"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

புகாரி 1367வது ஹதீஸ் பிரகாரம் அவுலியாக்களை அடையாளம் காணலாமா

 கேள்வி  இறை நேசர்கள் யார் என்பதை மனிதர்கள் யாராலும் கண்டு
பிடிக்க முடியாது; அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்று கூறி வருகிறீர்கள். ஆனால் புகாரி 1367வது ஹதீஸில், இறந்துவிட்ட ஒருவரை மக்கள் நல்லவர் என்று புகழும் போது “அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். எனவே மக்கள் யாரை இறைநேசர் என்று தீர்மானிக்கின்றாரோ அவர் இறைநேசராகத் தான் இருப்பார் என்று கப்ரு வணங்கிகள் பிரச்சாரம் செய்கிறார்களே! இதற்கு விளக்கம் என்ன? 
இப்ராஹீம், மதுரை

பதில்
இறைநேசர்கள் யார் என்று மக்களால் தீர்மானிக்க முடியாது என்பதை நாம் சுயமாகக் கூறவில்லை. திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலேயே கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.  அல்குர்ஆன் 10:62, 63

இந்த வசனத்தில் இறை நேசர்கள் யார் என்ற இலக்கணம் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.

மிஃராஜ் இரவு' ரஜப் பிறை 27 ல் தானா?

 'மிஃராஜ் இரவு' ரஜப் பிறை 27 ல் தானா?

'மிஃராஜ்' என்ற சம்பவம் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் நம்பவேண்டிய, அல்லாஹ்வின் வல்லமையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான ஒரு நிகழ்வு என்றாலும், அது எப்போது நடந்தது என்ற மாதமோ, பிறை(தேதி)யோ ஹதீஸ்களில் குறிப்பிடப்படவில்லை என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். தோராயமாக அனுமானித்து சொல்லக்கூடிய‌ ஆதாரங்களைத் தவிர, அது இந்த நாளில்தான் நடந்தது என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சரியான ஆதாரம் எதுவும் கிடைக்காததால் அறிஞர்களிடம் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன‌.

- ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும், யானை ஆண்டில் ரபீவுல் அவ்வல் பிறை 12 ல் மிஃராஜ் நடந்த‌தாக கூறுகிறார்கள். இதே கருத்தை இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் அறிவிக்கிறார்கள். இன்னொரு அறிவிப்பில், "நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது" என இமாம் ஜுஹ்ரி அறிவிக்கிறார்கள். (பைஹகீ)

இஸ்லாமும் அத்வைதமும்

 முதஷாபிஹாத்       தொடர்: 12

இஸ்லாமும் அத்வைதமும்

முதஷாபிஹாத் வசனங்களை விளங்கிட இயலுமா? இயலாதா? என்பது பற்றி எழுந்துள்ள ஐயங்களுக்கும் ஆட்சேபணைகளுக்கும் விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்னர் மேலும் சில முதஷாபிஹ் வசனங்களைக் காண்போம்.

இறைவனும், இறைவனது அடிமைகளாகிய மனிதர்களும் இரண்டறக் கலந்து விட முடியும்; அதாவது மனிதனே சில சமயம் இறைவனாகி விட முடியும் என்ற அத்வைதக் கொள்கை இஸ்லாத்தின் பெயரால் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் உருவெடுத்தது. இஸ்லாத்திற்கும் அத்வைதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாலும் முதஷாபிஹான சில வசனங்களுக்குத் தவறான பொருள் கொண்டதால் வழிகேடர்கள் இஸ்லாத்திலும் அத்வைதம் உண்டு எனச் சாதிக்கலானார்கள்.