"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கபாவை முத்தமிட்டவர் சுவர் வணங்கியா ?

கபுறு வணங்கிகளே ....!!! கபுருகளை முத்தமிடாதீர்.. என்று நாம் கூறும்போது.... சில பைத்தியங்கள்
// அல்லாஹ்வின் இல்லமாம் கபாவை முத்தமிட்டவர் சுவர் வணங்கியா ?
ஹஜருல் அஸ்வத் புனித கல்லை முத்தமிட்டவர் கல்லு வணங்கியா ?
// என்று கேட்கின்றனர்


கஃபாவின் உள்ள ஹஜருல் அஸ்வத்' கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.

துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.

அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.

நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்;
அல்லது விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்
என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

 கபுறுகளையோ
கற்சிலைகளையோ, கொடிமரங்கலையோ, லிங்கத்தையோ, சிலுவையையோ இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். ஹஜ்ருல் அஸ்வத்' பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான
உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி 'நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்'என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

 அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.
மேற்படி கூற்றைக் கவனித்துப் பார்த்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிட்டதற்காகவே முத்தமிடுகிரோம்
தவிர அக்கல்லுக்கு ஏதாவது சக்தி உண்டு என்று நம்பினால் அதுவே ஷிர்க்கின் முதற்படியாகும்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின்,
மக்கா காபிர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்ற எண்ணத்தில் தமது மூதாதையர்களான இப்ராஹீம் இஸ்மாயீல் ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?


பாங்குக்கு முன் ஸலவாத் உண்டா ?



பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பாங்கு முறைக்கு மாற்றமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்.
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்).

பின்னர் மீண்டும், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அ
பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பாங்கு முறைக்கு மாற்றமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்.
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்).

பின்னர் மீண்டும், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.
பின்னர் 'ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ('ஹய்ய அலல் ஃபலாஹ்' என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக் கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி) நூல்: முஸ்லிம் 623

பாங்கு சொல்வதை அல்லாஹு அக்பர் என்று தான் துவக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் சான்றுகள் உள்ளன. பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழி என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது 'ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை'ஸலவாத்' சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் 'வஸீலா'வைக் கேளுங்கள். 'வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 628

பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லுமாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் பாங்குக்கு முன் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் என்று பாங்கைத் துவக்க வேண்டும் என்று கூறியிருக்க, அதற்கு முன் ஸலவாத் சொல்லி விட்டு பாங்கைத் துவக்குவது பித்அத் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத செயலாக இருப்பதால் தான், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பித்அத்தைச் செய்கின்றனர். சில இடங்களில், இன்னல்லாஹ மலாய்கத்தஹு... என்ற வசனத்தை ஓதி, ஸலவாத் சொல்லி விட்டு பாங்கு சொல்வதும், வெவ்வேறு திக்ருகளைக் கொண்டு பாங்கைத் துவக்குவதும் நடைமுறையில் உள்ளது.

மொழி, இன பேதமின்றி அனைவருக்கும், உலகம் முழுமைக்கும் பொதுவான தொழுகை அழைப்பாக உள்ள பாங்கிலும் இது போன்ற பித்அத்துக்களால் வேறுபடுத்தி வைத்துள்ளது வேதனைக்குரியது.
----------------------------------------------------------------------------------------------

அடுத்து வழிகேடர்கள் வைக்கும் ஆதரங்களையும் அதற்கான மறுப்புகளையும் பார்ப்போம்

வழிகேடர்களின் வாதம் :-
 /// பாங்குக்கு முன் ஈமானிய ஸலவாத்தை கூரி பாங்கை கூருங்கள் அதில் வெற்றி உண்டு?
இறைவன் குர்ஆனில் கூருகிறான் அல்லாஹ்வும் அவனுடைய மலாயிக்காமார்களும் நபி ஸல அவர்கள் மீது ஸலவாத்து கூருகிறார்கள் நம்பிக்கை கொண்டவர்கலே நீங்களும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள் 33 56
சொல்லுங்கள் என்றால் அர்தம் சொல்லிக்கொண்டே இருங்கள் இதற்கு நேரம் காலம் இடம் எதுவும் யாரும் வகுக்கவில்லை ஆகையால் பாங்கு சொல்வற்கு முன் ஸலவாத்து சொல்லி பாங்கு கூரினால் அதில் நன்மை நிச்சையம் உண்டு மேலே கூரிய குர்ஆன் ஆயத்தின் பிறகாரம்
/////

///ஸலவாத்துக்கு திக்ருக்கும் இறைவனோ இறைதூதர் ஸல் அவர்களோ ஓர் வரையரையை கூரவில்லை மாற்றமாக திக்ரும் ஸலவாத்தும் சொல்லிக்கொண்டே இருங்கள் என்றுதன் வருகிறது?
பாங்கிற்கு முன் ஸலவாத்து கூரினால் இடம் நேரம் வகுத்து விட்டீர்கல் என்று குரிப்பிடப்பட்டுள்ளது எல்லா நேரங்களிலும் ஸலவாத்து கூரலாம் அதில் ஒன்றுதான் பாங்கிற்கு முன் ஸலவாத்துக்கூரிவதும் அப்படித்தான்
  // //


நமது பதில் :-
நேரம் காலம் கிடையாது என்று சொன்னால் அதுக்கு ஏற்றமாதிரி அமல்களை அறிமுகப்படுத்துங்கள்   நேரம் காலம் கிடையாது என்று சொல்லிக் கொண்டே அதிக நன்மை பெறுவதற்காக ஸலவாத்தை அதானுக்கு முன்னால் சொல்லுங்கள் என்று ஒரு நேரத்தை வகுத்து கொடுத்தது ஏன் ??
நேரம் காலம் கிடையாது என்றால் அதானுக்கும் முன்னும் பின்னும் இடையிலும் சொல்லுங்களேன் அல்லது அதான் சொல்லும் போது அல்லாஹு அக்பர் என்று ஒரு தடவை சொன்னதன் பின்னர் ஸலவாத்தை சொல்லி விட்டு அல்லாஹ் அக்பர் என்று தொடரவும் முடியும் என்று சொல்லுங்கள் ..ஸலவாத்து எப்போதும் எங்கையும் எந்நேரத்திலும் சொல்லலாம் என்பதில் நாம் வேறு பட வில்லை எந்நேரத்திலும் சொல்லலாம் என்பதற்காக
அதையும் இன்னும் ஒன்றையும் சேர்“த்து புதிய ஒரு முறையில் ஒரு வணக்கத்தை உருவாக்க உமக்கு அதிகாரம் தந்தது யாரு ??
வழிகேடர்கள்  சொல்வது போல அதானுக்கு முன்னால் ஸலவாத்து சொல்வதால் அதிக நன்மை உண்டு என்றால் இந்த நல்ல முறை நபியவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதா ?
**************

வழிகேடர்களின் வாதம் :-
///// இறைவன் கூருகினான் நானும் என்னுடைய அமரர்களும் ஸலவாத்து சொல்லிக்கொண்டே இருங்கள் முஹ்மீன்கலே நபியவர்கள் மீது ஸலவாத்தை கூரிக்கொண்டே இருங்கள்
இந்த ஆயத்திற்கு எந்த தப்ஸீரிலும் இந்த நேரத்தில் கூர வேண்டும் மற்ற நேரங்களிள் சொல்வது கூடாது என்று யாரும் கூரவில்லை
ஆகையால் ஸலவாத்து எந்த நேரமும் கூரமுடியும் காலம் நேரம் இடம் எதுவும் கிடையாது
எந்த நேரமும் கூரலாம் அதில் ஒன்றுதான் பாங்கிற்கு முன்னும் சொல்லலாம் சொன்னால் நன்மையுண்டு தடுத்தால் தீண்மையுண்டு
//////

 நமது பதில் :-
ஸலவாத்து என்னேரமும் சொல்ல முடியுமா?  முடியாதா ?என்பதல்ல எமது  கேள்வி
ஸலவாத் எப்பவும் சொல்லலாம் என்பதற்கே ஆதாரம் தருகிறார்கள்
எப்பவும் சொல்லலாம் என்ற ஸலவாத்தை சொல்லித்தான் அதானை ஆரம்பிக்க வேண்டும் என்ற வழி முறையை நபியவர்கள் காட்டித் தந்தார்களா ? இதுவே எமது  கேள்வி

ஸலவாத்தை எப்போது சொன்னாலும் நன்மை உண்டு என்று சொன்ன நபியவர்களுக்கு அதனை அதானுக்கு முன் சொல்லி அதனைக் கொண்டு ஆரம்பிப்பது சிறந்தது நன்மை தரும் என்ற விசயம் தெரியாமல் போய் விட்டதா??

வழிகேடர்கள்  சொல்வது போன்ற நன்மை இருக்கும் என்பது நபியவர்களுக்கு தெரிந்திருந்தால் அதனை அன்று அதான் சொன்னவருக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்களே!
***************
வழிகேடர்களின் வாதம் :-
 ///// இஸ்லாத்தில் அனைத்துக்கு கட்டுக்கோப்பை யுன்டு வரிசைகிறகணம் உண்டு
அது தொழுகை ஷகாத் நேண்பு ஹஜ் எதுவாக இருந்தாலும் சரி அதற்குரிய நேரங்களிள்தான் அதை செய்யவேண்டும்
உதாரணத்திற்கு ஹஜ் செய்வதற்கு றிய மாதத்தில் செய்தாள்தான் நண்மை உண்டு அதை போய் ரமலான் மாதத்தில் செய்தால் நன்மை கிடைக்குமா?
அது போண்றுதான் தொழுகை சுபஹ் தொழுகையா இரண்டு ரகாத்துதான் அதை நாண்காக கூட்டினால் அது கூடாது
இது போண்றுதான் அனைத்து அமல்களுக்கும் சர்துகள் உண்டு ஆணால் ஸலவாத்துக்கும் திக்ருக்கு எந்த நிபந்தனையும் இல்லை வேண்டிய நேரங்களிள் செய்யலாம் நேரம் காலம் இடம் கிடையாது
  ////
நமது பதில் :-
மற்றவரின் கருத்தை எதிர்க்கும் போது மட்டும் எப்படி அழகான விளக்கம் வருது ??
தன் கருத்தை சொல்லும் போது குதர்க்கமாகவும் சின்னப்புள்ளைத் தனமாவுமல்லவா பேசுவார்கள்

இவர்களின் விளக்கம் அதாவது ஒவ்வொரு அமலும் அது காட்டி தரப்பட்டது போன்றுதான் செய்ய வேண்டும் சுபஹ் இரண்டு ரக்அத்தை விட கூட்டுவது கூடாது என்று தடுக்கப்படாவிட்டாலும் அது இரண்டு ரக்அத்தே என்று காட்டி தரப்பட்டதால் இரண்டுதான் தொழ வேண்டும் என்று என்ன அழகான விளக்கம் கொடு்த்துள்ளார்கள் ..
இந்த சட்டம் தொழுகைக்கு மட்டுமா அல்லது வணக்கங்களுக்குரியதா ?
தொழுகைக்கு மட்டும் என்றால் அது அல்லாத வணக்கங்களில் கூட்டல் குறைத்தலுக்கு தடை ஏதும் இல்லை என்றால் நாம் கூட்டி குறைத்து செய்யலாம் என்று சொல்கிறீர்கள் என்பதுதான் அர்த்தம்
அப்படி இல்லை இந்த சட்டம் அனைத்து அமல்களுக்கும் என்றால் தொழுகை காட்டித்தரப்பட்டது போலத்தான் செய்ய வேண்டும் என்றால் அது போலவே பாங்கும் காட்டித்தரப்பட்டது போலவே செய்யப்பட வேண்டும் என்று சொல்ல வேண்டும்
நபியவர்கள தொழுகையில் அதிகப்படுத்துவது தவறு என்று சொல்லாத போதும் அதனை நாம் தவறு என்று எப்படி விளங்கிக் கொள்கிறோமோ அது போலத்தான் நபியவர்கள் பாங்கை ஆரம்பிக்க எதையும் முன்னால் சொல்லித்தராத போது பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று வழிகேடர்கள் சொல்வதும் தவறுதான் ..

இங்கு ஸலவாத் சொல்வது கூடுமா? கூடாதா ? என்பதல்ல பிரச்சினை பாங்கை ஆரம்பிக்க ஸலவாத் சொல்லப்படுவது கூடுமா? கூடாதா? என்பதுதான் நபியவர்கள் அப்படி ஆரம்பித்திருந்தால் கூடும் இல்லையானால் அது கூடாது

வலிகேடர்களின்  கூற்றின் படி, நபியவர்கள் காலத்தில் பாங்குக்கு முன் ஸலவாத்துச் சொல்லப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் கிடையாது. ஆனால், நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள் என்ற குர்'ஆன் வசனம், பாங்குக்கு முன் ஸலவாத்துக்ம் கூறுங்கள் என்று கூறுவதற்குப் போதுமான ஆதாரம் என்கிறார்கள் .
அவ்வாரென்றால் அவ்விடயம் தொடர்பான அறிவு நபியவர்களுக்கு இல்லாமல் இருந்ததா?
அவ்வறிவு இருந்திருந்தால் அதை ஏன் நபித் தோழர்கள் செய்யவில்லை?
செய்யுமாறு நபியவர்கள் கூறவும் இல்லை?
நன்மைகளைக் செய்வதில் எம்மை விட பல்லாயிரம் மடங்கு ஆர்வமும், தெளிவுமுடைய நபித்தோழர்கள் செய்யாமல் விட்டது ஏன்?
"இன்றுடன் மார்க்கத்தைப் பூரணப்படுத்தி விட்டோம்" என்று கூறப்பட்ட பின் புது வணக்க முறைகளை உருவாக்க யார் அனுமதியளித்தது?
தொழுகை, ஸகாத் போன்றவைகளுக்கு ஷர்த்துக்கள் குறிப்பிடப்பட்டது போன்று ஸலவாத்துச் சொல்வதில் குறிப்பிடப்படவில்லை என்பார்கள். ஆனால், இங்குள்ள பிரச்சினை ஸலவாத்துச் சொல்வது அல்ல. பாங்குக்கு முன்னால் சலவாத்துச் சொல்ல வேண்டுமா என்பதுதான். அதாவது பாங்குக்கு முன்னால் எதையாவது சேர்த்தலாமா என்பதாகும். பாங்கு என்பது நபியவர்களால் காட்டித் தரப்பட்ட சில வசனங்கள்தானே தவிர புதிதாக எம்மால் சேர்த்துக் கொள்ளப்பட முடியாதது.

உலகில் இன்றுள்ள பல மதங்கள் சுயமிழந்து காணப்படக் காரணம் அவற்றின் நபிமார்கள்/ போதகர்களின் பின்னர் பின்வந்தவர்கள் ஒவ்வொரு விடயத்தை உட்புகுத்தியமையாகும். இஸ்லாம் அவற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அக்பர், கடாபி, மிர்ஸா என பலர் அதற்கே முயன்றனர்.
எனவே, மார்க்க விடயத்தில் பேணுதல் வேண்டும். மார்க்கம் என்ற பெயரில் எம் இச்சைப்படி செய்ய முடியாது. நபியவர்கள் கற்றுத் தராதவை மார்க்கமாகவும் முடியாது.

ஸுன்னத்தான தொழுகைகள் தொழுவது சிறப்பானதாகும். அவற்றில் நேரம் குறிப்பிடப்பட்ட சுன்னத்தான தொழுகைகள் போன்றே கால நேரமில்லாத சுன்னத்தான தொழுகைகளும் உள்ளன. பர்ளான தொழுகைகளுக்கு முன்னால், பின்னால் தொழப்படும் சுன்னத்தான தொழுகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மஃரிபுக்கு முன்னால் சுன்னத் கிடையாது. ஆனாலும், வேண்டிய பொழுது சுன்னத்தான தொழுகைகளைத் தொழலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தொடராக் மஃரிபுக்கு முன்னால் சுன்னத்தாக தொழலாமா?

பாங்குக்கு முன்னால் ஸலவாத்து சொல்வதில் உள்ள தவறு என்ன தெரியுமா? அது கட்டாயமாக செய்யப்பட வேண்டிய ஒரு அமலாக கருதப்படுவது. ஏனெனில் இவர்கள்  குறிப்பிடுவது போன்றூ நேரம் குறிப்பிடப்படாமல் கூறப்பட்ட அமல் ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் எனக் கூற அதிகாரம் கொடுத்தது யார்?

**************
 வழிகேடர்களின் வாதம் :-
//// ஸலவாத்து எந்த நேரமும் சொன்னால் நன்மையுன்டா?  இல்லையா?
 எந்த நேரமும் ஸலவாத்து சொன்னால் நன்மையுண்டு என்று நீங்கள் கூரினால் பாங்குக்கு முன் ஸலவாத்து கூருவது நன்மை கிடைக்குமா கிடைக்காதா?
நபி ஸல் அவர்கள் காலத்தில் பாங்கிற்கு முன் ஸலவாத்து கூரவில்லை ஆணால் அதனால் இப்பொழுது ஸலவாத்து கூரினால் அது வழிகேடா?
நபி ஸல் அவர்கள் கூரினார்கள் யார் அலகான ஸுன்னத்தை புதிதாக உருவாக்கரானோ அவர்களுக்கு கூலி உண்டா அதை யார் பின்பற்றுகிறானோ அவர்களுக்கும் கூலி உண்டு ஆதாரம் முஸ்லிம்
////

நமது  கேள்வி 1:-
எந்நேரமும் ஸலவாத்துக் கூறினால் நன்மையுண்டு என்று உங்கள் அறிவிற்கு எட்டுமானால், உங்களை விட என்னை விட பல மடங்கு மார்க்க ஞானமும், அமல்களில் ஈடுபடும் ஆசையும் கொண்டவர்களான நபித்தோழர்கள் அதை உணர்ந்து பாங்குக்கு முன்னால் ஸலவாத்துச் சொல்லாதது ஏன்?

நமது  கேள்வி  2 :-
இன்றுடன் மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டது என்று கூறப்பட்ட பின்னர் எனக்கும், உங்களுக்கும் மார்க்கத்தில் புதிய விடயங்களைப் புகுத்தலாம் என்றால் மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டது என நபியவர்கள் கூறியது பொய்யா?

நமது கேள்வி 3:-
புதிது புதிதாக வருவபவர்கள் எல்லாம் சுன்னத்துக்களை இணைக்கப் போனால் காலப் போக்கில் இறைவன் அருளிய நபியவர்கள் சொல்லிக் காட்டிய வழிமுறை எது, நாமாக புகுத்திக் கொண்டவை எது என்ற குழப்பம் உருவாகி மக்கள் தம் இச்சைப்படி வாழ மாட்டார்களா? (தற்போது கிறிஸ்தவர்களின் வழிமுறை போன்று)

நாம் இங்கு விவாதிப்பது ஸலவாத்து என்னேரமும் சொல்லலாமா இல்லை என்பதல்ல
வாதம் என்ன வெனில் ஸலவாத்தைக் கொண்டு அதானை ஆரம்பிக்கலாமா ? இல்லையா என்பதுதான்
வலிகேடர்களே  ஏற்றுக் கொண்டு விட்ட பின்னரும் அதாவது ஸலவாத்தைக் கொண்டு அதானை ஆரம்பிக்கலாம் என்பதற்கு நபியர்களின் வழிகாகட்டல் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட பின்னரும் தலைப்பை விட்டும் தடுமாறி பேசுவது ஏன் ?

என்னேரமும் ஸலவாத்து சொல்லலாம் என்பதை கற்றுத்தந்தது மார்க்கமே அப்படியான ஒன்றைக் கொண்டு (ஸலவாத் என்னேரமும் சொல்லலாம் என்று அனுமதியிருந்த போதும்) அதனைக் கொண்டு அதானை ஆரம்பிக்க வழிகாட்டல் இல்லை என்றிருக்கும் போது
வழிகாட்டல் இல்லாத ஒன்றை நாம் என்னதான் நல்லதாக நினைத்து செய்தாலும் அதற்கு நன்மை கிடைப்பதை விட நபி வழிக்கு மாறு செய்தீர்கள் என்பதற்கான பாவம் மட்டுமே கிடைக்கும் ..

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “ எங்களது வழிகாட்டலில் இல்லாத ஒன்றை யார் செய்கிறார்களோ அது நிராகரிக்கப்பட வேண்டியதே ”நபி மொழிகள் விளங்கிக் கொள்ளப்படுவதற்கு முக்கியமான ஒரு விடயம்தான் குறித்த ஹதீஸ் சொல்லப்பட்ட காரண காரியமாகும் அந்த வகையில் இவர்களுடைய பித்அத்தான் செயலுக்காக வழிகேடர்கள்  காட்டும் ஆதாரம் கூட அப்படியானதே

அந்த கதீஸ் எப்போது எதற்கு சொல்லப்பட்டது என்ற காரணம் தெரியாத அப்பாவி மக்கள் வழிகேடர்கள்  சொல்வதை நம்பி வழிகெடுவது நிச்சயமே அப்படி இருக்க இந்த விடயத்தில் கவணம் இன்றி நடப்பது ஏன்?

இவர்கள்  ஆதாரமாக கொண்டு வந்த
//யார் அலகான ஸுன்னத்தை புதிதாக உருவாக்கரானோ அவர்களுக்கு கூலி உண்டா அதை யார் பின்பற்றுகிறானோ அவர்களுக்கும் கூலி உண்டு//
 மேற்படி கதீஸ் எதற்காக சொல்லப்பட்டது என்பதை சுருக்கமாக பார்ப்போம்

ஒரு கூட்டம் தங்களி்ன் வருமை நிலையை நபி (ஸல் ) அவர்களிடத்தில் எடுத்துச் சொன்ன போது ஸஹாபாக்களை பார்த்து நபியவர்கள் உதவி செய்பவர்கள் யாரும் உண்டா என்பது போன்ற வினாவை தொடுக்கிறார்கள் ...
உடனே தன்னிடம் இருந்ததில் கொஞ்சத்தை ஒரு ஸஹாபி அந்த ஏழை மக்களுக்காக தர்மம் செய்கிறார் அதனை பார்த்து ஏனையவர்கள் தங்களிடம் இருந்ததில் தர்மம் செய்கிறார்கள் முடிவில் பெறும் குவியலே அந்த மக்களுக்கு தர்மமாக கிடைக்கிறது

இந்த நேரத்தில்தான் நபியவர்கள் மேற்படி அந்த கதீஸை சொல்கிறார்கள் “ இஸ்லாத்தில் யார் ஒரு சுன்னத்தை செய்கிறாரோ அதற்குறிய கூலியும் அதனை தொடர்ந்து செய்பவர்களுக்குரிய அளவிலான கூலியும் கிடைக்கிறது .... “ என்று சொன்னார்கள் ..

அந்த சம்பவத்தை எடுத்துப்பார்த்தால் அன்றைய ஸஹாபாக்கள் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்ய வில்லை தர்மம் என்பது மார்க்கத்தில் இருந்த ஒரு சுன்னத்தானே அமலே ஆகும்.
ஆக புதிதாக ஒன்றை ஆரம்பிப்பதற்கு இங்கு எந்த ஆதாரமும் இல்லை மாறாக புதிதாக உண்டு பன்னுவது வழி கேடு என்றே கதீஸ்கள் வருகிறது

வழிகேடர்களின் வாதம்:- 
////எங்களை விடவும் பன்மடங்கு அரிவுல்ல ஸஹாபாக்கள் ஏன் பாங்கிற்கு முன் ஸலவாத்து கூரவில்லை?////என்று கேட்டுள்ளீர்கள்
நபி இறைவன் குர்ஆனை ஓதும் படி கட்டலையிட்டுல்லான் வேண்டிய நேரங்களிள் ஓதலாம் உதாரணதிற்கு ஸஹாபாக்கள் நடு இரவில் குர்ஆன் ஓதவில்லை ஆணால் நாங்கள் அப்படி ஒதினால் நன்மை கிடைக்குமா கிடைக்காதா?
அது போண்றுதான் ஸலவாத்தும் ஸஹாபாக்கள் எல்லா நேரங்களும் ஸலவாத்து கூரிக்கொண்ட இருப்பவர்கள் அதனால் பாங்கிற்கு முன் ஸலவாத்து கூராததால் நாங்கள் ஸலவாத்தை கூரி பாங்கு கூரினால் அது குற்றமாகுமா?
நபி இறைவன் குர்ஆனை ஓதும் படி கட்டலையிட்டுல்லான் வேண்டிய நேரங்களிள் ஓதலாம் உதாரணதிற்கு ஸஹாபாக்கள் நடு இரவில் குர்ஆன் ஓதவில்லை ஆணால் நாங்கள் அப்படி ஒதினால் நன்மை கிடைக்குமா கிடைக்காதா?
   ////

எதிர்வாதம்:-
நடு இரவில் நபியவர்கள் தாராளமாக குர்'ஆன் ஓதியிருக்கிறார்கள். நபித் தோழர்களும் ஓதி இருக்கிறார்கள். அதனால் நாங்களும் ஓதுகிறோம்.
நபியவர்கள் நள்ளிரவில் ஓதவில்லை என்று யார் சொன்னது. மேலும் யாருமே நள்ளிரவில் குர்'ஆன் ஓதுதல் விஷேட அமல் என்ற கருத்தில் தொடராக ஓதி வருவது கிடையாது.

வழிகேடர்களின் வாதம்:- 
    /// புதிதாக ஒவ்வென்றும் கூருகிறீர்கலே மார்கம் பரிபூரணமாகிவிட்டது என்று நபி ஸல் அவர்கள் கூரியது பொய்யா?//////என்று கேட்டுள்ளீர்கள்
மார்கம் பரிபூரணமாகிவிட்டது அதற்கும் பாங்குக்கு முன் ஸலவாத்து சொல்வதற்கும் என்ன சம்மந்தம்?
குர்ஆன் ஹதீஸ் தடுத்த ஓர் விடயத்தை யார் புதிதாக உருவாக்கிறாறோ அது வழிகேடு
எந்த நேரமும் சலவாத்து கூரலாம் குர்ஆன் ஹதீஸ் அதை அங்கிகரித்துல்லது
அந்த அடிப்படையில் பாங்கிற்கு முன் ஸலவாத்து கூரி பாங்கை ஆரம்பிக்கிறோம் ?////

நமது பதில் :-
மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டது என்பதன் கருத்து இனிமேல் மார்க்கத்தில் புதிதாக எதையும் சேர்க்க முடியாது என்பதாகும். எனவே, நபியவர்கள் பாங்குக்கு முன் ஸலவாத்துச் சொல்லக் கட்டளையிடாமல், அல்லது அவர்கள் காலத்தில் அவ்வாறு ஸலவாத்துச் சொல்லப்படாமல் இருக்கையில் நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்?
வழிகேடர் சொல்வது போன்று எந்நேரமும் ஸலவாத்துச் சொல்லலாம் என்ற பொது அனுமதி இதற்குப் பொருந்தாது. ஏனெனில், இது சிறப்புச் சந்தர்ப்பம். சிறப்புச் சந்தர்ப்பங்களில் சிறப்புச் சட்டங்கள் உள்ளன. எனவே, நாம் நினைத்தவாறு அதனைச் செய்ய முடியாது.


வழிகேடர்களின் வாதம்:- 

  /// ஹதீக்கு ஒரு மடங்கு கூட குர்ஆன்   அதில் இருந்து  இறைவன் கூருகிறான் முஹ்மீன்கலே ஸலவாத்து கூரிக்கொண்டே இருங்கள், எந்த நேரமும் ஸலவாத்து கூரலாம் அதில் ஒன்றுதான் பாங்குக்கு முன்னும் ஸலவாத்து கூரலாம் சும்மா கூரவில்லை மேலே கூரிய ஆயத்தின் பிரகாரம் 4 ரகாத் பர்ளு தொழுகையை எப்படி 10 தொழுவது அதை நபியவர்கள் தடுத்துல்லார்கலே
பாங்குக்கு முன் ஸலவாத்து கூருவதை குர்ஆன் தடுக்கவில்லை நபி ஸல் அவர்கள் தடுத்துல்லார்கலா?////



நமது பதில் :-
 எந்நேரமும் ஸலவாத்துக் கூறிக் கொண்டே இருக்கலாம் என்றால் தொழுகையின் நடுவிலும் முடியுமா?
இதே குர்'ஆன் வசனத்தை ஆதாரமாக வைத்து நபியவர்கள் தம் தோழர்களுக்கு அதானுக்கு முன் ஸலவாத்துச் சொல்லக் கட்டளையிடாதது ஏன்?
அமல்கள் செய்வதில் அதிக ஆர்வமுடைய நபித்தோழர்கள் இதே வசனத்தை ஆதாரமாகக் கொண்டு அதானுக்கு முன்னால் ஸலவாத்துக் கூறாதது ஏன்?ஸலவாத்துக் கூறுதல் ஒரு அமலாகும். ஏனெனில் அவ்வாறு கூறுமாறு இறைவன் கூறுகிறான். அதான் கூறுதல் என்பது அவ்வாறானதே. அதற்காக சில வசனங்கள் கற்றுத் தரப்பட்டுள்ளன. அவ்வாறு கற்றுத்தரப்படாத சிலவற்றை (ஸலவாத்தாக இருக்கலாம். வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) நாமாக தீர்மானித்து ஓதுவது என்பது அதிகப் பிரசங்கித் தனம் இல்லையா?

குர்'ஆன் ஓதுவது கூட நேரம் காலம் குறிப்பிடப்படாத ஒரு அமல்தான். அப்படியாயின் ஏன் அதானுக்கு முன் குர்'ஆன் ஓதுவதில்லை?
நேரம் குறிப்பிடப்படாத சுன்னத்தான தொழுகைகள் கூட எப்போது வேண்டுமானாலும் தொழலாம். அப்படியாயின் அதானுக்கு முன் 2 ரக்'அத் சுன்னத்து தொழுவதில்லையே அது ஏன்?
 தொழுகைக்கு எதை ஓத வேண்டும் என்று நம்மலுக்கு கற்றுதந்துல்லார்கள் அதை அனைவரும் அரிந்த உண்மை அதை விட்டு விட்டு அடுத்ததை செய்வது தவரு
************
வழிகேடர்களின் வாதம்:- 
  //// பாங்குக்கு முன் எதையாவது நபி ஸல் அவர்கள் கற்றுதந்தார்கலா அல்லது அந்த இடத்தல் எதுவும் சொல்லக்கூடாது என்று தடுத்தார்கலா? ///

நமது  பதில் :
தொழுகைக்காக என்று சில விடயங்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். உண்மை. அதானுக்காகவும் கற்றுத் தந்துள்ளார்களே! அப்படியானால் அதானுக்கு முன்னர் ஸலவாத்துக் கூறுவதை கற்றுத்தர நபியவர்கள் மறந்து விட்டார்கள் என்கிறீர்களா?
அதானுக்கு முன்னால் உள்ள நேரத்தில் ஸலவாத்து சொல்லலாமா இல்லையா என்பதல்ல பிரச்சினை
எல்லா நேரமும் ஸலவாத்து சொல்ல அனுமதி உண்டு என்பதற்காக அந்த ஸலவாத்தைக் கொண்டு அதானை ஆரம்பிக்கலாமா இல்லை என்பதுதான் பிரச்சினை
அதாவது நபியவர்கள் ஸலவாத்தை எல்லா நேரங்களிலும் சொல்லலாம் என்று தெரிந்திருந்தும் கூட அது அதிகம் சொல்வதால் நன்மை உண்டு என்பதை அறிந்திருந்து கூட ஏன் அந்த ஸலவாத்தை சொல்லி அதானை ஆரம்பிக்க கற்றுத்தர வில்லை ..
அதற்கு ஒரு படி மேலாக அதான் முடிந்ததன் பின்னால் ஸலவாத்து சொல்லும் படி கற்றுத்தந்தவர்கள் ஏன் முன்னால் சொல்லும் படி கற்றுத்தரவில்லை
சொல்லி தர மறந்து விட்டார்களா ? அல்லது
சொல்லித் தராமல் மறைத்து விட்டார்களா ? அல்லது
அது நன்மை தரும் என்பதை அறியாதிருந்தார்களா ?
வலிகேடர்களுக்கு தெரிந்த ஒன்று நபியவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதா ?
ஸலவாத்து எப்போதும் சொல்லலாம் என்பதற்காக அதானுக்கு முன்னும் சொல்கிறோம் அதை தவிற ஸலவாத்தைக் கொண்டு ஆரம்பிக்கும் படி நபி வழியில்லை என்று ஒப்புக் கொண்டது போல
அதானுக்கும் அதற்கு முன் சொல்லப்படும் ஸலவாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை ஸலவாத்தைக் கொண்டு நாம் அதானை ஆரம்பிக்கவில்லை என்றும் சொல்லுங்கள் அது வழி கேடு அல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்

அப்படியே இந்த கருத்துக்கு வருவீர்களானால் ..
24 மணி நேரங்களில் சொல்லப்படும் ஸலவாத்து அனைத்தையும் மனதிற்கு அமைதியாக சொல்லி விட்டு அதானுக்கு முன்னால் உள்ளதை மட்டும் ஒலி பெருக்கியில் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ?
ஸலவாத்தைக் கொண்டு அதானை ஆரம்பிக்கிறோம் என்பதற்கான அடையாளமே அது ஆக நபியவர்கள் காட்டித்தராத ஒன்றை ஆரம்பித்து விட்டீர்கள்

நபியவர்கள் சொன்னார்கள் “ எங்களின் வழிகாட்டுதல் அனுமதியில்லாமல் எவர் ஒருவர் ஒன்றை செய்கிறாரோ அது நிராகரிக்கப்பட வேண்டும் “
ஆக இவர்களின் அனுமதியற்ற இந்த செயல் மார்க்கமல்ல
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களே தவிற அது இவர்களின் உள்ளத்தில் இல்லை
மார்க்கத் முழுமையாக்கப்பட்டு விட்டது என்றால் மார்க்கத்திற்கு தேவையான அனைத்தும் சொல்லப்பட்டு விட்டது என்பதே அர்த்தம் ஆகும்
ஆக ...அதானை ஸலவாத்துக் கொண்டு ஆரம்பிப்பதில் நன்மை உண்டு என்பதை நபியவர்கள் சொல்லி தராது சென்று விட்டார்கள் என்று இவர்கள்  கூறுகிறார்கள்

மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது என்பதை இவர்கள் உருதியாக நம்புபவர்களாக இருந்தால் அதானை எவ்வாறு சொல்லும் படி கற்றுத்தந்தார்களோ அவ்வாறே சொல்ல வேண்டும்
அடுத்தது குர்ஆன் கதீஸ் தடுத்த ஒரு விடயத்தை ஒருவர் செய்கிறார் என்றால் அவர் அதனை புதிதாக உண்டு பன்னுகிறார் என்று அர்த்தம் அல்ல ஏற்கனவே இருந்து தடுத்த ஒன்றை செய்கிறார் என்றுதான் அர்த்தம் அவர் பாவம் செய்கிறார் என்றே கருதப்படுவார்

ஆனால் நபியவர்கள் என்ன சொன்னார் யார் புதிதாக ஒன்றை உருவாக்குகிறாரோ .... என்றுதான் சொன்னார்கள் புதிதாக ஒன்றை உருவாக்குதல் என்பது குர்ஆன் கதீஸ் தடுத்ததை செய்வதல்ல ...

மார்க்கம் சொல்லித்தராத ஒன்றை செய்வதே பித்அத் நூதனம் புதிதாக உருவாக்குதல் ஆகும்

உதாரணத்திற்கு ஸலவாத்து இன்றி ஆரம்பிக்க கற்றுத்தரப்பட்ட அதானை ஸலவாத்தைக் கொண்டு ஆரம்பிப்பதாகும்.
செய்வதற்கு ஆதாரம் அற்ற அதாவது ஸலவாத்தைக் கொண்டு நபியவர்கள் அதானை ஆரம்பித்தார்கள் என்று ஒரு இட்டுக்கட்டப் பட்ட செய்திகள் கூட இல்லாத போதும் அவ்வாறு செய்வது சுன்னத்தாகும் என்று போதையில் உளருவது போன்று உலறுகள் ...
 ஸலாவத் எல்லா நேரங்களிலும் சொல்லலாம் ஆகவே அதானுக்கு முன்னும் சொல்லலாம் என்ற  வாதத்தை நாம் மறுக்கவே இல்லை ..
நாம் எதை மறுக்கிறோம் தெரியுமா ?நபி (ஸல் ) அவர்களின் காலம் தொட்டு சிறந்த நூற்றாண்டின் முடிவு வரை எவரும் அதானை ஸலவாத்து கொண்டு ஆரம்பிக்க வில்லை நபியவர்களும் அதற்கு வழிகாட்ட வில்லை என்பதை வலிகேடர்களும் ஏற்றுக்கொண்ட விடயம்
அப்படி இருக்க இந்த முறையை கண்டு பிடித்தவர்கள் யார் ?
அதானுக்கு பின் ஸலவாத்து சொல்லுமாறு கற்றுத் தந்த நபியவர்கள் அதற்கு முன்னும் சொல்ல ஏன் கற்றுத் தரவில்லை ???
எல்லா நேரங்களிலும் சொல்வது போல் அதானுக்கு முன்னும் ஸலவாத்து சொல்கிறோம் என்பதுதான் இவர்கள்  வாதம் என்றால்
எல்லா நேரங்களிலும் சொல்வது போன்றல்லாமல் அதானுக்கு முன்னால் மாத்திரம் ஏன் ஒலி பெறுக்கியில் சொல்கிறீர்கள் ...
அதான் என்பது மக்களுக்குரிய அழைப்பாகும் அது எப்படி சொல்லப்பட வேண்டுமே அப்படித்தான் சொல்லப்பட வேண்டும்

ஸலவாத் அப்படியல்லவே அது ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய அமல் ..

அதற்கும் மேலாக நபியவர்கள் அதானை ஸலவாத்து கொண்டு ஆரம்பிக்க கற்றுத் தராத போது அதனைஇவர்கள்செய்வதாக இருந்தால் உங்களுக்கு அது நல்லது  என்று சொல்லித் தந்தது யாரு்?

அதானுக்கு பின் ஸலவாத்து சொல்லுங்கள் நன்மை உண்டு என்று சொன்ன நபியவர்களுக்கு அதனை முன்னுக்கு சொல்லி அதானை ஆரம்பித்தாலும் நன்மை உண்டு என்பது தெரியாமல் போய் விட்டதா ?
எல்லா தருனத்திலும் சொல்லலாம் என்று ஒன்றை ஏன் அதானை ஆரம்பிக்கும் விடயத்தில் மாத்திரம் புகுத்துகிறீர்கள்
இகாமத் சொல்லுவதற்கு முன் ஸலவாத்தை சொல்லி ஆரம்பியுங்கள்
தொழுகைக்கு தக்பீர் கட்டும் முன் ஸலவாத்தை சொல்லி ஆரம்பியுங்கள்

இப்படி எத்தனையோ அமல்களுக்கு முன்னால் சொல்வதற்கு நேரம் இருந்தும் அதானுக்கு முன்னால் மாத்திரம் அதான் சொல்வது போன்று ஸலவாத்தும் அதானுடை்ய ஒரு அங்கம் என்று காட்டிக் கொள்வது ஏன் ??
அதானுக்கு அல்லது இகாமத்துக்கு அல்லது தொழுகைக்கு முன்னால் ஸலவாத்து சொல்லலாமா இல்லை என்பதல்ல பிரச்சினை ஸலவாத்தைக் கொண்டு அதானை ஆரம்பிக்கலாமா ? என்பதே பிரச்சினை ..

எல்லா நேரங்களிலும் சொல்லலாம் அதனை அதானுக்கு முன்னும் சொல்கிறோம் அதானுக்கும் ஸலவாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

அதானுக்கு முன் சொல்லவும் முடியும் சொல்லாமலும் விடலாம் அது போல இகாமத்துக்கும் முன் தொழுகைக்கு முன் சொல்லவும் முடியும் சொல்லாமலும் விடலாம் என்ற அனுமதி இருக்கும் போது

அதானை ஆரம்பிக்க மட்டும் ஸலாவத்து சொல்வோம் அதை மட்டுமே நாம் கடை பிடிப்போம் என்றால் இது வழிகேடல்லாமல் வேறென்ன ?
ஸலவாத் எந்நேரமும் சொல்ல முடியும் என்தால் அதனை அதானுக்கும் முன்னுக்கோ பின்னுக்கோ அல்லது இகாமத்துக்கு முன்னுக்கோ பின்னுக்கோ தொழுகைக்கு முன்னுக்கோ பின்னுக்கோ சொல்லலாம் அதற்கு அனுமதி இருக்கிறது .. அதை நாம் மறுக்கவோ இல்லை என்றோ சொல்லவோ இல்லை

நாம் சொல்வதும் மறுப்பதும் என்ன ???

எல்லா நேரங்களிலும் சொல்ல முடியும் என்ற ஸலாத்தை அதானை ஆரம்பிப்பதற்கான ஒன்றாகும் என்ற அடிப்படையில் புதிதான கருத்தை மக்களிடத்தில் சொல்வது ஏன் ?
ஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.
பின்னர் 'ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ('ஹய்ய அலல் ஃபலாஹ்' என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக் கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி) நூல்: முஸ்லிம் 623

பாங்கு சொல்வதை அல்லாஹு அக்பர் என்று தான் துவக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் சான்றுகள் உள்ளன. பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழி என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது 'ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை'ஸலவாத்' சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் 'வஸீலா'வைக் கேளுங்கள். 'வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 628

பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லுமாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் பாங்குக்கு முன் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் என்று பாங்கைத் துவக்க வேண்டும் என்று கூறியிருக்க, அதற்கு முன் ஸலவாத் சொல்லி விட்டு பாங்கைத் துவக்குவது பித்அத் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத செயலாக இருப்பதால் தான், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பித்அத்தைச் செய்கின்றனர். சில இடங்களில், இன்னல்லாஹ மலாய்கத்தஹு... என்ற வசனத்தை ஓதி, ஸலவாத் சொல்லி விட்டு பாங்கு சொல்வதும், வெவ்வேறு திக்ருகளைக் கொண்டு பாங்கைத் துவக்குவதும் நடைமுறையில் உள்ளது.

மொழி, இன பேதமின்றி அனைவருக்கும், உலகம் முழுமைக்கும் பொதுவான தொழுகை அழைப்பாக உள்ள பாங்கிலும் இது போன்ற பித்அத்துக்களால் வேறுபடுத்தி வைத்துள்ளது வேதனைக்குரியது.
------------------


ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும்

ஷஃபான் மாதத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இடம்பெறக்கூடிய சில
பலவீனமான அல்லது, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.
1. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பார்கள். சிலவேளை அவற்றை நோற்காமல் அவ்வருடத்தில் (விடுபட்ட) முழு நோன்பும் ஒன்று சேரும் வரை பிற்படுத்துவார்கள். பின்பு (விடுபட்ட) அந்த நோன்புகளை அவர்கள் ஷஃபானில் நோற்பார்கள்”.
இச்செய்தி தபராணியில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இப்னு அபீலைலா என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

2. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாதம் நுழைந்தால்: ‘இரட்சகனே! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக’ என்று பிரார்த்திப்பார்கள்”.
இச்செய்தி பஸ்ஸார், தபராணீ ஆகிய நூற்களில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸாஇதா இப்னு அபிர்ருகாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் குறித்து இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவரது ஹதீஸ் மறுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்கள். இமாம் நஸாஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவர் யார் என்று எனக்குத் தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “இவரது செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்கள். மேலும், இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

3. “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்குப் பிறகு ரஜப், ஷஃபான் ஆகிய மாதங்களைத் தவிர வேறு மாதங்களில் நோன்பு நோற்கவில்லை”.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட இச்செய்தியை இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஏனெனில், இதன் அறிவிப்பாளர் வரிசையில் யூஸுப் இப்னு அதிய்யா என்பவர் இடம்பெறுகிறார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.

4. “ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் இந்த உம்மத்தின் மாதம்”.
இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஒரு செய்தியாகும். இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய அபூபக்ர் என்பவர் பலவீனமானவரும், இவரது ஹதீஸ் விடப்பட்டதுமாகும் என்று இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மீஸான்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். மேலும், இச்செய்தி மற்றோர் அறிவிப்பாளர் வரிசையினூடாக “முஸ்னதுல் பிர்தவ்ஸ்” என்ற நூலில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஹஸன் இப்னு யஹ்யா என்பவர் இடம்பெறுகின்றார். இவரது அறிவிப்பை இமாம் தாரகுத்னி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஏற்காமல் விட்டுள்ளார்கள் என்று இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இச்செய்தியை இமாம் ஸுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

5. “ஷஃபான் என்னுடைய மாதமாகும். எனவே, எவர் ஷஃபானை கண்ணியப்படுத்துகின்றாரோ அவர் எனது கட்டளையை கண்ணியப்படுத்திவிட்டார்”.
இச்செய்தியும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு ஹதீஸ் என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “தப்யீனுல் அஜப்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். நூஹ் அல்ஜாமிஃ என்பவரால் இட்டுக்கட்டப்பட்டதே இச்செய்தியாகும். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பலவீனமானவர் என்பதில் அனைத்து ஹதீஸ் கலை அறிஞர்களும் உடன்பட்டுள்ளதாக அல்ஹலீலீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

6. “ஏனைய மாதங்களை விட ஷஃபானுக்கு உள்ள சிறப்பு, ஏனைய நபிமார்களை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ள சிறப்பைப் போன்றதாகும்”.
இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியையும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய அஸ்ஸிக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதில் பிரசித்தி பெற்றவராவார்.

7. “ஏன் ஷஃபான் மாத்திற்கு ஷஃபான் என்று பெயர் வைக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏனெனில், அம்மாத்தில் ரமழானுக்காக வேண்டி அதிக நலவுகள் பெருகிவிடுகின்றன”.
இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி குறித்து இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் சியாத் இப்னு மய்மூன் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பொய்யைக் கொண்டு அறியப்பட்டவராவார்.

8. “ரமழானுக்குப் பின் மிகச் சிறந்த நோன்பு ஷஃபானுடைய நோன்பாகும்”.
இமாம் திர்மிதி, பைஹகி ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் இந்த ஹதீஸை அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள். இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இச்செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸதகா இப்னு மூஸா என்பவர் இடம்பெறுகின்றார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இச்செய்தி பின்வரும் ஹதீஸுக்கும் முரணாக அமைந்துள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ரமழானுக்குப் பின்பு மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்”. (முஸ்லிம்)

9. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பை விடமாட்டாரோ என்று நாம் கருதும் அளவுக்கு அவர்கள் நோன்பு நோற்பார்கள். அவர்கள் நோன்பு நோற்க மாட்டார்களோ என்று நாம் கருதும் அளவுக்கு அவர்கள் நோன்பை விடுவார்கள். அவருடைய அதிகமான நோன்பு ஷஃபான் மாதத்தில் அமைந்திருந்தது. ‘அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானில் நீங்கள் அதிகமாக நோன்பு நோற்பதை நான் காணக்கூடியதாக இருக்கின்றதே?” என்று நான் அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள்: ‘ஆயிஷாவே! இம்மாதத்தில் உயிரைக் கைப்பற்றும் வானவருக்கு எவர்களது உயிர்;கள் கைப்பற்றப்பட இருந்ததோ அவர்களது உயிர்கள் கைப்பற்றப்படாமல் மாற்றப்பட்டுக் கொடுக்கப்படும். எனவே, நான் நோன்பாளியாக இருக்கும் போதே அன்றி எனது பெயர் மாற்றப்படக்கூடாது என்று நான் விரும்புகின்றேன்’ என்றார்கள்”.
அபூஹாதிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி குறித்து மறுக்கப்பட்ட செய்தி எனக் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸின் ஆரம்பப் பகுதி புஹாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்பதற்குரிய காரணத்தைத் தெளிவுபடுத்தும் பகுதி மறுக்கப்பட்ட செய்தியாகும்.

10. ”ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு வந்தால் அதன் இரவில் நீங்கள் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்”.
அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அஸ்ஸில்ஸிலா அள்ளஈபா” என்ற நூலில் இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாளர் வரிசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், இவர் பலவீனமானவர் என்று யஹ்யா இப்னு மஈன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் புஹாரி, இப்னுல் மதீனி ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறியுள்ளார்கள்.

11. ”ஐந்து இரவுகளில் கேட்கப்படும் துஆ மறுக்கப்பட மாட்டாது. அவை ரஜப் மாதத்தின் முதல் இரவு, ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு, ஜும்ஆ இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு”.
அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அஸ்ஸில்ஸிலா அள்ளஈபா” என்ற நூலில் இச்செய்தி குறித்து இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்கள்.

12. ”எவர் ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை ஆயிரம் தடவைகள் ஓதுகின்றாரோ, அவருக்கு நன்மாராயம் கூறக்கூடிய ஒரு இலட்சம் வானவர்களை அல்லாஹ் அவரிடம் அனுப்பி வைப்பான்”.
இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மனாருல் முனீப்” என்ற நூலிலும் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மவ்ழூஆத்” என்ற நூலிலும் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளனர்கள்.