"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இறந்த பிறகு அற்புதம் செய்ய முடியுமா?

அற்புதம்
அற்புதங்கள் நபிமார்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மனிதர்களுக்கும் நடக்கும் என்பதற்குப் பல சான்றுகளைப் பார்த்தோம்.

நபிமார்கள் அல்லாத வேறு யாராவது நான் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் உள்ளவன் என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். நபிமார்கள் கூட தாங்களாகவே அற்புதங்களைச் செய்ய  முடியாது. அல்லாஹ் நாடினால், நபிமார்கள் மூலமாக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு அற்புதத்தையும் நான் இப்போது இந்த மாதிரியாக செய்து காட்டப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த அற்புதத்தைச் செய்கின்ற ஆற்றலை இறைவன்  நபிமார்களுக்குத் தான் வழங்கியிருக்கிறான். அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை.

உமர் (ரலி ) முஹம்மதே முஹம்மதே என்று அழைத்தார்களா?

உமர் (ரலி ) முஹம்மதே முஹம்மதே என்று  அழைத்தார்களா 

ஒரு முறை இப்னு உமர் (ரழி) அவர்களின் கால் மரித்துப் போய்விட்டது , அப்போது அங்கிருந்த ஒருவர் இப்னு உமர் அவர்களிடம் உமக்கு மிக விருப்பமான நபரை அழையும் என்றார் ; அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் " முஹம்மதா" முஹம்மதே என்றழைத்தார்கள் ; உடனே கால் குணமடைந்து விட்டது ( அல் அதபுல் முப்ரத் 1/355)

ஸூபிய்யாக்கள் தரீக்காவாதிகளினால் அடிக்கடி இச்செய்தி சொல்லப்படுவதுண்டு

இது ஆதாரமற்ற அறிவிப்பாகும் , இச்செய்தியில் வரும் " அபூ இஸ்ஹாக் அஸ்ஸப்இ" பிரபலமான இருட்டடிப்பாளாவார் ,இங்கு " அன்" என்ற இருட்டடிப்பிற்கான சொல்லையே அவர் பாவித்துள்ளார்

மேலும் இதே செய்தியை இப்னுஸ் ஸுன்னி " அமலுல் யௌமி வல் லைலா "( 169) கொண்டு வருகிறார் அதிலும் மேலே சொன்ன இஸ்ஹாக் வருகிறார் , மேலும் அதில் " முஹம்மத் பின் முஸ்அப்" என்ற பலமற்ற ஒருவரும் உள்ளார் என்பதோடு அதில் இஸ்ராஈல் என்ற "இக்திலாத்" நிலையில் உள்ளவரும் இடம் பெறுகிறார்

இதே இப்னுஸ் ஸுன்னி அவர்கள் கொண்டு வரும் இன்னுமொரு அறிவிப்பும் பலமற்றதாகும்

கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்

கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!  அல்குர்ஆன் 108:2

நேர்ச்சை
இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.