராகவும் இந்த தாயத்துகள், தாவீஸ்கள் இருக்கின்றன.
குர்ஆன் சொல்கிறது.
மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. அல் குர்ஆன் (10 : 57)
ஒருவர் குர்ஆன் வசனங்களை படிப்பதினால்தான் அவருக்கு நோய் நீங்கும் என்று இந்த திருக்குர்ஆன் சொல்கிறது. இதை விடுத்து ஒருவர் குர்ஆனை தனனுடைய கழுத்தில் கட்டித்தொங்க விட்டுக் கொண்டார் என்று சொன்னால் அவருக்கு நோய் நீங்குமா?

இதை விளங்க ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.
ஒருவர் மருத்துரிடம் சென்று அவடைய நோய்க்காக மருத்துவரிடம் காட்டி மருந்து சீட்டு வாங்கி வருகிறார். வாங்கி வந்தவர் அதைக்கட்டி தன்னுடைய கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டார். இப்போது அவருடைய நோய் குணமாகுமா? மருத்துவர் எழுதி தந்த சீட்டை மருந்து கடைகளிடம் காட்டி மருந்துகளை வாங்கி சாப்பிட்டதானே நோய் நீங்கும். இதே போல்தான் குர்ஆனும் குர்ஆனை ஓதினால்தான் நிவாரணம் கிடைக்கும்.
  அவர் மருத்துவ சீட்டை கழுத்தில் மாட்டிக் கொண்டால் அவருடைய நோய் தீர்ந்து விடும். இது அறிவுக்கு கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கிறதா?
அறிவுக்குப் பொருத்தமில்லாத காரணத்தினால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை செய்யவுமில்லை, செய்ய கட்டலையிடவுமில்லை.
அடுத்து ஸஹாபாக்கள் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்களே என்று   வாதத்தை எடுத்து வைக்கின்றீர்கள்.
ஸஹாபாக்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ர­) அவர்கள் செய்ததாக திர்மிதியில் (3451) ல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் அய்யாஸ் என்பவர் இடம் பெருகிறார். இவர் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக்கொள்வாôர்கள். இங்கே இடம் பெற்றிருக்கூடிய இஸமாயீல் பின் அய்யாஸ் அவர்களுக்கு அறிவித்தவர் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவராகும்.  இவர் தங்கிய ஊர் மதினாவாகும். அவர் இறந்த ஊர் பக்தாத் ஆகும். இவருக்கும் ஷாம் என்ற ஊருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அடுத்து ஒரு ஸஹாபி இந்த மாதிரி ஷிர்க்கான காரியங்கள் செய்திருப்பாரா? குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக செய்திருப்பாரா? என்ற எண்ணத்தின் அடிப்படையில் பார்த்தாலும் இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
(சில நேரங்களில் நபித்தோழர்கள் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக சில செயல்களை செய்தது உண்டு இது தனிவிஷயம்)

நீங்கள் எந்த செய்தியை வைத்து தாவீஸ் அனியக்கூடாது என்று சொன்னீர்களளோ அதே செய்தியில் ஓதிப்பார்ப்பதையும் தடை செய்தார்கள் என்று வருகிறதே அதை தடை என்று சொல்வீர்களா? என்று   ஒரு கேள்வியையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.
உன்மையில் நீங்கள் சொல்வதைப் போன்று ஷிர்க் இருந்தால் ஓதிப்பார்க்ககூடாது. ஷிர்க் இல்லாமல் இருந்தால் ஓதிப்பார்க்காமல் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களே கூறியிருக்கிறார்கள்.
அவ்ஃப் பின் மா­ரிக் அல்அஷ்ஜஈ (ரரி­) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), ”அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்ரி­க்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்பார்த்தரில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள். நூல்: முஸ்­ம் (4427)

இந்த செய்தியை வைத்துதான் நாம் ஷிர்க் இல்லாமல் இருந்தால் ஓதிப்பார்க்கலாம் என்று சொல்லி­ வருகிறோம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தாயத்தில் இப்படி இணைவைப்பு இல்லாமல் இருந்தால் போட்டுக் கொள்ளலாம் என்று எந்த முன்மாதிரியும் இல்லை.

ரசூல் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்த்தார்கள் என்று வந்துள்ளதால் தடை செய்தது அறியாமைக்காலத்தில் உள்ளதைதான் என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் தாயத் அனிவது தடை என்று சொல்­விட்டு அதற்கு அனுமதி கொடுத்ததாகவோ, அதை செய்ததாகவோ எந்த செய்தியும் இல்லை. எனவே குர்ஆன் ஆயத்துக்களை வைத்தோ அல்லது நபி மொழியில் உள்ள துஆக்களை வைத்தோ ஓதிப்பார்ப்பதை  தடை செய்ய முடியாது.
அடுத்து உங்களது நம்பிக்கை படி பாத்ரூமில் குர்ஆன் வசனங்களை கொண்டு செல்ல கூடாது அப்படி இருக்கையில் நீங்கள் குர்ஆன் ஆயத்துகள் உள்ள தாவீஸை அனிந்து கொண்டு பாத்ரூம் செல்லலாம் என்று கூற வருகிறீர்களா? நீங்கள் சொல்வது உங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக இருக்கிறதே இதற்கு நீங்கள் பதில் சொல்ல கடமை பட்டிருக்கின்றீர்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை விளங்க செய்வானக.

 நன்றி   http://abusameeha.com*************
🔊 தாயத்து தட்டுகளுக்கு சக்தி உண்டா
https://youtu.be/bO5p5U0h17Y

🔊 தாயத்து கட்ட அனுமது உண்டா
https://www.youtube.com/watch?v=d4CjAke0AQE
🔊 தாயத்தும் ஒருவகை மருத்துவம் தானே
https://www.youtube.com/watch?v=hYWx-Bp71Cw
🔊 தாயத்து, தகடு, போத்தல் குப்பி
https://www.youtube.com/watch?v=YRlaghPsSYY

தயாத்து அணியலாமா?
https://shirkinethiri.blogspot.com/